Tuesday, 24 December 2024

கண்ணாடிகளை இப்படி வைச்சு பாருங்க.. மகிழ்ச்சி, பணம் பெருகும்


குளியலறையில் கண்ணாடி இருக்கா? வீட்டில் கண்ணாடிகளை இப்படி வைச்சு பாருங்க.. மகிழ்ச்சி, பணம் பெருகும்
 வாஸ்து சாஸ்திரத்தில் முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. வீட்டிலுள்ள சக்தியை மாற்றும் சக்தி இந்த கண்ணாடிகளுக்கு உண்டு. அதனால்தான், கண்ணாடிகளை எந்த திசையில் வைக்க வேண்டும்? எப்போது வாங்க வேண்டும்? என்பதையெல்லாம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதன் சுருக்கத்தை இங்கே பார்க்கலாம்.


கண்ணாடியை சரியாக வைப்பதற்கு அடிப்படை வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது அவசியமாகும்.. வீட்டுக்கு கண்ணாடி வாங்கும்போது, எப்போதுமே பகலில் வாங்க வேண்டும். அதுவும் சூரியன் இருக்கும் நேரத்தில்தான் வாங்க வேண்டும். சூரியன் மறைந்த பிறகு ஒருபோதும் கண்ணாடி வாங்கக் கூடாது.



தவறுகள்: அப்படி வாங்கும் கண்ணாடிகளை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கவனமாக கையாள வேண்டும். கண்ணாடிகள் கீழே விழுந்து உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி உடைந்துவிட்டால் ஏதோ ஒரு தவறு நடக்கப்போவதை உணர்த்துவதன் அறிகுறியாகும்.


வாஸ்து சாஸ்திரப்படி கண்ணாடியை உரிய திசையில் வைத்தால்தான், நல்ல சக்தியை வீட்டிற்குள் கொண்டு வர முடியும்.. இதனால், நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும் எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் வகையில் கண்ணாடியை மாட்டி வைக்கக்கூடாது. அப்படி வைப்பதால், தம்பதிக்குள் தகராறு, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பெருகும்.

கண்ணாடிகள்: அந்தவகையில், வீட்டில் மேற்கு திசை, அல்லது தெற்கு திசையில் முகம் பார்க்கும் கண்ணாடியை மாட்டி வைக்கலாம். டைனிங் டேபிள் அருகிலும் கண்ணாடியை மாட்டி வைக்கலாம். ஆனால், வடக்கு அல்லது கிழக்கு பார்த்த திசையில் கண்ணாடி வைக்கக்கூடாது.. இதனால் நேர்மறை ஆற்றல் வெளியேறிவிடும்..




குளியலறையில் கண்ணாடி வைக்கலாம்.. ஆனால், கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து மாட்டி வைப்பது நல்லது. கிச்சனுக்குள் கண்ணாடிகளை வைக்கக்கூடாது.. கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து மாட்டி வைப்பது நல்லது. வீட்டு தலைவாசலுக்கு நேராக கண்ணாடியை மாட்டி வைக்கக்கூடாது. இதனால் செல்வ வளம் வெளியேறி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்..

பிரதிபலிப்புகள்: வீட்டின் படுக்கையறையிலும் கண்ணாடியை வைக்கக் கூடாது. அப்படியே படுக்கையறையில் கண்ணாடியை வைத்தாலும், படுக்கையின் பிரதிபலிப்பு தெரியும் இடத்தில் வைக்கக்கூடாது. கண்ணாடியின் பிரதிபலிப்பு படுக்கையில் விழாதவாறு, கண்ணாடியை துணியால் மூடிவைக்க சொல்கிறார்கள். தூங்கும்போது, படுக்கையறை கண்ணாடியை மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் எடுத்துவிடலாம்.


படுக்கையறையில் கண்ணாடி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், வடகிழக்கு மற்றும் வடக்கு திசையில் வைக்கலாம். இதனால் குடும்பத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை ஓரளவு குறைக்க முடியும். ஆனால், கிழக்கு திசையில் மட்டும் கண்ணாடிகளை வைக்கவே கூடாது.


வடிவ கண்ணாடி: முகம் பார்க்கும் கண்ணாடிகள், சுக்கிரன், மகாலட்சுமிக்கு இணையானது என்பதால், வீட்டில் பணம் வைக்கும் பெட்டி அல்லது நகை வைக்கும் பெட்டி கண்ணாடியுடன் அமைந்திருப்பது யோகத்தை கொண்டுவரும். அதேபோல, படுக்கைகள் எப்படி செவ்வக, சதுர வடிவில் இருக்க வேண்டுமோ அதுபோலவே, கண்ணாடிகளும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். செவ்வக, சதுர வடிவம் தவிர மற்ற வடிவங்களில் கண்ணாடி இருந்தால், ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் ஏற்படலாம்.


No comments:

Post a Comment