Saturday, 25 May 2013

நவகிரகமும் மனித உடல் சம்பந்தமும் & நோய்களும் !


நவகிரகமும் மனித உடல் சம்பந்தமும் & நோய்களும் !
ஒவ்வொரு மனிதருக்கும் ஏற்ப்படும் நோய்களுக்கு நவக்கிரக சம்பந்தம் நிச்சயம் உண்டு. மேலும் அவ்வாறு ஜாதகர் உடல் நிலை பாதிக்கப்பட்டால் ஜாதகர் விரைவில் உடல் நிலை பாதிப்பில் இருந்து விடுபட செய்ய வேண்டியவைகள் பின் வருமாறு :


பிரபஞ்ச ஆதார சக்திகளில் நிலம், உடலாகவும்; ஆகாயம், உயிராகவும் உள்ளது. மீதியுள்ள நெருப்பு , வாயு , நீர் சக்திகளின் இயக்கத்தில் ஏற்ப்படும் முரண்பாடுகளே நோயாக வெளிப்படும்.


மேலும் நெருப்பு சக்தியால் பசி, தாகம், தூக்கம், சோர்வு, முதலியன ஏற்ப்படும். நில சக்தியால் எழும்பு , தசை , நரம்பு , தோல் , முதலியவை பாதுகாக்க படுகின்றது . வாயு சக்தியால் உடல் உறுப்புகளின் இயக்கம் ( சுருங்கி விரியும் தன்மை ) பாதுகாக்க படுகிறது. நீர் சக்தியால் இரத்தம் , விந்து , வியர்வை , கழிவு பொருட்கள் வெளியேற்றும் இயக்கம் முதலியவை பாதுகாக்க படுகிறது.


உடம்பில் நெருப்பு சக்தி குறைவால் ஏற்ப்படும் நோய்களுக்கு ' பித்தம் ' என்றும்; வாயு சக்தி குறைவால் ஏற்ப்படும்  நோய்களுக்கு 'வாதம்' என்றும்நீர்  சக்தி குறைவால் ஏற்ப்படும் நோய்களுக்கு ' கபம்' என்றும் பெயர் .

ஜாதகத்தில் நெருப்பு ராசிகள் பதிக்கப்படும் பொழுது ரத்த  அழுத்தம் ,  பித்தம், தலை வலி , காய்ச்சல் , கால் கை வலிப்பு; பார்வை கோளறு, மூலம், குடல் புண் , கரு சிதைவு , கொப்புளம் , மூளை கட்டி தீக்காயம் போன்ற உஷ்ண சம்பந்தமான பீடைகள் ஏற்ப்படும் .

நில  ராசிகள் பதிக்கப்படும் பொழுது தசை மண்டலம் , இதயம் , சிறு நீரகம் , எழும்பு , பல் போன்ற உறுப்புகள் பாதிப்பு ஏற்ப்படும் .

  
வாயு ராசிகள் பதிக்கப்படும் பொழுது மார்பு நோய் , நரம்பு மண்டலம் , உணர்ச்சி புலன்கள் , மூளை , தோல் , கழுத்து , இடுப்பு , சுவாச நோய்கள் ஏற்ப்படும் .


நீர் ராசிகள் பதிக்கப்படும் பொழுது ரத்த போக்கு , பேச்சில் தடுமாற்றம் , மன நோய் , சளி , மார்பு , வயிற்று கோளாறுமாதவிடாய் தொந்தரவு , இரத்தத்தில் சத்து குறைவு , சுரப்பிகள் பாதிப்பு , புற்று நோய் , குஷ்டம்போன்ற நோய்கள் ஏற்ப்படும்

நெருப்பு , நிலம் , காற்று , நீர் எனும் ராசிகளின் அமைப்பில்  ஜாதகர் எந்த ராசி அமைப்பில் , எத்தனை சதவிகித பதிப்பை அடைந்துள்ளார் என்பதனை சுய ஜாதகத்தை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள முடியும் . மேலும் எந்த ராசி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த ராசி அதிபதியினை தமது உடலுடன் உயிர் கலப்பு செய்தால் , ஜாதகரின் உடல் நிலை பாதிப்பு விரைவில் குணம் பெற்று , மீண்டும் வராமல் தடுத்து கொள்ள இயலும் இது அனுபவ ரீதியான உண்மை .

No comments:

Post a Comment