Saturday, 18 April 2020

கல்யாணம் தாமதம்

கல்யாணம் தாமதம் ஆகிறதா..முருகன் தன் இரு  மனைவிகளுடன் இருக்கும் பழைய கோயில்களில் வழிபடுங்க...பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் இருக்கும் கோயில்களுக்கும் போய்  வழிபடலாம் 

 அகத்தியர் சிவபெருமானை கல்யாண கோலத்தில் தரிசனம் செய்த பழமையான கோயில்கள் மாவட்டம் தோறும் இருக்கு அங்க போயிட்டு வாங்க...குறிப்பா ஈரோடு மாவட்டம்,கரூர் சாலையில் இருக்கும்  கொடுமுடி மகுடேஸ்வரர்..ரொம்ப விசேஷம்..காவிரி கரையில் தீர்த்த கிணறுகள் சூழ, மும்மூர்த்திகளும் அருளும் ஸ்தலம்..அப்பர்,சுந்தரர்,திருஞான சம்பந்தர் பாடிய ஸ்தலம்..பல மன்னர்கள் கோயிலை புதுப்பிச்சிருக்காங்க..காசிக்கு நிகரானது...சனீஸ்வரர் காகம் மேல் உட்கார்ந்திருப்பது இந்தியாவில் இங்கு மட்டும்தான்..!! 

3000 வருடம் பழமையன வன்னி மரத்தின் கீழ் பிரம்மா இருக்கிறார் ரோகிணி நட்சத்திரம் ரிசப ராசியினர் வழிபட எல்லா பிரச்சினையும் தீரும் வெள்ளைத்தாமரை வைத்து 27 நெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்...ஸ்ரீரெங்கம் பெருமாள் போல சயன கோலத்தில் இருக்கும் பெருமாளை வழிபட உடல் ஆரோக்யம் உண்டாகும்.

No comments:

Post a Comment