Friday, 15 November 2024

சபரிமலை பக்தர்கள் கருப்பு உடையை அணிவது ஏன்? பாரம்பரியத்தின் பின்னணி என்ன?


சபரிமலை பக்தர்கள் கருப்பு உடையை அணிவது ஏன்? பாரம்பரியத்தின் பின்னணி என்ன?
சபரிமலைக்கு செல்வோர் கருப்பு நிறத்தில் ஆடையை ஏன் அணிய வேண்டும் என்கிற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். அது போல் ஐயப்பனுக்கு பிடித்தமான நிறம் எது என்பதையும் பார்க்கலாம்.


கார்த்திகை மாதம் தொடங்கியதும் எங்கு திரும்பினாலும் கோயில்களில் சரண கோஷம் கேட்கிறது. ஆம் மகரவிளக்கு பூஜைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் தங்களது விரதத்தை தொடங்குவது வழக்கம்.




சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜை.. ஐயப்ப பக்தர்களே நடை திறப்பு எப்போது?.. வெளியான குட்நியூஸ் 
"சபரிமலை கோவிலில் மாசி மாத பூஜை.. ஐயப்ப பக்தர்களே நடை திறப்பு எப்போது?.. வெளியான குட்நியூஸ் "
அந்த வகையில் இன்று அதிகாலையிலேயே பல்வேறு கோயில்களுக்குச் சென்ற பக்தர்கள் துளசி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்கள் அவரவருக்கு சவுகரியமான உடைகளை அணியலாம்.


அதாவது வேஷ்டி, பேண்ட், அரைக்கால் சட்டை உள்ளிட்டவைகளை அணியலாம். ஆனால் அவை கருப்பு நிறமாக இருத்தல் வேண்டும். நீலம், காவி உள்ளிட்ட ஆடைகள் அந்த பக்தர் சபரிமலைக்கு எத்தனை ஆண்டுகள் சென்றாரோ அதை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும். அதுவரை கருப்பு ஆடைதான் அணிய வேண்டும்

சபரிமலைக்கு ஏன் கருப்பு நிறத்தில் ஆடை அணியப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கருப்பு வேட்டி அணிந்தே சபரிமலைக்கு பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை பார்க்கலாம். அதாவது ஐயப்ப சுவாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பஸ்வாமி, ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள்.

சபரிமலை யாத்திரை: பம்பை நதியில் நீராடிய 2 தமிழக ஐயப்ப பக்தர்கள் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!
"சபரிமலை யாத்திரை: பம்பை நதியில் நீராடிய 2 தமிழக ஐயப்ப பக்தர்கள் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!"

அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமியிடம் செல்லும் பக்தர்கள் கருப்பு நிற ஆடையை அணிகிறார்கள். மேலும் சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. ஐயப்பன் சன்னிதானத்தை அடைய பெருவழி, சிறுவழி என இரு வழிகள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் கடினமான பெருவழியில் செல்வர்.

நீண்ட தூரம் நடக்க முடியாதவர்கள் சிறுவழியில் செல்வர். ஆனால் தற்போது பெருவழியில் செல்ல அனுமதி இல்லை என சொல்லப்படுகிறது. அப்போதெல்லாம் காடுகள் நிறைய ஐயப்பன் கோயிலுக்கு செல்வோருக்கு வழியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பயபக்தியுடன் சற்று பயத்துடனும் அவர்களுடைய பயணம் இருந்தது.


அடர்ந்த காட்டுக்குள் யானைகள் அதிகம் உலா வரும். அவை கருப்பு நிறத்தை கண்டால் ஒன்றும் செய்யாது. வெள்ளை உள்ளிட்ட நிறங்களை கண்டால் கோபம் கொள்ளும். மேலும் இந்த கருப்பு, வனதேவதைகளையும் சாந்தி படுத்த உடுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment