Tuesday, 23 September 2014

குழந்தையை தத்து எடுப்பவர்கள் கவனிக்க வேண்டியஜோதிட விதிகள்

குழந்தையை தத்து எடுப்பவர்கள் கவனிக்க வேண்டியஜோதிட விதிகள். .
குழந்தைச் செல்வம் இன்றி தவிப்பவர்கள், நரகத்திலிருந்து தான் வாழ்க்கையை நகர்த்தி வருவார்கள். இயல்பாய் கிடைக்கவேண்டிய இன்பத்தின் உச்சகட்டச் செல்வத்தை, வம்பாய் மருத்துவ சோதனைகளின் மூலம் பெறுவது..... வேதனைகளிலும் ஒரு சுகம் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்த வேதனைகளின் சுகம் எல்லோருக்கும் கிடைத்துவிடூகிறதா? என்றால்...... அதுவும் கேள்விக்குறி தான். எல்லாம் விதியன்றி வேறில்லை.
தானாய் கிடைக்கவேண்டியதும் கிடைக்காமல்...... மருத்துவத்தாலும் கிடைக்காமல்...... திகைத்து நிற்பவர்களின் பார்வை, கைவிடப் பட்ட குழந்தைகளின் மேல்தான் திரும்பும். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாய் தாங்கள் எடுத்து வளர்க்க முயலும்போது, அதற்கும் ஆயிரத்தேட்டு தடைகள். அதையும் கடந்து தத்தெடுப்பவர்களுக்குத்தான் இந்த ஜோதிடப் பதிவு.
தத்து எடுக்கும் காலம் உத்ராயணமாக இருக்கவேண்டும். உத்திராயணம் என்பது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களாகும். தத்து எடுப்பவரும் தத்துப் பையனும் ஒரே ஜாதியாக இருக்கவேண்டும். இருவருக்கும் திருமணப் பொருத்தம் பார்ப்பது போன்று பொருத்தங்கள் பார்த்து, உத்தம பொருத்தம் வருபவனாக இருக்கவேண்டும். த்த்து எடுக்கும் சடங்கானது அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் நடத்தப்பட வேண்டும். அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு 1,5 மிடங்களில் பாவக்கிரகங்கள் இருக்க்க் கூடாது. ஆனால், இலக்கினத்தை நல்லகிரகங்கள் பார்க்கவேண்டும். அந்த நேரம் தாரபலமும், சந்திர பலமும் கூடிய நாளாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட நாளில் தத்து எடுத்து வளர்க்கும் பிள்ளை, உங்களின் பிள்ளையாக, உங்களின் பரம்பரையில் இணையும் பிள்ளையாக இருப்பான்

No comments:

Post a Comment