Wednesday, 27 November 2024

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை சிறுகதை...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
ஒரு முதியவருக்கு பல மகன்கள் இருந்தார்கள்.ஆனால் அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள்.சண்டை போட வேண்டாம் என்று முதியவர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

ஒருநாள் மகன்கள் எல்லோரையும் அவர் அழைத்தார்.தம் பக்கத்தில் கட்டி வைத்திருந்த ஒரு விறகுகட்டை அவர்களுக்குக் காட்டி அதை முறிக்கும்படி சொன்னார்.எல்லோரும் முயற்சி செய்து பார்த்தார்கள்.ஒருவராலும் அந்தக் கட்டையை முறிக்க முடியவில்லை.அதை அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.பிறகு அந்தக் கட்டை அவிழ்த்து தனித்தனியாகக் குச்சிகளை முறிக்கும்படி சொன்னார்.மிக சுலபமாக அந்தக் குச்சிகளை மகன்கள் முறித்துவிட்டார்கள்.முதியவர் அதைச் சுட்டிக்காட்டி,''பார்த்தீர்களா? சேர்ந்து இருக்கிறவரையில் அந்தக் கட்டை யாராலும் முறிக்க முடியவில்லை.குச்சிகளைத் தனியாகப் பிரித்தால் சுலபமாய் முறிக்க முடிகிறது.இதுதான் வாழ்வின் இரகசியம்.நீங்கள் சகோதர அன்பால் கட்டுப்பட்டு சேர்ந்திருக்கிறவரையில் உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது.நீங்கள் என்று பிரிகிறீர்களோ அன்றே உங்கள் எதிரிகள் உங்களை நசுக்கி விடுவார்கள்'' என்று அறிவுரை சொன்னார்.அதன்பிறகு அவர் மகன்கள் ஒற்றுமையாய் இருந்தார்கள்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

சேர்ந்தால் வாழ்வு;பிரிந்தால் தாழ்வு

No comments:

Post a Comment