மீனுடன் இதை மட்டும் சேர்த்துடாதீங்க.. உருளைக்கிழங்குடன் மீனை சாப்பிடலாமா? அடடா இது தெரியாம போச்சே
அதிகமாக பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகளுடனும் மீனை கலந்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதற்கு காரணம் என்ன? எந்தெந்த உணவுகளுடன் மீன்களை சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? அதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
அதிக சத்துக்கள் நிறைந்த மீன்களை, சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. எண்ணெய்யில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளுடனும் மீனை கலந்து சாப்பிடும்போது, மீனிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடுமாம்.
fish potato sea foods
ஆரோக்கியம் நிறைந்த மீன்கள்.. இறால் எடுக்குறீங்களா? சாளை மீனின் ஸ்பெஷாலிட்டீஸ்.. சத்துக்கள் அடங்கியவை
"ஆரோக்கியம் நிறைந்த மீன்கள்.. இறால் எடுக்குறீங்களா? சாளை மீனின் ஸ்பெஷாலிட்டீஸ்.. சத்துக்கள் அடங்கியவை"
காய்கறிகள்: அதேபோல, காரமான உணவுகளுடன் மீனை சாப்பிடுவதும் தவறு என்கிறார்கள்.. இதனால், இரைப்பைக்கும், குடலுக்கும் தொந்தரவு ஏற்பட்டுவிடுவதுடன், வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வந்துவிடுமாம்.
சிலவகை காய்களுடன் மீனை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அதில் முள்ளங்கியும் ஒன்றாகும்.. இதனால், சளி, மலச்சிக்கல் தொந்தரவுகள் வரலாம்.. அதுமட்டுமல்ல, மீனும், முள்ளங்கியும் ஒன்றுக்கு, ஒன்று எதிர் எதிர் குணங்களைக் கொண்டவை.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கையும் மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்குகளை மீனுடன் சாப்பிடுவது ஆபத்து என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. இதனால் கூடுதல் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கிடைப்பதுடன் செரிமான அமைப்பை மெதுவாக்கிவிடுமாம்.
சைவத்தில் உருண்டைக் குழம்பு! அசைவத்தில் மீன் குழம்பு! துர்கா ஸ்டாலின் சொன்ன சுவாரசியம்
"சைவத்தில் உருண்டைக் குழம்பு! அசைவத்தில் மீன் குழம்பு! துர்கா ஸ்டாலின் சொன்ன சுவாரசியம் "
தயிர், பால், போன்ற பால் பொருட்களுடன் சேர்த்து மீன் சாப்பிடக்கூடாது. தயிர் சைவ புரதத்தின் மூலமாகும், மீன்கள், விலங்கு புரதத்தின் மூலமாகும்.. ஆயுர்வேதத்தில் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது விஷமாக கருதப்படுவதால், தடைசெய்யப்பட்டுள்ளது. தயிரையும், மீனையும் உட்கொண்டால், தோல், கண்களில் பிரச்சனைகள் ஏற்படுவதுடன், கருவுறுதலில் எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்திவிடுமாம்.
கீரைகள்: கீரைகளுடனும் சேர்த்து மீன் சாப்பிடக்கூடாது.. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பின்றி சாப்பிடும்போது, செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். மேலும், கீரைகள் எளிதில் ஜீரணமாகாது.. கீரைகள் என்றில்லை, மந்தப்படுத்திவிடும் தன்மை கொண்ட இரு விதமான உணவுகளை, ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது.
இதில் முட்டைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். முட்டைகளிலும் புரோட்டீன்கள் அதிகமாக இருக்கும்.. இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். இவைகளை ஒன்றாக சாப்பிடும்போது அஜீரணம் ஏற்பட்டு, சத்துக்களும் முழுமையாக உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். மீன், முட்டைகளையும் ஒன்றன்பின் ஒன்றாகவும் சாப்பிடக்கூடாது.. இரண்டையும் தனித்தனியாகவே சாப்பிடலாம்.
மெரினா லூப் சாலையில் பிரம்மாண்டமான மீன் அங்காடி! இன்று முதல் இங்குதான் விற்பனை! மாநகராட்சி அதிரடி
"மெரினா லூப் சாலையில் பிரம்மாண்டமான மீன் அங்காடி! இன்று முதல் இங்குதான் விற்பனை! மாநகராட்சி அதிரடி "
சிட்ரஸ் பழங்கள்: மீனுடன் சிட்ரஸ் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருப்பதால், இது மீனிலுள்ள புரோட்டீன்களுடன் சேர்ந்து வினைபுரியும்.. இதுவும், அஜீரண பாதிப்பை ஏற்படுத்திவிடும்.. தேன் குடித்துவிட்டு, மீன் சாப்பிடும்போது, சுவாசப்பிரச்சனைகள் வரலாம்.
அதேபோல, மீன் சாப்பிட்டதுமே, உடனடியாக பாலில் செய்யப்பட்ட இனிப்புகளை எடுத்துக்கொள்ளவே கூடாது.. அந்தவகையில், ஐஸ்கிரீம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.. இதனால், சருமம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்..
No comments:
Post a Comment