Thursday, 21 November 2024

40 வயதுக்கு பிறகு ராஜயோகம்

இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதுக்கு பிறகு ராஜயோகம் வருமாம்... 
 ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி போலவே அவர்களின் நட்சத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் மற்றும் ஆளுமைப் பற்றி தெரிந்து கொள்ள நட்சத்திரமும் முக்கியமானதாகும். வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறிவரக்கூடியது. ஒருவேளை நீங்கள் இன்றுவரை வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அனுபவித்தால் அதற்கு உங்களின் ஜாதகமும் ஒரு காரணமாக இருக்கலாம்.  ஆனால் துன்பம் எப்போதுமே நிரந்தரமானதல்ல என்பதை மறந்து விடக்கூடாது. சிலருக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதுக்கு பிறகுதான் ராஜயோகம் பிறக்கும். குறிப்பாக சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு அவர்களின் 40 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதனால் அவர்கள் வாழ்க்கையின் பிற்பகுதி மகிழ்ச்சியாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் 40 வயதுக்கு மேல் ராஜாவாக வாழ்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். 

 உத்திரம் 40 வயது வரை உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல சவால்களையும், தடங்கல்களையும் சந்திப்பார்கள். அவர்கள் ஆசைபட்ட பல விஷயங்களை அடைய முடியாமல் போகலாம். ஆனால் 40 வயதிற்குப் பிறகு, இந்த துன்பங்கள் அனைத்தும் மறைந்துவிடும். 40 வயதுக்கு பிறகு இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பல நிதி நன்மைகள் காத்திருக்கின்றன. வேலையில் நல்ல உயர் பதவி பெறுவார்கள், அதிர்ஷ்டமும்ம் செழிப்பும் அதிகரிக்கும். இந்த நட்சத்திரங்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தினால் பலரது நன்மதிப்பைப் பெறலாம். இது அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தையும் அடைய உதவும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் 40 வயதுக்கு பிறகு முடிவுக்கு வரும்.

 கேட்டை 


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 40 வயது வரை சிறிய விஷயங்களுக்கு கூட கஷ்டப்படுபவர்களாக இருப்பார்கள். கையில் போதுமான பணம் இருந்தாலும், பல்வேறு பிரச்சனைகளால் அவர்களால் விரும்பிய வாழ்க்கையை அடைய முடியாமல் மனரீதியான பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆனால் 40 வயதிற்குப் பிறகு இந்தக் கஷ்டங்கள் நீங்கும் நாட்களைப் பெறுவார்கள். "புதன் விருச்சிக ராசியில் உதயமாவதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாட்டரி அடிக்கப்போகுதாம்..உங்க ராசி இதுல இருக்கா" புதிய நிலம் வாங்கி அதில் வீடு கட்டலாம். 40 வயதுக்குப் பிறகு இந்த நட்சத்திரக்காரர்கள் வியாபாரத்தில் பிரகாசிக்கலாம். மேலும். குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகலாம். அவர்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்வை நடத்த வாய்ப்புள்ளது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை 40 வயதுக்கு மேல்தான் தொடங்கும். புனர்பூசம் புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் 40 வயது வரை பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். 40 வயதுக்கு முன்பே இந்த நட்சத்திரக்காரர்கள் பலரிடம் கடன் வாங்கி வாழ வேண்டியிருக்கும். இருப்பினும், 40 வயதிற்குப் பிறகு, இந்த நட்சத்திரக்காரர்களுக்கு பல சாதனைகள் காத்திருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை சிறப்பாக மேம்படுத்த முடியும். "உங்களோட ராசி என்னனு சொல்லுங்க... உங்களுக்கு எத்தனை குழந்தை பிறக்கும்னு நாங்க சொல்றோம்... ஷாக் ஆகாதீங்க...!" அவர்களைப் பார்த்து சிரித்தவர்கள் அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து வாய்பிளப்பார்கள். புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த நட்சத்திரங்கள் 40 வயதிற்குப் பின் நல்ல மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்த நட்சத்திரங்கள் பல வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. உத்திராடம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 40 வயது வரை நல்ல சம்பளம் தரும் வேலை கிடைக்காமல் இருப்பது மன உளைச்சலை அதிகரிக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் வீட்டுச் செலவுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத அளவுக்குக் கஷ்டங்களை அனுபவிக்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் 40 வயதிற்கு பிறகு முடிவுக்கு வந்துவிடும். இந்த நட்சத்திரக்காரர்கள் வெளிநாடு சென்று சம்பாதிக்க வாய்ப்புள்ளது. 40 வயதுக்குப் பின் அவர்கள் நல்ல நிதி நிலையை அடைவார்கள். அதேபோல் அவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, ஆடம்பரமான கார், பெரிய வீடு கிடைக்க வாய்ப்புள்ளது. 

No comments:

Post a Comment