Thursday, 31 January 2013

இராகு கேது தோஷம்


இராகு கேது தோஷம்  உள்ளவர்களா ? கவலை வேண்டாம்

1) லக்னத்தில் கேது  7-ல் இராகு இருக்க பெற்றவர்கள்.
2)லக்னத்திற்கு 7-ல் கேதுவோடு சுக்கிரன் அமைய பெற்றவர்கள்.
3) லக்னத்திற்கு 8-ல் செவ்வாயோடு இராகு அமைய பெற்றவர்கள் தலை சிதறி இறக்கும்் துர்பாக்கியம் உண்டு, ஆனால் காளத்தியப்பரை வழிபட்டால் நல்வாழ்வு சிறக்கும்.
4)லக்னத்தில் சூரியன் இராகு கூடி 7-ல் கேதுவோடு செவ்வாய் இருக்கும் பெண் இளம் வயதில் விதவை ஆகலாம் , ஆனால் காளஹஸ்தியில் இராகு கேது தோஷம் கழித்தால் கணவனுக்கு பூரண ஆயுள் கிடைக்கும்.
5) லக்னத்திற்கு 4-ல் இராகு வோடு சனியும் 10-ல் சூரியனோடு கேது அமர்ந்தால் தந்தை மகனுக்கு ஆகாது , தந்தையை கொலை செய்யும் அளவிற்கு மகன் துணிவான் ஆனால் திருநள்ளாறு ஈசனையும் , இராகு கேது தோஷம் கழித்தால் தந்தையும் மகனும் நாட்போடு வாழ்வர்.
6)லக்னத்திற்கு 5-ல் கேதுவோடு சனியும் 11-ல் இராகுவோடு புதனும் அமர்தால் தன் சொந்த பந்தங்களை விட பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் கோடீஸ்வர யோகமாகும் , ஆனால் அதனை ஆள மக்கட்பேறு பாக்கியம் இல்லை.ஆனால் காளஹஸ்தி ஈசனை வணங்கினால் மக்கட் செல்வம் உண்டாகும்.
7)லக்னத்திற்கு 2-ல் கேதுவோடு  சேர்ந்து சனியும் 8-ல் இராகுவோடு சோந்து குருவும் அமைந்தால் , ஞானியாகும் வாய்ப்பும்
நாணயமான ஒழுக்கமுள்ள குழந்தையாக , ஆபூர்வ குழந்தையாக பிறக்கும் , இப்பிறவி முன் பிறவியில் காளஹஸ்தி ஈசனை வழிபட்டு இறந்த புண்ய ஆத்மாவாகும்.
8) லக்னத்திற்கு 9-10-11 க்குடையோர் சேர்ந்து 5-9-10ம் இடங்களில் ஒன்று கூடி இருந்தால் மிக பெரிய ராஜ‌ யோகமாகும் ஆனால் இராகு கேது கிரங்களுக்குள் தர்ம் கர்மாதிபதிகள் 3  மாட்டி கொண்டால் யோகம் முழுவதும் செயல்படமுடியாமல்  போகும் , ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் இராகு கேது மன மகிழ்ந்து உலகம் போற்றும் உத்தமராக வாழ்வார்.
9) கேதுவோடு புதன் சேர்ந்து 12-ம் விட்டில் இருந்து 6-ம் வீட்டில் இராகுவோடு சுக்கிரன் அமர்ந்தால் இதில் ஏதாவது ஒரு கிரகம் உச்சம் ஆட்சியில் இருந்தால் மகாலட்சுமி யோகமாகும் , வெளிநாடுகளில் இருந்து செல்வம் சேர்ந்து தன்னை நம்பியவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக இருப்பர் 12-ம் இட கேது புதனால் கெட்ட சகவாசமும் ஏற்படும் இராகு கேது  தோஷம் கழித்தால் உலகம் உள்ளவரை பெயர் அழியாம்ல் பாதுகாக்கப்படும்.
10) லக்னடத்திற்கு 7-ல் இராகுவோடு சூரியன் சந்திரன் சேர்ந்தால் மனதைரியம் குன்றியவராகவும் மனநிலை பாதிக்கபட்டவராகவும்  திருமணதடை ஏற்படும் ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் இராகு கேது மன மகிழ்ந்து  மன தைரியம் , மன நிம்மதி , திருமண பாக்கியம் ஏற்பட்டு இன்புற்று வாழ்வர்.
11) லக்னத்திற்கு 8-ம் வீட்டில் கேது சனி செவ்வாய் சேர்திருந்தும் குரு சுக்கிரன் ஸ்தானங்களில் இருந்து எட்டாம் வீட்டிற்கு பார்வைபடாமல்  இருந்தால் விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களை இழக்கும் துர்பாக்கியம் ஏற்படும் ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால்இராகு கேது மன மகிழ்ந்து  விபத்துகளில் இருந்து பாதுகாக்கபட்டு சிறிய காயங்களோடு தப்பி விடுவர்.
12) சாதாரண குடிமகனை நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதியாகவும் , நாட்டை ஆளும் பிரதமராகவும் மாற்றும் சக்தி இராகு கேதுவிற்கு மட்மே உண்டு சுயநலம் ஆணவபோக்கு அதிகார துஷ்பிரயோகம் , வறுமையானவர்களை எட்டி உதைப்பது , பிறர் சொத்தை அபகரிக்கும்  தனவான்களை சாதாரண நிலைக்கும் கொண்டுவந்து நாடு கடத்தும் சூழ்நிலைக்கு தள்ளபடுவது  இராகு கேதுவின் வேலையே ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் மனதில் நல்லெண்ணம்  மட்டுமே பிறக்கும்.

ஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி பாதாள பைரவர்!!!





ஆந்திரமாநிலம்,சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சாலையில் காளஹஸ்தி அமைந்திருக்கிறது.இங்கே காளத்தியப்பராக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.
இங்கேதான் கண்ணப்ப நாயனாரின் சிவபக்தி நிரூபணமாகியது.1990க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இந்த புராணச் சம்பவம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை;இருப்பினும்,ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய இந்த பாதாள பைரவப் பெருமானின் பெருமைகளை விளக்குவது ஆன்மீகக்கடல் வலைப்பூவின் கடமை ஆகும்.யாருக்கெல்லாம் ராகு அல்லது கேதுவால் கடுமையான பாதிப்பு இருக்கிறதோ அவர்களும் இந்த பாதாளபைரவப் பெருமானை தொழுது வழிபடலாம்;ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்குரிய இந்த பாதாள பைரவப் பெருமான் ஸர்ப்ப தோஷங்களையும் நீக்குபவர் ஆவார்.ஆயில்யமே ஒரு பாம்பு நட்சத்திரம் தானே!!
நாம் கலியுகம் 5114 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறோம்.இதற்குச் சமமான கிறிஸ்தவ வருடம் கி.பி.2013 ஆகும்.கலியுகம் செல்லச் செல்ல கடுமையான பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களும்,மிகவும் யோகங்கள் நிறைந்த ஆத்மாக்களுமே அதிகமாகப்பிறப்பார்கள்;அப்படிப்பட்டவர்களும் வழிபட வேண்டிய பைரவர் இந்த பாதாள பைரவப் பெருமான் ஆவார்.ஒருவேளை உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து இந்த ஆன்மீகக்கடல் பதிவினை வாசித்துவிட்டு,இந்தியாவில் ஆந்திரமாநிலம் காளஹஸ்திக்கு வர முடியாதவர்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தை தினமும் எழுதி வந்தாலே போதுமானது.ஒரு சில வருடங்களுக்குப்பிறகு,உங்களுக்கு காளஹஸ்திக்குச் செல்லும் வாய்ப்பை பாதாள பைரவப் பெருமானே எற்படுத்தித் தருவார்.


“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்” என மாணிக்க வாசகரால் போற்றப்பட்ட கண்ணப்ப நாயனார் தொண்டை நாட்டின் உடுப்பூரில் வேடர் குலத்தில் பிறந்தவர்.நாகன் என்னும் வேடர் குலத் தலைவர்க்கு மகனாகத் தோன்றினார்.திண்ணன் எனப் பெயரிடப்பட்டார்.தம் குல வழக்கப்படி வேட்டையாடும் தொழிலில் வல்லவரானார்.உரியகாலத்தில் திண்ணனார் வேடர் குலத் தலைவரானார்.
ஒரு நாள் வேட்டைக்குச் சென்றார்.நீண்டநேரம் வேட்டையாடிய பிறகு திருக்காளத்தி மலையைச் சென்றடைந்தார்.அங்கு காளத்தியப்பரைப் பார்த்தவுடன் முன்பிறவிப் பயனால் பக்தி மிகுதியால் கண்ணீர் சிந்தி வழிபட்டார்.நீராட்டி,பூச்சுட்டியிருப்பதைப் பார்த்தார்.தனித்து இருக்கும் காளத்தியாரைப் பிரிய மனமின்றி உருகி நின்றார்.இறைவனுக்கு உணவு படைக்க தரமான இறைச்சியைத் தேடிச் சென்றார்.புதிதாக வேட்டையாடிய பன்றி இறைச்சியை சமைத்து,சரியான நேரத்தில் அதை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொண்டு வந்து,கட்டினார்.பொன்முகலி ஆற்று நீரை வாயில் எடுத்துக்கொண்டு(அந்தக்காலத்தில் மண்பாத்திரம் தான்! காட்டுப்பகுதியில் அதுவும் கிடைக்கவில்லை;),இறைவனுக்குப்படைக்கவேண்டிய பூக்களை தலையில் வைத்துக் கொண்டு காளத்தியப்பர் இருப்பிடம் தேடிச் சென்றார்.சிவலிங்கத்தின் உச்சியில் சூடப்பட்டிருந்த பூக்களை தனது காலால் தள்ளிவிட்டு, தனது வாயில் இருந்த ஆற்றுநீரால் அபிஷேகம் செய்தார்;பிறகு தனது தலையில் சுமந்து வந்த பூக்களை சூடினார்.சமைத்த பன்றி இறைச்சியை படையலிட்டார்.இரவு முழுவதும் இறைவனுக்குக் காவலாக இருந்தார்.சூரியன் உதயமானதும்,புறப்பட்டார்.


சிவாச்சாரியார் வந்து இறைச்சித்துண்டுகள் சிதறிக்கிடப்பதையும்,காலணிச்சுவடுகள் இருப்பதையும் கண்டு திடுக்கிட்டுப் போனார்.திருக்கோவிலை தூய்மை செய்து முறைப்படி நீராட்டிப் பூசை செய்தார்.அன்றாடம் திண்ணனார் தம் வழக்கப்படி நீராட்டி,பூச்சூட்டி, ஊண் அமுது படைத்தார்.சில நாள் இவ்வாறு நடக்க சிவகோசரியார் மனம் வருந்தி,இறைவனிடம், “இக்கொடுஞ்செயலை தினமும் செய்வது யார்? என்றுத் தெரியவில்லை; தங்கள் திருவருளால் இவ்வாறு இனி நடக்காமல் தடுக்க அருள வேண்டும்” என்று மனப்பூர்வமாக வேண்டினார்.


அன்று இரவே காளத்தியப்பர் அவர் கனவில் தோன்றி, “அன்புநிறைந்த அவனை கொடியவன் என்று நீ எண்ணுகிறாய்;அது முற்றிலும் தவறு;அவனது செயல்களில் இருக்கும் அன்பை மட்டுமே யாம் கவனிக்கிறோம்;நாளை நீ விரைவாக வந்து எமக்கு அருகே ஒளிந்திருந்து கவனி;அவனது அன்பு எத்தகையது? என்பது உனக்கும் புரியும்”என விளக்கமளித்திவிட்டு மறைந்துவிட்டார்.

அதேபோல சிவகோசரியார் வெகுநேரம் முன்பாகவே வந்து மறைந்துநின்று நடக்க இருப்பதைக் கவனிக்கத் தயாரானார்.திண்ணனார் வழிபடத்துவங்கிய 6 ஆம்நாளாகிய அன்று,வழக்கம் போல ஊனும்,மீனும்,பூவும் கொண்டு வந்தார்.திண்ணனார் காளத்தியப்பரை நெருங்கியதுமே சிவலிங்கத்தின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;இதைக் கண்ட திண்ணனார் பதறித் துடித்துப் போனார்;உடனே,அருகில் ரத்தம் வழிவது நிற்கும் மூலிகைச் செடியில் இருந்து ஒரு இலையை பறித்து,அதைப் பிழிந்து அந்த கண்ணின் மீது விட்டார்;இருந்தும் இரத்தம் வழிவது நிற்கவில்லை;உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது;தனது கண் ஒன்றை தன்னுடைய அம்பால் தோண்டி எடுத்து அந்த ரத்தம் வழியும் கண்ணில் பொருத்தினார்.உடனே ரத்தம் வழிவது நின்றது;ஆனால்,அடுத்த கண்ணில் இருந்து ரத்தம் வடியத் துவங்கியது;எனவே,தனது கால் பெருவிரலால் அந்த ரத்தம் வழியும் இன்னொரு கண்ணுக்கு அருகே மிதித்து(அடையாளத்துக்காக) தனது இன்னொரு கண்ணையும் அம்பால் தோண்டி எடுத்துப் பொருத்த முயல,காளத்தியப்பராகிய சதாசிவன் நேரில் தோன்றினார். தோன்றி “கண்ணப்பா நில்” என்றார்.சிவகோசாரியார் திண்ணனாரின் அன்பின் பெருமையை உணர்ந்து ஆனந்தக்கண்ணீர் சொரிந்தார்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து சர்ப்ப சாந்தி செய்து கொள்வது நன்று.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

விவாக ரத்து ஏற்படும் ஜாதக ரீதியான அறிகுறிகள்:


எந்த மாதிரி ஜாதக அமைப்பு டைவர்சில் முடியும்?


விவாக ரத்து  ஏற்படும் ஜாதக ரீதியான அறிகுறிகள்:
1.      சூரியன், ராகு மற்றும் சனி ஆகியவை பிரிவை ஏற்படுத்தக்கூடிய கிரகங்கள். ஜாதகரின் 12-மிடமும், 12-ம் அதிபதியும் பிரிவினைக்கு காரணமானவர்களாகும்.
2.      ஒருவரது ஜாதகத்தின் 4-மிடம், வாழ்க்கைத் துணையையும், திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை அல்லது துயரத்தைக் குறிக்குமிடம். இந்த நான்காமிடம் பலமிழந்தாலோ, 4-ம் அதிபதி அமைந்துள்ள இடம் பலமிழந்தாலோ  அல்லது 4-ம் வீட்டில் சனி, சூரியன், ராகு அல்லது 12-ம் அதிபதியோ அமர்ந்திருந்தால், விவாக ரத்து ஏற்படும்.
3.      6-ம் வீடும் 12 மற்றும் 7-ம் வீடும், வழக்கு, விரோதம் ஆகியவற்றைக் குறிக்கும். பொதுவாக ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள நாம் முடிவெடுகிறோம். ஆனால், மணமுறியவை கோர்ட் தீர்மானிக்கிறது.  பெரும்பாலான கேஸ்களில், 4-ம் அதிபதி 6-ம் வீட்டிலோ  அல்லது 6ம் வீட்டில் 4-ம் அதிபதியுடன் சேர்ந்திருந்தாலோ பிரிவு ஏற்படும்.
4.      12-ம் அதிபதி 4-ம் அதிபதியுடன் இணைந்தாலோ அல்லது 4-ம் அதிபதி 6,8, மற்றும் 12-ம் வீடுகளில் அமர்ந்தாலோ , சுக்கிரன் அல்லது 7-ம் அதிபதி சூரியன் , ராகு அல்லது சனியின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தாலோ  கண்டிப்பாக பிரிவு உண்டாகும்.
5.       கன்னி லக்கினக்காரர்களுக்கு , 12-ம் அதிபதியான சூரியன் 7-ம் வீட்டில் இருந்தாலோ அல்லது 6-ம் அதிபதியான சனி 4-ம் வீட்டில் இருந்தாலோ கட்டாயம் பிரிவினை ஏற்படும்.  அதுபோல  4 மற்றும் 7-ம் அதிபதியான குரு 6-ம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது குரு 12-ம் வீட்டில் அமர்ந்தாலோ பிரிவு நிச்சயம்.
6.       7-ம் அதிபதி12-ம் அதிபதியுடன் இணைந்து 12-ல் அமர்ந்தாலோ ,அல்லது 12-ம் அதிபதி 7-ம் திபதியுடன் இணைந்து 7-ம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது 7-ம் அதிபதியும் 12-ம் அதிபதியும் பரிவர்த்தனை ஆனாலோ தம்பதிகள் பிரிவார்கள்.
7.       7-ம் அதிபதி 12-ல் இருந்து லக்கினத்தில் ராகு இருந்தாலோ அல்லது 12-ம் அதிபதி 7-ல் ராகுவுடன் இருந்தாலோ  விவாகரத்தாகிவிடும்.
8.       7 மற்றும் 12-ம் அதிபதிகள் 5-ம் வீட்டில் அமர்ந்தாலும் பிரிவேற்படும்.
9.       7-ல் சுக்கிரன் அமர்ந்து 7-ம் அதிபதி 12-ல் அமர்ந்தாலும் பிரிவு தவிர்க்கமுடியாதது.
10.  12மற்றும் 7-ம் அதிபதியுடன் இணைந்து 10-ல் இருந்தாலும் கணவன்-மனைவி பிரிவர்.
11.  லக்கினம் செவ்வாயாகவோ சனியாகவோ இருந்தாலும் அல்லது லக்கினத்தில் சுக்கிரன் இருந்து 7-மிடம் சூரியன், சனி அல்லது ராகுவோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் திருமண வாழ்க்கை தொடராது.
12. சுக்கிரன்,  சந்திரன் அல்லது சூரியனுடன் இணவதும் நல்லதல்ல.  அதிலும் அவை 7-ல் இருந்து  பிரிவுக்குரிய கிரகங்களால் பார்க்கப்பட்டாலும் நன்மை பயக்காது.
13.  ராகு- சனி சேர்க்கை லக்கினத்தில் காணப்பட்டாலோ, அல்லது அவை  7-ல் இருந்து, 4-மிடம் பிரிவினைக் கிரகங்களால் பாதிக்கப்பட்டாலோ பிரிவு நிச்சயம்.
இப்படியாக இன்னும் பலவித காரணங்களைச் சொல்லலாம்.  ஜோதிடத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கு இந்தக் கட்டுரை  விவாக ரத்து என்பதை எவ்விதமாக ஜாதகத்தில் கண்டறிய முடியும் என்பதைத் தெளிவாகக் கூறும்.  இந்த படைப்பு பிரத்தியேகமாக ஜோதிடமாணவர்களுக்கும் பயன்படும்.

காதல், கலப்பு,ஆத்மாத்தமான,வெற்றிகரமான திருமணத்திற்கான இணைவுகள்


காதல் திருமணத்திற்கான இணைவுகள்

1 ) 7 -ம் அதிபதி . 7 -ம் வீட்டுடனான 5 ம் அதிபதியின் நெருங்கிய தொடர்பு - இணைவோ , பார்வையோ , பரிவர்த்தனையோ இருப்பின் காதல் திருமணம் உண்டு ...
2 ) குரு அதிகமாக பாதிப்படைந்து , 7 - ம் அதிபதி லக்னாதிபதியை விட பலம் பெற்றும் மற்றும் சனி , செவ்வாய் அல்லது இராகு 9 - ம் வீட்டில் இருக்க ...
3 ) லக்னாதிபதியோ அல்லது சந்திரனோ , 7 ம் அதிபதியோடு இணைந்து கேந்திர மேற ....
4 ) சந்திரனும் , சுக்கிரனும் இணைந்து 7 ல் இருக்க ...
5 ) 7 ல் சுக்கிரன் இருந்து , செவ்வாயால் பார்க்கப்பட ....
6 ) செவ்வாய் , சுக்கிரன் , இராகு இணைந்து 7 ல் இருக்க ....
7 ) 7 ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரனை , சனி அல்லது செவ்வாய் பார்க்க ....

கலப்பு திருமணத்திற்கான இணைவுகள்

1 ) சுக்கிரனும் , இராகுவும் இணைந்து 6 அல்லது 11 - ல் இருக்க ...
2 ) 7 மிடத்தை அல்லது அதன் அதிபதியை இராகு பார்க்க ....
3 ) சந்திரனும் , செவ்வாயும் 6 / 8 ஆக ..
4 ) சுக்கிரனும் செவ்வாயும் கோணத்திலிருக்க அல்லது 12 ல் இருக்க
5 ) துலாம் அல்லது கும்பம் 7 மிடமாகி அதில் குரு இடம் பெற ...
6 ) 7 -ம் அதிபதியுடன் செவ்வாய் , இராகு இணைய ....
7 ) 5 -ம் இடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க , 7 மற்றும் 12 ம் இடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெற ....
8 ) 7 -ம் அதிபதி சனியுடன் இணைத்து 12 ல் இருக்க ...
9 ) 7 -ம் அதிபதியோடு சந்திரன் இணைய மற்றும் சுக்கிரன் , சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்பட ...

ஆத்மாத்தமான தம்பதிகளாக வாழ்வதற்கான இணைவுகள்

1 ) மேஷம் அல்லது விருச்சிகத்தில் , சுக்கிரனோடு ஏழாம் அதிபதி இணைந்திருக்க ...
2 ) அதே இரண்டு இராசிகளில் சுக்கிரனோடு பத்தாம் அதிபதி இணைந்திருக்க ...
3 ) 7 ல் குரு இருக்க ....
4 ) உச்ச சுக்கிரன் 7 ல் இருக்க ....
5 ) 7 ல் குரு , சந்திரன் இணைந்திருக்க ..
6 ) சுக்கிரன் 7 ஆம் அதிபதியாகி , குருவோடு இணைய அல்லது குருவால் பாக்கப்பட ...
7 ) 7 -ஆம் வீடு சிம்மமாகி நற்கோளால் பார்க்கப்பட ...
8 ) சுக்கிரன் 7 ம் அதிபதியாகி நற்கோள் இணைவு அல்லது பார்வை பெற ....
9 ) கேந்திரத்தில் 7 ம் அதிபரோடு நற்கோள் இணைவுற ...
10 ) 7 ம் வீடு குருவால் பார்க்கப்பட ....

வெற்றிகரமான தம்பதிகளுக்கான , இராசி மற்றும் இலக்கனநிலைகள்

1 ) ஒருவரின் 7 -ஆம் அதிபதி , மற்றவரின் லக்னத்திலோ அல்லது இராசியிலோ இருக்கவும். ஒருவரின் லக்னாதிபதி மற்றவரின் இராசியிலோ அல்லது நவாம்ச ராசியிலோ இருக்க ...
2 ) ஒருவரின் நவாம்ச இராசி மற்றவரின் இலக்கினமாக அமைய ...
3 ) ஒருவரின் ஏழாமிடம் மற்றவரின் இலக்கினமாக அமைய ....
4 ) சுக்கிரன் மற்றும் 7 ம் அதிபதியின் பலத்தை ஒப்பு நோக்குகையில் , இவற்றில் பலம்மிக்க ஒன்று மற்றவரின் லக்னத்திலோ அல்லது இராசியிலோ இடம் பெற ....
5 ) இராசியிலிருந்தோ அல்லது நவாம்ச இராசியிலிருந்தோ , 7 மிடத்தில் மற்றவரின் 9 ம் அதிபதி அல்லது லக்னாதிபதியோ இடம் பெற ...
6 ) சந்திர அஷ்டவர்க்கத்தில் அல்லது சர்வாஷ்டவர்க்கத்தில் எந்த இராசியில் மற்றவரின் லக்னமாகவோ அல்லது இராசியாகவோ அமைய ....
7 ) ஆண் ஜாதகத்தின் லக்னாதிபதி பாகையும் சுக்கிரனின் பாகையும் கூட்டி வரும் பாகையில் பெண்ணின் இராசி அமைய ...
8 ) அதேபோல் , லக்னாதிபதி பாகையும் , 7 -ம் அதிபதி பாகையும் கூட்ட வரும் பாகையில் பெண்ணின் இராசி அமைய ...
9 ) லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி நீச இராசியிலோ அல்லது உச்ச இராசியிலோ அமைய ...
10 ) துவாதசாம்ச கட்டத்தில் சந்திரனின் நிலை மற்றவரின் இராசியாக இருக்க , மேலும் ஆணின் 7 ம் அதிபதியோடு , பெண்ணின் 7 ம் அதிபதி , சம்பந்தம் பெற இருவருக்கும் இடையே வெற்றிகரமான மணவாழ்க்கை அமைகிறது .

எந்த திசையிலிருந்து வாழ்க்கை துணை வரும்

1 ) சுக்கிரனிலிருந்து 7 ம் வீட்டு அதிபதி இருக்கும் இராசியின் திசை
2 ) லக்னத்திலிருந்து 7 ம் அதிபதியின் திசை ...
3 ) 7 ம் வீட்டை பார்வை செய்யும் கிரகங்களின் திசை

திருமண விஷயங்களில் நவாம்சத்தின் தாக்கம்

1 ) தீய கிரக வீட்டில் நவாம்ச லக்னம் அமைவது வரவேற்கதக்கதல்ல .
2 ) நவாம்சத்தில் , லக்னத்தில் சனி , செவ்வாய் அல்லது சூரியன் இடம் பெறுவது மகிழ்ச்சியான மண வாழ்வுக்கு வழி வகுக்காது .
3 ) நவாம்ச லக்னாதிபதியுடன் சனி , செவ்வாய் , சூரியனின் இணைவு மோசமானது .
4 ) நவாம்ச லக்னத்தை சனியும் , செவ்வாயும் பார்த்தாலோ அல்லது இருந்தாலோ அல்லது 7 ம் அதிபதியோடு இணைந்தாலோ , திருமண வாழ்க்கை பாதிப்படையும் .
5 ) நவாம்ச லக்னாதிபதியோடு இணைந்த செவ்வாய் விவாகரத்துக்கு வழிவகுக்கிறார் .
மனைவிக்கு மரணம் நேரும் நேரம்
கணவனின் ஜாதகத்தில் , 7 ம் அதிபதி சுக்கிரன் மற்றும் அவர்களுக்கு இடங்கொடுத்த கிரகங்கள் ஆகியவை பலம்மிக்கதாக இருக்க மனையாளுக்கு பூர்ண ஆயுள் உண்டு .
சுமாரான பலம் - மத்திய ஆயுள்
பலங்குறைந்தால் - அற்ப ஆயுள் எனலாம்

காதல் திருமணம்


காதல் திருமணம் ஜோதிடக்குறிப்பு

      7ம் இடத்திற்க்கு ராகு, செவ்வாய் சம்பந்தம் ஏதோ ஒரு வகையில் ஏற்பட்டால் காதல் திருமணம் நடக்கிறது. அந்த ராகு, செவ்வாய் சம்பந்தத்துடன், 7ல் சந்திரன் இருந்து குரு பார்வை ஏற்பட்டால் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் சிறப்பாக நடக்கிறது

நல்ல காலம் எப்போது?


நல்ல காலம் எப்போது?


      ஒருவருடைய ஜாதகத்தில் இருந்து அவருக்கு எப்போது நல்ல காலம் பிறக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் வலுவாக இருக்கிறது என்பதைப் பொறுத்து சொல்ல முடியும்.
      ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்தால் அவருக்கு 22 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் சந்திர‌ன் வலுவாக இருந்தால் அவருக்கு 24 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருந்தால் அவருக்கு 28 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் புதன் பலமுடன் இருந்தால் அவருக்கு 32 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      குரு பலமாக‌ இருந்தால் அவருக்கு 16 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சுக்கிரன் பலமாக‌ இருந்தால் அவருக்கு 25 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      சனி பலமாக‌ இருந்தால் அவருக்கு 35 வயதுக்கு மேல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் ராகு பலமுடன் இருந்தால் அவருக்கு 42 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      ஜாதகத்தில் கேது பலமுடன் இருந்தால் அவருக்கு 48 வயது முதல் நல்ல காலம் பிறக்கும் என்று கொள்ளலாம்.
      இவ்வாறு பலன் சொல்லும் போது கூடுதலாக கவனிக்க வேண்டியவை எதுவெனில்...........
      ஒரு ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ பலமாக அமைந்தால், அந்த ஜதகத்தின் லக்கினாதிபதி, சந்திரலக்கினாதிபதி ஆகியோர்களின் நிலை அதாவது அவர்கள் பகை நீசம் பெற்று கெடாமல் இருந்தாலே போதும், ஜதகருக்கு நல்ல காலம் முன்னரே ஆரம்பித்து விடுவதை பார்க்க முடிகிறது.
      உதாரணத்திற்க்கு மேஷ லக்கினத்தில் பிறந்த ஜாதகர் ஒருவருக்கு கேது பலமாக அமைந்து, ஜதகத்தில் செவ்வாய் கெடாமல் இருந்து, பாதாகாதிபதி குரு 11ல் அமர்ந்ததால், அவர் குருவிற்குறிய 16 வயதில் +2 முடித்தவுடன், சின்ன சின்ன வேலையில் அமர்ந்து முன்னேறி, பின்பு செவ்வாய்க்குறிய 28 வயதில்  சொந்தமாக வீடு கட்டி, கார் வாங்கி நல்ல நிலையில் செட்டிலாகி விட்டார்.
      ராகு கேது பலமுடன் உள்ள ஜாதகர், லக்கினாதிபதி, சந்திர லக்கினாதிபதி, யோகாதிபதி, இந்த மூவரில் எவர் வலுவாக உள்ளனரோ அல்லது மூவரில் இருவரோ அல்லது மூவரும் வலுவாக உள்ளனர் என்றாலோ, எந்த கிரகத்திற்க்கு குறைந்த வயது கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த வயதில் அவருக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிடும்.

கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


கணவன் பேச்சைக் கேட்காத மனைவி


      5ம் இடத்திற்க்குரியவர் ராகு அல்லது கேதுவுடன் கூடி 3ல் நிற்க, அந்த ஜாதகருக்கு மனைவியால் எப்போது தொந்திரவு தான். கண‌வனுடன் எப்போதும் சண்டை போடக்கூடியவளாகவும், மிகவும் கொடூர குணம் கொண்டவளாகவும் இருப்பாள்.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் ராகு அல்லது கேதுவுடன் கூட கணவனை, மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கணவனை விட மனைவி அதிக வயதுடையவளாக இருப்பாள். இவர்கள் இருக்கும் ஊர் அருகில் கடல் உண்டு.
      லக்கினத்திற்கு 3க்குடையவன் சனியுடன் கூட அல்லது சுக்கிரன் சனியுடன் கூட ஜாதகரை மனைவி மதிக்க மாட்டாள், அவன் சொல் பேச்சு கேட்கமாட்டாள், கோபக்காரியாக இருப்பாள்.

சுக்கிரனால் ஏறுமுகம்


சுக்கிரனால் ஏறுமுகம் ஜோதிடக்குறிப்பு

      சுக்கிரன் பூர்வபுண்ணியாதிபதியாக சூரியனின் உத்திர நட்சத்திரம், புதனின் ரேவதி நட்சத்திரம் ஆகியவற்றில் ஒன்றில் அமர்ந்தால் ஜதகரின் வாழ்க்கை ஏறுமுகமாக வெற்றியும், நன்மையும் மிக்கதாக அமையும்.
      மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் 4,10ம் இடங்களில் அமர்ந்தால் முறையாக ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு. புதன் சுக்கிரனுக்கு வேண்டியவர் எனவே புதனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்தால் யோகம் சிறப்பாக அமையும்.
      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 3, 9ம் இடங்களில் ஒன்றில் அமர்ந்தால் முறையே ரேவதி, உத்திரம் நட்சதிரத்தில் அமர்வார். யோகமுண்டு.
      சூரியன் சுக்கிரனுக்கு வேண்டாத‌வர் என்றாலும் சுக்கிரனை விட வலிமையான சூரியன் சுக்கிரனை தன்னுள் அடக்கிக்கொண்டு யோக பலன்களைத் தருவார் என க்ருதவேண்டியுள்ளது.
      சுக்கிரன் சிம்ம வீட்டில் நின்றாலும் உத்திர நட்சத்திரத்தில் அமர வாய்புள்ளது. மிதுன லக்கினகாரர்களுக்கு 3ம் இடத்திலும், மகர லக்கினகாரர்களுக்கு 8ம் இடத்திலும் நிற்பார்.
      சுக்கிரனுக்கு 3, 8ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும். ஆனால் சுக்கிரன் 3, 8ம் இடங்களில் நின்றாலும் உயர்வான பலன்களே நடக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது.
      இருந்தாலும் சுக்கிரன் மிதுன லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னி வீட்டில் 4மிடத்தில் நீசபங்கம் ஏற்ப்பட்டு நின்றாலும், மீன வீட்டில் 10ல் உச்சம் பெற்று நின்றாலும் யோகம் பிரமாதமாக இருக்கும். சிம்மத்தில் நிற்ப்பது யோகம் தராது.
      மகர லக்கினகாரர்களுக்கு சுக்கிரன் கன்னியில் (நீசபங்கம் ஏற்ப்பட்டு) அல்லது சிம்மத்தில் நிற்பது யோகம் தரும்

வாகனயோகம் யாருக்கு


வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு

      நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
      குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
      சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
      நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
      சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
      கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
      நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
      நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
      நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் வாகனயோகம் உண்டு .
      நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
      குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
      நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
      சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம் உண்டு.

ராகு கேதுவாயோகல் ம்


ராகு கேதுவாயோகல் ம் ஜோதிடக்குறிப்பு


      ராகு, கேதுக்கள் ஜாதகத்தில் உச்சம் பெற்று நிற்க அவர்களுக்கு 9ல் சுபாவ சுபர்கள் ஆட்சி, உச்சம், நட்பு என்னும் நிலையில் இருப்பது கோடீஸ்வர யோகத்தில் ஒரு வகை.
அ) விருச்சிகத்தில் கேது, கடகத்தில் சந்திரன் அல்லது குரு நிற்பதால் இந்த யோகம் அமையும். கடகத்தில் குரு நிற்பது பிரபல யோகமாகும்.
ஆ) ரிஷபத்தில் ராகு, மகரத்தில் சுக்கிரன் நட்பு நிலையில் அல்லது குரு நீசம் பெற்று பங்கம் ஏற்பட்டு நின்றாலும் இந்த அமைப்பு பிரபல யோகமாகும்.
இ) கும்பத்தில் கேது நிற்க, துலாத்தில் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் நின்றாலும் இந்த யோகம் உண்டு.
      பராசர ஹோரையில் ரிஷபத்தில் ராகு உச்சம் எனவும், விருச்சிகத்தில் கேது உச்சம் எனவும், கும்பத்தில் ஆட்சி எனவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இந்த இடங்களில் ராகு, கேதுக்கள் மிகுந்த பலம் பெறுவர். நன்மைகள் செய்வர் என நாம் எடுத்துக் கொள்ளலாம்.

கண்களில் கோளாறு?


கண்களில் கோளாறு? ஜோதிடக்குறிப்பு


      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீடு, 12ம் வீடு ஆகிய வீடுகளை வைத்து கண்களில் கோளாறு, நோய்  போன்றவற்றை கணிக்க வேண்டும். 2ம் வீடு வாலது கண்ணையும், 12ம் வீடு இடது கண்ணையும் குறிக்கும். கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றை வைத்து கண் நோய் மற்றும் கோளாறு ஆகியவற்றை பார்க்க வேண்டும்.
      ஒருவருடைய ஜாதகத்தில் 2ம் வீட்டுக்கதிபதி 6,8,12ல் மறந்து காணப்பட்டாலோ, பகை, நீசம் பெற்று காணப்பட்டாலோ கண்களில் குறைகளோ, நோய்களோ ஏற்பட்டபடி இருக்கும். அதுமட்டுமில்லாமல் அசுபகிரகங்கள், 6,8,12ம் வீட்டுக்கதிபதிகள் 2ம் வீட்டில் இருந்தால் கண்களில் கோளாறு, குறைகள் இருக்கும்.
      ஜாதகத்தில் சூரியன் பகை நீசம் பெற்று அம்சத்திலோ, ராசியிலோ காணப்பட்டால் கண் கோளாறு ஏற்படும், அதே போல் சூரியன் சுக்கிரன் இனைந்து கெட்டு பலவீனம் அடைந்து காணப்பட்டால் கண் கோளாறு, கண்களில் புரை போன்றவை ஏற்படும், அதே போல் சூரியன் சந்திரன் இனைந்து 6,8,12ல் இருந்தால், கண் கோளாறு, மாறுகண் போன்றவை ஏற்ப்படும்

8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன்


8ம் வீட்டில் கிரகங்கள் அமர்வ‌தால் பலன் ஜோதிடக்குறிப்பு


      பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன.
      ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும். பொதுவாக 8இல் உள்ள கிரகம் 2ஆம் இடத்தைப் பார்க்கும் என்பதால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
      எனவே, 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பது முதல் தரமான ராஜயோகமாக கருதப்படுகிறது. வாக்கு வன்மை, பேச்சுத்திறன், சமயோசித புத்தி, எதிர்பாராத தனவரவு, லட்சுமி கடாட்சம், உழைப்புக்கு அப்பாற்பட்ட செல்வங்கள் கிடைக்கும்.
      சுக்கிரனுக்கு அடுத்தப்படியாக சூரியன், புதன் சேர்க்கை இருப்பது அந்த ஜாதகருக்கு விபரீத ராஜயோகத்தையும், நிபுணத்துவத்தையும் அளிக்கும். அதேபோல் 8ல் சனி அமர்ந்தால் நீண்ட ஆயுள் என்று கூறுவர். இது பொதுவானது. ஆனால் லக்னத்தைப் பொறுத்தும் 8இல் என்னென்ன கிரகங்கள் இருந்தால் நல்லது என்பது மாறுபடும்.
      உதாரணத்திற்கு மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியான சனி, 8இல் அமர்ந்தால் நீண்ட ஆயுள் உண்டு எனக் கொள்ளலாம். ரிஷப லக்னத்திற்கு 8க்கு உரியவர் குரு. அவர் 8இல் இருந்தால் பெரிய யோகங்கள் கிடைக்கும். இதுபோல் ஒவ்வொரு லக்னத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்

மேஜிக் எண் 108

கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்

மேஜிக் எண் 108 ஒரு அலசல் ஜோதிடக்குறிப்பு

      ருத்திராட்ச மாலை அல்லது வேறு எந்த மணி மாலைகளனாலும் 108 மணிகளால் கோர்க்கப்பட்டிருப்பது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
      நமது இந்திய மண்ணில் தோன்றிய எந்த கலாச்சாரமானாலும் சரி அது இந்து கலாச்சாரமானாலும், புத்த கலாச்சாரமானாலும் அல்லது ஜெயின் கலாச்சாரமானாலும் அல்லது சீக்கிய கலாச்சாரமானாலும் சரி அவற்றிலும் இந்த 108 மணிகளே பின்பற்றப் படுகின்றன.
      எந்த மந்திரத்தையும் 108 முறை ஓதினால் தான் அதன் பலன் தெரியும் என்பார்கள் ஏன்?
      ஏன் ஜப்பானில் கூட ஜென் கோயில்களில் 108 முறை கோயில் மணியை ஒலிக்கச் செய்வார்களாம்.
      நமது முன்னோராகிய சித்தர்கள் கணித வல்லுனர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்பதற்க்கு இது ஒரு உதாரணம். அதாவது 108 என்கிற எண் ஒரு முழுமையான மொத்த பிரபஞ்சத்தையும், அதன் ஆற்றலையும், அறிவையும் குறிக்கும். அதாவது கடவுள் தன்மையை குறிக்கும்
      இந்த 108 என்கிற எண் முழுமையை குறிக்கிறது என்பதற்க்கு சில உதாரணங்கள்.......
1) எண் 9 முழுமையை குறிக்கும் எண், எண் 108ஐ கூட்டினால் 1+8=9 வரும், 108ம் முழுமையை குறிக்கிறது. அதே போல் 9துடன் எந்த எண்னை பெருக்கினாலும் வரும் விடையை கூட்டிப்பார்த்தால் 9 வரும் 1x9=9. 2x9=18. 1+8=9. 285x9=2565 2+5+6+5=18 1+8=9. 8543x9=76887 7+6+8+8+7=36 3+6=9. அதாவது 9 என்கிற எண் கடவுள் நிலையை ஒரு முழுமையை குறிக்கும் எண்.
2) 9 கிரகங்கள் 12 ராசிகளில் பயணிக்கும் நிலை இருப்பை ஒரு முழுமையை குறிக்கிறது 9 x 12 = 108.
3) மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களுக்கும் 4 பாதம் வீதம் மொத்தம் நட்சத்திரங்களுக்கு 108 பாதங்கள் 27 x 4 = 108.
4) வேதகால புத்தகங்களின் படி பிரபஞ்ச‌த்தில் உள்ள கணிமங்களின் எண்ணிக்கை 108. இப்பொழுது இன்னும் சில கணிமங்கள் உள்ளதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.
5) கணிததில் 1,2 மற்றும் 3 ஆகிய எண்களின் ஆற்றல் பற்றிய உண்மை எண் 1க்கு ஆற்றல் 1. எண் 2க்கு ஆற்றல் 4 (2x2). எண் மூன்றிர்க்கு ஆற்றல் 27 (3x3x3). இந்த மூன்றையும் (1x4x27) பெருக்கினால் வரும் மொத்த ஆற்றல் 108. இது தான் பிரபஞ்ச ஆற்றல். எண் 1 ஒரு பரிமான ஆற்றலையும், எண் 2 இரண்டு பரிமான ஆற்றலையும், எண் 3 முப்பரிமான ஆற்றலையும் குறிக்கிறது.
6) சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 108 சந்திரன்களை வரிசையாக அடுக்கி வைத்தால் எவ்வளவு துரம் வருமோ அவ்வளவு தான்.
7) சூரியனின் விட்டம் சரியாக பூமியின் விட்டத்தை விட 108 மடங்கு அதிகம்

லக்கினத்தில் கேது


லக்கினத்தில் கேது

மகரம், கும்ப லக்கினங்களில் உதித்தவர்களுக்கு கேது லக்கினத்தில் நின்றால் சந்தான பாக்கியத்துடன் செல்வவளமும் சேருகிறது

கேதுவால் யோகம்


கேதுவால் யோகம்

      கேது லக்கினதிற்கு கோண‌ங்கலான‌ 1, 5, 9ம் இடத்திலும், லாபஸ்தானமான 11ம் இடத்திலும் நிற்க பிறந்த ஜாதகர் சொந்த இடத்திலும், வெளிதேசங்களிலும் வாசம் செய்வான். பொன், பொருள் ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மிகவும் அதிர்ஷ்டசாலியாக விளங்குவான். இல்லறத்தில் மகிழ்ச்சி பொங்கும்

எப்போது திருமணம்


எப்போது திருமணம் ஜோதிடக்குறிப்பு


      குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்பார்கள். குரு பகவான் லக்கினத்தையோ அல்லது லக்கினத்திற்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ அல்லது சந்திர ராசியையோ அல்லது சந்திர ராசிக்கு அடுத்துள்ள இரண்டாம் வீட்டையோ கோச்சாரத்தில் சுற்றிவரும் போது, 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையை வியாழ நோக்கம் என்பார்கள்.
      சுக்கிரனின் தசா புத்தி நடைபெறும் பொழுதும் திருமண யோகம் உண்டு. அதுபோல தனிப்பட்ட சில ஜாதகங்களில் ஏழாம் வீட்டதிபரின் தசா புத்தி நடைபெறும்போதும் திருமண யோகம் உண்டு.
      அதுபோல ஒரு சில ஜாதகருக்கு கோசார குரு ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு கோசாரரீதியாக வந்தமரும் கால‌த்தில் திருமண யோகம் உண்டு

ஒரு குறுக்கு வழி

      லக்கினத்தின் பாகைகள் கூட்டல் ஏழாம் வீட்டு அதிபதியின் பாகைகள் வகுத்தல் 30 பாகைகள் = என்ன ராசி வருகிறதோ, அந்த ராசியில் கோச்சார குரு வரும்போது திருமணம் நடைபெறும் (இது பொது விதி!)
      லக்கினாதிபதி, ஏழாம் அதிபதி, சுக்கிரன் ஆகியோர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால் உரிய காலத்தில் திருமணம். அதாவது 21 வயது முதல் 25 வயதிற்குள் திருமணம்.
      அவர்களில் இருவர் 3 அல்லது 4 பரல்களைக் கொண்டிருந்தால் சற்று வயதான காலத்தில் திருமணம். அதாவது 30 அல்லது 32 வயதில் திருமணம்.
      மூவருமே, 1 அல்லது 2 பரல்களை மட்டும் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கை அமையாமலே போகலாம்!

வாழ்க்கைச்சிறை


வாழ்க்கைச்சிறை ஜோதிடக்குறிப்பு

      ராகுவோ கேதுவோ லக்கினேசனுடன் சம்பந்தப்பட்டு கேந்திர கோணங்களில் இருப்பது யோகமான அமைப்பு, உயர்வு தரும். ஆனால் இந்த அமைப்புக்கு 6ம் வீட்டோனின் சம்பந்தம் ஏற்படுமாயின் ஜாதகருக்கு வாழ்க்கை சிறைவாசம் போல் தெரியும். வயது கூடக்கூட குடும்பப்பற்று மறைந்து, துறவு மனப்பான்மை ஏற்ப்படும். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாது. குடும்ப வாழ்க்கையினை சிறையில் இருப்பது போல் கருதி வாழ்க்கையினை ஓட்ட வேண்டியிருக்கும்

பானு யோகம்


பானு யோகம் ஜோதிடக்குறிப்பு


      1ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் ஆகிய 6 இடங்களில் நவநாயகர்கள் அனைவரும் வீற்றிருக்க அந்த அமைப்பிற்க்கு "பானு யோகம்" என்று பெயர்
      இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர் அனைத்து விசயங்களிலும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை வசதிகள் நிறைந்து அமைதியயும் ஆனந்தத்தையும் அனுபவிப்பார்.

நிம்மதி யோகம்


நிம்மதி யோகம் ஜோதிடக்குறிப்பு


1) ஜாதகத்தில் குருசந்திர யோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம் ஆகியவற்றில் ஒன்றாவது இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியில் உருவாக்கிக்கொள்ள முடியும்.
2) 2,12ம் இடங்களில் சுபர்கள் இருந்தால் நிம்மதி மிகவும் நன்றாக இருக்கும்.
3) 2,12ம் இடங்களில் பாபர்கள் இருந்தாலும் சுபர் பார்வை இருந்தால் நிம்மதியை பயிற்ச்சியால் உருவாக்கி கொள்ள முடியும்.
4) லக்கினத்தை பாபிகள் பார்க்காது, சுபர் பார்வை இருந்தால் நிம்மதி நிறைவு நன்றாக இருக்கும். குறிப்பாக குருவின் பார்வை லக்கினத்துக்கு கிடைத்தால் மிக நிம்மதியாக, மரியாதை மிக்க வாழ்க்கை வாழமுடியும்

மாகா புண்ணியவான்கள் யார்?


மாகா புண்ணியவான்கள் யார்? ஜோதிடக்குறிப்பு


      1. நல்ல மருத்துவர்கள் அன்னை தெரசா போன்று சேவை மனப்பான்மையுடன் புண்ணியம் சேர்ப்பவர்கள்.
      2. கோயிலில் நல்ல விதமாக பூஜை செய்து பக்தகோடிகளின் மனம்குளிரச் செய்யும் அர்ச்சகர்கள்.
      3. நலிந்தோருக்கு முடிந்த உதவிகளைச் செய்பவர்கள்.
      4. இலவசமாக நல்ல அலோசனைகளை வழங்குபவர்கள்.
      5. அனாதை இல்லங்கள், மடங்கள், கோயில்களில் முழு ஈடுபாட்டுடன் உடல் உழைப்பில் ஈடுபட்டு புண்ணியம் தேடுபவர்கள்.
      6. மாணவர்களுக்கு உண்மையான ஈடுபாட்டுடன் கல்வி கற்ப்பிப்பவர்கள்.
      7. தனது வருமாணத்திற்க்கு உட்பட்டு அதில் சில வகைகளில் புண்ணியம் தேடுபவர்கள்.
      8. குழந்தைகளின் கல்வி, அனாதைக்குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பவர் மற்றும் பலர் இந்த வரிசையில் சேர்க்கலாம் அல்லவா. அவர்களுக்கான ஜாதகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்று ஒரு சிறு அலசல்.

1) ஜாதகத்தில் குருமங்கள யோகம் அமைந்திருந்தால் ஜாதகர் தனது சக்திக்கு உட்பட்டு ஏதேனும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டேஇருப்பார்.
2) ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இனைந்திருந்தால் அவர்கள் இவ்வுலகை விட்டு விலகும் வரை ஏதேனும் புண்னிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
3) 5,9 ஆகிய திரிகோண ஸ்தனங்களில் சுபர் அமர்ந்திருந்தால் பொதுநலத் தொண்டுகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்வர் எப்பொழுதும்.
4) சுபாவ பாவிகள் லக்கினாதிபதியாக அமைந்து திரிகோணம் ஏறினாலும் புண்ணியவானாக இருப்பர்.
5) ஜாதகத்தில் புதஆதித்ய யோகம் அமையப்பெற்றவர்கள் புண்ணியம் தரும் காரியங்களில் ஈடுபடுவர்.
6) குரு சூரியன் இனைப்பு பலனே கருதாது பொது காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
7) புதன் கேது லாபத்தில்(11ம் இடம்) இனைந்தால் தெய்வ காரியங்களுக்கு உத‌வுவதால் புண்ணியம் கூடும்.
8) கேந்திர ஸ்தானங்களில் புதன், சூரியன், சுக்கிரன் இருக்கும் அமைப்பு தெய்வ காரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும்.
9) குருசந்திர யோகம், கஜகேசரியோகம், கிரகமாலிகா யோகம் ஆகியவை பொதுகாரியம், தெய்வத்தொண்டு ஆகியவற்றை தனது செல்வம் செல்வாக்கால் நிறைவேற உத‌வும்.
10) 5,9,10 க்கு உடையவர்கள் ஒரே வீட்டில் இனைந்து நின்றால் பொதுஇ சேவைகளில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க உதவும் அமைப்பு.
11) குரு, சுக்கிரன், சந்திரன் ஜாதகத்தில் நல்ல விதமாக சம்பந்தம், இனைப்பு ஏற்ப்பட்டால் தெய்வ காரியம், பொது நலத்தொண்டு வாயிலாக புண்ணியம் சேர்க்க முடியு

வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை


வயதில் மூத்தவர்களின் மேல் இச்சை ஜோதிடக்குறிப்பு

      லக்கினத்தில் கேது, 7ல் ராகு, 10ல் புதன் எனும் அமைப்பு ஆண்களின் ஜாதகத்தில் இருக்குமானால், அவர்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மேல் இச்சை ஏற்படுகிறது. அவர்கள் விதவைக்கு வாழ்வளித்தால் வாழ்வு சுகப்படு

தூக்கம்/நடை


தூக்கம்/நடை ஜோதிடக்குறிப்பு

      12ம் இடத்ததிபன் லக்கினத்தில் இருந்தாலோ, 12ம் இடத்ததிபன் கேந்திரத்தில் இருந்து லக்கினாதிபதி பார்வை பெற்றாலோ, 12ம் இடத்ததிபன் ஆட்சி/உச்சம் பெற்று சுபர் பார்வை பெற்றாலோ, 12ம் வீட்டில் சுபர் அமர்ந்தாலோ, 12ம் வீட்டை சுபர் பார்த்தாலோ, 12ம் வீட்டில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகம் அமைந்தாலோ, அந்த ஜாதகர் எந்த மாதிரியான இடத்தில் படுத்தாலும் உடனே தூங்கிவிடுவர், அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானலும் நடப்பர்

சரஸ்வதி யோகம்


சரஸ்வதி யோகம் ஜோதிடக்குறிப்பு


      ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
      சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவறாக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் அணைத்தும் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வா

எப்போது திருமணம்?


எப்போது திருமணம்? இன்னுமொரு பார்வை ஜோதிடக்குறிப்பு


ஒரு ஜாதகத்திற்க்கு திருமணம் எப்போது கூடிவரும் என்றால்
1) குரு கோச்சார ரீதியாக ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு 5, 7 மற்றும் 9ல்(வியாழ நோக்கம் என்று சொல்வார்கள்) வரும் காலத்திலும்
2) அதே போல் லக்கினத்திற்க்கு 7ம் இடத்தை(அதாவது லக்கினத்திற்க்கு 11, லக்கினம், மற்றும் லக்கினத்திற்க்கு 3ம் இடத்தில் குரு வரும் காலம்) கோச்சார ரீதியாக குரு பார்வையிடும் காலத்திலும்.
3) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டிற்க்கு குரு கோச்சார ரீதியாக‌ வரும் காலத்திலும் (இந்த அமைப்பு திருமணம் நடப்பதற்க்கு கொஞ்சம் வலுவான அமைப்பு)
4) ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் வீட்டை குரு கோச்சார ரீதியாக பார்க்கும் காலத்திலும்
5) லக்கினாதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
6) 7ம் அதிபதி தசை அல்லது புத்தி காலத்திலும்
7) ராகு/கேது கோச்சார ரீதியாக ஜாதகத்தில் லக்கினம், ராசி, நவாம்ச லக்கினம், சுக்கிரன் இருக்கும் ராசி ஆகிய இடங்களுக்கு வரும் காலத்திலும்
8) சனி தசை அல்லது புத்தி காலத்திலும்
9) ஏழரைச் சனி காலத்திலும்
10) சுக்கிரனின் தசை அல்லது புத்தி காலத்திலும்
11) ராகு/கேதுவின் தசை அல்லது புத்தி காலத்திலும்


இவ்வனைத்திலும் ஒரு சில அமைப்புகளாவது ஒன்றாக கூடி வரும் போது கண்டிப்பாக ஜாதகருக்கு அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமணம் நடைபெரும்

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு

முதல் தரமான ராஜயோக அமைப்பு என்றால்...........
நல்ல பண வசதி, கெளரவமான வேலை, ஒற்றுமையான குடும்பம், நல்ல சந்ததிகள், ஜன வசியம், கெளவரமான வசீகரத்தோற்றம், எல்லாம் அமைந்த ஆனந்தமான, நிம்மதியான‌ வாழ்வு அமையுமானால் அது முதல் தரமான ராஜயோகம் என்று சொல்லலாம் அல்லவா.

      மேஷ லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி செவ்வாய், யோகாதிபதியின் சுபத்துவ சம்ப‌ந்தம் முதல் நிலை ராஜயோகத்தினைத்தரும்.
9,10ம் இடங்களில் குருவும் செவ்வாயும் இருப்பது, 4ல் குரு லக்கினத்தில் அல்லது 10ல் செவ்வாய் இருப்பது சிறப்பான அமைப்பாகும்

      ரிஷப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 10ல் சனி, லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு அல்லது 6ல் சனி உச்சம் லக்கினத்தில் சந்திரன் எனும் அமைப்பு முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      மிதுன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு யோகாதிபதி சுக்கிரன் 5ல் அல்லது 10ல் இருப்பது முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும்.

      கடக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி சந்திரன், யோகாதிபதி குருவும் செவ்வாயும் ஆவர். இவர்கள் ஜாதகத்தில் சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு யோகம் இருந்தாலே முதல் நிலை ராஜ யோகத்தினைத் தரும். லக்கினத்தில் சந்திரன் 5ல் செவ்வாய், 9ல் குரு மிகவும் சிறப்பைத்தரும்
சிம்ம லக்கினத்தில் உதித்தவர்களுக்கு குருவும் செவ்வாயும் சுபர்கள், இவர்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் இனைந்திருந்தாலோ, ஒருவருக்கொருவர் கேந்திரம், திரிகோணம் பெற்றாலோ முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும். லக்கினத்தில் குரு, 4ல் செவ்வாய் எனும் அமைப்பு சிறப்பான யோகபலனைத் தரும்.

      கன்னி லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சுக்கிரன் யோகாதிபதி ஆவார். 1,2ம் இடங்களில் அல்லது 9,10ம் இடங்களில் புதன் சுக்கிரன் இனைந்து நிற்ப்பது, 2, 9ல் சுக்கிரன் மட்டும் தனித்து நின்றாலும் முதல் நிலை ராஜயோகம் சிறக்கும்.

      துலா லக்கினத்தில் உதித்தவர்களுக்கு 4,5க்குடைய சனி நல்லவர். 9, 10க்குடைய புதனும், சுக்கிரனும் நல்லது செய்வர், ஜாதகத்தில் சனி ஆட்சி உச்சம் பெற்று, புதன் அல்லது சுக்கிரன் சம்பந்தம் பெற்று இருந்தால் ஜாதகர் முதல் நிலை ராஜயோகத்தினை சிறப்பாக அனுபவிப்பார்.

      விருச்சிக லக்கினத்தில் உதித்தவர்களுக்கு, லக்கினாதிபதி செவ்வாய், குரு, சூரியன், சந்திரன் ஆகியோர் மிக நல்லதைச் செய்வர். இவர்களுக்கு தர்மகருமாதிபதி யோகம், குருமங்கள யோகம், குருசந்திர யோகம், சந்திரமங்கள யோகம் இவற்றில் ஒன்றிரண்டு இருந்தாலே ஜாதகர் சிறப்பான பலன்களை அனுபவிப்பார். சூரியன் சந்திரன் 9,10ல் ஆட்சி அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் சந்திரன் அல்லது லக்கினத்தில் செவ்வாய் 9ல் குரு மிகச்சிறப்பைத் தரும்.
 தனுசு லக்கினத்தில் உதித்தவர்களுக்கு சூரியன், செவ்வாய், புதன் நல்லவர்கள் இவர்களில் இருவர் ஆட்சி உச்ச பலத்துடன் நின்றாலே போது முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      மகர லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்படுமால் முதல் நிலை ராஜயோகம் அமையும்.

      கும்ப லக்கினத்தில் உதித்தவர்களுக்கு புதன், சுக்கிரன், செவ்வாய் நல்லவர்கள். செவ்வாய் சுக்கிரனால் தருமகருமாதிபதி யோகம் ஏற்ப்பட்டாலும். அல்லது மூன்று நாயகர்களில் ஜாதகத்தில் ஏதேனும் இருவருக்கு சுபத்துவ சம்பந்தம் ஏற்ப்பட்டாலும் முதல் நிலை ராஜயோகம் கிடைக்கும்.

      மீன லக்கினத்தில் உதித்தவர்களுக்கு லக்கினாதிபதி குரு, பாக்கியாதிபதி செவ்வாய் ஆகிய இருவரால், தருமகருமாதிபதி யோகமோ, அல்லது குருமங்கள யோகமோ, 5ம் அதிபதி சந்திரனால், குரு சந்திரயோகமோ, சந்திரமங்கள யோகமோ ஏற்ப்பட்டால் முதல் நிலை ராஜயோகத்தினை பூரணமாக அனுபவிக்கலாம்.

12 லக்கினத்தில் உதித்தவர்களுக்கும் முதல் தரமான ராஜயோக அமைப்பு 3


முன்னோர்களின் உருவப்படங்களை தெய்வப் படங்களுடன் வைத்து வழிபடலாமா?


தெய்வப் படங்களுடன், முன்னோர்களின் உருவப்படங்களை வைப்பதில் தவறில்லை. ஆனால் தெய்வங்களின் படங்களை விட அளவிலும், உருவத்திலும் அவை சிறிதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். 

குறிப்பாக, போஸ்ட்-கார்டு அளவிலான முன்னோரின் உருவப்படங்களை, கடவுள் படங்களுடன் வைத்து வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

HARD DISK-ஐ பாதுகாப்பது எப்படி?



FILE
கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி,அப்படி ரீஸ்டார்ட் செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள்Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.

இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Diskசெய்து கொள்ளுங்கள்.

Check Disk செய்யும் முறை:

1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.

2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும். இதில்Error Check என்பதில் "Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.

3. இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள்Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.

4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்தWindow வரும்.

உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Startஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Diskவேலைகள் ஆரம்பிக்கும்.

5. இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Diskகுறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.

6. மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.

Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.

Sunday, 27 January 2013

யாரெல்லாம் வைரம் அணியலாம் ..


யாரெல்லாம் வைரம் அணியலாம் ..

 
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..

உடல் உரம், மன உரம் ,வெற்றி ,செல்வம் ,அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டது வைரம் . தன்னம்பிக்கையை வளர்க்கும் .ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும்.கோரக்கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும். பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும். சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும். கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும். வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மைதன்மையை இழக்காதவாறு செய்யும்.
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6 15 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ,பெயர் எண் மற்றும் விதி எண் 6 15 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!

நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...?


நவரத்தின மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு பார்வை



செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து.மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம்.நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல்,தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும்.தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும்.இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.

பதிக்கும் முறை  


மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும்.பிறகு கடிகார சுற்றுபடி  முத்து,பவளம்,கோமேதகம்,நீலம்,வைடூரியம்,புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.        

நவரத்தினங்கள்  தரும் நற்பலன்கள் 

நவரத்தின மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால்        அவர் மிக சிறந்த  அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம்.எதிலும் வெற்றிகிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி,புகழ்,செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும்.போடும்  திட்டங்கள்  எல்லாம்  சரியானதாக இருக்கும்.உழைப்பிற்க்கு  முழுமையான வெற்றி கிடைக்கும்.

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?

மேஷ ராசி,மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம்,அவிட்டம், சித்திரை         ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .

எண் கணித படி 9,18,27  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண்  9 வருபவர்களும் அணியலாம்.

பிறவி       எண்  2,7  கொண்டவர்கள்  நவரத்தின மோதிரம் அணிய கூடாது.  வேறு   எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின்  ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்

எந்தெந்த ராசிக்காரர்கள் வைரக் கல் மோதிரத்தை அணியலாம்


வைரத்திற்கு உரியவர் சுக்கிரன். பொதுவாக வைரத்தில் கார்பன் அணுக்களே அதிக‌ம் இருக்கிறது. எனவே, ஒல்லியாக இருப்பவர்கள் வைர மோதிரம் அணிந்தால், உடல் சூடாகி மேலும் இளைத்து விடுவார்கள்.

தேரை அமர்ந்த கல்லில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட வைரக் கல்லை பட்டை தீட்டி அணிவதால் உயிர் விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவேதான், வைரக் கல்லை மோதிரத்தில் பதித்து அணியும் முன்பாக அதனை ஒரு வார காலம் வீட்டில் வைத்திருந்து அல்லது சட்டைப் பையில் வைத்திருந்து நிகழ்வுகளை கவனிக்க வேண்டும். 

வைரக் கல்லை வைத்திருக்கும் போது தேவையில்லாத சண்டைகள், குழப்பங்கள் ஏற்பட்டால் அந்தக் கல்லை மோதிரமாக அணிவதை தவிர்த்துவிட வேண்டும்.

மேலும் வைரத்திற்கு உரியவரான சுக்கிரன், ஜாதகத்தில் நல்ல நிலையில் (ஆட்சி/உச்சம்) பெற்றிருப்பவர்கள் மட்டுமே வைர மோதிரத்தை அணிய வேண்டும். மேலும் 6, 7, 10ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் வைர மோதிரம் அணிவதை தவிர்க்க வேண்டும். 

இதேபோல் வைரக் கல்லின் அளவு எத்தனை சென்ட் இருக்க வேண்டும் என்பதில் சில விதிகள் உள்ளன. பிறந்த தேதி, பிறவி எண், விதி எண் ஆகியவற்றை கணக்கிட்டு, சுக்கிரன் வலிமையைப் பொறுத்து எத்தனை சென்ட் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டும்.