Sunday, 13 October 2024

பிரியாணி இலை பரிகாரம்.


  பிரியாணி இலை பரிகாரம்.. ஒரேயொரு இலை போதுமே.. வீட்டில் பணம் கொட்டும் சூப்பர் டிப்ஸ்
அதிர்ஷ்டம் அபாரமாக கிடைக்க வேண்டுமானால் அதற்கு பிரியாணி இலை பரிகாரம் மிகவும் கை கொடுப்பதாக நம்பப்படுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும்?

குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கவும், பணக்கஷ்டம் நீங்கவும், வேண்டுமானால் சில பரிகாரங்கள் அவசியமாகிறது.. ஆனால் நிறைய பணம் செலவு செய்து, பரிகாரங்களை செய்யும் அளவுக்கு பலருக்கும் முடியாது.

Spirituality money Vastu Tips pariharam

 
பரிகாரங்கள்: ஆனால், எளிமையான முறையில் செய்யக்கூடிய பரிகாரங்கள் குறித்தும் முன்னோர்கள் எழுதிவைத்துள்ளனர்.. இந்த பரிகாரங்கள் பெருத்த பலனை தருவதாகவும் நம்பப்படுகிறது. அதில் ஒன்றுதான் பிரியாணி இலை பரிகாரம்.



சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. சிறுநீரக கற்களை போக்குவது முதல் உடல் எடை குறைப்பது வரை பிரியாணி இலைகள் உதவியாக உள்ளன.. இந்த இலையின் நறுமணமானது, டென்ஷன், பதற்றத்தை போக்கி மனதுக்கு அமைதி தரக்கூடியது.. நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியது.

பிரியாணி இலை: இந்த பிரியாணி இலைகள் பரிகாரத்துக்கும் உதவி செய்கின்றன. அதாவது, இரவில் தூங்குவதற்கு முன்பு, ஒரேயொரு பிரியாணி இலையை தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு படுத்தால், உங்களை துர்சக்திகள் நெருங்காது, கெட்ட கனவுகளும் வராது


கடன் தொகை அதிகமாக இருந்தால், பிரியாணி இலையில், கடன் தொகை எவ்வளவு என்பதை எழுதி, உங்களுடைய பீரோவில் வைத்துவிட வேண்டும். ஆனால், பீரோவில் வைத்து அந்த இலையை 7 நாட்கள் கழித்து எடுத்து நெருப்பில் பொசுக்கி, அந்த சாம்பலை நீரிலோ அல்லது காற்றிலோ கரைத்துவிட வேண்டும். மறுபடியும் புதியதாக ஒரு இலையை எடுத்து கடன்தொகை அடைய வேண்டும் என்று எழுதி பீரோவுக்குள் வைக்க வேண்டும். இப்படியே 7 நாட்களுக்கு ஒருமுறை இலையை எரித்துவிட வேண்டும்.


விருப்பம்: அதேபோல, ஒரு பிரியாணி இலையில், உங்களுடைய விருப்பத்தை அதில் எழுதி, வீட்டிலுள்ள பூஜை அறையில் வைத்துவிட வேண்டும்.. இதனால், உங்கள் விருப்பம் விரைவில் நடக்கும்.

பிரியாணி இலையை, லட்சுமி போட்டோவின் பாதத்தில் வைத்து கொள்ளலாம்.. உங்கள் பர்ஸிலும் வைத்து கொள்ளலாம்.. அல்லது கிழக்கு நோக்கி உட்கார்ந்து, பிரியாணி இலையை எடுத்து, நீல நிற பேனாவில் "ஸ்ரீம்" என்ற மகாலட்சுமியின் மந்திரத்தை எழுதி வேண்டி கொள்ள வேண்டும்.. இதனை உங்கள் பர்ஸில் வைத்து கொண்டால் பணம் சேர்ந்துகொண்டேயிருக்குமாம். நகை பெட்டியிலும் வைக்கலாம்..

டாடா.. பாய்.. பாய்.. ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ போட்ட பதிவு.. கடும் எதிர்ப்பால் வருத்தம் 
"டாடா.. பாய்.. பாய்.. ரத்தன் டாடா மறைவுக்கு பேடிஎம் சிஇஓ போட்ட பதிவு.. கடும் எதிர்ப்பால் வருத்தம் "
கிழிசல் இலை: இந்த இலை கிழிந்து விட்டால் வேறு ஒரு இலையை மாற்றிவிட வேண்டும். இந்த பரிகாரத்தை காலை நேரம் அல்லது மாலை நேரம் எந்த நேரத்திலும் செய்யலாம்.


அதேபோல, உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கு ஓரிடத்தில் உட்கார்ந்து பிரியாணி இலையில் இந்த வார்த்தையை எழுதலாம்.. பிறகு அந்த பிரியாணி இலையை கொண்டு வந்து நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்தினால், கூடுதல் பலன் கிடைக்கும் என்கிறார்கள்.


No comments:

Post a Comment