Friday, 25 October 2024

சனி + கேது" ஒருவர் ஜாதகத்தில் இணைந்து இருப்பது யோகமா?.. தோஷமா?... சாபமா?.

"சனி + கேது" ஒருவர் ஜாதகத்தில் இணைந்து இருப்பது யோகமா?.. தோஷமா?... சாபமா?... என்று விரிவாக பார்ப்போம்.

ஒருவர் பிறப்பு ஜனன ஜாதக அமைவில் சனியும், கேதுவும். லக்னம் முதல் என்ன வரும் 12 ராசி கட்டங்களில் இருவரும் இணைந்து இருந்தால் முதலில் வருவது பயம் தான். 

ஐயோ எனக்கு சனி / கேது சேர்ந்துள்ளது. இது நல்லதா? கெட்டதா? எனது வாழ்வு எப்படி இருக்கும்? இந்த அமைப்பு சன்னியாசத்தை தருவதா? வாழ வழி இல்லையா? என்றெல்லாம் பயம் தரக்கூடியது.

எல்லா ஜோதிடரும் பயமுறுத்துகிறார்களே? இது சன்னியாச ஜாதகம் அமைப்பு என்று எல்லாம் பயப்பட கூடியவர்களுக்கான பதிவே இது.

சனிபகவான் ஒரு பாவ கிரகம் தான். அதேபோல, கேது பகவானும் ஒரு பாவ கிரகம். 

முதலில் #சனி பகவானை பார்ப்போம். சனிபகவான் கர்ம காரகர், ஆயுள் காரகர், ஒருவர் ஜாதகத்தில் ஜனனம் முதல் மரணம் வரை சனி பகவானின் ஆதிக்கம் தான் தொடரும். சனிபகவான் வாயு. காற்று அதாவது பிராணன் (சுவாசம்) குரு பகவான் அங்கத்தில் மூக்கு என்றால் அதனுள் ஏற்படும் சுவாசக்காற்று சனி பகவானே!

ஈசனால் போற்றப் பெற்று வரம் பெற்றமையால் தான் அவரை சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார். சனிபகவான் 2 ஆதிபத்திய வீடுகளுக்கு சொந்தக்காரர். தொழில் மற்றும் உத்தியோகம் அதன் மூலமாக கிடைக்கக்கூடிய லாப நஷ்டங்களுக்கு இவர்தான் பிரதி நீதியானவர். நீதி வழங்கும் நீதிமானாவார்.

நம் நன்மை செய்தால் நன்மை பலனாகவும், தீமை செய்தால் தீமை பலனாகவும் தருபவர். இதற்காக தான் "நன்மை செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை மற்றவர்களுக்கு கெடுதலை செய்யாமல் இருப்பது நல்லது" என்று சொல்வார்கள்.

யாரையும் எளிதாக ஏய்துவிடலாம் ஏமாற்றியும் விடலாம். ஆனால் இது சனி பகவானிடம் செல்லுபடி ஆகாது. சனி பகவான் ஒரு மந்த கிரகம். மெதுவாக பலம் தரக்கூடியவர். வருட கிரகங்களில் இரண்டரை ஆண்டு காலங்கள் தங்கி பலன் தருபவர். கருப்பு நிறத்திற்கு சொந்தக்காரர்.


சுமை தூக்குபவர்கள், 
இரவில் தந்தைக்கு காரர். 
இரவு நேர வேலை பார்ப்பவர்.
அழுக்கு,
சொல்லக் கூச்சப்படக்கூடிய தொழில்கள் யாவும். சனி பாவத்துவமாக இருக்கும்போது.

அதுவே சுபமாக இருக்க ஆன்மீகம், ஜோதிட புலமை, மரத்தொழில், மிகப்பெரிய தொழில் அதிபர், (ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்பவர்.) பர்னிச்சர் மேக்கர், பெட்ரோல் பங்க், உணவில் பயன்படுத்தக்கூடிய ஆயில், கெமிக்கல்ஸ் ரசாயனம் சார்ந்த தொழில், 

சில ராசி லக்னங்களுக்கு மட்டும் (ரிஷபம் / துலாம்) ராஜயோகத்தை தருபவர் சனி பகவானே! 

சனி பகவானை கணிப்பதற்கு மிகப்பெரிய ஞானம் வேண்டும். கொடுப்பதும் அதனை கெடுப்பதும் அவரே. கொடுக்கும்போது அளவில்லாமல் கொடுப்பார். அதேபோல கெடுக்கும் போது குடலை உருவுவது போல உருகி விடுவார் ஒன்று இல்லாமல். அப்பேர்ப்பட்ட சனி பகவானுடன் கேது என்கின்ற ஞானகாரகர் இணைவது எப்படி இருக்கும்.

#கேதுவை பார்ப்போம். கேது பகவான் ஞானத்தை தருபவர். ஆகவே நாம் ஞானகாரகர், மோட்ச காரகர் என்று அழைக்கப்படுகிறார். ராகு பகவான் கொடுப்பார் என்றால் கேது பகவான் கெடுப்பார். ராகு பகவான் தந்தை வழி முன்னோர்கள். கேது பகவான் தாய் வழி முன்னோர்கள்.

கேது பகவானுக்கு அதிபதியாக வருபவர் விநாயகப் பெருமான். சனிபகவான் விநாயகரிடம் மட்டும் அடிபணிந்து செல்லக் கூடியவர். ஆதலால் தான் சனி பகவானை விநாயகர் பிடியில் தப்பிக்க இன்று போய் நாளை வா என்று ஞான பாடம் கற்பித்த ஞானத்தின் பிதாவானார். ஆனால் கேது ஞானம்,
பற்றற்ற நிலை,
சன்னியாசம்,
விரக்தி,
தற்கொலை எண்ணம்,
கிழிந்த உடை,
சதா தெருவில் திரிபவர்,
சித்த பிரம்மை,
பைத்தியம், இது மட்டுமல்ல ஞானி என்றால் விஞ்ஞானமும் அவரே.  துப்பு துலக்குதல்,
பிரபஞ்ச ஆற்றலை பெறுதல், மறைகலையான யோகா, தியானம், அஷ்டமா சித்திகள்.
குண்டலினி சக்தி பெறுதல்,  மருத்துவர், வாக்குப்பழிதம்,
ஜோதிடம் இவற்றிற்கும் கேதுவின் தயவு இருந்தால் மட்டுமே முழுமை பெற முடியும்.

கேதுவிற்கும் ராகுவிற்கும் சொந்த வீடுகள் கிடையாது. இருக்கும் இடத்தின் பலனையும். சேரும் கிரகங்களின் பலனையும் அபகரித்து அதாவது உள்வாங்கி பிரதிபலிக்கக் கூடிய நிழல் கிரகங்களில் மிகவும் வலிமை பெற்றவர்கள். இவர்கள் ஒன்றை ஆண்டு காலம் தங்கி பலன் தரக்கூடியவர்கள். 

அப்பேர்ப்பட்ட கிரக அமைவில் இருக்கும் கேதுடன் இணையும் சனி பகவான் சனியின் இயல்பு குணமான கெடுதல் செய்வது போன்ற கெடு பலனை கேது உள்வாங்கி சனியின் இயல்பு தன்மையிலிருந்து மாறுபட செய்துவிடும். இது ஒரு வகையில் நல்ல இணைவானதே.

அப்போ இது சன்னியாச வாழ்க்கை தருமா? என்றால் இல்லை. சன்னியாசம் என்பது இரு கிரக இணைவை மற்றும் பார்ப்பது இல்லை. சந்திரன் புதன் சம்பந்தப்பட்டால் ஒரு கால் குடும்பம் ஏற்பட்டு பிறகு விரக்தி நிலையில் குடும்பத்தை விட்டு பிரிந்து சன்னியாசம் பெறலாம். ஒரு கிரகம் தனியாக இருப்பதை விட கிரகங்களுடன் இணைந்து செயல்பட்டால் தான் பலன் பிரதிபலிக்கும்.

அதாவது, அறுசுவை உணவில் எல்லாம் இருந்தும் உப்பு மட்டும் இல்லை என்றால் சாப்பாட்டில் சுவை இருக்குமா? அதுபோலவே தான் கிரகங்களின் கூட்டணிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து சேரும் கிரக அளவைப் பொறுத்து பலன்கள் வேறுபடும், மாறுபடும்.

அப்போ, சனி + கேது இணைவு என்பது ஒரு கட்டத்தில் 30° டிகிரி என்றால் இதன் அமைப்பு 6° டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே இனைவாகும். டிகிரிகள் விலக விலக இணைவு என்பது இல்லையாகும். 

சனி + கேது : ஒரு கட்டத்தில் எதிர் எதிர் நகரும் போது

 [ நேர் தன்மை = எதிர் தன்மை / எதிர் தன்மை = நேர் தன்மை ] பாவத்தன்மை.

(நேர் தன்மை = நேர் தன்மை) சுபத்துவத்தன்மை.

அதேபோல சனிபகவான் சுய நட்சத்திரத்தில் இருக்கும் போது சுயமான சுபத்துவத்துடனும், மற்ற கிரக சாரத்தில் இருக்கும் போது வேறு விதமாகவும் இருக்கும்.

அதேபோல கேது தனது சுயசாரத்தில் இருந்தால் மட்டுமே கேதுவின் பலன்கள் யாவும் பிரதிபலிக்கும். மற்ற நட்சத்திரக்காரர்களில் இருந்தால் அந்த கிரகத்தின் காரணமாகவே செயல்படக் கூடியது.

சனி - நமது கர்மாவை குறிக்கக் கூடியது. அதனை அனுபவிக்க பிறந்த ஜாதகர் கேது. ஞானத்தை மோட்சத்தை தருவது இரண்டும் இணையும் போது. முன் ஜென்மத்தில் விட்டு விட்ட பந்தங்களை இந்த ஜென்மத்தில் ஜாதக அனுபவிப்பார் என்று அர்த்தம்.

அதாவது விட்ட குறை, தொட்ட குறை என்று சொல்வார்கள். இந்த இணைவு உள்ள ஜாதகர் பிரபஞ்ச ஆற்றல் சக்தி அதாவது இறைசக்தி ஆதிக்கம் இருக்கும். 

தெய்வங்களைத் தேடி போக வேண்டாம் தெய்வங்கள் அவரை தேடி வரும் அமைப்பாகும். 

போன ஜென்மத்தில் இறைவழிபாடு இல்லாம இருப்பது. அடுத்தவர்களை நிந்திப்பது. கெடுதல் செய்வது. சாப்பிடும் போது சாப்பிடுபவர்களை தடுப்பது, தட்டி விடுவது. குருவை நிந்திப்பது, மதிக்காமல் இருப்பது. தாய் தந்தைகளை கடுமையாக கொடுமைப்படுத்துவது. சகோதரனை அடிமை படுத்துவது. குழந்தைகளுக்கு கடும் தண்டனை கொடுப்பது. குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து வதை செய்வது. பணத்திற்காக அடுத்தவர்களை சம்பந்தமில்லாத வரை கொலை செய்வது. கோயில் சொத்துக்களை அபகரிப்பது. மற்றவரின் மனைவியை கரம் பிடிப்பது. இதுபோன்ற இன்னும் நிறைய தவறுகளை தெரிந்தும் தெரியாமலும் செய்திருப்பவர்கள். 

இவைகளையெல்லாம் தித்து வலி செய்வதற்காகவே எடுக்கப்பட்ட ஜனனமாகத்தான் சனி கேது இணைவு ஒரு பாவகத்தில் அமரும். அதனை இந்த ஜென்மத்தில் அந்த ஜாதகர் பாக்கி கடமைகளை செய்து முடித்ததாக வேண்டும். இதுதான் இறைவனின் நிபந்தனை.

1.இந்த இணைவு லக்னத்தில் இருந்தால் ஜாதகர் தேடல் மனப்பான்மையுடன் இருப்பார். எதிலும் தேடல் அதிகமாக இருக்கும். விரக்தி உடனே இருப்பார். சலிப்பாக பேசுவார். வாழ்வே வேண்டாம் என்று இருப்பார். எல்லாமே தாமதமாக கிடைக்கும்.

2. லக்னத்திற்கு இரண்டில் இருந்தால், தன வரவுகள் இருக்கும். அதில் விருப்பம் இல்லாமலே இருப்பார். வாக்கு திக்கும். வாக்குப் பழிதம் உண்டு. இசையால் புகழ் கிடைக்கும் ஆனால் மகிழ்ச்சி இருக்காது.

3. லக்னத்திற்கு மூன்றில் இருந்தால், சகோதர உறவில் பகை தரும். சகோதரர் இல்லாத நிலையை தரும். சகோதரருக்காக உழைக்க நேரிடும் வாழ்நாள் முழுவதும். முயற்சிகள் விரக்தி அடைந்து வேதனை தரும். சில அமைப்புப்படி உப ஜெயமான மூன்றில் அமர்வது நற்பலன்களையும் தந்துவிடும்.

4. லக்னத்திற்கு 4-ல் இருந்தால், தாயாருக்கு சேவை செய்வதன் மூலமும். தாய் வழி உறவிற்கு உதவிகள் செய்வதன் மூலமும் தனது கர்மாவை கழிக்க நேரிடும். தாய் வழி சொத்துக்களை கேஸ் போட்டு வாதாடி ஜெயிக்க நேரிடலாம். சொத்துக்களை தராமல் ஏமாற்றவும் நேரிடலாம்.

5. லக்னத்திற்கு ஐந்தில் இருந்தால், ஆழ்மனதில் ஒரு இணை புரியாத சோகம் இருக்கும். புத்திர பாக்கியம் தாமதமாக காலம் கடந்து கிடைக்கும். குழந்தைக்காக ஏங்க வைக்கும். அந்தக் குழந்தைக்காகவே வாழ்நாள் பூராகவும் உழைக்கவும் சேவை செய்யவும் வைத்துவிடும்.

6. லக்னத்திற்கு ஆறில் இருந்தால், இந்த இணைவு நன்மை தருவதாகவே இருக்கும். எதிரிகள் கட்டுக்குள் அடங்குதல். கடன் கிடைக்கும். கடன் கொடுத்தவரின் நிலை பரிதாபமாக போய்விடும். வெளியூர் வெளிநாடு யோகம் தரும். நோய் நிவாரணமாகும். இதுவும் உப ஜெய ஸ்தானமே.

7. லக்னத்திற்கு ஏழில் இருந்தால், காலதாமதமாக திருமணங்கள் நிகழும். வயது முதிர்ந்த மனைவி அல்லது கணவர் கிடைக்கும். மண வாழ்வில் விரக்தி தரும். பற்றற்ற சூழல் தரும். ஒரு சிலருக்கு திருமணம் செய்து முடித்து வெளிநாடு சென்று வர வாய்ப்பு உண்டாகும்.

8. லக்னத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகருக்கு கண்டங்கள் நிகழும். அதிலிருந்து காத்தருளும் பாக்கியமும் கிடைக்கும். ஜாதகரின் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படும். நிறைய அவமானங்களை சந்திக்க நேரிடும். சில சமயம் வெளியூர், வெளி மாநிலம், வெளி தேசம் சென்று வரும் வாய்ப்புகள் தரும். தேலையில்லா வம்பில் சிறைவாசம் நிலையும் தரும்.

9. லக்னத்திற்கு ஒன்பதில் இருந்தால், தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். தந்தையை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலையை தரும். தந்தையின் சொத்துக்களை அடைய வழக்கு போட்டு அலைந்து பெறக்கூடும். தந்தையே ஏமாற்றி கோயில்களுக்கு சொத்துக்களை எழுதி வைக்கவும் நேரிடும்.

10. லக்னத்திற்கு பத்தில் இருந்தால், பல தொழில்களை உருவாக்க நேரிடும். அதனை நிர்வாகம் செய்து ஆட்களை சேர்க்கும் நிலை தரும். அடுத்து அடுத்து என தேடல் என்ற திருப்தி அற்ற நிலை தரும். ஆன்மீகம் சார்ந்த துறை ஒருபோதும் இவர்களுக்கு தீங்கு செய்வதில்லை.

11. லக்னத்திற்கு 11ல் இருந்தால், மூத்த சகோதரர் இடையே பகை ஏற்படும். மூத்த சகோதரருக்கு உதவி செய்தல், அவர்களுக்காகவே வாழ்க்கையை தியாகம் செய்தல். 11ல் இருந்தால் கெடுபலன்களை தர மாட்டார் தான். அதன் அடிப்படையில் நற்பலன்களை நிகழும். ஏனென்றால் உப ஜெய ஸ்தானம்.

12. லக்னத்திற்கு 12ல் இருந்தால், தூக்கமின்மை தரும். சதா சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். தூக்கத்தில் எழுந்து நடக்கும் நோயும் இருக்கும். தாம்பத்திய சுகத்தில் சலிப்பைத் தரும். மோட்சத்தை நோக்கி பயணங்கள் தரும். பாதயாத்திரை செல்லுதல். தொலைதூரப் பயணம். எதிர்பாராத சிறை வாசமும் இதில் உண்டு.

மற்றபடியாக சனி கேது இணைவு உள்ள ஜாதகர் பயப்பட வேண்டாம். இது ஆண் பெண் இருவருக்கும் உள்ள பலன்களை. இந்த இணைவு சிறு வயதில் இருந்து கஷ்டம் தரும். பிறகு மாற்றமும் தரும்.

இந்த இணைவு உள்ளவர்கள் பெரும்பாலும் தனிமையை விரும்புவார்கள். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள். கதை ஆசிரியர். பாடலாசிரியர். கற்பனை ஓவியர். துப்பு துலக்கும் இலக்கா. சினிமா, மீடியா, ஒளிப்பதிவு துறையில் சாதிப்பவர்களும், 

இந்த இணைவு பெற்றவர்கள் சிலர் அதிகம் உள்ளார்கள். உதாரணமாக : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிம்ம லக்கனம், விருச்சகத்தில் சனி கேது இணைவு நடிப்பு கதாபாத்திரமாக திகழ்ந்து இன்றிய அளவில் பேரும் புகழும் பெற்றவர். 

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். மகர ராசி, சிம்ம லக்கனம் கன்னியில் சனி கேது இணைவு. இன்று அளவில் சூப்பர் ஸ்டார், கோடீஸ்வரர், ஆன்மீகவாதியாகவும் குடும்பத்துடன் பயணிக்கிறார். இதேபோல் பெண் நடிகைகள் நயன்தாரா. முன்னாள் நடிகைகள் இருக்கிறார்கள். மற்றும் நமக்குத் தெரியாமலும் இருக்கக்கூடும். ஆக சனி கேது இணைவு ஒருவருக்கு இருக்குமேயானால் அந்த ஜாதகரை ஏதோ ஒரு வகையில் உலக புகழ் பெற வைக்கும்.

அந்த இணைவின் நேர் தன்மை உள்ள அமைப்பு உள்ள ஜாதகர் ஏதோ ஒரு வகையில் அழிவில்லா, புகழையும் பெயரையும் தந்துவிடும்.

சில நபர்களுக்கு மட்டும் இந்த இணைவு, சன்னியாசம் என்ற ஆன்மீகத்தோடு பயணிக்கும் நிலையை தரும். அப்படிப்பட்ட இணைவு 100 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே அமையப்பெறும்.

இந்த இணைவு பெற்றவர்கள் இயற்கையாகவே ஆன்மீகத் தேடல், ஜோதிட புலமை, சித்தாந்த நிலை, சித்தரை நோக்கி பயணித்தல், தனித்திறமை உள்ளவராகவும் சனி கேது இணைவு பெற்றவர்களாக காணப்படுவார்கள்.

இவர்கள் ஜோதிட துறையிலும் ஈடுபட்டால் மிகப்பெரிய அளவில் ஞானத்தை பெறுவார்கள்.

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் சென்று வழிபட இந்த இணைவு பலனை பிரதிபலிக்க செய்யும் ஜாதகருக்கு அதனால் யோக பலனையும் பெறுவார

No comments:

Post a Comment