Wednesday, 27 November 2024

வீட்டில் நடக்கும் சண்டைகள் குறைய வேண்டுமா..? வீட்டில் அமைதிய கொண்டு வர இந்த ஒரு செடி போதும்...

வீட்டில் நடக்கும் சண்டைகள் குறைய வேண்டுமா..? வீட்டில் அமைதிய கொண்டு வர இந்த ஒரு செடி போதும்...

வீட்டில் நடக்கும் சண்டைகள் குறைய வேண்டுமா..? வீட்டில் அமைதிய கொண்டு வர இந்த ஒரு செடி போதும்...

Aloe Vera Plant| வாஸ்து படி, கற்றாழை செடியை சரியான திசையில் நட்டால், பல நன்மைகள் கிடைக்கும்.


கற்றாழை செடி எளிதில் அனைவரது வீட்டிலும் வளர்க்கப்படும் ஒரு செடி. இது உடல் ஆரோக்கியம் மற்றும் சருமம் பராமரிப்பில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. கற்றாழை செடி மருத்துவ குணம் நிறைந்தது. இதை ஆங்கிலத்தில் அலோவேரா என அழைப்போம். மற்ற செடிகளை போல கற்றாழை செடிக்கும் வாஸ்து மிகவும் முக்கியம்.

கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அனைவரின் வீடுகளிலும் துளசி செடியை போல கற்றாழை செடி வளர்க்கப்படுகிறது. ஏனென்றால், இதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகம். கற்றாழையின் பயன்பாடு முகத்திற்கு பளபளப்பைத் தருவது மட்டுமல்லாமல், வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.


வாஸ்துப்படி, கற்றாழை செடி வீட்டினுள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடிய ஒரு செடியாக கருதப்படுகிறது. இந்த செடியை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், அந்த வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும். அதோடு, வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் நீங்கும்.


சோற்றுக்கற்றாழையை வீட்டில் வைப்பதன் மூலம் அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை. வாழ்வில் அல்லது வெற்றியில் வரும் அனைத்து விதமான தடைகளையும் நீக்க இந்த செடி உதவுகிறது.


No comments:

Post a Comment