Wednesday, 23 October 2024

ஃபிரிட்ஜ்ஜில்வைக்கும்பொருட்கi


நாம் வீட்டிலுள்ள ஃபிரிட்ஜ்ஜில் அனைத்து உணவு பொருட்களையுமே வைத்து பாதுகாக்க முடியாது. சில பொருட்களை பிரிட்ஜ்ஜில் வைக்கும்போது, எதிர்வினையாற்றலை உடலுக்கு ஏற்படுத்திவிடும்.. அதில் சிலவகை பொருட்களை பார்க்கலாம்.


காய்கறிகள் எப்போதுமே வெவ்வேறு காலநிலையில் வளரக்கூடியவை.. குளிர்பிரதேசத்தில் வளரும் தன்மை கொண்டவை.. வெப்ப பிரதேசத்தில் விளைவிக்கப்படுபவை என்று வகைகள் உண்.. எனவே, அவைகளின் தன்மைக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையில் மட்டுமே வைத்து காய்கறிகளை பராமரிக்க வேண்டும்.


எண்ணெய்கள்: எண்ணெய்களையும் ஃபிரிட்ஜ்ஜில் வைக்கக்கூடாது.. ஆலிவ் எண்ணெய் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வெண்ணெய் போல் உருமாறிவிடக்கூடும். கிச்சனிலும் சூடான இடத்தில் வைக்கக்கூடாது..


அதேபோல பாலை எப்படி வைத்தாலும் சிலசமயங்களில் கெட்டுவிடக்கூடும். பெரும்பாலும், ஃபிரிட்ஜின் கதவின் உட்புறமுள்ள பாட்டில் ஹோல்டர்களில் பலரும் பால் பாக்கெட்டுகளை வைப்பார்கள். ஆனால், இந்த இடத்தில் வைப்பதுதான் பால் கெட்டுப்போகிறதாம். ஏனென்றால், ஃபிரிட்ஜ்ஜை அடிக்கடி திறந்து மூடும்போது, வெளிப்புறம் உள்ள உஷ்ண காற்று, இந்த பாட்டில்களில் நேரடியாக பட்டுவிடுகிறது. இதனால், குளிர்ச்சியும், வெப்பமும் என மாறி மாறி பால் பாத்திரத்தில் படும்போது, பாலில் உள்ள பாக்டீரியா வளர காரணமாகிவிடும்.



பால் பாக்கெட்: எனவே, வெளிப்புற காற்று படாதபடி ஃபிரிட்ஜ் உள்பக்கமாக அல்லது ஃப்ரீசருக்குள் பாலை பாக்கெட், பால் பாத்திரத்தை வைப்பது மிகவும் நல்லது. இதனால், பாலின் வெப்பநிலை பாதிக்காது.. ஒரே சீரான குளிர் இருப்பதால், அதுவும் ஃப்ரீசரில் உள்ளதால், பாலில் உள்ள பாக்டிரியாக்கள், இந்த சூழலில் செயல்பட முடியாது. பாலும் பாதுகாப்பாக இருக்கும்.



இன்சுலின் உட்பட சில மருந்துகளையும் சிலர் ஃபிரிட்ஜில் வைப்பார்கள்.. இப்படி மருந்தை வைப்பதாக இருந்தால், அதன் அருகிலேயே உணவுப்பொருட்கள், இறைச்சி, பூக்களை வைக்கக்கூடாது. ஏனென்றால், மருந்துகளில் மருந்தில், வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவற்றின் தன்மை மாற வாய்ப்புள்ளது.

பூண்டுகள்: வேகவைத்த உருளைக்கிழங்கையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது.. அப்படி வைத்தால் உருளைக்கிழங்கு விரைவாக கெட்டுப்போகும் வாய்ப்புள்ளது. குளிர்ந்த சூழல் மாவுச்சத்துகளை சர்க்கரையாக மாற்றுவதால் இனிப்பு சுவையை உருவாக்க வழிவகுக்கும்... எனவே, வேகவைத்த உருளைக்கிழங்கினை அறையின் வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். வெளியில் வைத்தாலும்கூட, பூண்டுகளை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்க வேண்டும்.


No comments:

Post a Comment