Saturday, 5 October 2024

பணவீக்கம் என்றால் என்ன?:

2050-ஆம் ஆண்டில் ரூ.1 கோடியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப் போயிடுவீங்க! இவ்வளவு குறைவா?  இன்றைய சூழலில் ஒருவர் அதிகளவு பணத்தை வைத்திருந்தால் கோடீஸ்வரர் என்று நாம் கருதுகிறோம். அதே போல பல குடும்பங்களும் தங்கள் குழந்தைக்காக, மருத்துவ செலவுக்காக மற்றும் பல்வேறு விஷயங்களுக்காக சேமிப்பு பழக்கத்தை வைத்திருக்கின்றனர். ஆனால் இன்றைய கோடீஸ்வரர்கள் எதிர்காலத்தில் அவர்களுடைய தற்போதைய செல்வத்தை வைத்து தங்களின் நிலையை அப்படியே வைத்துக்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழலாம். இதை பண வீக்கத்தின் அளவை பொறுத்து தான் சொல்ல வேண்டும். இந்த பதிவில் அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2050-ஆம் ஆண்டில் ரூ.1 கோடி மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை பார்ப்போம். பணவீக்கம் என்றால் என்ன?: பணவீக்கம் என்ற பெயரிலேயே அதற்கான அர்த்தம் உள்ளது. பணவீக்கம் என்பது காலப்போக்கில் பணத்தின் மதிப்பு குறைந்து, அவற்றுக்கு நாம் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிக விலை ஆவதை குறிக்கிறது. உதாரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருள்.. இப்போது கணிசமாக உயர்ந்துள்ளதை நீங்களே உணரலாம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சராசரி ஆண்டு பணவீக்க விகிதம் 5 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்தப் போக்கு தொடர்ந்தால்.. அது இனிவரும் பத்தாண்டுகளிலும் பணத்தின் திறனை பாதிக்கும். இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? இந்த வீட்டுக்கு ரூ.45,000 வாடகையா? டிரெண்டிங் வீடியோ..! காலப்போக்கில் ரூ.1 கோடி மதிப்பு எவ்வளவாக இருக்கும்?: அடுத்த 10 ஆண்டுகளில், 6% பணவீக்க விகிதத்தில், ரூ.1 கோடி தோராயமாக ரூ.55.84 லட்சமாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் இதன் மதிப்பு சுமார் ரூ.31.18 லட்சமாக குறையும். இதே நிலை நீடித்தால் 2050-ஆம் ஆண்டில் பணவீக்கம் அதிகரித்து ரூ.1 கோடி ரூ.17.41 லட்சமாகக் குறையும். Rahul Gandhi எந்த Stockலாம் வாங்கிருக்காரு தெரியுமா? | Stock Market | Share Market | Oneindia Tamil வாங்கும் சக்தி குறைவு: பணத்தை கொண்டு நாம் வாங்கும் சக்தி குறைவதைத்தான் பணவீக்கத்தின் தாக்கமாக பார்க்கிறோம். உதாரணமாக 1950-ஆம் ஆண்டில் 10 கிராம் வெறும் 99 ரூபாய் என்ற விலையில் விற்பனையான தங்கத்தின் விலை இன்று 10 கிராம் கிட்டத்தட்ட 78,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த கடுமையான மாற்றம் கடந்த காலத்தில் மலிவு விலையில் இருந்தவை இன்று அடைய முடியாத உயரத்தை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஆக 1950-ஆம் ஆண்டில் மாதம் ரூ.200 சம்பாதித்த ஒருவரின் குடும்பம் தற்போது வாழ்க்கை தரத்தை பராமரிக்க ரூ.1.5 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்ட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் வெவ்வேறு காலக்கட்டங்களில் ரூ.1 கோடி மதிப்பு எவ்வளவாக இருந்தது என்பதைப் பார்ப்போம். பட்டையைக் கிளப்பும் விற்பனை.. ஒரே வாரத்தில் 54,000 கோடி ஆர்டர்கள்! மகிழ்ச்சியில் ஈகாமர்ஸ் டியூட்ஸ்! 20 ஆண்டுகளுக்கு முன்பு (2004): பணவீக்கம் காரணமாக ரூ.1 கோடி என்பது இன்றைய மதிப்பில் ரூ.38 லட்சத்துக்குச் சமம். 30 ஆண்டுகளுக்கு முன்பு (1994): இந்தக் காலகட்டத்தில் ரூ. 1 கோடி என்பது இன்று சுமார் ரூ. 23.2 லட்சமாக இருந்திருக்கும். பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பை எவ்வாறு குறைத்துள்ளது என்பதை இந்த ஒப்பீடுகள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு திட்டம்.. எல்லோருக்கும் வாய்ப்பிருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க..! எதிர்கால செல்வத்தின் மீது பணவீக்கத்தின் தவிர்க்க முடியாத தாக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான முதலீட்டு உத்திகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. பல தனி நபர்கள் சிறிதளவு முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். எதிர்காலத்தில் பணவீக்கத்தின் காரணமாக தங்கள் செல்வத்தின் வாங்கும் திறனை எவ்வாறு அது பாதிக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல் விடுவது நீண்ட கால நிதி இலக்குகளை திட்டமிடுபவர்களுக்கு சிக்கலான விஷயமாக மாறக்கூடும். எனவே இன்றைய ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்க தொகையாக தோன்றினாலும் பணவீக்கம் காரணமாக அடுத்து வரும் 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. More From GoodReturns ரீடைல் பணவீக்கம் 3.65 சதவீதமாக உயர்வு.. உணவு பணவீக்கத்தில் தொடரும் அச்சம்..!! என்னது 25 வருஷத்துக்கு அப்புறம் 5 கோடி ரூபாயோட மதிப்பு இவ்வளவு தானா..? அடுத்த 10, 20 மற்றும் 30 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு என்னவாக இருக்கும்? ஜட்டி விற்பனை தூள்.. அப்போ பொருளாதாரமும் தூள் தான்..!! இந்த தியரி உங்களுக்கு..!! மத்திய அரசு வெளியிட்ட குட்நியூஸ்.. 5 வருடத்திற்குப் பின்பு முதல் முறையாக நடந்திருக்கு..!! ரிசர்வ் வங்கி MPC கூட்டத்தின் முக்கிய அறிவிப்புகள் - .

No comments:

Post a Comment