Thursday, 12 June 2014

வாஸ்து சாஸ்திரம் @

வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து என்பது மனிதனைக் குறிக்கும் ஒரு சொல். இதனால்தான் வாஸ்துக்குரியவனை வாஸ்து புருஷன் என்கிறோம். வாஸ்து ஒரு இடத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

வாஸ்து சாஸ்திரம் ஒரு மனித சாஸ்திரம். இது மனிதனை மையமாகக் கொண்டு மனிதர் பழக்க வழக்கங்கள், அவர்கள் வாழக்கூடிய இடங்களைக் கொண்டு கணிப்பது. மனித சாஸ்திரத்தை வீடு கட்டுவதற்கும், வீட்டில் குடியிருப்பதற்கும் பார்ப்பது சரியல்ல. வீட்டிற்கும் வீட்டின் அமைப்பிற்கும் பொருத்தமானது மனை விதி சாஸ்திரம்தான்.

வாசகர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரம் வேறு, மனை விதி சாஸ்திரம் வேறு.

மனிதப் பிறப்பில் அவருடைய பாவ புண்ணியங்களுக்கேற்ப அவர் எடுத்த கர்மா (பிறப்பு)வின் படி அந்த மனிதனின் வாழ்க்கை அமையும். இதுபற்றிக் குறிப்பிடுவதுதான் வாஸ்து சாஸ்திரம். இதற்குத் துணையாக இருப்பது மனை விதி சாஸ்திரம்.

வாஸ்து புருஷ லட்சணம் என்பது மனிதனின் பாவ புண்ணியத்திற்கேற்ப கோள்களால் நிர்ணயிக்கப்படுகிறது. இதை வாஸ்து நிர்ணயிப்பதில்லை. இணை விதி நிர்ணயிப்பது இல்லை.

கோள்கள் வாஸ்துவை இயக்குகின்றன. கோள்கள் மனையை அமைத்துத் தருகின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என பிறப்பின் போதே கோள்கள் நிர்ணயித்து விடுகின்றன. மனிதன் இதை விடுத்து வேற்றிடங்களில் வாழ முடியாது. வீட்டை மாற்றினால் கோள்கள் நிலை மாறுமா? ஏற்கனவே கோள்களின் நிலை நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதை மாற்றி விடலாம் என நினைப்பது மனிதனின் அறியாமை ஆகும்.


6 அடி- நன்மை ஏற்படும்
7 அடி- தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 அடி - முன்னேற்றங்கள், தெய்வ அருள் உண்டு.
9 அடி- துன்பம் துயரம்
10 அடி - யோகம் உண்டு.
11 அடி - செல்வ நிலை உயரும்.
12 அடி- துயரம் புத்திரசோகம்
13 அடி- துன்பம் நோயினால் அவதி
14 அடி- பொருள் இழப்பு, கவலை
15 அடி- துன்பம் துயரம்
16 அடி - செல்வாக்கு உண்டாகும்
17 அடி - நிறைந்த வருமானம்
18 அடி- வீடு அழியும்
19 அடி- வறுமை உண்டு
20 அடி - சிறப்பான லாபம்.
21 அடி - பொன்னும பொருளும் சேரும்.
22 அடி - மனதில் தைரிய உணர்வு
23 அடி- கெடுதி ஏற்படும்
24 அடி- வரவும் செலவும் சமம்
25 அடி- மனைவிக்கு கண்டம்
26 அடி - பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி - பதவிகள் தேடிவரும்.
28 அடி - எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி - மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி - சிறப்பாக இருக்கும்.
31 அடி - காரியசித்தி உண்டு.
32 அடி - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 அடி- வாழ்க்கையின் நிலை உயரும்
34 அடி- இடமாற்றம் ஏற்படும்
35 அடி- திருமகள் அருள்
36 அடி- சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 அடி- செய்தொழில் முன்னேற்றம்
38 அடி- வறுமை, துன்பம்
39 அடி- நல்ல வாழ்வு
40 அடி- விரோதிகள் வலிமை பெறுவர்
41 அடி- செல்வம் பெருகும்
42 அடி- அஷ்டலட்சுமி வாசம்
43 அடி- நன்மை ஏற்படாது
44 அடி- பெரிய இழப்பு உண்டாகும்
45 அடி- மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 அடி- வறுமை, நோய்
47 அடி- பொருள் இழப்பு
48 அடி- தீயினால் ஆபத்து
49 அடி- தவறுகள், இழப்புகள்
50 அடி- நன்மை உண்டாகாது
51 அடி- வீண் தொல்லைகள்
52 அடி- பொருள் அபிவிருத்தி
53 அடி- பெண்களால் பொருள் நட்டம்
54 அடி- அரசின் சீற்றம்
55 அடி- உறவினர் விரோதம்
56 அடி- குடும்ப விருத்தி
57 அடி- சந்ததி நாசம்
58 அடி- கண்டம் ஏற்படும்
59 அடி- கவலைகள் வறுமை
60 அடி- செய்தொழில் அபிவிருத்தி

வீட்டின் பகுதிகள்

கிழக்கு - குடிநீர் ஆதாரம்
தென் கிழக்கு .. சமையலறை
தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்து அமைக்கவும்.
வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

அலுவலக அறை வடமேற்கு திசை, புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை, உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள், பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை, சேமிப்பு அறை வடக்கு திசை, கழிவறை வட மேற்கு திசை.

எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.

கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.


ஈசான மூலை

ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும்.ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது. அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை வைக்கக்கூடாது. வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது, தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.

பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது மன அழுத்தத்தை தரும்.

அக்னி மூலை

அக்னி மூலை- தென்கிழக்கு மூலை. இங்கு சமையற்கூடம் இருக்க வேண்டும். பெண்களின் மன, உடல் நலத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மூலை ஆதலால் பழுதில்லாமல் அமைக்க வேண்டும். வீட்டின் பிரதான அக்னி மூலையில் சமையற்கூடம் அமைக்க இயலா விடினும் சமையற்கட்டின் அக்னி மூலையில் அடுப்பு (மண்ணெண்ணை,எரிவாயு,போன்றவை) இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். விதிவிலக்காக வாயு (வடமேற்கு) மூலையில் சமையற்கூடமும், அடுப்பும் அமைக்கலாம். அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிப்பறை, குளியலறை, இருக்கக்கூடாது. வீட்டின் பிரதான அக்னி மூலையில் கிணறு,கழிப்பறை, குளியலறை, கழிவுத் தொட்டி,(செப்டிக்டேங்க்) துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம்.

சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசையில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.

குபேர (வடக்கு)மூலை செல்வம் தங்கவும், பணவிருத்திக்கும் குபேர (வடக்கு)மூலை, நிருதி (தென்மேற்கு) மூலை
நிருதி (தென்மேற்கு) மூலையில் பணப்பெட்டி, நிலைப்பேழை வைக்கவும், சுவற்றில் பணப்பெட்டியை பதிப்பதாயின் நிருதியில் பதிக்கவும்.
.வீதியைப்பார்த்துத் தான் வாயிற்படியை அமைக்க முடியும், எனவே, தெற்கு, மேற்கு வாயிற்படிகள் தவிர்க்க முடியாதவைகளே, தெற்கு, மேற்கு திசையில் தலைவாயில்
அமைக்கும்படி நேரினும், ஈசானமூலை, அக்னிமூலையை சரியாக அமைத்துக் கொண்டால் போதும். தெற்கு, மேற்கு தலைவாயில் அமைந்த வீட்டின் கொல்லைப்புறமாக ஈசான, அக்னி மூலைகள் அமைவதை கவனிக்கவும்.

வாயு மூலை 

கழிப்பறை,குளியல் அறைகளை வடமேற்கு (வாயு) மூலையில் அமைக்கவும். சில இடங்களில் விதிவிலக்காக இந்திரன் (கிழக்கில்) மூலையில் கழிப்பறை அமைக்கலாம்.

குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை வடமேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.

நிருதியில் (தென்மேற்கில்) படுக்கையறையைில் அட்டாச்டு பாத்ரூம் வேண்டின் அந்த அறையின் தென்மேற்கு மூலையில் அமைக்கவும், முதன்மை படுக்கை அறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப் பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது. படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் .தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.

மையப் பகுதிவீட்டின் மையப் பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. இங்கே தான் நம் வீடு மூச்சு விடுகிறது. அது திறந்த வெளியாகவும், குப்பையாக வும் இருக்கக் கூடாது. இங்கே சுவரிருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக்கூடும். அதனால் ஒரு ஜீரோ வாட்ஸ் நீல பல்பை 24 மணி நேரமும் எரிய விடுவது நல்லது.

வீட்டில் எந்த திசையிலாவது வெட்டு அல்லது வளைவுகள் இருந் தால், அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.

மிகவும் அடர்த்தியான வண்ணங்களை கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூச கூடாது. முக்கியமாக சிவப்பு மற்றும் செந்நீலம் நிறங்கள். இது நோயை உண்டாகும் சக்தியை தூண்டும். போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்கு தடை போடும்.

வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.

வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.

வாயிற்படி, அறைகளின் அளவு

வாயிற்படி. வீட்டின் தலைவாயிற்படி முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சமாகும், பொதுவாக கிழக்கு,வடக்கு திசைகளில் தலைவாசல் இருப்பின் நலம், தெற்கு, மேற்குவாசல் படி இருப்பின். கொல்லைப்புறம் வடகிழக்கு, தென்கிழக்காக அமைந்து ஈசாநமூலையும், அக்னி மூலையும் பலம் இழக்க பழுதுபட நேரிடும்,

மனையடிப்படி, அறைகளின் அறைகளின் உட்கூடுஅளவுகளில் 7,9,12,13,14,15, கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும். முழுமையான அளவுகளில் உட்கூடு அமைவுது அவசியம், இடம் வீணாகக்கூடது என8.5,7.5,10.5 போன்ற அளவுகளைத்தவிரக்கவும். மாடிப்படிகளுக்கு அடியில் இடத்தைப்பொருத்து சாமான் வைப்பறை வைக்கலாம். மாடிப்படிக்கட்டுக்கள் வடக்கு, வடகிழக்கு,தென்கிழக்கு, கிழக்கு பக்கங்களை அடைக்கும் படிக்கட்டக்கூடாது. தெர்கிலிருந்து வடக்காகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் செல்லும்படி மாடிப்படிக்கட்டுக்களை அமைத்தல் நலம்.


தொழில் வாஸ்து

தொழில் நிறுவனங்கள், கடைக்களுக்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா என்ற கேள்வி இயல்பானது,தொழிற்சாலைகள் முதல் ஒரு சிறிய கடை வரை வாஸ்துபடி அமையின் அதன் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அனுபவப்பூர்வமாக கண்டுஉள்ளோம், அலுவலகத்தில் எந்த தைசையில் இருந்து வரும் வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டும், நாம் எந்த திசையில் அமர வேண்டும் என்று பார்ப்போம்.

வாடிக்கையாளர்கள் உள்நூழையும் போது அவர்களுக்கு முதுகைக்காட்டியபடி அமரக்கூடாது, அடுத்து அவர்கள் வடக்கில் அமர்ந்து நாம் தெற்கே அமரக்கூடாது,

தென்மேற்கில் அமர்ந்து கிழக்கு நோக்கி இருக்கலாம், வடக்கில் இருந்து கிழக்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை, தெற்கிலிருந்து வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கலாம். நமக்குப்பின் நம் முன்னோர்களின் படங்களை வைக்கலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு தாராளமாக வைக்கலாம். நமக்குப்பின்னே அழகிய இயற்கைக்காட்சிகள், மலைகள், ஓடும் குதிரை படங்களை வைக்கலாம்,நம் அலவலகத்தின் வடகிழக்கு முலையில் தண்ணீர்விட்டு அதில் மலர்களைப்போட்டு வைக்கலாம், மணிக்கொடி போன்ற நிழலில் வளரும் செடிகளை வைக்கலாம். பணப்பெட்டி அல்லது பீரோ தென்மேற்கில் இருப்பது மிக நல்லது. கல்லாப்பெட்டியை கைக்குலாவகமாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பீரோவைத்து பயன் படுத்தலாம், தெந்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கில் பீரோ வைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

வாஸ்து குறைகளைப்போக்கும் சிறுபரிகாரங்கள்.

ஈசான மூலையில் ( வடகிழக்கு) சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு வைத்தல்.
வண்ண மீன்தொட்டி வைத்தல். பசுமையான செடிகளை வளர்த்தல் (மணிக்கொடி போன்றவை)
மஞ்சள் குழைத்து வீட்டுக்கதவு சன்னலில் சுவஸ்திக், ஓம், சூலம் போன்ற குறிகளை இடல்,
மாவிலைத்தோரணம் கட்டல். அவ்வப்போது பஞ்சகவ்யத்தை (பசுவின்பால், தயிர், நெய், சாணம் ,கோமயம் ஆகியவற்றின் கலவை) வீட்டைச்சுற்றியும், உள்ளேயும் தெளித்து விடல்.
இனிமையாக ஒலிக்கும் "வின்ட்செம்"களை வீட்டினுள் கட்டிவிடுதல். பிரமிடுகளை வைத்தல். பகுவாகண்ணாடியை வீட்டின் தலைவாயிற்படியின் மேல் மாட்டிவிடல். தகுந்த மூலைகளில் தக்க பொருட்களை மட்டும் வைத்தல்

நவக்கிரகங்களும் திசைகளும்

சுக்கிரனின் ஒளியானது கிழக்கே இந்திர மூலையிலும்,
செவ்வாயின் ஒளியானது தென் கிழக்கே அக்னி மூலையிலும்,
கேதுவின் ஒளியானது தெற்கே ஏமன் மூலையிலும்,
புதனின் ஒளியானது தென் மேற்கே நிருதி மூலையிலும்,
சந்திரனின் ஒளியினாது மேற்கே வருண மூலையிலும்,
ராகுவின் ஒளியானது வடமேற்கே வாயு மூலையிலும்,
குருவின் ஒளியானது வடக்கே குபேர மூலையிலும்,
சனியின் ஒளியானது வடகிழக்கே ஈசான்ய மூலையிலும் பதிகின்றன.
சூரியனின் ஒளியாகப்பட்டது, அண்டம் முழுவதும் பரவியிருக்கககூடியது. இந்த கிரகங்களின் ஒளியை தான் நாம் கிரக பார்வை ஏன கூறுகின்றோம்.

வாஸ்து வீடு நுழைவாயில் பூஜையறை கதவு நுழைவாயில் கழிவறை எங்கு இருக்க வேண்டும்?

முற்காலத்திலிருந்து நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மனையடி சாஸ்திரமே , ‘ வாஸ்து ‘ என்பதாகும். இது பஞ்ச பூதங்களையும், திசைகளையும் அடிப்படையாகக்கொண்டது. இந்த வாஸ்து சாஸ்திரத்தை முறையாகக் கடைப் பிடித்து கட்டப்படும் வீட்டிலோ அல்லது அந்த மனையிலோ வசிப்பவர்கள், எல்லா வளங்களையும் பெற்று வாழ்வார்கள். இப்போது ஒரு வீட்டுக்கு கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து விதிமுறைகளைப் பற்றிக் காணலாம்.

வீட்டின் கதவுகளும் நுழைவாயிலும்:

1. வீட்டின் பிரதான நுழைவாசலில் அமையும் மெயின் கதவு, வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளை நோக்கி அமைந்திருக்கவேண்டும். இந்த மெயின் வாசல் நுழைவாயில் கதவு, வீட்டின் ஏனைய கதவுகளைவிட அளவில் சற்றுப் பெரியதாக இருக்கவேண்டும். வீட்டின் பிரதான நுழைவாயில் வீட்டின் பின்பக்க வாசலை நோக்கியபடி எதிரும் புதிருமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், வீட்டின் ‘ சக்தி ‘ (எனெர்ஜி )யானது பின்வாசல் வழியாக வெளியேறிவிடும். வீட்டுக்குள் சுழன்று நற்பயன் விளைவிக்கக்கூடிய நல்ல சக்தி வெளியேறி விடுவது வீட்டுக்கு நல்லதல்ல. எனவே பிரதான வாசல் கதவுக்கு நேரெதிராக பின் வாசல் கதவு இருக்கும்படி அமைக்கக்கூடாது.

2. உங்கள் வீட்டு பிரதான வாசலுக்கு எதிராக மரமோ, கிணறோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அதுவும் உங்கள் வீட்டுக்குள் ‘ சக்தி ‘ ( எனெர்ஜி ) யை நுழைய விடாமல், தடுக்கும்.

3. வாசல் கதவுகள் உள்புறமாக திறப்பதுபோல் அமையவேண்டும். வெளிப்பக்கமாக திறக்கும்படி அமைக்கக்கூடாது.

4. கதவின் அகலம் கதவின் உயரத்தில் பாதியளவு இருக்கவேண்டும்.

5. பிரதான வாயில் கதவு நல்ல , உயர்வகை மரத்தாலானதாக இருக்கவேண்டும். அதோடு, மற்ற கதவுகளை விட இந்த மெயின் டோர் சற்றுப் பெரியதாகவும் இருக்கவேண்டும். நல்லவேலைப்பாட்டுடனும், நல்ல டிஸைனுடனும் இருக்கவேண்டும்.
மிக அழகாகப் பெயிண்டிங் செய்யப்பட்டு மற்ற கதவுகளை விட பளிச்சென்று இருக்கவேண்டும்.

6. . வாசல் கதவு, மற்றுமுள்ள கதவுகள், கன்னல் கதவுகள் முதலியவற்றைத் திறக்கும்போது, சத்தம் எழுப்பக்கூடாது. குறிப்பாக பிரதான வாயில் கதவில் இந்த சத்தம் அறவே வரக்கூடாது. அப்படி நேருமாயின், வீட்டில் வசிப்பவர்களுக்கு கேடு விளையும்.

ஜன்னல்கள்:

1. எல்லா ஜன்னல்களும், வெளிப்புறச் சுவரில் அமைந்திருக்கவேண்டும். ரூம்களுக்குள் ஜன்னல் கதவுகள் திறக்கும்படி இருக்கக்கூடாது.

2. பெரிய ஜன்னல்களை வடகிழக்கு திசையிலும், சிறிய ஜன்னல்களை தென்மேற்கிலும் வரும்படி அமைக்கவேண்டும்.

3. மொத்த ஜன்னல்களைக் கூட்டினால், அது இரட்டைப் படையில் வரவேண்டும்.

4. ஜன்னல்களிலும் கதவுகளிலும் அமைக்கப்பட்டிருக்கும் சன்ஷேடுகள் வடகிழக்கு திசையை நோக்கியபடி இருக்கவேண்டும். அப்படி அமைத்தால்தான் மழைத் தண்ணீர் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசையை நோக்கி ஊடுவதற்கு ஏதுவாகும். இதுவே விட்டுக்கு நற்பலன்களை நல்கும்.

5. வடக்கிலும், கிழக்கிலும் அதிக ஜன்னல்கள் வரும்படி அமைக்கவேண்டும்.

படுக்கையறை:

நாள் முழுதும் உழைத்த மனிதன் இரவில் ஓய்வெடுத்துக்கொள்ளவும், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் நாடுவது படுக்கையறையைத்தான். எனவே படுக்கையறையை சரியாக வாஸ்து முறைப்படி அமைத்துக்கொள்ளவேண்டும்.

1. படுக்கை அறையின் தென்மேற்கில் இருக்கவேண்டும். ஆனால், ஒரேயடியாக தென்மேற்கு மூலைக்குப் போய்விடக்கூடாது.

2. படுக்கும்போது முகம் தெற்கு நோக்கி இருக்கும்படி உறங்கவேண்டும். அது நல்ல உறக்கத்திற்கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். ஒருபோதும், முகம் வடக்கு நோக்கி இருக்கும்படி படுத்துறங்கவேண்டாம். ஏனென்றால் இறந்தவரின் உடலகளை வடக்கு நோக்கி வைப்பதுண்டு. வடக்கு நோக்கி உறங்குவதால், மனநலம் பாதிப்படைவதோடு, ஆயுளும் குறையும்.

3. படுக்கையறையில் வெளிச்சம் மிதமாகவும், கண்களை உறுத்தாமலும் இருக்கவேண்டும். எனவே விளக்குகளையோ, டேபிள் லேம்புகளையோ அமைக்கும்போது, அதிலிருந்து வரும் வெளிச்சமோ, நிழலோ மனதிற்கு இதமளிப்பதாக இருக்கவேண்டும்.

4. மாஸ்டர் பெட் ரூம், வீட்டின் தென்மேற்கு மூலையில் இருக்கும்படி அமைக்கவேண்டும்.

5. படுக்கையை உத்தரத்துக்குக் (பீம்) கீழ் வரும்படி போடக்கூடாது. ஒருவர் உத்திரத்துக்குக் கீழ் வரும்படி படுத்து உறங்கினால், ஆரோக்கியக்கேடு உண்டாகும்.

.6. படுக்கையறையில் கடவுள் சிலைகளை வைக்கக்கூடாது. இயற்கைக்காட்சிகள், மலர்கள், குழந்தைகள், மற்றும், கோவிலகள் முதலான பெயிண்டிங்குகளை மாட்டி வைக்கலாம். வடகிழக்கு மூலையில் கட்டாயமாக, எடை அதிகமுள்ள சிலைகளை வைக்கக்கூடாது.

7. படுக்கையறையில் மீன் தொட்டியை வைக்கக்கூடாது.

சமையலறை:

நல்லசமையறையை அமைக்கவேண்டுமானால், அதை தென்கிழக்கில் இருக்கும்படி அமைக்கவேண்டும். ஏனென்றால், தென்கிழக்கைத்தான் அக்னி மூலை என்று கூறுவார்கள். அங்குதான் அக்னிதேவன் வாழ்வதாக ஐதீகம். எனவே சமையலறையை தென்கிழக்கில் அமைப்பது சாலச் சிறந்தது.

1. ஒருபோதும் சமையலறையை வடகிழக்கில் அமைக்க வேண்டாம். இது முடும்ப அமைதியையும், செல்வச் செழிப்பையும் அழித்துவிடும். குடும்பதினரிடையே நிலவிய நேசமும் காணாமல் போகும்.

2, அதுபோல சமையலறை தென்மேற்கில் இருக்கும்படியும் அமையக்கூடாது. அப்படி அமைந்தால், அது குடும்பத் தலைவரைப் பாதிக்கும்.

3.. சமையலறையிலிருந்து வரும் கழிவு நீர்க் குழாய்கள், வடக்கு, கிழக்கு திசைகளில் விழும்படி அமைக்கவேண்டும்.

4. டாய்லெட்டோ, பூஜையறையோ சமையலற்க்குப் பக்கத்தில் வரும்படி அமைக்ககூடாது.

5. சமைக்கும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்தபடி சமைக்கவேண்டும்.

பூஜையறை:

1. வீட்டின் பூஜையறை வீட்டின் வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கவேண்டும். கோவிலாக அமைக்கவேண்டுமானாலும் வட கிழக்கு திசையில் அமைக்கவேண்டும்.

2. பூஜையறையை படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.

3. பூஜையறையை பேஸ்மெண்டில் அமைக்கக்கூடாது.

4. பூஜையறையை பூஜைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஸ்டோர் ரூம் போல வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

5. பூஜையறைக்குப் பக்கத்திலோ அல்லது மேலோ , கீழோ டாய்லெட்டுகள் இருக்கக்கூடாது.

6. இறந்தவர்களின் ஃபோட்டோக்களை பூஜையறையில் வைக்கவேண்டாம்.

7. ஸ்வாமி மேற்குப் பார்த்தபடியும், வணங்கி, பூஜிப்பவரின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படி சிறப்பானது.

8. அதிக எடையிலான சிலைகளை வைப்பதைத் தவிர்க்கவும். அதற்குப் பதிலாக தெய்வங்களின் படங்களை வைத்துப் பூஜிக்கலாம்.

9. பழைய புராதனக் கோவில்களிலிருந்து அபகரித்து வரப்பட்ட சிலைகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைக்கவேண்டாம்.

10, பூஜையறைச் சுவரை ஒட்டினாற்போல், சுவாமி சிலைகளை வைக்கக்கூடாது. சுவற்றில் மாடமிட்டும் வைக்கக்கூடாது. சுவற்றை விட்டு சற்றுத் தள்ளி வைக்கவேண்டும்.

கழிவறைகள்:

1. வடமேற்கிலும், வடக்கிலும் குளியலறை மற்றும் அட்டேச்சுடு டாய்லெட்டுகள் அமைக்கலாம்.

2. டாய்லெட்டில் கம்மோடை தெற்கு- வடக்காக அமைக்கவேண்டும்.

3. ஒருபோதும் டாய்லெட்டை வடாகிழக்கில் அமைக்கவேண்டாம். ஏனென்றால் வடகிழக்கு செல்வம் வளரும் இடமாகும்.

4. கழிவறைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை பதிக்கவேண்டுமானால், அதனை வடக்கு மற்றும் கிழ்க்கு சுவற்றில் இருக்கும்படி அமைக்கலாம்.

5. பாத்ரூம் டைல்ஸ் இள வண்ணங்களில் இருக்கட்டும். கருப்பு கலரைத் தவிர்க்கவும்.

6. குளியலறை, டாய்லெட்டின் தரை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஸ்லோப்பாக இருக்கவேண்டும்.

வாஸ்து சாஸ்திரம் பார்ப்பது சரியா?

இன்று புதிய வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, வாடகை வீட்டுக்குப் போவதாக இருந்தாலும் சரி, வாஸ்து பார்க்கும் வழக்கம் வந்து விட்டது. உண்மையில் இப்படி வாஸ்து பார்ப்பது சரியா? வாஸ்துப்படி வீடு இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடுமா?

சந்திரன் - உடல், சூரியன் - ஆன்மா. இவர்கள் தெற்கு நோக்கி இருந்து மனிதர்களை இயக்குகிறார்கள்.

வடக்கு - சுபிட்சம், குபேரன் - தெற்கு என்பது மனிதர்கள். மனிதர்கள் தெற்கே தலை வைத்து வடக்கே கால் நீட்டிப் படுத்தால் சுபிட்சத்திற்குக் குறை இருக்காது. காரணம் என்ன? அங்கே நேர் எதிரே குபேரன் சுபராக இருந்து சுபதன்மை பெறுகிறார்கள்.

தெற்கு - எமதர்மராஜன்

உடல் - சந்திரன்

ஆன்மா - சூரியன்

இதில் எடுத்துச் செல்லும் ஆற்றல் எமதர்ம ராஜனுக்கு உண்டு. அதாவது தர்மத்தை நிலை நாட்டும் ஆற்றல் எமதர்மனுக்கே இருக்கிறது. மனிதர்களின் உள்ளே ஆன்மா புகுந்து கொண்டு எமதர்மரஜனை அதிகாரியாகக் கொண்டு விளையாடுகிறது.

வடக்கு குபேரன் (சனி பகவான் வீடு). இங்கு ஏன் சனியைக் கொடுத்தார்கள்?. நீ குபேரனாக வேண்டுமானால் சனியைப் போல் உழைக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் முன்னேற்றமடைய சனி பகவான் போல் உழைக்க, கர்மா நன்றாக இருக்க வேண்டும்.

கிழக்கு= இந்திரன், மேற்கு = வருணன்

அதாவது மனிதர்களின் இருபுறமும் இந்திரன், வருணன். எதிரே குபேரன். நமக்கு மேலே அக்னி, நமக்குக் கீழே நிருதி

மேல் அக்கினி. கீழ் நிருதி.- நிருதி என்பது இருண்ட சூழ்நிலை (கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல்). இந்த இடத்தில் ஆண்-பெண் உடல் உறவு கொள்ளக் கூடாது. இங்கு அக்கினியில் உடல் உறவு கொள்ளக் கூடாது.

தென்மேற்கு நிருதி - இங்கு கர்பாதானம் கூடாது. இருண்ட சூழ்நிலை. பிறக்கும் குழந்தைகளுக்குத் துன்பம் நேரிடும்.

1. கன்னி மூலை - இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். வீட்டின் கன்னி மூலையில் அடைப்பு வேண்டும். திறப்பு கூடாது. தப்பு மற்றும் துவேசம் ஏற்படும்.

2. நிருதி (மீனம்) - அசுத்தம் கூடாது. கழிவு சேமிப்புக் குழி (செப்டிக் டேங்க்) அமைக்கக் கூடாது. இங்கு வேம்பு மரம் வைத்தால் குடும்பத்தில் குற்றங்கள் எதுவும் நிகழாது.

3. வாயு (தனுசு) - இப்பகுதி திறந்து இருக்க வேண்டும். காற்று வந்து போக வேண்டும். கழிவுகளை வைக்க வேண்டும். தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

4. வடக்கு (மகரம்- கும்பம்) - வடக்கும், கிழக்கும் எப்பொழுதும் சுமை இல்லாமல் இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இப்பகுதியில் இருந்தால் ஏதோ மன வருத்தம் இருந்து கொண்டே இருக்கும்.

5. அக்னி மூலை (மிதுனம்) - வாயுவிலிருந்து அக்னி மூலைக்கு காற்று போக வேண்டும். அதே போல கன்னியில் இருந்து ஈசானம் போக வேண்டும். இந்த அக்னி வாயு மூலை இணையுமிடத்தில் படுக்கை அறை இருக்க வேண்டும்.

6. வடமேற்கு (வாயு) [தனுசு] முதல் தென்மேற்கு (அக்னி) [மிதுனம்] - இங்கு காற்று தள்ள வேண்டும். காற்றின் வேகம் கர்ப்பாதானதிற்குத் தள்ள வேண்டும் விந்துவை.தவசு என்ற வில் மைதூனம் (மிதுனம்) என்ற ராசிக்குக் கடக்கிறது. தனுசு மன்மதன் அதில்தான் குருவைக் கொடுத்து இருக்கிறார்கள். தனுசு (குரு) முதல் மிதுனம் (புதன்) ஆகிறது. இது கற்பனையல்ல. பொதுவாக தனுசுவிலேதான் பூலோக நட்சத்திரம் மூலம் இருக்கிறது. தனுசுவில் 3 டிகிரி அதாவது பாலியை வீதிகளுக்கான புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. மூலம் இல்லையென்றால் ஒன்றுமில்லை. இது தனுசு ராசியின் அமைப்பு.

அக்னியில் அடுப்பு

அக்னியில் ஏன் அடுப்பு வைக்க வேண்டும் என்கிறோம்?

இந்திரன் எமதர்மராஜன் இரண்டுக்கும் நடுவில் அக்னி. ஏன்? இந்திரனுக்கு நேர் சமநிலையுடையவர்களுக்கு வருணன். வருணன் அனைத்து இடத்திலும் இவருடைய பங்களிப்பு தேவையாக உள்ளது. இந்த நிலைகள் எல்லாம் நிர்ந்தரமானது. இவைகளில் எக்காலத்திலும் மாறுதல்களில்லை.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் ஈசானத்தில் தலை வைத்து நிருதியில் கால் நீட்டி அக்னியில் இடது கையை வைத்து வாயுவில் வலது கையை வைத்துப் படுத்து இருக்கிறார்.

வாஸ்து புருஷன் தலை வைக்கும் இடத்தில் நாம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிறார்கள். ஏன்? ஈசானியம் என்பது முக்தியும் மோட்சமும் தரக்கூடிய இடம். அங்கு உன்னுடைய ஐம்புலன்களையும் அடகு வைக்க வேண்டும். எல்லாவிதமான முக்தி மோட்சத்திற்கும் இறை சிந்தனை வேண்டும்.

கன்னியில் கால் ஏன்? ஞானிகளையும், பெரியவர்களையும் கன்னியில் நிறுத்திப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

வலது கை வாயு - அக்னி வாயு

இடது கை அக்னி - வாயு அக்னி

இதனால்தான் இடது கை பலம் குறைகிறது. வலது கை (வாயு) காற்று பலம் அதிகம்.

எப்பொழுதும், எந்தச் சூழ்நிலையிலும் நாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்றால் வாயுவை வணங்க வேண்டும். அருனள் தன்மை வாயுவுக்கு மட்டுமே உண்டு.

சிரசு - ஈசான்யம்

வலது கை - வாயு மூலை

இடது கை - அக்னி மூலை




இந்தத் தகவல்கள் விக்கிரமாதித்தன் வாஸ்து சாஸ்திரச் சுவடியில் உள்ளது. இந்த சாஸ்திரப்படிதான் விக்கிரமாதித்த மன்னைன் தன் சிம்மாசனத்திற்குப் படிகளை அமைத்தான் என்று சொல்வதுண்டு.

No comments:

Post a Comment