Sunday, 19 April 2020

உத்தராயண புண்ணிய காலம்

மகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார் ...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில் தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும் பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான் பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர் காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..

கெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது.


No comments:

Post a Comment