Saturday, 5 October 2024

கல்யாண முருங்கை இலை


கல்யாண முருங்கை இலை.. மகிழ்ச்சி, ஆரோக்கிய  ஆரோக்கிய நன்மைகளை தரும் கல்யாண முருங்கையை பற்றி தெரியுமா? இந்த இலைகளை உணவில் எப்படி பயன்படுத்துவது? எந்தெந்த நோய்களுக்கு இதனை பிரத்யேகமாக பயன்படுத்துவது தெரியுமா?
கல்யாண முருங்கையின் இலைகள், பூக்கள், விதைகள், பட்டைகள் என ஒட்டுமொத்த பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவை.. முள் முருங்கை என்றும் சொல்வார்கள்.. முருக்க மரம், முள் முருக்கு என்றும் சொல்வார்கள்...


கல்யாண முருங்கை: கல்யாண முருங்கையை யாருமே தோட்டங்களில் நட்டுவைத்து வளர்க்க மாட்டார்கள்.. ஏனென்றால், இது தானாகவே, கிராமப்புறங்களில், விவசாய பகுதிகளில், வேலி ஓரங்களில் வளர்ந்துவிடக்கூடியது. அதனால்தானோ என்னவோ இதன் மருத்துவமும், மகத்துவமும் பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.


kalyana murungai indian coral tree pregnancy

வீட்ல விசேஷம் எதுவும் உண்டா? புதுமண தம்பதிகளை நச்சரிக்கும்  காரணத்தை கேட்டா ஆடிப்போய்டுவீங்க! 

ஆண்மையை பெருக்கும் சக்தி இந்த இலைக்கு நிறையவே இருக்கிறது. மாதுளம், கசகசா இரண்டையும் சேர்த்து ஜூஸ் போல தயாரித்து, அதனுடன் கல்யாண முருங்கையின் சாறு கலந்து 21 நாட்கள் குடித்து வரும்போது ஆண்மை பெருகுமாம்.. அல்லது கல்யாண முருங்கைப்பூவுடன் 4 மிளகு சேர்த்து அரைத்து, வெறும் வயிற்றில் சாப்பிடுவதாலும், கருமுட்டை நிறைய உற்பத்தியாகும் என்பார்கள்.

மாதவிடாய்: மாதவிடாய் தொந்தரவு இருக்கும் பெண்கள், இந்த இலையை கசக்கி சாறு எடுத்து, மாதவிடாய் வருவதற்கு முன்னாடி 3 நாட்களும், மாதவிடாய் முடிந்த பிறகு 3 நாட்களும் வெறும் வயிற்றில் 3 மாதம் குடித்து வரலாம். இதனால், மாதவிடாயை சீர்செய்யும். கருப்பை கட்டியும் சீராகும்..

இதனால், குழந்தைப்பேறு உண்டாகும் என்பார்கள். எனவேதான் இதற்கு சக்களத்தி கீரை என்று இன்னொரு பெயர் வந்ததாம. கர்ப்பமான பெண்கள் இந்த கீரையை சமைத்து சாப்பிடும்போது, சிறுநீர் எரிச்சல் குணமாகும்..


""
தாய்ப்பால்: குழந்தை பெற்ற தாய்மார்களும், கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெய்விட்டு சமைத்து சாப்பிடும்போது தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். அல்லது மற்ற கீரைகளை போலவே, இந்த இலையையும் சின்ன வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் தாய்ப்பாசுரக்கும்.. இந்த இலைகளுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 30 நாட்கள் குடித்து வரும்போது, கர்ப்பப்பை வலு பெறும்..


இந்த இலைகளை எடுத்துக் கொண்டால், வேப்பிலையை போலவே மிகச்சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.. அதனால்தான், உடம்பிலுள்ள சொறி, சிரங்கு குணமாக வேண்டுமானால், வேப்பிலையை போலவே, இந்த கல்யாண முருங்கையிலும், கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக்குளித்து குளிப்பார்கள். இதனால் எண்ணற்ற பலன்கள் நமக்கு கிடைக்கும்.

சுவாச கோளாறு: அதேபோல, சளி, இருமல் போன்ற சுவாச கோளாறுகளை இந்த கல்யாண முருங்கை இலைகள் போக்குகின்றன.. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி தொந்தரவு இருந்தால், வேப்பிலையை போலவே, இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்து தருவார்கள்.. அல்லது கல்யாண முருங்கை இலையிலிருந்து சாறு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்கு தந்தால், வயிற்று பூச்சிகள் வெளியேறிவிடும்.



பெரியவர்கள் இதனை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 2 மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும், அத்துடன் நாள் முழுக்க வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும்.. அதேபோல உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த கல்யாண முருங்கை இலையாகும்.. இந்த இலைகளை பறித்து கழுவி சுத்தம் செய்து, ஜூஸ் தயாரித்து குடித்து வரலாம். இதனால், உடல் பருமன் வெகுவாக குறைய துவங்கும்.

தாய்ப்பால்: முருங்கை இலையை போலவே, இந்த கல்யாண முருங்கை இலையையும் பொரியலாக்கி சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரக்கும்... குழந்தை வளர்வதால் குழந்தையின் வயிற்றை நிரப்பும் அளவுக்கு தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பவர்கள், இந்த கீரையை சாப்பிடலாம்.. அடை, சூப், வடைகளில் இதனை சேர்த்து சாப்பிடலாம்... அல்லது தோசை மாவில் கலந்தும் இந்த இலையை அரைத்து சேர்த்து பயன்படுத்தலாம.


No comments:

Post a Comment