Tuesday, 12 November 2024

சோறு கண்ட இடமே சொர்க்கம்!


சோறு கண்ட இடமே சொர்க்கம்! இதன் அர்த்தம் தெரியுமா? இனி யாரையும் கிண்டல் செய்யாதீர்கள்!
 சோறு கண்ட இடமே சொர்க்கம் என நாம் பலமுறை கிண்டலுக்கு சொல்லியிருக்கிறோம். சிலர் சொல்ல கேட்டிருக்கிறோம். அப்படி என்றால் என்ன தெரியுமா, இனி அது போல் யாரையும் கிண்டல் செய்யாதீர்கள். இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


சோறு கண்டால் சொர்க்கம் உண்டு என்று முன்னோர்கள் பயன்படுத்தி வந்த சொல்வடையானது, தற்போது கேலி, கிண்டலுக்காக சொல்லப்பட்டு வருவது வேதனையை தருகிறது. அதாவது சோறு எங்கு கிடைக்கிறதோ அங்கேயே தங்கி அந்த இடத்தையே தங்களது புகலிடமாக மாற்றிக் கொள்பவர்களை கிண்டல் செய்யும் விதமாக இந்த பழமொழி கையாளப்பட்டு வருகிறது.


spirtuality annabishegam sivan
உண்மையில் சோறு கண்டால் சொர்க்கம் என்பதுதான் சரியான பழமொழி. அதாவது ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். அதில் ஒள்ள ஒவ்வொரு பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக கருதப்படுகிறது. எனவே அன்றைய தினம் சிவலிங்க தரிசனம் செய்பவர்கள் கோடி சிவலிங்கத்தை தரிசித்ததற்கான பலனை பெறுவார்கள்.

மேலும் அன்னாபிஷேக தரிசனத்தை காண்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனைத்தான் சோறு கண்டால் சொர்க்கம் என முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இனி இந்த பழமொழியை கூறி கிண்டல் செய்யாதீர்கள்.

சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமாநதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.

அது போல் கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியமும் கிடைக்கும். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளுடன் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்தது கார்த்திகை மாதம் தொடங்குகிறது.


நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது.

இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். இந்த அன்னத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும்.

வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சந்திர பகவானின் சாபம் நீங்கப்பட்ட நாளும் ஐப்பசி மாத பவுர்ணமிதான். இந்த நாளில்தான் சந்திரனுக்குரிய தானியமான அரிசியில் சிவனுக்கு அன்னமிட்டு அபிஷேகம் செய்தால் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும். பிரதோஷத்திற்கு பால், இளநீர், தேன், தயிர் உள்ளிட்டவை வாங்கித் தருவது போல் அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தால் நம் வீட்டில் உணவு தட்டுப்பாடு இருக்காது.


சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமாநதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.


No comments:

Post a Comment