Sunday, 13 October 2024

எல்லா ஆசைகளும் நிறைவேறும். பிரியாணி இலை...

நியாயமான உங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறும். பிரியாணி இலையில் உங்கள் கோரிக்கைகளை இப்படி எழுதினால்.
bay-leaf
பிரியாணி இலையில் நம்முடைய கோரிக்கைகளை எழுதினால் அது பலிக்குமா. எல்லோரும் சொல்வது உண்மையா. சோதித்து பார்க்கலாம், என்று சந்தேகத்தோடு இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. முழு நம்பிக்கையோடு பிரியாணி இலையில் எழுதினால் நிச்சயம் நடக்கும் என்ற தீர்மானத்தோடு இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அது நிச்சயமாக ஒரு சில நாட்களிலேயே ஈடேறி விடும். பிரியாணி இலையை சரியான முறையில் பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா.


bay-leaf

இந்த பரிகாரத்தை காலை நேரம் அல்லது மாலை நேரம் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம் அது உங்களுடைய விருப்பம். முதலில் ஒரு பிரியாணி இலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உங்களுடைய நியாயமான ஆசைகளை எழுதவேண்டும். எடுத்துக்காட்டிற்கு நிறைய கடன் உள்ளது என்றால் உங்களுடைய கடன் தொகை எவ்வளவு, அதை பிரியாணி இலையில் எழுதி எடுத்துக்காட்டுக்கு ‘ஒரு லட்ச ரூபாய் கடன் கூடிய சீக்கிரத்திலேயே அடைய வேண்டும்’ என்று பிரியாணி இலையில் எழுதிய அந்த பிரியாணி இலையை பீரோவுக்குள் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். பீரோவில் வைத்து அந்த இலையை ஏழு நாட்கள் கழித்து எடுத்து நெருப்பில் பொசுக்கி விட வேண்டும். நெருப்பில் பொசுக்கிய சாம்பலை காற்றோடு காற்றாக கலந்து விட்டுவிடுங்கள். இல்லை என்றால் தண்ணீரில் கரைத்து விடுங்கள்.



மீண்டும் புதியதாக ஒரு இலையை எடுத்து கடன் அடைய வேண்டும் என்று எழுதி உங்களுடைய பீரோவுக்குள் வைக்கவேண்டும். 7 நாட்கள் கழித்து மீண்டும் அந்த இலையை எடுத்து நெருப்பில் எரிக்க வேண்டும். உங்களுடைய கடன் அடையும் வரை, கோரிக்கை நிறைவேறும் வரை இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து கொண்டே வரவேண்டும். நிச்சயமாக உங்களுடைய கோரிக்கை கூடிய விரைவிலேயே நிறைவேறும் இதுதான். இந்த பரிகாரத்தை நம்பிக்கை.


bay-leaf1

பணப் பிரச்சனை இல்லாமல் உங்களுக்கு வேறு எந்த பிரச்சனை இருந்தாலும் சரி திருமணம் நடக்கவேண்டும், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும். இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும். நிலம் வாங்க வேண்டும். வீடு கட்ட வேண்டும். நிலம் விற்க வேண்டும் வீடு விற்க வேண்டும். இப்படி எந்தக் கோரிக்கையை எழுத வேண்டும் என்றாலும், மேலே கடனுக்கு சொல்லப்பட்டுள்ள அதே விதிமுறைகள் தான்.



உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் எழுத வேண்டிய வரிகளை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். வைக்கக்கூடிய இடங்களை மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டுக்கு திருமணம் நன்றாக நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், சொத்து சுகம் வாங்க வேண்டும் என்றால் கோரிக்கைகளை எழுதி பிரியாணி இலையை பூஜை அறையில் வைக்க வேண்டும். நல்ல தூக்கம் வர வேண்டும் என்றால், நல்ல தூக்கம் வர வேண்டும் என்று பிரியாணி இலையில் எழுதி மெத்தைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும்.



குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் அந்த பிரியாணி இலையை குழந்தைகள் புத்தகத்தோடு சேர்த்து வைக்க வேண்டும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்றால் அந்த பிரியாணி இலையை கணவன் மனைவி புகைப்படத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் அந்த பிரியாணி இலையை உங்களுடைய சர்டிவிகேட் ரெசியும் இவைகளுடன் வைக்க வேண்டும்.



வெறும் பிரியாணி இலையை வைக்காதீங்க. அந்த பிரியாணி இலையில் கோரிக்கைகளை எழுதி அதன் பின்பு அந்தந்த இடத்தில் வைக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து மீண்டும் அந்த பிரியாணி இலையை நெருப்போடு எரிக்க வேண்டும். எரித்த சாம்பலை தண்ணீரிலும் கரைக்கலாம் காற்றிலும் கலந்து விடலாம். (மேலே சொன்ன தேவைகள் இல்லாமல் மற்ற தேவைகளுக்கு கூட உங்கள் இஷ்டம் போல இந்த பிரியாணி இலையை பயன்படுத்தி கொள்ளலாம்.)



சமையல் ருசிக்க வேண்டும் என்றாலும் பிரியாணி இலையில் ‘என் சமையல் ருசியாக இருக்கவேண்டும்’ என்று எழுதி சமையல் அறையில் வைத்து பாருங்கள். நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கைக்கு எது தெரியும் அந்த ஆசை நிறைவேற இந்த பிரியாணி இலையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த ஆசை அந்த கோரிக்கை நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும்.



நம்பமுடியாத அதிசய மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டுவந்து சேர்க்க கூடிய சக்தி இந்த பிரியாணி இலைக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நம்பிக்கையோடு நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற கருத்தோடு அந்த ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.


No comments:

Post a Comment