ஒருவர் பிறந்து ஜாதகம் பார்ப்பதற்கு 12 வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் தான் சரியாக இருக்கும். ஏனென்றால் 12 வயதில்தான் ஜனன கால ஜாதகத்தில் இருக்கும் குருவோடு கோச்சார குரு சேர்வார். (12 ராசிகளைக் கடந்து ஜனன கால குருவோடு, கோச்சார குரு சேர்வார்.) எனவே பனிரெண்டு வயதிலே தான் மிக முக்கியமான நிகழ்வுகள் நிகழும். அதற்கு முன்னதாக அவசியம் பார்க்க வேண்டுமானால், அந்த குழந்தை (ஜாதகர்), ஏதேனும் நோய்வாய்ப்பட்டிருந்தாலோ அல்லது பிரச்னை ஏதேனும் இருந்தாலோ, ஜாதகம் பார்க்கலாம். அது பாலாரிஷ்டம் சம்பந்தம் உள்ளதாக இருக்கக்கூடும்.
இவை அனைத்தும் ரிஷிகளால், கூறப்பட்டு அதற்கடுத்து வந்த ஜோதிட விற்பன்னர்களால் ஆய்வு செய்யப்பட்டு, நமது மனித சமுதாயத்திற்கு நலம் சேர்க்க வந்தவை என்றால், அது மிகை ஆகாது. இது போன்ற தகவல்கள், ஒருவரின் ஜாதகத்தைத் துல்லியமாக அறிந்து மேற்கொண்டு பலன் காண வழிவகுக்கும்
No comments:
Post a Comment