Saturday, 28 December 2024

ஜாதகத்தில், மலட்டுத்தன்மைக்கான காரணம் காணும் ஒரு சில வித ஜோதிட குறிப்புகள்

1) லக்கினத்திற்கு 8இல் புதன் இருக்குமே ஆனால், ஒரு பெண் ஒருமுறை மட்டுமே பெற்றெடுப்பாள். இதற்கு, காகவந்த்யா யோகம் எனப்படும்.

2) சூரியனும், சனியும் 8இல் இருப்பின், ஒரு பெண் மலடியாய் இருப்பாள். 

3) சந்திரன் ஒரு சுபருடன் கூடி, லக்கின அதிபதி செவ்வாய் அல்லது சனியாக இருப்பின்,

4) சனி அல்லது சூரியன் தமது சொந்த வீட்டில், 8ம் வீடாகி அதில் அமர்ந்திருந்தால், 
 
5) சூரியன், சந்திரன், குரு மற்றும் செவ்வாய் 8-இல் இருந்து அல்லது லக்கினத்திலிருந்து அல்லது 8-இல் சனியுடன் கூடி இருந்தால், 

6) தனுசு அல்லது மீனம் 5ஆம் வீடாகி, அதில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட அசுபர்கள் இருப்பின், 

7) சந்திரன் பாபர்களுடன் கூடி மற்றும் பாபர்களின் நவாம்சம் பெற்று (சாரம்) லக்கினத்தில் இருப்பின், 

8) புத்திரகாரகர் ஆகிய குரு அல்லது சுக்கிலத்தின் காரகராகிய சுக்கிரன் 8இல் / உடல் மற்றும் ரத்த காரகராகிய செவ்வாய் 5, 7 வீடுகளில் / 5, 7 வீடுகளை செவ்வாய் பார்வை பெற்றாலும் / ராகு யோகம் 5, 7 வீடுகளுக்கு இருப்பினும் குழந்தைகள் இறந்து பிறக்கும் வாய்ப்பு உண்டு. 

9) பெண்களின் ஜாதகத்தில், குருவின் நிலையைப் பொறுத்து மேற்சொன்ன விளைவுகள் அகலவோ அல்லது நலிவடையவோ செய்ய வாய்ப்பு உள்ளது. 
சராவளியின் கூற்றுப் படி, ஒரு பெண்ணின் ஜனன கால ஜாதகப்படி, செவ்வாய் 5-இல் இருப்பின் பிறந்த குழந்தையை, உடனடியாக கொன்றுவிடும். ஆனால், அந்த செவ்வாயை, குரு தொடர்பு (இணைவு/சாரம்/பார்வை) பெற்றிருப்பின் முதல் குழந்தையை மட்டும் கொல்லும். ஆனால், சுக்கிரன் போன்ற மற்ற சுவர்களின் தொடர்பு பெற்றிருப்பின் பிறந்த குழந்தையைக் கொல்லும் தன்மை மாறாது. 

சூரியன், கன்னியா லக்கினத்திலிருந்து

செவ்வாய் 5-இல் இருப்பின் பிறந்த குழந்தையை, உடனடியாக கொன்றுவிடும். ஆனால், அந்த  செவ்வாயை, குரு தொடர்பு (இணைவு/சாரம்/பார்வை) பெற்றிருப்பின் முதல் குழந்தையை மட்டும் கொல்லும். ஆனால், சுக்கிரன் போன்ற மற்ற சுவர்களின் தொடர்பு  பெற்றிருப்பின் பிறந்த குழந்தையைக் கொல்லும் தன்மை மாறாது. 

சூரியன், கன்னியா லக்கினத்திலிருந்து, செவ்வாய் 5 இல் இருந்தால், குழந்தையின் இறப்பு நிச்சயம். (ப்ரஹத் ஜாதகம்) செவ்வாயே லக்கினாதிபதி ஆகி, அவரே 5இல்  இருப்பார் எனில் மற்றும் சுபர் பார்வையும் பெற்றிடும் போது, குழந்தை பாக்கியம் நிச்சயம். மீனம் லக்கினத்துக்காரர்களுக்கு ஒரு சிறப்பு யாதெனில், அவர்களுக்கு 5இல்  செவ்வாய் இருப்பின் நிச்சயம் குழந்தைகள் பிறப்பது சாத்தியமாகிறது. ஆனால் அவரின் இரண்டாவது மனைவிக்குத் தான், என்பதை உணரவேண்டும்.  

முன்னோர்கள் கூறிய வேத வாக்கியங்களில் உள்ளதை அப்படியே அதாவது குழந்தை பாக்கியத்தை / மலட்டுத் தன்மையை, பற்றிய கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது.  அதன் பொருளாவது, 

பிறந்த குழந்தையின் இறப்பு; பிறந்த குழந்தை பெற்றோருக்கு அடங்காமல் போவது, அதன் மூலம் பெற்றோருக்கு மனமகிழ்ச்சி இன்மை, பெற்றோர் சேர்த்து வைத்து புகழைச்  சேதப்படுத்தி அவர்களைத் துயரத்தில் ஆழ்த்துவது, இங்கு முக்கியமாகக் கூற இருப்பது என்னவென்றால், குழந்தை பிறப்பு பற்றி ஆராயாமல் முடிவெடுத்து விட முடியாது.

5ஆம் பாவத்தை, அதன் அதிபதியினை, ஷேத்ரா ஸ்புடம், பீஜ ஸ்புடம் மற்றும் பல விஷயங்களை ஆராயாமல், குழந்தை பிறப்பு பற்றிக் கூறிவிட முடியாது. திருமணம் ஆன  எல்லா பெண்களும், அவர்களின் விருப்பத்திற்கிணங்க குழந்தைப் பேற்றை அடைந்து, தாய்மை நிலை பெற எல்லாம் வல்ல ஷிர்டி சாயி நாதன் பாதம் பணிந்து  இறைஞ்சுகிறேன். 

No comments:

Post a Comment