Friday 25 October 2024

சாளக்கிராம கற்கள்.....


பூஜை அறையில் இந்த கல் இருந்தாலே புண்ணியம்.. பலே சாளக்கிராமம்.. அதிர்ஷ்டம் தரும் சாலிக்கிராமம் கற்கள்
மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தில் பெருமாளும் வாசம் செய்வார் என்பார்கள்.. அந்தவகையில், பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டிய முக்கிய அம்சம்தான் சாளக்கிராமம் ஆகும். இதனை எப்படி வழிபடுவது? இதை வழிபடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன? என்பதை பார்ப்போம்.

திருமாலின் அருவுருவ திருக்கோலல்தான் சாளக்கிராம கற்கள்.. சிவபெருமானின் அருவுருவத் தோற்றமாக எப்படி சிவலிங்கம் இருக்கிறதோ, அதே போலவே, திருமாலின் அருவுருவ திருக்கோலமாக சாளக்கிராமக் கற்கள் பார்க்கப்படுகின்ற

திருமால்: அதனால்தான், திருமலை திருப்பதியில் நடக்கும் பூஜைகளில் சாளகிராமத்திற்கு மிக மிக முக்கியமான பங்குண்டு. திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவம் உள்ளதால், இந்த சாளக்கிராம கல்லை தினமும் வழிபாடு செய்து பலனை பெறலாம் .

கரிய நிற சாளக்கிராம கல்லை, கண்ணனாகவும் வழிபடும்போது கிடைக்கும் சிறப்புகள் ஏராளம். ஆனால், இந்த கற்கள் பெரும்பாலானோருக்கு கிடைத்துவிடுவதில்லை.. தினமும் சாளக்கிராம கற்களுக்கு பூஜை செய்து வரும்போது, நம்முடைய மனம் தெளிவடையும்.. சாளக்கிராமத்தில் காணப்படும் உருவங்களின் தரிசனமானது, கொலை பாவத்தைக்கூட போக்கும் சக்தி படைத்ததாம்.. சாளக்கிராம பூஜை செய்பவர்களை எமபயம் அண்டுவதில்லை..

சாளக்கிராம கற்கள்: எப்படி பூஜை செய்யலாம்: சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் தொட்டு வழிபடலாம் என்றாலும், சாளக்கிராம கற்கள் இருக்குமிடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

சாளக்கிராம கற்களுக்கு சந்தனம் பூசி, மலர் சூடி, தீப, தூப ஆராதனைகள் செய்து, நைவேத்தியமும் படைத்து வழிபடலாம். இப்படி வழிபடுவதால், அவர்களுக்கு விஷ்ணு லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்குமாம்.. அதுமட்டுமல்ல, சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால், யாகமும், தானமும் செய்த பலன் கிடைத்துவிடும் என்பார்கள்.


தீர்த்தங்கள்: 12 சாளக்கிராம கற்களை கொண்டு வழிபாடு செய்தால், 12 கோடி சிவலிங்கங்களை வைத்து, 12 கல்ப காலம் பூஜை செய்த பலன், ஒரே நாளில் கிடைக்கப்பெறும்... சாளக்கிராமத்திற்கு செய்யும் அபிஷேக தீர்த்தத்தையும் தலையில் தெளித்து, பருகினால், புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் வந்துசேரும் என்பார்கள்.

சாளக்கிராம கற்களில் விரிசல்கள் ஏதாவது இருந்தால், அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி பூஜைக்கு பயன்படுத்தலாம். பூஜை செய்வதுடன் மட்டுமல்ல, அந்த கல்லைப் பற்றி நினைத்தாலே, நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடுமாம்..


No comments:

Post a Comment