Wednesday, 25 December 2024

சோளம்...

நம் முன்னோர்களின் ஹெல்த் சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க...
Sorghum Benefits: 
இதைச் சாப்பிட்டால் ஹாஸ்பிட்டல் பக்கமே போக வேண்டி இருக்காது... நம் முன்னோர்களின் ஹெல்த் சீக்ரெட் தெரிஞ்சுக்கோங்க...
Sorghum Benefits: உடல் இயத்திற்குத் தேவையான பல சத்துக்களையும் கொண்டுள்ள இந்த சோளம் நம் முன்னோர்களின் பிரதான உணவாக இருந்துள்ளது.

உணவே மருந்து என்ற காலம் போய் மருந்தே உணவு என்ற காலம் வந்துவிட்டது. இன்று நாம் சத்துக்களைப் பெற மாத்திரைகளை எடுத்து வரும் காலத்தில், நம் முன்னோர்கள் உணவு வாயிலாகவே தேவையான சத்துக்களை எடுத்து வந்துள்ளனர்.

அப்படி இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான புரதச் சத்து மிகுந்த உணவு வகைகளில் சோளமும் ஒன்று. சோளம் என்றால் பலருக்கு மக்கா சோளம் தான் நினைவுக்கு வரும். ஆனால் சோளத்தில் இரும்பு சோளம், வெள்ளைச் சோளம் என பல வகைகள் உள்ளது.

இந்த சோளம் வறண்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்த சோளமானது அரிசியை விடப் பல மடங்கு சத்துக்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள் ஆகும்.

சோளத்தில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், கொழுப்புச்சத்து, நார்சத்து, மாவுச்சத்து, பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின், நயசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சோளத்தைத் தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம். இது இரத்தில் கார்போஹைட்ரேட் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.

வெள்ளைச் சோளத்தில் போதுமான அளவு நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டிஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது. இது இரத்தச்சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

No comments:

Post a Comment