Tuesday, 26 November 2024

தேனில் ஊற வைத்த எள்.. ஜஸ்ட் 5 கிராம் சாப்பிட்டாலே, உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க..


தேனில் ஊற வைத்த எள்.. ஜஸ்ட் 5 கிராம் சாப்பிட்டாலே, உடலில் நடக்கும் அதிசயம் பாருங்க.. எள் விதைகள் செம
எள்ளு விதைகளை எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு நன்மையை தரும்.. கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம் என்றால், வெள்ளை, சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகம். எனவே, எந்த எள்ளாக இருந்தாலும் அதை உணவில் சேர்த்து கொள்வது பல நன்மைகளை தரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் எள் சாப்பிடலாமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

எள்ளில் காப்பர், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் B, E, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ஜீங்க், புரதச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.. எள் விதைகளில் வைட்டமின் B1, B6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் அதிகமாக உள்ளன.. நம்முடைய உடலுக்கு, ஒரு நாளைக்கு தேவையான அளவில் 25 சதவீத தேவையை இந்த எள் விதைகளே பூர்த்தி செய்துவிடுகின்றன..



எள்ளில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள், ஒரே ஒரு கைப்பிடி எள்ளில் உள்ளதால், குழந்தைகளுக்கு எள்ளில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை அதிகம் சாப்பிட தரலாம். இதனால், அவர்களின் பற்கள், எலும்புகள் வலுப்பெறும். எள் விதைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு, எலும்புகள் தேய்மானம் ஆவதில்லை..

சர்க்கரை நோய்: சர்க்கரை உள்ளவர்கள் எள் சாப்பிடலாமா? என்ற சந்தேகங்கள் எழும்.. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் சக்தி, இந்த எள் விதைகளுக்கு உள்ளதாம்.. இதற்கு, 5 கிராம் கருப்பு எள் விதைகளை, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்... அப்போது, கருப்பு நிறத்திலுள்ள தோல், வெண்மையாகிவிடும்.. இந்த எள் விதைகளை எடுத்து, காய வைத்து, ஒரு வாணலில் சேர்த்து வறுக்க வேண்டும். இதில், பனை வெல்லத்தை பாகு செய்து ஊற்றி, கிளவிவிட்டு எடுக்க வேண்டும்.


இந்த கலவையை ஆறவிட்டு சிறுசிறு உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும். இதில், தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இதுபோல 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.. ஆனால், இந்த உருண்டை சாப்பிடும்போது, இனிப்பு சாப்பிடக்கூடாதாம்.

எள் விதைகள்: அதேபோல, எள் விதைகளை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அதிக சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்.. ஒரு பாட்டிலில், 4 ஸ்பூன் தேன், மற்றும் காய்ந்த எள் 4 ஸ்பூன் சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் படாமல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை 3 நாட்கள் ஊறவைத்துவிட்டு, தினமும் 1 ஸ்பூன் சாப்பிடலாம்.



இந்த தேன், எள் இரண்டையும் சாப்பிட்டு வரும்போது, உடலிலுள்ள அனீமியா பிரச்சனை ஓடிவிடும்.. உடல் சோர்வு, உடல் வலி தொந்தரவுகள் வராது.. மெக்னீசிய சத்துக்கள் அதிகமாக உள்ளதால், ரத்தத்திலுள்ள ரத்த அழுத்த அளவை குறைக்க உதவும்.. அத்துடன், உடலில் நல்ல கொழுப்பைகளையும் அதிகரிக்கச் செய்யும்.

சருமத்தில் செல்கள்: நம்முடைய உடலில் இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்கள் உருவாகவும், புற்றுநோய் செல்களை அழிக்கவும் இந்த எள் விதைகள் பயன்படுகின்றன. சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்கு ஊக்குவித்து, தோலிலுள்ள சுருக்கங்கள் விரட்டியடிக்கப்படும்.. காப்பர் சத்து, ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.


உடலில் எதிர்ப்பு சக்தியை பெருக செய்கின்றன எள் விதைகள்.. இதனால், படபடப்பு தன்மையை குறைத்து, மனதை அமைதிப்படுத்தும் சக்தி எள் விதைகளுக்கு உண்டு.


அதேபோல, இந்த விதைகளை சாப்பிட்டு வரும்போது, சிறுநீர் தாராளமாக பிரியும். சிறுநீரகங்களின் கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படும். சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலும் தணியும். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள், இந்த எள் விதையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடலிலுள்ள நச்சுக்கள், கழிவுகள் நீக்கப்பட்டுவிடும்.

யார் யார் தவிர்க்கலாம்: இந்த எள் + தேன் கலவயை தினமும் 1 ஸ்பூன் அதாவது 5 கிராம் மட்டும் சாப்பிட்டு வரவேண்டும். காலை அல்லது மதியம் அல்லது இரவு சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம். ஆனால், எக்காரணம் காலையில் வெறும் வயிற்றில் மட்டும் சாப்பிடக்கூடாது. அதேபோல கர்ப்பிணிகளும் தேன் + எள் விதைகளை சாப்பிடக்கூடாது.. 5 கிராம் மட்டுமே தினமும் சாப்பிட்டு வரும்போது மலச்சிக்கல் தீரும்.. ஆனால், இதிலிருந்து அளவு அதிகமாகிவிட்டால், மலச்சிக்கல் வந்துவிடுமாம்.


No comments:

Post a Comment