Thursday, 24 October 2024

ஆந்தை படம் வீட்டில் வைக்கலாமா?



இந்த பறவை உங்க வீட்டுக்குள் வந்தால் நல்லது.. ஆந்தை படம் வீட்டில் வைக்கலாமா? அதிர்ஷ்டம் தரும் பறவைகள்
வீடுகளில் பறவைகளின் பொம்மைகளை, போட்டோக்களை பலரும் வாங்கி வைத்திருப்பார்கள்.. அந்தவகையில், வீட்டிற்குள் ஆந்தை பொம்மைகளை வைக்கலாமா? கிளி போட்டோக்களை வைக்கலாமா? என்பது குறித்து வாஸ்துவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?


வீட்டை அலங்கரிக்க வைக்கப்படும் போட்டோக்களிலும் பறவைகள் இருப்பது நன்மை தரும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. எந்தெந்த பறவைகளின் போட்டோக்களை, எந்த திசையில் வீடுகளில் மாட்டி வைத்தால் நல்லது என்பது குறித்தும் வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது.


spirituality owl birds


மயில் தோகை: நெற்றிகிருஷ்ணரின் மயில் தோகையின் போட்டோக்களை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது.. அதனால், மயிலிறகுகளை வீட்டின் தெற்கு திசையில் வைத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கிளிகளின் போட்டோக்களையும் வீட்டிற்குள் மாட்டி வைக்கலாம். வீடுகளில் கிளி வளர்ப்பது ராகு, கேது மற்றும் சனியின் தாக்கங்களை குறைக்கும் என்றும், குடும்ப உறுப்பினர்களின் நோய்கள் நீங்கும், குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும், தம்பதியினரின் உறவு மேம்படும் என்றும் வலுவாக நம்பப்படுகிறது. அதனால், பச்சைக் கிளியின் போட்டோக்களையும் வீட்டில் மாட்டி வைத்திருக்கலாம்.

வடக்கு திசை: வடக்கு திசை புதனின் பிரியமான திசையாக கருதப்படுவதால், கிளிகளின் போட்டோக்களை, வடக்கு திசையில்தான் வைக்க வேண்டும். இதனால், குழந்தைகளின் நினைவாற்றலும் பெருகும், நிதி சிக்கலும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.


அதேபோல, ஆந்தைகள் மகாலட்சுமியின் வாகனமாக போற்றப்படுகின்றன.. எனவே, ஆந்தை சிலைகள் அல்லது பொம்மைகளை வீடுகளில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஆந்தை பொம்மைகள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரக்கூடியது.. ஆனால், ஆந்தை சிலைகள் வைப்பதாக இருந்தால், இதற்கென சில விதிகள் உள்ளன.



நுழைவாயில்: வீட்டின் நுழைவாயிலை நோக்கி ஆந்தை பொம்மையை வைத்தால், வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்பட்டுவிடும். அதேபோல, அலுவலகத்தில் ஆந்தை பொம்மையை வைப்பதாக இருந்தால், மேசையின் வட மேற்கு மூலையில்தான் வைக்க வேண்டுமாம். இதனால், நேர்மறை ஆற்றல் பெருகும், ஆரோக்கியம் தழைக்கும் என்கிறார்கள்.

எனினும், ஆந்தை பொம்மையை வைப்பதை விட சிலைகளை வைப்பதே நல்லது என்கிறார்கள்.. அதுவும் பித்தளையால் செய்யப்பட்ட ஆந்தை சிலைகள் மிகவும் நல்லது.. எனவே, தீபாவளி போன்ற நாளில் வீட்டிற்கு, ஆந்தை சிலைகளை ஜோடியாக வாங்கி வைக்கலாம் என்கிறார்கள்.


பறவைகள்: ஆனால், பாம்பு, கழுகு, வௌவால், பன்றிகள், புறாக்கள், காகம், புலி போன்ற காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் படங்களையோ அல்லது சிலையாக உள்ள பொருட்களையோ வீட்டில் வைக்க வேண்டாம் என்கிறார்கள். அதேபோல, தம்பதியினரின் அறையில் ஒற்றை பறவை அல்லது விலங்கு படங்களை வைக்க கூடாது. காரணம், காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளின் உருவம் போட்ட புகைப்படம் அல்லது சிலை உங்கள் வாழ்க்கையில் வன்முறை மனப்பான்மையை ஏற்படுத்திவிடுமாம்,


லவ் பேர்ட்ஸ்: அதேபோல, மறுபடியும் உயிர்த்தெழுந்து வரக்கூடிய பறவையும் பாசிட்டிவ் எனர்ஜியை தரக்கூடியவை.. விரக்தியிலும், தோல்வியிலும், சோர்ந்து போயிருப்பவர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கின்ற பறவையாக இந்த பீனிக்ஸ்.. எனவே, இதன் போட்டோவையும் வீட்டில் வைத்துக் கொண்டால் அதிர்ஷ்டம் பெருகும். காதலர்களுக்கு மிகவும் பிடித்தமானதா பறவையாக இருக்கும் லவ் பேர்ட்ஸ் பறவையின் போட்டோக்களையும் வீட்டில் மாட்டி வைக்கலாம். இதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பும், பாசமும் மேலோங்கும்.


No comments:

Post a Comment