Thursday, 5 December 2024

தேங்காய் தீபத்தின் அற்புத பலன்..


தேங்காய் தீபத்தின் அற்புத பலன்.. தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றலாமா? அட முகத்தில் கூடிடும் வசீகரம்
ஆன்மீகத்தில் தேங்காய்களுக்கான முக்கியத்துவங்கள் என்னென்ன? தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றலாமா? தேங்காய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா? இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

தேங்காயை பொறுத்தவரை, ஆன்மீகத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. எந்த ஒரு நல்ல காரியம் என்றாலும், அதை மனதில் நினைத்துக் கொண்டு, தேங்காய் உடைத்தால் நன்மை கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

spirituality coconut oil lamp
தேங்காய் மகத்துவம்: தேங்காய்கள் மங்களகரமான பொருளாக வழிபாடுகளில் இடம்பெறுவதற்கு காரணம், தேங்காயில் உள்ள 3 கண்களில், ஒரு கண் பிரம்மாவாகவும், 2வது கண் லட்சுமியாகவும், 3வது கண் சிவனாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி 3 தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுவதால், தேங்காய்களை வைத்து பூஜிக்கும்போது, எந்த காரியமும் சுலபமாக முடியும் என்று நம்பப்படுகிறது.

அதேபோல, நெய், நல்லெண்ணெய் போலவே, கடவுளுக்கு தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றுவது சிறப்புக்குரியதாகும்.. பொதுவாக விநாயகர் கோயிலில் சாமி கும்பிடும்போது, தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்றி கும்பிடுவார்கள்.. காரணம், விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் ஏற்றுவதன் மூலம் கடவுளின் அருள் நேரடியாக கிடைக்கிறது. மேலும், தேங்காய் எண்ணெயை தேங்காயில் வைத்து ஏற்றினால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது.

தேங்காய் எண்ணெய்: அதுமட்டுமல்ல, தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றினால், பேச்சில், முகத்தில், செயலில் வசீகரம் கூடும் என்பார்கள்.. லலிதமான தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யுமாம்.. கணவன், மனைவியிடையே இணக்கம் கூடும்.. பழையபாவம் நீங்குவதுடன், அனைவருக்கும் பிடித்தமானவராக நீங்கள் கருதப்படுவீர்கள். தேங்காய் எண்ணெய்யில் விளக்கேற்றி வழிபட்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

அதேபோல தோஷம் நீங்க, பணத்தகராறுகள் நீங்க, வேலை கிடைக்க, குழந்தை இல்லாதவர்களின் குறைகள் தீருவதற்கு தேங்காய் தீபம் ஏற்றி பரிகாரம் செய்யலாம்.. தேங்காய் தீபம் என்பது பெண் தெய்வங்களுக்கு செய்யப்படும் ஒரு பரிகாரம் ஆகும்.

தேங்காய் தீபம்: இந்த தேங்காய் தீபம் ஏற்றுவது எப்படி தெரியுமா? இந்த தீபத்தை ஏற்றும்போது, தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்தக்கூடாது.

ஒரு தேங்காயை இரண்டாக உடைத்து, இரு மூடிகளிலும் பாதி அளவிற்கு நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒற்றை திரியை பயன்படுத்தாமல், 2 திரிகளை ஒன்றாக திரித்துக்கொள்ள வேண்டும். தாம்பூல தட்டில் வாழை இலை விரித்து அதன்மீது பச்சரிசியை பரப்பி தேங்காய்களை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.


சிறப்புகள்: இந்த விளக்கின் திரி முழுமையாக எரிந்து, தேங்காய் எண்ணெய்யுடன் தேங்காயும் சேர்ந்து எரிய துவங்கும். இதுபோல், 9 வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் உங்களது குறைகள் அனைத்தும் நீங்கும். ஏதாவது தோஷம் இருந்தாலும் நிவர்த்தியாகிவிடும். அதேபோல, பஞ்சபூதத்தின் ஏதாவதொரு சக்தி சரியாக இயங்காமல் இருந்தாலும், அதுவும் சரியாகிவிடும். எனினும், இந்த தேங்காய் தீபத்தை வீட்டில் செய்வதை விட கோவில்களுக்கு சென்று செய்தால், கூடுதல் பலன்களைத் தரும் என்பார்கள்.


No comments:

Post a Comment