Monday, 4 November 2024

சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றுவது, உங்கள் கையில் தான்...



மனைவி என்பவள் யார்?

கடல் சொன்னது : மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.

வானம் சொன்னது: மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.

பூமி சொன்னது: மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள்.

கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.

காற்று சொன்னது: மனைவி கணவனின் ஆடையாகவும், கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்.

மழை சொன்னது: மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள். சொர்க்கம் சொன்னது: மனைவியில்லாமல் கணவன் மட்டும் சொர்க்கம் போக எந்த முகாந்திரமும் இல்லை.

இறைவன் கூறினார் : மனைவி என்பவள் என் தரப்பிலிருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம் ஆகும். அவளே வாழும் சொர்க்கம்... அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க்கம்.

உண்மையிலே மனைவியை நேசித்து மகிழுங்கள். அவளைச் சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றுவது, உங்கள் கையில் தான் உள்ளது கணவன்மார்களே.....

No comments:

Post a Comment