Thursday, 21 November 2024

கீரையை எந்தெந்த உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்?


மோருடன் கீரையை சாப்பிடலாமா? கீரை தினமும் சாப்பிடலாமா? ஆரோக்கியம் தரும் கீரைகள்.. இனிமே இதை கவனியுங்க
தினந்தோறும் கீரையை சாபபிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? கீரையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? யார் யாரெல்லாம் கீரை சாப்பிடுவதை தவிர்க்கலாம்? எந்தெந்த உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்? சுருக்கமாக பார்க்கலாம்.

கீரைகளில் அதிகமான இரும்பு சத்துக்கள் உள்ளன.. ஊட்டச்சத்துக்களும் நிறைய உள்ளன.. இதில் கலோரிகளும் மிகவும் குறைவு என்பதால்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயம் கீரையை சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.


keerai spinach buttermilk
எந்த கீரையாக இருந்தாலும் அதில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.. தினமும் கீரை சாப்பிடுவதால், ரத்த சோகை பிரச்சனை நீங்கும்.. உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும். மலச்சிக்கல் தீரும்.. குடல் ஆரோக்கியம் பெருகும்.. வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்கள் ஆறும்.. புற்றுநோய் அபாயம் குறையும்.. உடல் எடையும் வெகுவாக குறையும்.. நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது.

நார்ச்சத்துக்கள்: கீரைகளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.. எலும்புகள் வலிமையாகும். ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே கட்டுக்குள் இருக்கும்.

எப்போதுமே பிரஷ்ஷான கீரையை சமைக்க பயன்படுத்த வேண்டும்.. கீரைகளின் மேற்பகுதிகளில் நிறைய மண்ணும், பூச்சிக்கொல்லி மருந்தும் இருக்கும் என்பதால், சமைக்கும் முன்பு நன்றாக கழுவ வேண்டும்.

எப்படி சமைக்க வேண்டும்: அதிக எண்ணெய்யில் கீரையை சமைக்கக் கூடாது. வேக வைத்துவிடக்கூடாது.. அதிக அளவு தீயிலும் சமைக்கக்கூடாது.. கீரையை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது.. நீண்ட நேரமும் சமைக்கக் கூடாது. அப்படி சமைத்தால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும். குக்கரில் வைத்து சமைப்பதை தவிர்க்கலாம்.. லேசாக உப்பு சேர்த்து, வதக்கி சாப்பிட்டாலே முழு சத்துக்களும் கிடைக்கும்.


நிறைய கீரை வகைகளில் சோடியம் அதிகமாக இருக்கும்.. எனவே, சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்கள் கீரையை அதிகமாக சேர்க்கக் கூடாது.

தவிர்க்கலாம்: தைராய்டு உள்ளவர்களும் டாக்டரின் ஆலோசனையை பெற்று கீரைகளை சாப்பிடலாம். மூட்டு பிரச்சினை இருப்பவர்களும், நிறைய கீரையை சாப்பிட்டால் கீல்வாதத்தை தந்துவிடும்.. ரத்தத்தை மெலிக்கும் சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், அவர்களும், கீரைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.. எதிர்வினைகள் வந்துவிடுமாம்.

அகத்திக்கீரையையும், ஆல்கஹாலையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. பசலைக்கீரையுடன் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். அதிக

நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால்தான், கீரைகளை இரவில் சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படும். அதேபோல இறைச்சியிலும் கீரைகளை கலந்து சாப்பிடக்கூடாது.. கீரைகளை எப்போது சாப்பிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.


கீரைகள்: கீரைகளை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது.. காரணம், கீரைகளில் அதிகளவு இரும்புச்சத்து, நைட்ரேட் உள்ளன. இந்த நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறிவிடும்.. இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. அதனால், கீரை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பட்டால், அஜீரண கோளாறு, முதல் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வரை அதிகரிக்கும் என்கிறார்கள்.

ஆனால், முட்டையுடன் கீரையை சேர்த்து சாப்பிடலாம் என்கிறார்கள்.. இரண்டிலுமே தசைகளை வலுவாக்கும் புரதங்கள், வைட்டமின்கள் அதிகமுள்ளவை. எலும்புகளுக்கு தேவையான கால்சியம் தாதுவும் உள்ளது. முட்டையில் நல்ல கொழுப்பு, வைட்டமின் B-12 மற்றும் வைட்டமின் D உள்ளன. கீரையில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் A உள்ளன. எனவே, அவைகளை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடும்போது, காணப்படுகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலும், தாதுக்களும் கிடைக்கின்றன.. ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகவும் உள்ளன.


No comments:

Post a Comment