Saturday, 28 December 2024

பிறப்பு குறிப்புகள்

நிச்சயமாக, ஆணித்தரமாகச் சொல்லமுடியும். ஆனால் அதற்கு நிச்சயம் பிறப்பு குறிப்புகள் சரியாக இருத்தல் அவசியம். உதாரணமாக சிலவற்றைக் கீழே பார்ப்போம்.

1. நவாம்ச சக்கரத்தில், சனி அம்சமாகிய மகர, கும்பங்களில் ஒன்றில் சனி இருந்தாலும், அல்லது இராசியிலுள்ள சந்திரனை சனி பார்த்தாலும், பிரசவ அறை இருட்டாக இருக்கும். ஆனால் இக்காலத்தில், மேற்க்கூறப்பட்டவாறு அமைந்தாலும், அவசரக்கால விளக்குகள் அல்லது மாறுதிசை மின்னோட்டம் (INVERTER) பயன்படுத்தினாலும் அந்த அறையானது, இயற்கையிலேயே, நிச்சயம் இருள் கவ்வியதாக இருக்கும்.

2. குழந்தையின் பிறப்பின் நிலையை அறிய முடியும். எந்த லக்கினத்தில் குழந்தை பிறந்ததோ, அந்த லக்கினத்தின் தொடக்கத்தில் 10 பாகைக்குள் இருந்தால், அக்குழந்தையின் பிரசவ காலத்தில், எந்தவிதமான துன்பமும் இல்லாமல் பிறந்திருக்கும் எனலாம். அதே சமயம் அந்த லக்கினத்தின் 29-30 பாகைக்குள் குழந்தை பிறந்திருந்தால், அக்குழந்தை பிறக்கும் போது பிரசவம் கடினமானதாக இருக்கும்.

3. ஜென்ம லக்கினம் முதல் சந்திரன் இருக்கும் வீடு வரை எண்ணி அவற்றில் எத்தனை கோள்கள் இருக்கிறதோ அத்தனை பேர் பிரசவம் ஆகும் நேரத்தில் அருகில் இருப்பார்கள்.

4. லக்கினத்தை, நற்கோள்கள் பார்த்தால், தாய்க்கு எவ்வித துன்பமும் இன்றி குழந்தை பிறந்திருக்கும். அதேசமயம், லக்கினத்தை, சனி, செவ்வாய் பார்த்தால், தாய் துன்புற்றுக் குழந்தை பெற்றிருப்பாள் எனலாம்.

5. ஒரு குழந்தையின் ஜனன லக்கினத்திற்கும், சந்திரனுக்கும் இடையில் / நடுவில் சனி இருந்தாலும், பார்த்தாலும் தலை நரைத்துப்போன, கருத்த நிறத்துடையவள், தாய் பிரசவிக்கும் காலத்தில் அருகே இருப்பாள். அதே சமயம், செவ்வாய் இருந்தாலும், பார்த்தாலும், சிவப்பு நிறமான இளம் வயதுடைய விதவைப்பெண் அருகில் இருப்பாள்

No comments:

Post a Comment