Saturday 5 October 2024

idli batter gulab jamun


ஒரு கப் இட்லி மாவு இருக்கா? 10 நிமிடத்தில் டேஸ்டியான குலாப் ஜாமுன் ரெடி
இந்த டேஸ்டியான குலாப் ஜாமுன் செய்ய அதிக நேரம் எடுக்காது. அதேபோல், கடினமான செய்முறையும் கிடையாது. எளிமையான முறையில் குலாப் ஜாமுன் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
 

idli batter gulab jamun recipe in tamil
இந்த ஆண்டு தீபாவளியை உங்களது அன்புக்குரியர்களுடன் தித்திப்புடன் கொண்ட சூடான, சுவையான குலாப் ஜாமுன் தயார் செய்யலாம்.



இந்த டேஸ்டியான குலாப் ஜாமுன் செய்ய அதிக நேரம் எடுக்காது. வெறும்  10 நிமிடம் போதும். அதேபோல், கடினமான செய்முறையும் கிடையாது. எளிமையான முறையில் குலாப் ஜாமுன் எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம். 

குலாப் ஜாமுன் - தேவையான பொருட்கள்

தோசை மாவு அல்லது இட்லி மாவு  - ஒரு கப் 
பால் மாவு - 3 டீஸ்பூன் (அல்லது) கோதுமை மாவு -  3 டீஸ்பூன்
ரவை - 2 டீஸ்பூன்

சர்க்கரை - ஒரு கப் 
தண்ணீர் - 1/2 கப் 
ஏலக்காய் 
எண்ணெய் - தேவையான அளவு 

குலாப் ஜாமுன் - சிம்பிள் செய்முறை 

ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் தோசை மாவு  அல்லது இட்லி மாவு, பால் மாவு, ரவை சேர்த்து கலந்து கொள்ளவும். மாவில் அதிக தண்ணீர் இருப்பதாக தோன்றினால் அவற்றுடன் பால் மாவு சேர்த்து கலந்து கொள்ளலாம். 

சர்க்கரை பாகு தயார் செய்ய, ஒரு கடாய் எடுத்து அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நுணுக்கிய ஏலக்காய்  சேர்த்து கொள்ளவும். 

மாவு தயாராகிய பிறகு, ஒரு கடாய் எடுத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், மாவை உருண்டையாக கரண்டியால் ஊற்றி பொறித்து எடுத்துக் கொள்ளவும். இவற்றை சர்க்கரை பாகுடன் சேர்த்தால், சூடான சுவையான குலாப் ஜாமுன் ரெடி. 






No comments:

Post a Comment