ஸ்நாக்ஸ் பாக்ஸில் ஆப்பிள் துண்டுகள் ஃப்ரெஷா இருக்கணுமா? அரை ஸ்பூன் தேன் போதும்; இதை ஃபாலோ பண்ணுங்க!
ஸ்நாக்ஸ் டப்பாவில் நாம் கொண்டும் போகும் ஆப்பிள் பழங்கள் கெடாமல் இருக்க என்ன செய்வது? என்றும், அவற்றை எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் என்றும் இங்குப் பார்க்கலாம்.
Tips to keep Apple fresh in snacks box in tamil
ஸ்நாக்ஸ் டப்பாவில் இருக்கும் ஆப்பிள் கலர் மாறாமல் ஃப்ரெஷா அப்படியே இருக்க இங்கு டிப்ஸ் பார்க்கலாம்.
பொதுவாக வெளியில் பல இடங்களுக்கு செல்லும் நாம் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ்களை டப்பாவில் அடைத்து வைத்து எடுத்துச் செல்வோம். ஆனால், நாம் கொண்டு செல்லும் இந்த உணவுகள் சில சமயங்களில் கெட்டுக் போய்விடும். இதனால் நாம் பட்னி இருக்கும் சூழல் நிலவும்.
இந்நிலையில், ஸ்நாக்ஸ் டப்பாவில் நாம் கொண்டும் செல்லும் உணவு மற்றும் பழங்களை கெட்டுப்போகாமல் இருப்பதற்கான டிப்ஸ்களை நாம் தினந்தோறும் இங்கு பார்த்து வருகிறோம். அந்த வகையில், ஸ்நாக்ஸ் டப்பாவில் நாம் கொண்டும் போகும் ஆப்பிள் பழங்கள் கெடாமல் இருக்க என்ன செய்வது? என்றும், அவற்றை எப்படி பாதுகாப்பாக எடுத்துச் செல்லலாம் என்றும் இங்குப் பார்க்கலாம்.
ஸ்நாக்ஸ் டப்பாவில் இருக்கும் ஆப்பிள் துண்டுகள் ஃப்ரெஷா இருக்க டிப்ஸ்
வெளி இடங்களுக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதோ ஆப்பிளை கட் செய்து ஸ்நாக்ஸ் டப்பாவில் அடைத்துக் கொடுப்போம். உணவு இடைவேளையின் போது அவற்றை திறந்து பார்த்தால், அவற்றின் நிறம் அப்படியே மாறிப் போயிருக்கும். இந்நிலையில், ஸ்நாக்ஸ் டப்பாவில் இருக்கும் ஆப்பிள் கலர் மாறாமல் ஃப்ரெஷா அப்படியே இருக்க இங்கு டிப்ஸ் பார்க்கலாம்.
ஒரு ஆப்பிள் எடுத்து அதனை சாப்பிடும் அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பிறகு, அவற்றை தண்ணீர் நிரப்பட்ட சிறிய பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். பிறகு அவற்றுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை அதே ஸ்பூனால் நன்கு கலந்து விடவும். இவற்றை சில வினாடிகள் அப்படியே விட்டு விடவும். பிறகு அவற்றை ஸ்நாக்ஸ் டப்பாவில் போட்டு எடுத்துக் கொண்டு செல்லலாம்.
No comments:
Post a Comment