Tuesday, 26 November 2024

வேர்கடலை போதும், கொழுப்பு எல்லாம் படக்கென கரையும்



எடை குறைக்க வேர்கடலை போதும், கொழுப்பு எல்லாம் படக்கென கரையும்
Peanut, Weight Loss | வேர்க்கடலை மூலம் உடல் எடையை குறைக்க முடியும். எப்படி குறைக்கலாம்?, இதில் இருக்கும் சத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எடை குறைக்க வேர்கடலை போதும், கொழுப்பு எல்லாம் படக்கென கரையும்

சிம்பிளாக உடல் எடையை குறைக்க டிப்ஸ்
வேர்க்கடலை தினமும் சாப்பிடலாம்
அளவோடு எடுத்துக் கொண்டால் எடை குறையும்

Peanut, Weight Loss Tips Tamil | உடல் எடை அதிகமாக இருந்தாலே பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். அதிக எடை இருக்கும்போது குளிர் காலத்தில் மிக அதிகமான சிக்கல்களை எல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக, உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் வளர்சிதை மாற்றம் குறையும். மெதுவான வளர்சிதை மாற்றத்தின் காரணமாக, கொழுப்பை எரிக்கும் செயல்முறை குறைந்து, கொழுப்பு உடலில் சேரும் வேகமும் அதிகரிக்கிறது. இது நீண்ட ஆயுளுக்கு நல்ல விஷயம் அல்ல. அந்தவகையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் நொறுக்குத்தீனிகளை கட்டுப்படுத்த வேண்டும். அது முடியவில்லை என்றால் நொறுக்குத் தீனிகளை ஆரோக்கியமானவையாக மாற்றிக் கொண்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதற்கு வேர்கடலை நல்ல ஆப்சன். 

வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான பவரும் கிடைக்கும். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் வேர்க்கடலை ஆரோக்கியத்தின் பொக்கிஷம், குறைந்த அளவில் உட்கொண்டால் எடையை எளிதில் கட்டுப்படுத்தலாம். இதை அதிகமாக உட்கொள்வதால் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஜிண்டால் நேச்சர் க்யூர் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை உணவியல் நிபுணர் சுஷ்மா பி.எஸ் கூறுகையில், வேர்க்கடலை உட்கொள்வது உணவுப் பசியைக் கட்டுப்படுத்துகிறது. 




வேர்க்கடலையை சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக உட்கொண்டால், அது எடை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வேர்க்கடலையை உட்கொள்வது, உணவு பசியைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கலோரி அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். வேர்க்கடலையை சிறிய அளவில் உட்கொண்டால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது. புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வேர்க்கடலையை உட்கொள்வதால் வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைத்து உடல் எடையை குறைக்கிறது. குளிர்காலத்தில் வேர்க்கடலை ஒரு சிறந்த ஸ்நாக்ஸ்.

அதிக கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை, உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. வேர்க்கடலையை குறைந்த அளவில் உட்கொண்டால், எடை கட்டுக்குள் இருக்கும். நீங்கள் வேர்க்கடலையின் நன்மைகளைப் பெற விரும்பினால், நீங்கள் அதை சாதாரணமாக உட்கொள்ள வேண்டும். உப்பு மற்றும் நெய்யுடன் வறுத்து சாப்பிடுவதை விட பச்சையாக அப்படியே சாப்பிடுவது நன்மை அதிகம் கிடைக்கும். வேகவைத்த வேர்க்கடலையையும் சாப்பிடலாம். வேர்க்கடலையை சட்னி செய்தும் சாப்பிடலாம்.


No comments:

Post a Comment