Tuesday, 16 October 2012

சூரிய னும்,சந்திரனும்

அமாவாசைக்கு அடுத்த நாளான இன்று சூனியமான நாள் என எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்..கிராமங்கள் பாட்டியம்மை நாளும் அதுவுமா..சுபகாரியம் பேச வேணாம்..நாளைக்கு பேசிக்கலாம் என்பார்கள்.....3 ஆம் பிறை முதல் நிலவு வளரும் நாளாக நினைத்து வளர்பிறையில் செய்...விருத்தியாகும் என கருதிதான் நமது எல்லா சுப காரியங்களும் நடைபெறுகின்றன..பயிர்களின் வளர்ச்சி கூட வளர்பிறையில் செழிப்பாக இருக்கும்...என்பார்கள்.....சூரிய
னும்,சந்திரனும் நம் ஒவ்வொரு அசைவுக்கும் நம் உடல் வளர்ச்சி,மனதில் ஏற்படும் சலனங்கள் அனைத்துக்கும் காரணமாக அமைகின்றன..இன்று காலை எழுந்ததும் அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என படிப்படியாக சிந்தித்து செயல்படுத்தும் ஆற்றலை சந்திரனே தருகிறது...சோம்பலாக படுப்பதும்,சுறுசுறுப்பாக ஓடுவது அன்றைய நட்சத்திரத்துக்கும்,நீங்கள் பிறந்த நட்சத்திரத்துக்கும் இடையில் இருக்கும் கணக்கின்படிதான்!! இதுதான் ராசிபலனாக கணக்கிடப்படுகிறது!!

1 comment: