Monday 4 February 2019

யோகம்

யோகம்
யோகம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரம் பிறவிப்பலனோடு பயனுள்ளாவைகளை ஆன்மாவோடு இணைப்பதை யோகம் என்று குறிப்பிடுகின்றனர். இதில் உயர்ந்த வாழ்க்கையை ராஜயோகம் என்கின்றனர். ஒன்றும் இல்லாதவனை தரித்திர யோகம் என்கின்றனர். இரண்டுமே யோகம் தான். இதற்க்கும் கர்ம வினைக்கும் சம்பந்தம் உண்டு.
யோகங்கள் பலவகையாக இருந்தாலும் ஆறு வகையாக பிரிக்கலாம்.
1) இராஜயோகம்
2) நாபசயோகம்
3) பஞ்சமகாபுருஷயோகம்
4) சந்திரயோகம்
5) சூரியயோகம்
6) அவயோகம்
இராஜயோகம்: இது மேலும் ஆறு பிரிவுகளை கொண்டது.
1) தனயோகம்
2) முத்திரிகாயோகம்
3) இராஜயோகம்
4) மகாராஜயோகம்
5) சக்கரவர்த்தியோகம்
6) சிம்மாசனயோகம் என்பன.
1) தனயோகம்: செல்வசெழிப்பை கொடுத்து வளமான வாழ்க்கைக்கு வழிவகுப்பது
2) முத்திரிகாயோகம்: முத்திரிகா என்றால் சின்னம் என்று பொருள். அரசு சின்னம், விருது ஆகியவற்றோடு தொடர்புடைய பதவியை கொடுப்பது.
3) இராஜயோகம்: அரசு சார்ந்த பதவிகளை கொடுத்து சிறப்பிப்பது.
4) மகாராஜாயோகம்: அரசவம்சத்தில் பிறந்து செங்கோல் செலுத்துவது. இஃது இன்றைய முதன்மையான பதவிகளை குறிப்பது.
5) சக்கரவர்த்தியோகம்: மன்னர்களூக்கெல்லாம் மன்னர் விளாங்குவது. இஃது நாட்டின் உயர்பதவியை கொடுப்பது.
6) சிம்மாசனயோகம்: சிம்மாசனத்துக்கு சரியான பட்டாபிசேகத்தை கொடுப்பது.
2) நாபசயோகம் நான்கு பிரிவுகளை கொண்டது.
1) ஆகிருத் யோகம்
2) சுங்கியா யோகம்
3) ஆசிரியா யோகம்
4) தன யோகம்
மேலும் இவை 32 வகையாக பிரிகின்றன். நிற்க.
3) பஞ்சமகா புருஷ யோகம், இஃது பஞ்ச பூதங்களுக்குறிய கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி இவர்கள் கொடுக்கும் யோகம்.
1) ஹம்ச யோகம்: இது குருபகவான் மூலம் கிடைக்கும் யோகம்
2) ருசக யோகம்: இது செவ்வாய் பகவானால் கிடைக்கும் யோகம்.
3) பத்ர யோகம்:இது புதன் பகவானால் கிடைக்கும் யோகம்.
4) மாளவியா யோகம்: இது சுக்கிர பகவானால் கிடைப்பது.
5) சச யோகம்: இது சனி பகவானால் கொடுக்கப்படக்கூடியது.
1) ஹம்ஸ யோகம்: லக்னம் அல்லது சந்திர லக்கனத்துக்கு 1,4,7,10 எனும் கேந்திரங்களீல் குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பது. அரசு விருதுகள் பதவிகள் ஆலய மரியாதை, நிதிகாப்பீடு, டிரஸ்டு, மற்றும் அதிகாரமான பதவிகளை கொடுத்து சிறப்பிக்க கூடியது.
2) பத்ரயோகம்: புதன் ஆட்சி, உச்சம் பெற்று லக்னம் அல்லது சந்திரா லக்னத்திற்க்கு கேந்திரத்தில் நிற்பது பத்ரயோகம் எனப்படும். அறிதல், தெளீதல், புரிதல், சமயோசித்தம், சந்தர்ப்பசூழ்நிலையை தனதாக்கும் திறன், பேச்சு, எழுத்து, காலத்தை அறிந்து அதன் வழி நடப்பதும், நன்னிலை கொள்வதும் பத்ரயோகம்.
3) சசயோகம்: லக்கனம் அல்லது சந்திரனுக்கு கேந்திரங்களீல் சனி பகவான் கேந்திர ஸ்தானங்களீல் ஆட்சி உச்சம் பெற்றூ இருப்பது சசயோகம் எனப்படும். குடிசையில் பிறப்பினும் விடாமுயற்சியில் உழைத்து முன்னேறி மற்றாவர்களூக்கு முன் உதாரணமாய் விளங்குவது. கர்ம மேன்மையை அடைவது, அழியா புகழைத் தரும்.
4) ருசக யோகம்: லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது ருசகயோகம். இதற்க்கு பொதுவாக பூமியோகத்தை கொடுக்கும் இயல்பான நிலை உண்டு. எந்த துறையில் இருந்தாலும் அதில் தனித்தன்மையை கொடுக்கும் குணம் இதற்க்கு பொருந்தும்.
5) மாளவ்யாயோகம்: லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெறின் இவ் யோகம் சித்திக்கும். சுகபோகத்தின் உச்சம், சகல சொளபாக்கியத்தைக் கொடுக்கும் யோகம். இது சிலருக்கு இரண்டு களத்திரத்திற்க்கு வழி வகுத்துவிடும்.
சந்திரயோகம்:
மனதை ஆளும் சந்திரன் இப்பூமியில் பிறக்கின்ற காரணத்தை தாயின் தயவினால் கிடைக்கச்செய்கிறது. சந்திரனின் நிலையிலிருந்துதான் பிறப்பின் ரகசியத்தை அறியலாம். ஏன்? எதற்கு? என்பதை உணர்த்துவது சந்திரனே!!
சந்திரனுக்கு யோகங்கள் பல அதில் சில நாம் பார்ப்போம்.
1) கெஜகேசரி யோகம்: சந்திரனுக்கு கேந்திரத்தில் குருவின் நிலையை கெஜகேசரி யோகம் என்பர். இந்த யோகம் வீழ்ச்சியிலும், தாழ்ச்சியிலும் உயர்வை கொடுக்ககூடியது. கெஜம் என்றால் யாணை, கேசரி என்றால் சிங்கம், இவை இரண்டும் நீண்டகாலம் வாழும் திறன் கொண்டது. இந்த யோகம் நீண்ட ஆயுளையும், பல தலைமுறையை பார்த்து வீடுபேறு அடையும் நிலைக்குரியது.
2) குருசந்திர யோகம்: இஃது சந்திரனுக்கு திரிகோணாங்களில் குரு நிற்பினும், குருவும் சந்திரனும் சேர்ந்து இருந்தாலும், சந்திரனுக்கு 12ல் குரு இருப்பினும் இந்த யோகம் சித்திக்கும். இஃது ஆன்மீக விருத்தியையும் , செல்வ செழிப்பும், கல்வியில்லை என்றாலும் கற்றோர் சபையில் மதிப்பும், பெருமையும் கொடுக்கும் குணம் கொண்டது.
3) சந்திர மங்கள் யோகம்: சந்திரனும் செவ்வாயும் இணைவு என்பது இந்த யோகத்தை கொடுக்கும். இந்த யோகம் வளர்பிறை, தேய்பிறை, என்பதையும், சந்திரன் செவ்வாய் ஆரோகனம் அவரோகனம் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
சந்திரனைக் கொண்டுதான் நாடி சூத்திரங்கள் இயங்குகின்றன. யோக சூத்திரத்தில் 2300 யோகங்களூக்கும் தலையாய யோகம் முதல் யோகம் எது என்றால் சுனபா, அடுத்து அனபா, துருதரா, கேமதுரும.
1) சுனபாயோகம்: சந்திரனுக்கு இரண்டில் கிரகங்கள் நிற்பின் சுனபா யோகம் என்று பெயர். இதன் பொருள் பிறந்த ஆன்மா ஒன்றை நாடிச்செல்வதை குறிக்கும். உதாரணமாக சந்திரனுக்கு இரண்டில் குரு நிற்க்கிறார் என்று கொண்டால், உயர்வை நாடி உண்மையை நாடி செல்வத்தை நாடி இறையான்மையை நாடி, கல்வியை நாடி ஒழுக்கத்தை நாடி வாழ்க்கை பயணம் அமையும். இப்படி சுனபா யோகத்தை அறிய வேண்டும்.
2) அனபாயோகம்: சந்திரனுக்கு 12ல் கிரங்கங்கள் நிற்ப்பதை அனபா யோகம் என்பதாகும். இஃது நம்மை நாடி வரக்கூடிய யோகத்தை குறிக்கும். 12ல் குரு நல்ல மனிதர்கள், செல்வம், கல்வி, சிறப்புகள், மகான்களீன் பார்வை, இறையாண்மை தேடி வரும். இவ்வாரு ஒவ்வோரு கிரகங்களூக்கும் அறிந்து கொள்ள வேண்டும்.
3) துருதராயோகம்: சந்திரனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் இருப்பதை (இராகு, கேது நீங்களாக) துருதராயோகம் என்பர். ஒன்றை நாடிச்செல்வதும், ஒன்று நம்மை நாடி வருவதையும் குறிக்கும். இஃது வளர்ச்சிப்பாதைக்கு துணையாக இருக்கும்.
அதியோகம்: சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகங்கள் நிற்பது அதியோகம் என்று பெயர். இஃது திடீர் யோகத்தை கொடுக்க வல்லது.
சகடயோகம்: சந்திரனுக்கு 6,8,12 ல் குரு நிற்பது சகடயோகம் எனப்படும். இஃது வண்டிச் சக்கரம் போல் இன்பமும் துன்பமும் கலந்ததாக இருக்கும். இதில் சந்திரன்,அல்லது குரு நின்ற வீட்டதிபதி ஆட்சி, உச்சம் பெற்றால் நன்மை செய்யும் சகடயோகமாக விளங்கும். இஃது கலயாண சகட யோகமாகும். இதி அரசியல்வாதிகளூக்கு இருப்பின் அழியா புகழைக் கொடுக்கும்.
சூரிய யோகங்கள்:
நவக்கிரகத்தின் ராஜாவான சூரியனின் நிலையைக்கொண்டு பிறந்த ஆன்மாவின் சிறப்பைப் பற்றீ கூறிவிடலாம். சூரியன் இல்லையேல் இப்பிரபஞ்சம் இல்லை என்று கூறலாம்.
சூரியன் நிற்கின்ற நிலையைக் கொண்டு பாரியாயத்தையும், பரம்பரையையும் அறியமுடியும்.
1) தன் தகப்பனின் நிலையைப் பற்றி அறியவும்,
2) தன்னுடைய ஆன்ம பிரகாசத்தைப் பற்றி அறியவும்
3) தன் சந்ததியைப் பற்றியும் அறீயும் சூட்சுமம் கொண்டதாக விளங்கும்.
வாசியோகம்: சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் நிற்பது வாசியோகம்.
வேசியோகம்: சூரியனுக்கு 12ல் சுக்கிரன் நிற்பது வேசியோகம் ஆகும்.
மற்றா கிரகங்களையும் கொண்டு பலன் தீர்மானிக்கலாம்.
அமாவாசையோகம்; சூரியனும் சந்திரனும் ஒரே பாகயில் அல்லது ஒரே வீட்டில் நிற்பது இந்த யோகம் ஆகும். இவர்கள் ஆட்சி உச்சம் பெற்று அடையும் அமாவாசைக்கு அதிக பலம், பலன் உண்டு. ஆற்றல் உடையவர்களாய் உலகத்தை வலம் வருவார்கள்.

No comments:

Post a Comment