Thursday 24 October 2024

கருப்பு கவுனி...




1,65,000 அரிசி இனங்களில் இதுதான் நம்பர் ஒன்: சுகர், புற்று நோய்க்கு பெஸ்ட் உணவு
கருப்பு கவுனி அரிசியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது, அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மெதுவாகவும் படிப்படியாகவும் அதிகரிக்கச் செய்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
black rice


கருப்பு கவுனி அரிசி சமீப காலமாக நிறைய நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.


சர்க்கரைநோயாளிகள் மற்றும் புற்று நோய் அபாயம் உள்ளவர்கள் அனைவரும் இதை அரிசியை தேடுகிறார்கள் அனால் நம் ஒவொருவரின் வீட்டிலும் இந்த அரிசி ஒரு கைப்பிடி நம் உஙகினாவில் இருக்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.


ஆங்கிலத்தில் இந்த அரிசிக்கு பெயர் 'போர்பிடன் ரைஸ்'. சீனாவில் இது தடை செய்யப்பட்ட அரிசி. ஏனென்றால் இது வெறும் மன்னர்கள் மட்டும் சாப்பிட கூடிய அரிசி என்றும், சாதாரணமான மக்கள் இதை சாப்பிட கூடாதென்றும் திபெத்திய மன்னர்கள் இதை ஒரு காலத்தில் தடை செய்தனர்.


அனால் நம் ஆராய்ந்து பார்த்தால் இருக்கின்ற அரிசி வகைகளில் அதிகமான சத்துள்ள அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி மட்டுமே.


அதில் இருக்கும் அந்த கருமை நிறத்திற்கு பின்னல் ஆன்தோசயனின்ஸ் என்று ஒன்று இருக்கிறது. இது எந்த கருநீல பழத்திலும் இருக்கும் ஒன்றாகும்.


இந்த ஆந்தோசைனின்ஸ் சாதாரண அழற்சியிலிருந்து மிக பெரிய புற்று நோய் வரை குணப்படுத்தும் தன்மை நிறைந்தது.


அதற்க்காக இதை சாப்பிட்டால் நோய் குணமாகிவிடும் என்பது உண்மை அல்ல ஆனால் தினந்தோறும் அதை ஒரு பிடியாவது சாப்பிடும்போது புற்று நோயின் அபாயத்தை குறைக்க முடியும் என்பது உண்மை 


No comments:

Post a Comment