ஐந்தாம் பாவகம்
பஞ்சமுஹன் ஜோதிட கல்வி மையம்
நாள் 8 -5 -2011 பயிற்சி குறிப்பு 3
அன்பு மாணவர்களுக்கு வணக்கம், இது வரை நான்கு PAAVANKALAI படித்து விட்டீர்கள் நல்லது,
பல பாவகத்தை ஆராயும் போது தான் நமக்கு பல விசயங்கள் கிடைக்கும்
ஆனால் மெதுவாக தான் கிடைக்கும் , அவசரபடாதீர்கள், நிதானமாக செயல்படும் போது தான் நமக்கு பல விசயங்கள் பிடிபடும்.
இந்த வாரம் நாம் ஐந்தாம் பாவகம் மற்றும் ஆறாம் பாவகம் ஆய்வு செய்வோம்.
ஐந்தாம் பாவகத்தில் குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள், மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம் .
மேலும் சாதகனின் அறிவை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்,
சாதகனின் காதலை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்
நாள் 8 -5 -2011 பயிற்சி குறிப்பு 3
அன்பு மாணவர்களுக்கு வணக்கம், இது வரை நான்கு PAAVANKALAI படித்து விட்டீர்கள் நல்லது,
பல பாவகத்தை ஆராயும் போது தான் நமக்கு பல விசயங்கள் கிடைக்கும்
ஆனால் மெதுவாக தான் கிடைக்கும் , அவசரபடாதீர்கள், நிதானமாக செயல்படும் போது தான் நமக்கு பல விசயங்கள் பிடிபடும்.
இந்த வாரம் நாம் ஐந்தாம் பாவகம் மற்றும் ஆறாம் பாவகம் ஆய்வு செய்வோம்.
ஐந்தாம் பாவகத்தில் குழந்தைகளின் முன்னேற்றங்கள், பூர்வீக சொத்துக்கள், முற்பிறப்பில் செய்த நல்வினைகள், மந்திர சாஸ்திரங்களும், அதிர்ஷ்டம் , மற்றும் சாதகனின் பொழுது போக்கு விசயங்களை அறியலாம் .
மேலும் சாதகனின் அறிவை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்,
சாதகனின் காதலை குறிக்கும் ஸ்தானமும் இதுதான்
- இந்த பாவகத்தில் எந்த கிரகம் நிற்கிறதோ அதன் காரகம் சம்ம்நதபட்ட அறிவு ஜாதகனுக்கு கிடைக்கும்
- இந்த பாவக அதிபதி கெட்டுவிட்டால் பூர்வீக சொத்து கிடைக்காது
- இந்த பாவகதில் ராகு, கேது நின்றாலும் புத்திர ஸ்தானம் பாதிக்கும்.
- சாதகனின் காதல் ஸ்தானாதிபதி இவர் தான் இந்தி அதிபதி ஆறில் போனால் காதல் பிரச்சனை ஆகும் ,எட்டில் போனால் காதலால் அவமானபடுவான்
- வளர்ச்சி ஸ்தானமான பத்து, பதினொன்றில் போனால் காதல் வெற்றி அடையும்
- ஐந்தாம் அதிபதி ஆருக்கு போனால் பூர்வீக சொதினில் ,சண்டை, சச்சரவு வரலாம்,
- ஐந்தாம் பாவ அதிபதி நாலுக்கு போனாலும் ஜாதகனுக்கு பூர்வீக சொத்து கிடைக்காது
- ஐந்தாம் பாவ அதிபதி ஆறாமிடம் போனாலோ அல்லது எட்டாம்மிடம் போனாலோ நாலாம் மிடம் போனாலோ குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும்
- தனித்த குரு ஐந்தில் நின்றாலும் புத்திர பாக்கியம் தடைபடும்
- ஐந்தில் சனி செவ்வாய் நின்றாலும் பிரச்சனை தான்
- ஐந்தாம் மிடம் சூரியன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சூரியனாக இருந்தாலோ ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான்
- ஐந்தாம் மிடம் சந்திரன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சந்திரனாக இருந்தாலோ ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம், சிறந்த ஓவிய திறமை, காதல் ஆர்வம் இருக்கும்,
- ஐந்தாம் மிடம் செவ்வாய் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் செவ்வையாக இருந்தாலோ ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்த ஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்க்தியுடன் செயல்படுவார் . குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத்தனமாக வளரலாம்,
- ஐந்தாம் மிடம் புதன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் புதனாக இருந்தாலோ ஜாதகனுக்கு மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், இளமைகளந்த காதல் இருக்கும், தத்துபுத்திர யோகம் ஜாதகனுக்கு உண்டு (புதன் அலி கிரகம் என்பதால் )
- ஐந்தாம் மிடம் சுக்கிரன் நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சுக்கிரனாக இருந்தாலோ ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும் ,காதல் எண்ணம் அதிகம் இருக்கும் , ஆடல், பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் , கவர்ச்சியின் வழிகளில் ஜாதகன் செயல்படுவார்
- ஐந்தாம் மிடம் குரு நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் குருவாக இருந்தாலோ ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும் ,ஆன்மீக விசயங்களில் கவனம் இருக்கும், ஆனால் குழந்தை தாமதமாக பிறக்கும் ( குரு புத்திர காரகன் ,காரகனே புத்திர ஸ்தானத்தில் இடம் பெறகூடாது )
- ஐந்தாம் மிடம் சனி நின்றாலோ அல்லது ஐந்துகுடையவன் சனியாக இருந்தாலோ ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது,
- ஐந்தாம் மிடம் ராகு பார்த்தாலோ அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு சூதாட்டத்தில் கவனம் ஏற்படும், பூர்வீக சொத்தில் பிரச்சனை வரலாம் , குழந்த பிறப்பதில் சிக்கல் ஏற்படலாம்
- ஐந்தாம் மிடம் கேது பார்த்தாலோ அல்லது இருந்தாலோ ஜாதகனுக்கு ஆழ்ந்த சிந்தனை, ஆன்மீக நாட்டம் வரலாம், தெளிவான வார்த்தைகளுடன் பேசுவார், சித்தர்களை போல இருக்க ஆசைபடுவார் ,குழந்த பிறப்பதில் thaamatham உருவாகும் .
- ஐந்தாம் பாவாதிபதி லக்னத்தில் நின்றாலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு ,புத்திரம், பூர்வீகம், அறிவு உண்டு
- ஐந்துகுடையவன் லக்னதிலோ அல்லது லக்னாதிபதி ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதலில் அதிக ஈடுபாடு இருக்கும்
- ஐந்துகுடையவன் ஏழில் நின்றாலோ அல்லது ஏழுக்கு உடையவன் ஐந்தில் நின்றாலோ ஜாதகருக்கு காதல் திருமணம் உண்டு
- ஐந்தாம் பாவகதில் பாவகிரகம் நிற்கக்கூடாது
- ஐந்தாம் பாவகதிர்க்கு இருபுறமும் பாவாகிரகம் நிற்ககூடாது
- விரயாதிபதி, அட்டமாதிபதி இந்த பாவகத்தில் நின்றாள் குழந்தை, அறிவு,காதல் தடைபடும்
- ஐந்தாம் பாவகதில் சனி ,செவ்வாய் சேர்கை இந்த பாவக சிதிலமடைய வாய்ப்பு உண்டாகும்
- ஐந்தாம் பாவகம் பெண் ராசியாகி ஐந்தாம் அதிபதி பெண் ராசிகளில் நின்று பெண் கிரகங்கள் இந்த பாவகத்தில் இருந்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறக்கும்
- ஐந்தாம் பாவகம் ஆண் ராசியாகி ஐந்தாம் பாவ அதிபதி ஆண் ராசியில் நின்று ஆண் கிரகங்கள் இந்த பாவகதில் நின்றாள் பிறக்கும் குழந்தை ஆண்குளந்தையாகும்
- ஐந்தாம் அதிபதி நீசம், அச்தன்கதம் அடைந்து இருந்தால் ஜாதகருக்கு குல தெய்வ வழிபாடு குறை இருக்கும்
- ஐந்தாம் அதிபதி ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் பெற்று இருந்தால் இவரின் குல தெய்வம் இவரை நன்கு காக்கும் .
- ஐந்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் குழந்தையின் அன்பும் ஆதரவும் ஜாதகருக்கு உண்டு,
- ஐந்தாம் அதிபதி நாளில்,ஆறில்,எட்டில் இருந்தால் குழந்தையின் அன்பு, ஆதரவு ஜாதகருக்கு கிடைக்காது
- ஐந்தாம் பாவகம் தொழில் ஸ்தானத்திற்கு துன்ப பாவகமாகும்
- ஐந்தாம் பாவகம் மனைவிக்கு லாப பாவகமாகும்
- ஐந்தாம் பாவகம் தாய்க்கு வாக்கு, தான பாவகமாகும்
- ஐந்தாம் பாவகம் தந்தைக்கு சௌரிய பாவகமாகும்
- இளைய சகொதிரனுக்கு தைரிய ,வெற்றி பாவகம்,
- ஐந்தாம் பாவகம் மூத்த சகொதிரனுக்கு களத்திற பாவகமாகும்
No comments:
Post a Comment