Thursday, 5 December 2024

தயிர்சட்னி...

சமையல் தயிர் இருந்தால் போதும் இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னியை 10 நிமிசத்தில் செஞ்சுரலாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
நம் இந்திய உணவுகளில் தயிருக்கென்று எப்போதும் ஒரு தனியிடம் உள்ளது. அறுசுவை விருந்தாக இருந்தாலும் அதை தயிருடன் முடித்தால்தான் திருப்தியாக இருக்கும். தயிர் சுவையான பொருள் என்பதை விட அது ஆரோக்கியமான பொருள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் தயிரை வைத்து ஒரு சட்னி செய்யலாம் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? உண்மைதான் தயிரை வைத்து சுவையான சட்னியை விரைவாக செய்யலாம். தயிர் சட்னி என்பது இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சில நிமிடங்களில் செய்யக்கூடிய சைடிஷாகும். இந்த சுவையான சட்னியை செய்ய அதிகளவு பொருட்கள் தேவையில்லை, ஆனால் சுவையில் மற்ற எந்த சட்னிகளுக்கும் இது குறைந்தது அல்ல. இந்த சட்னி கொஞ்சம் காரமாக இருக்கும், எனவே தயிர் அதன் சுவையை சமன் செய்யும். இந்த சுவையான சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். "தோசை மாவு சேர்த்து செய்யப்படும் கையேந்தி பவன் சட்னி ரெசிபி..ட்ரை பண்ணுங்க..இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்!" தேவையானப் பொருட்கள்: - 1 கப் தடித்த தயிர் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 2 ஸ்பூன் மல்லி தூள் - 1 ஸ்பூன் கரம் மசாலா - 1 பெரிய வெங்காயம் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - உப்பு தேவைக்கேற்ப - 1/2 கப் தண்ணீர் தாளிக்க: - 2 ஸ்பூன் எண்ணெய் - 1/2 ஸ்பூன் கடுகு - 1/4 ஸ்பூன் சீரகம் "தேங்காய் சட்னி அரைக்கும் போது இந்த 1 பொருளை சேர்த்த்து அரைங்க...அதுதான் சூப்பரான பாம்பே ஸ்டைல் தேங்காய் சட்னி!" செய்முறை: - தயிர் சட்னி செய்ய முதலில் தயிரில் மிளகாய் தூள் கலக்க வேண்டும். - அதன்பின் கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். - இப்போது நன்றாக கலக்கி க்ரீம் போன்ற அமைப்பைக் கொண்டு வந்து ஓரமாக வைக்கவும். - ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். - இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். - வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். - வெங்காயம் வதங்கியதும் அதில் தயிர் கலவையை சேர்க்கவும். - அதன் பிறகு சில நிமிடங்கள் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். திறந்து பிறகு கிளறவும் - மசாலாப் பொடிகள் பச்சை வாசனை போகும் வரை மூடி வைத்து வேகவைக்கவும். - எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். - சட்னி சற்று கெட்டியாக இருக்க வேண்டும். இது இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.

No comments:

Post a Comment