இந்தியா இல்லை..! உலகில் அதிகம் அரிசி சாதம் சாப்பிடும் மக்கள் கொண்ட நாடு எது தெரியுமா?
இந்தியா இல்லை..! உலகில் அதிகம் அரிசி சாதம் சாப்பிடும் மக்கள் கொண்ட நாடு எது தெரியுமா?
உலகிலேயே அதிகம் அரிசியை விளைவிப்பதிலும் சரி, உட்கொள்வதிலும் சரி, முதல் இடத்தில் இந்தியா இல்லை.
இந்திய மக்கள் அரிசியை மிகவும் விரும்பி உண்பவர்கள். அதிலும் தென்னிந்தியர்கள் தினமும் அரிசி சாதம் உட்கொள்பவர்கள். 3 வேளையும் சோறு சாப்பிடும் மக்கள் இந்தியாவில் அதிகம் உண்டு.
இப்படி அரிசி சாதம் அதிகம் உட்கொள்வதில் உலகிலேயே முதல் நாடு இந்தியா தான் என்று நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்றாகும்.
உலகிலேயே அதிகம் அரிசியை விளைவிப்பதிலும் சரி, உட்கொள்வதிலும் சரி, முதல் இடத்தில் இந்தியா இல்லை.
அப்படியென்றால் முதல் இடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா? இதற்கு சரியான பதில் சீனா தான். உலகில் உற்பத்தியாவதில் 30% அரிசி சீனாவில் தான் விளைவிக்கப்படுகிறது. மேலும் அதிக அரிசி சாதம் சாப்பிடும் மக்களும் சீனாவில் தான் உள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசியை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. அதைத் தொடர்ந்து இந்தோனேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் வங்கதேசம் நான்காவது இடத்திலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
No comments:
Post a Comment