Friday, 8 November 2024

மாசிக்காயின் மருத்துவம்

  வெள்ளைப்போக்கு.. மாசிக்காயின் மருத்துவம் இருக்கே.. உடம்பு புண்களை ஆற்றும் மகத்துவம்
பெண்களுக்கு மாமருந்தாகும் மாசிக்காயின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மாசிக்காய் எப்படி பயன்படுகிறது? இதன் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?


மாசி மரங்களிலிருந்து கிடைக்கக்கூடியதே மாசிக்காய்.. மாசி மரத்தின் கிளைகளை பூச்சிகள் துளையிடும்போது, அந்த கிளையிலிருந்து வடியும் பால், நாளடைவில் காய்ந்து கெட்டியாகிவிடும். இதுவே மாசிக்காய் எனப்படும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வீடுகளில் கட்டாயம் வைத்திருந்த மருந்து இதுவாகும்.


masikkai diabetics
வெந்நீர்: சுவாச கோளாறுகளுக்கு இந்த மாசிக்காய் உதவுகிறது.. டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு, தொண்டை வலி பிரச்சனைகளுக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

அதேபோல வாய்ப்புண்கள், ஈறுகளில் ரத்தம் வடிவது, தொண்டை வலி போன்றவை இருந்தால், மாசிக்காயை பவுடர் செய்து, வெந்நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த நீரை மட்டும் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் மேற்கண்ட கோளாறுகள் சரியாகும். தொற்றுகள், கிருமிகள் இருந்தாலும் நீங்கிவிடும்..

உடலிலுள்ள காயங்களை ஆற்றக்கூடிய தன்மை மாசிக்காய்களுக்கு உள்ளது. எனவே, கட்டிகள், புண்கள், ரணங்கள் இருந்தால், மாசிக்காயை அரைத்து தடவலாம்.. அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் வந்தால் உடனே ஆறிவிடாது. அந்த புண்களை ஆற்றக்கூடியதாக இந்த மாசிக்காய் திகழ்கிறது.. ஆசனவாய் வெடிப்புகள், மூலநோய் எரிச்சல் இருந்தால், மாசிக்காயை நீரில் குழைத்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வரலாம்.


வயிற்றுப்போக்கு: பச்சிளம் குழந்தைகளுக்கு உரைமருந்தாக பயன்படுத்தப்படும் இந்த மாசிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மாசிக்காயை தூளாக்கி, தேனில் 1 ஸ்பூன் கலந்து தருவார்கள். அல்லது மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்தும் குழந்தையின் நாவில் தடவுவார்கள். அதேபோல, குழந்தைகளின் நாக்கில் மாவு போல வெள்ளை நிறத்தில் படிந்திருப்பதை அகற்றவும் இந்த மாசிக்காய் உதவுகிறது.

கால் இடுக்குகளில் சேற்றுபுண்களுக்கும், மாசிக்காயை நீரில் குழைத்து தடவி வரலாம்.. மாசிக்காய் பட்டைகளில் கஷாயம் வைத்து குடித்தால், இருமல், சளி கட்டுப்படும்..

வெள்ளைப்படுதல்: பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தால், இந்த மாசிக்காயை பொடி செய்து, ஒருநாளைக்கு 3 முறை சாப்பிட்டால், ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தாலும், மாசிக்காய் பவுடருடன் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். அல்லது மாசிக்காய் பவுடரை பசும்பால், அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம்.


மாசிக்காய் பட்டையை ரத்த வாந்தி, சிறுநீரில் ரத்தம் போகுதல், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், இப்படி மருந்தாக உட்கொள்ளும்போது மருத்துவர்களின் ஆலோசனை மிகவும் முக்கியம்.

மாசிக்காய், ஜாதிக்காய் மற்றும் கிராம்பைத் தூளாக்கி, இந்தக்கலவையை முகத்தில் தடவி, சற்றுநேரம் கழித்து முகத்தை கழுவிவர, முகத்தின் பொலிவு கூடிவிடும் என்பார்கள்.. அதேபோல, அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், மாசிக்காய்ப்பொடிஒரு கிராம் அளவு எடுத்து நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கருவில் மசித்து சாப்பிட்டால், நீண்ட நாட்கள் குடற்புண் பிரச்சினைகள் குணமாகும். அதேபோல, மாசிக்காயை லேசாக வறுத்து பொடியாக்கி ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.


 மாசிக்காய்.. மிகப்பெரிய வரப்பிரசாதம்.. கைக் குழந்தைகளை காக்கும் 
மாசிக்காய்.. மிகப்பெரிய வரப்பிரசாதம்.. கைக் குழந்தைகளை காக்கும் "ஆச்சரிய பால்" மாசிக்காய் மகத்துவம்
 

No comments:

Post a Comment