Sunday, 13 October 2024

சாஃப்ட் இட்லி ரகசியம்...


சாஃப்ட் இட்லி ரகசியம்: உளுந்து அரைக்கும் போது இந்த தப்பை பண்ணாதீங்க; செஃப் சுந்தர் ரெசிபி
உங்கள் வீட்டில் நீங்கள் இட்லி செய்யும்போது, உளுந்து அரைக்கும்போது இந்த தப்பை பண்ணாதீர்கள், சாஃப்ட் இட்லியின் ரகசியம் இதுதான்
idly soft
ஒரு நல்ல இட்லி என்றால் வெள்ளையாக மலிகைப் பூ மாதிரி சாஃப்ட்டாக இருக்க வேண்டும்.


முதலில் இட்லி சுடும்போது பலரும் சமையல் சோடா சேர்க்கிறார்கள். சமையல் சோடா சேர்க்கத் தேவையில்லை , அதற்கு, இட்லி மாவு அரைக்க முதலில் தரமான அரிசி, உளுந்து வாங்க வேண்டும் என்கிறார். அரிசி, உளுந்து இரண்டையும் தனியாக நன்றாகக் கழுவிய பிறகு, அரிசி, உளுந்து தனித்தனியாக -3 மணி நேரம் மட்டுமே ஊர வைக்க வேண்டும். கூடுதலான நேரமோ அல்லது குறைவான நேரமோ ஊர வைக்க வேண்டாம்.

அதன் பிறகு, முதலில் உளுந்து கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.


ஆனால், எல்லோரும் செய்கிற தப்பு என்னவென்றால், முதலில் அரிசி அரைத்துவிடுவார்கள். அப்படி செய்யக்கூடாது. முதலில் உளுந்துதான் அரைக்க வேண்டும். உளுந்தை தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு போட்டு அரைக்க வெண்டும். அதில் ஊறிய தண்ணீர் மட்டும்தான் இருக்க வேண்டும். 5 நிமிடம் அரைந்த பிறகு, 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேருங்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்ந்து 25 நிமிடம் உளுந்தை அரையுங்கள். உளுந்து நன்றாக அரைந்து பொங்கி வந்திருக்கும். இதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அரிசியை ஊரவைத்துள்ள தண்ணீருடன் சேர்ந்து 25 நிமிடங்கள் அரைக்க வேண்டும். அரிசியை ரொம்ப நைஸாக அரைக்கக் கூடாது. ரவையைவிட கொஞ்சம் சிறிய அளவில் குருணை குருணையாக அரைக்க வேண்டும்.


இப்போது அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்துவிடுங்கள். தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கலந்துவிடுங்கள். பின்னர், ஒரு 8 மணி நேரம் மூடி வைத்துவிடுங்கள். 8 மணி நேரத்துக்கு பிறகு, மாவு புளித்து பொங்கி வந்திருக்கும்.  

பின்னர், அந்த மாவை எடுத்து மீண்டும் ஒருமுறை நன்றாக மாவைக் கலந்துவிடுங்கள். பின்னர், இட்லி குண்டானில் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், இட்லி தட்டில் மாவு ஊற்றி இட்லியை அவியுங்கள். இட்லி துணி போட்டு இட்லி செய்வது நல்லது. இட்லியை அவிக்கும்போது, 3-4 நிமிடங்கள் மட்டுமே அவிக்க வேண்டும். ரொம்ப நேரம் அவித்தால் இட்லி கல் மாதிரி வர வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment