Monday, 7 October 2024

கடன் தொல்லைகள்....

நாள் முழுவதும் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கடன் தொல்லைகள் உலுக்கி எடுத்து விடும்.. இந்த கடன் தொல்லையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு எளிய பரிகாரங்களே நமக்கு உதகின்றன.. அதில், ஒருசிலவற்றை மட்டும் இப்போது பார்ப்போம்
கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு எந்நேரமும் சிக்கல்களும், அவதிகளும் இருக்கும்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழியும்.. அன்றைய தினத்தை நகர்த்துவதே பெரும்பாடாக இருக்கும்.. இதனால் மனஉளைச்சலுக்கும் ஆளாக நேரிடும்..
பெருமாள் கோவில்: இப்படி கடன் சிக்கலில் உள்ளவர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று சனிக்கிழமை, புதன்கிழமைகளில் சக்கரத்தாழ்வார் சன்னிதியில், துளசி மாலை சாற்றி, 12 முறை வலம் வரலாம். இதுபோல் 12 வாரமும் துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்து வந்தால், கடன் பிரச்சனைக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

அதேபோல, உங்கள் வீட்டு பூஜையறையில் ஒரு தட்டு வைத்து, அதன்மீது வெள்ளி அல்லது செம்புக் கலசத்தை வைக்க வேண்டும். கலசம், தட்டு இரண்டிற்குமே மஞ்சள் தடவி குங்கும பொட்டு வைத்து, வாசனை மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்..

பூஜையறை: இப்போது உங்களது பணம் 100 ரூபாய் அல்லது விருப்பமான தொகையை கலசத்திற்குள் போட்டு, மஞ்சள் நீரில் நனைத்த ஒரு நூலால், கலசத்தை மஞ்சள் துணியை வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும். இந்த கலசத்தை பூஜை அறையிலேயே வைத்து தினமும் பூஜை செய்ய வேண்டும்.


இதுபோல 9 சனிக்கிழமைகளில் இந்த கலசத்தை வைத்து பூஜை செய்து முடித்ததுமே, கடைசி கிழமையில் கலசத்தில் உள்ள காணிக்கையை பெருமாள் கோவில் உண்டியலில் போட்டுவிட வேண்டும். இந்த கலச பரிகாரம் செய்யும்போது, வீட்டிலுள்ள கடன், வறுமை ஒழந்து, செல்வம் தங்கும் என்கிறார்கள்.


கோமாதா வழிபாடு: அதேபோல, செல்வத்தின் அம்சமான கோமாதாவின் வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம். இதற்கு காலையில் தூங்கி எழுந்ததுமே, பசு மாட்டை பார்க்க வேண்டும்.. பசுவுக்கு கீரையும் பழமும் கொடுத்து, பசுவின் பின்புறத்தை தொட்டு வணங்க வேண்டும். இதனால், வறுமை மெல்ல விலகும்.

அதேபோல, பைரவருக்கு மிளகு பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்கும்.. அதாவது, 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டிக்கொண்டு, அதனை தூங்கும் முன்பு, உங்களது தலையணைக்கு அடியில் வைத்துவிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையுடன், அருகிலுக்கு கோவிலுக்குச் செல்ல வேண்டும்..



பைரவர் : அங்கு பைரவர் முன்பு, அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். அப்போது உங்களது கடன் தீர வேண்டும் என்பது மனதார பிரார்த்திக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 9 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.. இதனால், கடன் பிரச்சனை விரைவில் தீர வழிகிடைக்கும்.


No comments:

Post a Comment