Tuesday, 30 June 2020

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்.....!

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.
கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.

முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை 
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி - சூடம்காண்பித்தல் பற்றி ..
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.

தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும் 
விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும் 
விநாயகருக்கு = அருகம்புல் ஆகும் 
பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும் 
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.

10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி – தேன்
ஆடி – வெண்ணெய்
ஆவணி – தயிர்
புரட்டாசி – சர்க்கரை
ஐப்பசி – உணவு, ஆடை
கார்த்திகை – பால், விளக்கு
மார்கழி – பொங்கல்
தை – தயிர்
மாசி – நெய்
பங்குனி – தேங்காய்.

11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக 
கிடைக்கும்.

12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

################################################

தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து  !!

1.பஞ்ச கன்னியர்
அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.

2.பஞ்சவாசம்
இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3.பஞ்சாமிர்தம்
சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4.பஞ்சபாண்டவர்
தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.

5.பஞ்சசீலம்
கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6.பஞ்சதிராவிடர்
தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7.பஞ்சபட்சி
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8.பஞ்சபுராணம்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9.பஞ்சரத்தினம்
வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10.பஞ்சவர்ணம்
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11.பஞ்சாங்கம்
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12.பஞ்சமூலம்
செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13.பஞ்சபாதகம்
பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14.பஞ்சபாணம்
முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15.பஞ்சாயுதம்
சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16.பஞ்சபரமோட்டி
அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.

17.பஞ்சசிகை
தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18.பஞ்சதேவர்
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19.பஞ்சஸ்தலம்
காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள்
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்

தீக்காயங்கள்

#விழிப்புணர்வு.......

சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு () வைத்திருங்கள், அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

சிறிது நேரம் முன்பு, நான் corn கொதிக்கவைத்தேன், சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன்.  தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் நனைத்தேன் .... !!

 வியட்நாமிய கால்நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்.  அதனால் நான் வேதனையுடன் அலறும்போது, ​​என்னிடம் வீட்டில் (கோதுமை) மாவு இருக்கிறதா என்று கேட்டார்.

 நான் கொஞ்சம் கொடுத்தேன், அவர் என் கையை மாவில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்.

 வியட்நாமில் ஒரு பையன் ஒரு முறை  🔥எரிந்ததாக அவர் என்னிடம் கூறினார்.  அவர் மீது நெருப்பு மற்றும் பீதியுடன் யாரோ ஒருவர் தனது உடலெங்கும் ஒரு சாக்கு  கோதுமை மாவு ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.  ஆனால் தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை !!!!

 என் சொந்த விஷயத்தில், நான் 10 நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன், பின்னர் அதை அகற்றிவிட்டேன், அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் கூட நான்  பார்க்க முடியவில்லை.  மேலும், முற்றிலும் இல்லை.

 இன்று நான் ஒரு பை கோதுமை மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன், நான் தீ படும் ஒவ்வொரு முறையும் மாவைப் பயன்படுத்துகிறேன்.  உண்மையில் குளிர்ந்த மாவு அறை வெப்பநிலையில் இருப்பதை விட மிகவும் சிறந்தது.
நான் ஒரு முறை என் நாக்கை சுட்டுகொண்டேன், அதன் மீது சுமார் 10 நிமிடங்கள் மாவு வைத்தேன் .... வலி நின்றுவிட்டது.

 எனவே எப்போதும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்தபட்சம் ஒரு கோதுமை  மாவு பாக்கெட் வைத்திருங்கள்.

 மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.  இதனால், எரிந்த நோயாளிக்கு 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்தினால் அது உதவுகிறது.


Sunday, 28 June 2020

symptoms corona...



*symptoms*corona...

1 - Starts by sever Body Pain - 1st Day

2 - High Fever - 2nd Day to 5th Day

3.sore of throat 3rd day

4 - Loose Motion/Diarrhoea - 02nd and 03rd Day

5- Loss of Smell & Taste - 03rd Day onwards (partially restored)

6 - I have dry cough. (2.to 5days)

*Treatment (with doctors guide line)and Remedies*

1 - Isolated myself to a bath attached bed room. Managed my own set of clothes, and other items

2 - Took Dolo 650mg  3 times a day and managed temperature.

3.Azithromicin 500 mg per day

4- Took 4  to  5 liter water at every day to hydrate myself. 

5- Steamed everyday morning and evening 

6- Gargled morning and evening with hot water+salt+turmeric powder 

7- A mixer of Raw Ginger(cut into small square pieces) + Turmeric Powder +  Black Pepper Powder + Tulsi leaf  is kept ready in a hot water. Whenever coughing sensation comes, drink this hot water.I am continuing this now also. 

8 - Eating normal  food.(I take  extra some nutritional  food added...egg, milk..etc..)

9 - Took rest, slept minimum 12 hours a day.

 




Saturday, 27 June 2020

இனியாவது தெரிந்து கொள்வோம் ..

#இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே #இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...

ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!

10. முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்

11.கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
12.நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

13. சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

14.செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
15.முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

16.வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

17. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

18. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

19. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

20. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

21. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

22. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

23. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

24. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
25. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.. %


நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால்

நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பல இடங்களில் படித்திருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி  தெரிந்துகொள்வோம் 

இரத்த சோகை :-

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, இரத்தணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

இதயம் வலிமையடையும் :-

தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பார்வை மேம்படும் :-

கண் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும்.

பசி தூண்டப்படும் :-

பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் சரிசெய்யலாம்.

சளி மற்றும் தொண்டைப்புண் :-

சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அதுமட்டுமின்றி தொண்டையில் புண்ணும் வரும். அத்தகையவர்கள் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கிய சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.

வெள்ளைப்படுதல் :-

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.

சிறுநீரக பிரச்சனைகள்:-

முக்கியமாக தேனில் நெல்லிக்காயை ஊற வைத்து சாப்பிட்டால், சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, அப்பிரச்சனைகள் இருந்தாலும் குணமாகிவிடும்.

அசிடிட்டி :-

அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள், தேனில் ஊறிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பொலிவான சருமம் :-

தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகத்தின் பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படும்.

முடி வளரும் :-

நெல்லிக்காய் மற்றும் தேனில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால், இதுவரை அதிகமாக இருந்த முடி கொட்டும் பிரச்சனை தடுக்கப்பட்டு, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடியின் வளர்ச்சி அதிகமாகும்... %
தேன் நெல்லி செய்முறை

தேவையானப் பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் - 1 கிலோ
பனை வெல்லம் - 1/4 கிலோ
தேன் - 250  ML
ந. எண்ணெய் - 4 டீஸ்பூன்

தேன் நெல்லி செய்முறை:

பெரிய நெல்லிக்காயை நன்றாகக் கழுவி ஈரம் போக துடைத்துவிட்டு வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு குறைந்த தீயில் நெல்லிக்காயை வதக்கவும். நெல்லிக்காய் மாறிச் வதங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும். நெல்லிக்காய் ஆறியதும் அதன் மேல் உள்ள எண்ணெயை மெல்லிய பருத்தி துணியால் ஒற்றி துடைத்து எடுக்கவும்.

பின் அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கிப் போட்டு, 1 கப் தண்ணிர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து காய்ச்சவும். பதம் வந்ததும் இறக்கிவைத்து, தேன் + நெல்லிக்காய்களைச் சேர்க்கவும்.

இரண்டு நாளில் வெல்லம் + தேன்  நெல்லிக்காயில் நன்றாக ஊறியதும், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

அதை நாம் நெடுங்காலம் பயன்படுத்தலாம்


ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா...

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா? உடன் பகிருங்கள்
 

இங்கு ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும். மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும் வலியைப் போக்க முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதற்கான இதர அறிகுறிகளையும் அறிவது தான்.

அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் ஒரே நாளில் மூட்டுக்களில் உள்ள வீக்கம் போய்விடும்.

வழி #1

தேவையான பொருட்கள்:

முட்டையின் மஞ்சள் கரு - 1

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகளில் உள்ள பேஸ்ட்டை மாற்ற வேண்டும். இப்படி தினமும் 5 முறை செய்து வந்தால், மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும வலி குறைந்துவிடும்.

வழி #2

தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வீக்கம் மற்றும் வலி உள்ள மூட்டுக்களில் தடவி, சுடுநீரில் நனைத்த துணியை மேலே போர்த்த வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலி மற்றும் வீக்கம் குறையும்.

வழி #3

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சீடர் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர்- தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து, அந்நீரில் வீக்கமுள்ள மற்றும் வலியுள்ள மூட்டுக்களை 10 நிமிடம் ஊற வையுங்கள். இறுதியில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரு வேளை மசாஜ் செய்யுங்கள்.

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளால் வலியும் வீக்கமும் குறையாமல் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கொரோனா #வைரஸ்_நோய்_எதிர்ப்பு#சக்தி_பெற....

#அதிகரித்து_வரும்_கொரோனா #வைரஸ்_நோய்_எதிர்ப்பு
#சக்தி_பெற……❗❗❗

#என்ன_வகையான_உணவுகளை #உட்கொள்ளலாம்……❓

⭕ நோய் எதிர்ப்பு சக்தி 
என்றால் என்ன❓

Immunity System

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, 
அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, 
தோலில் ஏற்படும் வெடிப்பு……

இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும்……

▶பாக்டீரியாக்கள், 

▶வைரஸ்கள், 

▶நுண் கிருமிகள் 

போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity System ) 
என்கிறோம்.

💪 எதிர்ப்பு சக்தி வகைகள்❓

👉 நமது உடலில்………

★இயற்கையான எதிர்ப்பு சக்தி 
(Innate Immunity),

★தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

★உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) 

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

🈵 இயற்கையான எதிர்ப்பு சக்தி
(Innate Immunity)   

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (#Neutrophils_Bosophils, #Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

🈵 தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த 
(Adaptive Immunity)

இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது #Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

🈵 உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி 
(Passive Immunity)

மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

🉐 எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது❓

நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. #காய்ச்சல்_சளி_மூக்கில் 
#நீர்_ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

🈵 நோய் எப்போது ஏற்படுகிறது❓

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

⭕ நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் என்ன❓

▶நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில………

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்.

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது.

4. மது, போதைப்பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்.

6. தூக்கமின்மை.

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

❌ நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமை....❗❗❗

#ஆ‌ன்டி_பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது. ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `#பி_காம்ப்ளக்ஸ்' குறையும்.

வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது.

#நோய்_நொடியின்றி_வாழ #ஊட்டச்சத்துக்கள்…❓❓❓

நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான  ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.. 

⭐ ஃபோலிக் ஆசிட்

கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது.

பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது.

⭐ இரும்புச் சத்து

ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும்.

மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம்.

⭐ கால்சியம்

உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பால், சீஸ், பசலைக்கீரை மற்றும் பாதாம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.

⭐ வைட்டமின் D

மனித உடலில் போதுமான அளவுக்குக் கிடைக்காத ஒரு முக்கியமான வைட்டமின் இது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே இந்தச் சத்தைப் பெறமுடியும். இதன் மூலம், மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். பல்லுக்கும் எலும்புக்கும் தேவையான கால்சியம் சத்தும் இந்த வைட்டமினிலிருந்து அதிகம் கிடைக்கிறது.

⭐ மக்னீசியம்

உடலின் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது இந்தச் சத்து. நரம்பு, தசை, தோல் மற்றும் எலும்பு வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் இருக்க உதவுகிறது.
பூசணி விதை, பசலைக்கீரை, பாதாமில் இருந்து இந்தச் சத்தைப் பெறலாம்.

⭐ வைட்டமின் E

கொழுப்புப் பொருட்களில் அதிகமாகக் காணப்படும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச்சக்திக்கு உறுதுணையாக அமைகிறது,

கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிசை மற்றும் முருங்கை, காலிபிளவர், கீரை வகைகள், முளை தானியங்களின் மூலம் பெறலாம்.

⭐ ஒமெகா 3

பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன் இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும்

கடல் மீன்களிலிருந்து இதை பெறலாம்.

⭐ பொட்டாசியம்

பொட்டாசியத்தின் குறிப்பிடத்தக்க வேலை நரம்புகளில் ரத்தத்தைப் பிரச்னைகள் இல்லாமல் எடுத்துச் செல்ல உதவுவதுதான். மேலும், உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும் இந்தச் சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து அதிகம் பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு 4700 மி.கி அளவு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

⭐ வைட்டமின்C

நோய் எதிர்ப்புச்சக்திக்கு அதிகம் தேவைப்படும் இந்த வைட்டமின் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும் இந்த வைட்டமினை 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 75 மி.கி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு. கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களியிருந்து இந்த வைட்டமினை பெறலாம்.

⭐ நார்ச்சத்து

குடல் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.

⭐ தயிர்

தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள்ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், குடல் பாதையை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலமும் நன்கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும்.

⭐ இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிடுதால் முதுமை தோற்றம் எளிதில் ஏற்படாமல் இருப்பதோடு, சில ஆய்வுகளில், பெருங்குடல் மற்றும் மலக்குடல்களில் ஏற்படும் புற்றுநோய்களை வராமல் தடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

⭐ காளான்

காளானில் செலீனியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் பி சத்துக்களான ரிபோஃப்ளாவின் மற்றும் நியாசின் போன்றவை உள்ளது. அதிலும் காளானில் லென்டினான் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது. இதனால் காளானை சாப்பிடுவதால், உடலில் பல புற்றுநோய்கள் வராமல் இருக்கும். சொல்லப்போனால், காளான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

⭐ பாதாம்

வைட்டமின் பி சத்துக்களான ரிபோப்ளேவின் மற்றும் நியாசின் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. அதேப்போல் இதில் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவு வைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

⭐ கிரீன் டீ

தினமும் கிரீன் குடித்தால், உடல் எடை மட்டும் குறைவதில்லை. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான எஃபிகளோகாட்டிசின், வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. இதனால் உடலை எந்த ஒரு சளி, இருமல் போன்றவை எதுவும் அண்டாமல் இருக்கும். மேலும் இந்த கிரீன் டீ புற்றுநோய்கள், இதய நோய், ஹைப்பர் டென்சன் போன்ற எதுவும் வராமல் தடுக்கும்.

⭐ கீரைகள் மற்றும் பிராக்கோலி

கீரைகள் மற்றும் பிராக்கோலியில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் பொருளும் இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

⭐ பெர்ரி

பெர்ரிப் பழங்களில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதய நோய், இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

⭐ பூண்டு

அதிக நறுமணம் உள்ள உணவுப் பொருளான பூண்டிலும் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. ஆகவே இத்தகைய பூண்டை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாக்கலாம்.

⭐ இஞ்சி

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

⭐ டீ, காபி

டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.

⭐ சர்க்கரைவள்ளி கிழங்கு

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

⭐ பார்லி, ஓட்ஸ்

பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

⭐ எலுமிச்சை

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

⭐ கீரைகள், காய்கறிகள்

பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

⭐ மிளகு

ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் திறன் கொண்டுள்ள கருப்பு மிளகு நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் ஒரு முக்கியமான ஆரோக்கியமான உணவாகும்.

⭐ ரெஸ்வெராட்ரோல் (Resveratrol)

எனப்படும் பாலிபினால் நிறைந்த உணவுகளான கருப்பு திராட்சை (Black grapes), கருப்பு உலர்திராட்சை (Black raisins),  பிஸ்தா (Pistachios) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில், ஆக்ஸிஜனேற்ற பண்பும், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக வினைபுரியும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. ரெஸ்வெராட்ரோலின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு மற்றும் ஈகோசனாய்டுகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்சைம்களைத் தடுக்கும் திறன் அதன் அழற்சி எதிர்ப்பில் (ஆன்டிஇன்ஃப்ளமேஷன்) பங்களிக்கிறது. நோயைத் தடுப்பதிலும் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

⭐ வைட்டமின் ‘ஏ’ உள்ள உணவுகள்    

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், முருங்கைக்கீரை, ஆடு, கோழி, மாட்டிறைச்சியின் ஈரல், முட்டை, பப்பாளிப்பழம், மாம்பழம், பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ’ஏ’ மிகுந்துள்ளது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் ‘அழற்சி எதிர்ப்பு வைட்டமின்’  என்று அழைக்கப்படுகிறது. உடல் செல் மண்டலத்தின் நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் மனித நோயெதிர்ப்பு செயல்முறைகளை சீர்படுத்தும் செயல்பாட்டில் ‘வைட்டமின் ஏ’  முக்கிய பங்கு வகிக்கிறது.

⭐ வைட்டமின் ‘சி’ உணவுகள்

ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை, குடைமிளகாய், தக்காளி போன்றவற்றில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. வைட்டமின் ‘சி’ ஒரு ஆக்ஸிஜனேற்றி என்பதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களால், உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. உடல் முழுவதும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க இது அவசியம்.

⭐ மஞ்சள்

மஞ்சளைப்பற்றி சொல்லவே தேவையில்லை.  முக்கியமாக மஞ்சளில் இருக்கும் குர்குமின், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட அழற்சி நோய்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உடலில் ஃப்ரீரேடிகல்ஸ்  உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது. குர்குமின் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளின் மூலம் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முடிந்தவரை சாம்பார், பொரியல், குழம்பு, கூட்டு என எந்த சமையலாக இருந்தாலும் மஞ்சள் சேர்த்து செய்யுங்கள்.

⭐ தக்காளி

தக்காளி பழங்களில் இருக்கும்  பைட்டோ கெமிக்கலான லைகோபீன்,  முக்கிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனம் (Reactive Oxygen Species) என்பதால், ஃப்ரீ ரேடிகல்ஸ்களை அழிப்பதில்  திறமையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது மரபணுவில் (DNA) உள்ள உயர் எதிர்வினை  எலக்ட்ரானை மிகவும் நிலையான ஃப்ரீ ரேடிக்கல்லாக மாற்றக்கூடியது. இதன்மூலம் நோய்க்கிருமிகளைத் தடுப்பதில் சிறந்த எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களாக செயலாற்றுகிறது.

⭐ அன்னாசிப்பூ

பிரியாணியில் வாசனைக்காக ‘அன்னாசிப்பூவை’ சேர்க்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. அன்னாசிப்பூவில் உள்ள லிமோனேன் ஒரு கலவையான ஆக்ஸிஜனேற்றியாகும் என்பதால், செல்களின் அழிவுக்கு காரணமான லிப்பிட் பெராக்ஸைடேஷனைத்(Lipid peroxidation) தடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கவும் மற்றும் புரத ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் தொடர்புடைய புரத மறுப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுவதோடு, காயங்களை குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.

⭐ பூசணி விதைகள்

வெள்ளை மற்றும் சிவப்பு பூசணி விதைகளில், ஆளிவிதைக்கு அடுத்தபடியாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இவற்றையும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

⭐ புரதங்கள்

விலங்கு மூலங்களிலிருந்து வரும் புரதங்கள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களின் ஏராளமான அளவுகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு அவசியமானவை. அவை மீன், கோழி, சீஸ், முட்டை மற்றும் பால் ஆகியவற்றில் காணப்படுகின்றன. சைவ உணவு உண்பவர்கள் சோயாபீன்ஸ், ராஜ்மா, சுண்டல் போன்ற தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் தங்கள் புரதத்தைப் பெறலாம்.

⭐ கொட்டைகள்

வால்நட் மற்றும் பாதாம் ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன, அவை உங்கள் உடல் நோயை எதிர்த்துப் போராட உதவும். ஒரு சிறிய ஆய்வில் ஒமேகா 3-க்கள் குழந்தைகளின் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன. அக்ரூட் பருப்புகள் (வால்நட்) ஒரு சிற்றுண்டி கலவையில் அல்லது தானியத்தில் தெளிக்க எளிதானது.

⭐ கேரட்

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

 
⭐ பேரீச்சம்பழம்

 உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.

⭐ தூக்கம் அவசியம் 

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.

⭐ தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்

தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

⭐ பால் உணவுகளைச் சாப்பிடுங்கள்

தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு 'ப்ரோபயாட்டிக்' என்று பெயர். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

⭐ வெங்காயம் வேண்டும்

வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாடு தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள 'அலிலின்' என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன. 

⭐ நட்ஸ் விரும்புவோம்

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 

🚭 #புகைப்_பிடிக்காதீர்கள்

சிகரெட்டில் உள்ள புகையிலை (Tobacco) உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. மேலும், நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது, 

⭐ #மதுப்பழக்கம்_வேண்டாம்

அதிகளவு மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால், வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. மேலும், வெள்ளையணுக்களை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணமாகிறது.

இயற்கை மருந்து

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து!

மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து.

வெந்தயம். – 250 gm
ஓமம் – 100 gm
கருஞ்சீரகம் – 50 gm

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது,மலச்சிக்கல் நீங்குகிறது,நினைவாற்றல் மேம்படுகிறது,

கேட்கும் திறன் அதிகரிக்கிறது,பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.,இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

Thursday, 25 June 2020

சுண்டைக்காய்

கொரனா மாதிரி கிருமிகளின் எதிர்ப்பு மருந்தாக சுண்டைக்காய் இருக்கிறது என்கிறார் அகத்தியர் பெருமான் தனது வைத்திய நிகண்டு  நூலில்....

நெஞ்சின் கபம் போம்
நிறை இருமி நோயும் போம்
விஞ்சு வாதத்தின் விளைவு போம்
வஞ்சியரே வாய் கசபிக்கும் மாமலையில் விளையும்  சுண்டைக் காயை சுவைப்பதர்கே
                         -   அகத்தியர்

அட அட நெஞ்சில் எந்த கபச் சளியும்
நீக்கும்.  எந்த கிருமியுனாலும் வரும் நோய்களும் போய்விடும். வாதசுரம் வலியும் போக்கும்  அப்பரம் என்ன இந்த அறிகுறி அனைத்தும் கொண்ட கொரனா வைரஸ் மட்டும் தப்பி விடுமா?  

அன்பர்களே பத்து சுண்டைக் காயை 
அல்லது சுண்ட வத்தலை கலப்படமில்லாத பசு நெய்யில் அல்லது கலப்படமில்லா தேங்காய் எண்ணெயில் அல்லது கலப்படமில்லாத நல்லெண்ணெயில்  வறுத்து  
மெது மெதுவாக 
ஒன்று ஒன்றாக
 சுவைத்து  சுவைத்து சுவைத்து
 மூன்று நாள் சாப்பிட்டு வரவும்.

 பின் இருநாள் இடைவெளி விட்டு மீண்டும் சாப்பிட மேலே சொன்ன நோய்கள் குணமாகிறது.

வாதச் கபச் சளி இருமல் வலி  சுரம் நீக்குகிறது 
காச பணமா வீட்டுலே உணவே மருந்து  கொரனாவுக்கு மருந்தாக இல்லையனால் கூட அந்த கொரனாவுக்கு தீவிர எதிர்ப்பாக இருக்கலாம் அல்லவா இந்த சுண்டைக்காய்.

 சுண்டைகாயின் மகத்துவம் தெரியாமல் படித்திவிட்டு போகாதீர்கள்.

என்னுடைய  நண்பர் டாக்டர் ஒருவருக்கும் கட்டுக்கடங்காத கபச்சளியை இரண்டே நாளில் கட்டுப் படுத்தியிருக்கிறது. நான் ஒரு தடவை அவருக்கு சொல்லி.   குடும்பங்கள் எல்லாரும் சுண்டக்காய் கூட்டு அல்லது சுண்டக்காய் வத்தல் கொழம்பாவது வைத்து சாப்பிடுங்க வாரத்தில் மூன்று நாட்கள் எப்போதும்....

(1)சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.

(2)சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும்.

(3)பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.

(4)சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

(5)சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.

(6)சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

(7)சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

(8)சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.

(9)சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

(10)சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

காலிப்ளவர்

இதயம் 
உலகில் இன்று பலருக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. அதற்குப் பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.
குழந்தை மூளை வளர்ச்சி
 அதிலும் குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள் கோலைன் சத்து நிறைந்த காலிஃபிளவரை உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. கோலைன் அதிகம் நிறைந்துள்ள காலிஃபிளவர்களை அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களின் ஞாபகத் சக்தி மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 
நச்சு தன்மை 
உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.
 எலும்புகள் வலிமை 
காலிபிளவரில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை காலிபிளவர் பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது. 
சிறுநீரகங்கள் 
நமது இரத்தத்தில் இருக்கும் அனைத்து கழிவுகளையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் சிறப்பாக இருக்க சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காலிபிளவரில் பைட்டோ கெமிக்கல் வேதிப் பொருட்கள் நிறைந்துள்ளன. காலிபிளவர்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
 ஹார்மோன்கள் 
மனித உடலின் பல செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு அடிப்படையாக இருப்பது நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஹார்மோன்களே ஆகும். இந்த ஹார்மோன் சுரப்பிகள் சீராக இருக்க ஆன்ட்டி – ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காலிபிளவர் அதிகம் சாப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக பெண்களின் உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் சமநிலை இல்லாத தன்மையை சீர் செய்யும் ஆற்றல் காலிபிளவரில் அதிகம் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் இன்னபிற வேதிப்பொருட்கள் கொண்டிருக்கிறது.
#cauliflower #healthpluz #healthyvegetable #benefits

Wednesday, 24 June 2020

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்-

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.

கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.

கொழுப்பின் அளவு:

மொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும் பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும். உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.

பெண்களை பொருத்தவரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும். குறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும். ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமாகும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும்.

சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.

சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக ஆரம்பித்துவிடும் 

நன்றிகளும்
பிரியங்களும்.

வீட்டில் தரித்திரம் மறைந்து செல்வம் நிலைக்க கடைபிடிக்க வேண்டியவை

வீட்டில் தரித்திரம் மறைந்து செல்வம் நிலைக்க கடைபிடிக்க வேண்டியவை :

1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

2. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).

3. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

4. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

5. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது

7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவைகள் மாமிசத்துக்கு சமம்.

9. செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

10. செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

11. நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால், செல்வம் சேர தொடங்கும். எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்

Tuesday, 23 June 2020

கல்லுப்பு- ஒரு சிறந்த கிருமிநாசினி..!!!

#கல்லுப்பு- ஒரு சிறந்த கிருமிநாசினி..!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(கரோணாவிலிருந்து தற்காத்துக்கொள்ள)

 நான் கண்ட உண்மை என்னவென்பதை இங்கு தெரிவித்து கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

கல் உப்பு கொண்டு கொரோனாவை (COVID - 19), அழிக்க முடியும். நாம் எவ்ளோ தான் sanitiser,  mask எல்லாம் போட்டாலும்  கொரோனாவை நாம் அழிக்க ஒரே வழி கல் உப்பு. 

டெட்டால் lizol மற்ற எல்லா ஆன்டிசெப்டிக் திரவத்துக்கு முன் நம் கல் உப்பு தான் சிறந்தது.

விலை கம்மி கல் உப்பை வாங்கவும். ஒரு பக்கெட்டில் தண்ணி நிறைத்து அதில் கல் உப்பு கால் கிலோ போட்டு கலக்கி வைக்கவும். வீட்டுக்கு வெளியே சென்றால் வந்தவுடன் அதில் முகம் கை கால் அலம்பி அப்புறம் வீட்டுக்குள் செல்லவும். அந்த தண்ணி கெடாது குறைய குறைய நிரப்பி கொள்ளவும்.

அடுத்தது வீட்டு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு வைக்கவும். நாள் முழுவதும் இருப்பதால் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடைய கல் உப்பு அனைத்து வகை கிருமிகளையும் கொல்லும். பின்பு அந்த கல் உப்பு கொண்டு வீட்டை கூட்டும் பொழுது வீடு sanitise ஆகிவிடும். 

சிறு துகள்களாக வீடு முழுவதும் பரவி நமக்கு தீங்கு செய்யும் அனைத்து கிருமிகளையும் கொல்லும்.

இப்பொழுது ஒரு ஸ்பூன் கல் உப்பு கொண்டு ஒரு tumbler நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். 

ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இது செய்வதால்கொரோனாவின் தாக்கம் நம் தொண்டையில் இருக்காது.

 எவ்ளோ தான் நாம் மாஸ்க் போட்டாலும் சில சமயம் கொரோனாவை சுவாசிக்க நாம் சந்தர்ப்பம் குடுத்துள்ளோம்.

ஆதலால் மூக்கு வழியாக தொண்டையில் தங்கும்
கொரோனாவை உப்பு தண்ணி கொண்டு அழிக்கலாம். 

அப்படியே அழித்தாலும் நம் சுவாச குழாய் வழியாக செல்ல வாய்ப்புகள் அதிகம். இப்பொழுது தான் நாம் கல் உப்பு தண்ணி கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக அந்த கிருமியை சூடான ஆவியால் அழிக்க முடியும். 

யாருக்கு வேணும்னாலும் கொரோனா தொற்று இருக்கலாம். இனி வரும் காலங்களில் இதை செய்து மரணத்தை தவிர்க்கலாம். 

தன் மேல் அக்கறை உள்ளவர்கள் பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர்கள் இதை செய்யலாம். 

முடிந்த அளவு இதை பிரபல படுத்த வேண்டும். மாத்திரை மருந்து கொண்டு குணப்படுத்த முடியாது இன்று கல் உப்பு கொண்டு நாம் தப்பிக்கலாம். 

இதில் உள்ள logic புரிந்தால் நலம். சமையல் அறையில் மருந்தை வைத்து கொண்டு நாம் அலைய வேண்டியது இல்லை.

அனைவருக்கும் பகிருங்கள்👌👍👏

தெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா?

மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட செடியாகும். ஒரு பெண்ணின் கையில் இடும் மருதாணி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் அவள்மேல் அதிக காதலுடன் இருப்பான் என்றும் அதனால் தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர் பெருமை படுவர். கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது. ஒரு பெண்ணிற்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை இரண்டு விஷயங்களின் வாயிலாக அறிய முடியும் என நம் முன்னோர்கள் நம்பினார்கள். ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின் வாயிலாக அறிவது. திருமணத்திற்கு இருக்கும் இளம் பெண்ணிற்க்கு மருதாணி இடுவதன் மூலம் அறிவது. 

 உங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா? அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க... மருதாணி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. சிலருக்கு ஆரஞ்சு நிறமாக பிடிக்கும். சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். மருதாணி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டால் அது பித்த உடம்பு என்கிறது. இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மருதாணி யாருக்கு சிவக்கும் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பவர்களுக்கெல்லாம் மருதாணி நன்கு சிவந்து அழகை தரும். சுக்கிர செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காமத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என ஜோதிடமும் மருதாணி அழகாக சிவப்பவர்களெல்லாம் தங்கள் கணவன்மார்களை சந்தோஷபடுத்துவதில் சிறந்தவர்கள் என ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது. சுக்கிர செவ்வாய் சேர்கை பெற்றவர்களுக்கு மருதாணி நன்கு சிவக்கும். சுக்கிரன்-சந்திரன், சுக்கிரன் புதன் சேர்க்கை கொண்டவர்களுக்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலரில் சிவக்கும். சுக்கிரன்-செவ்வாயோடு ராகு, சனி பார்வை சேர்க்கை பெற்றவர்களுக்கு கருத்து விடும். ராமாயணத்தில் மருதாணி மருதாணிக்கு அசோகமரம் என்ற பெயரும் உண்டு. சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதாணி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்கு அசோக வனம் என்ற பெயர் ஏற்பட்டது. இராமாயணத்தில் சீதை இலங்கையில் அசோக வனத்தில் இருக்கும்போது சீதைக்கு தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது. சீதை கொடுத்த வரம் ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், "இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்." என்று கூறி மருதாணி செடியிடம், உனக்கு என்ன வரம் வேண்டும். என கேட்டாள். எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சி தான். அது போதும். என்றது மருதாணி செடி. மெஹந்தி விழா அதற்கு சீதை, "உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்." என்ற வரத்தை தந்தார் சீதா தேவி. அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
மருதாணி நன்மைகள் அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும். அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள். மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம். மருதாணி கிருமிகளை அழிக்கும் சுக்கிரனின் அம்சமான மருதா‌ணி இலை சிறந்த கிருமி நாசினியாகும். கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நக சுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். சுகமான தூக்கத்தின் காரகர் சுக்கிரன். நோய்களை குணமாக்கும் மருதாணி மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். தொண்டை நோயின் காரகரும் சுக்கிரன் தான். மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கருமையான நீண்ட கூந்தலுக்கு சுக்கிரபகவானின் அருள் வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மருதாணி மகாலட்சுமியின் அருள் நிறைந்த மருதாணி இலைகளை கொண்டு மகாலட்சுமியை அர்ச்சித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்கிறது வேதம். ஸ்திரி தோஷம், சுமங்கலி தோஷம் போன்ற தோஷங்களை ஜாதகத்தில் பெற்றவர்கள் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதாணியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு இட்டு வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம். வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.ஸ்ரீமகாலட்சுமியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அமாவாசை நாளில் என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..?

இன்று தை அமாவாசை தினமாகும். இன்றைய தினம் ஏராமானோர் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் அளிக்கின்றனர். அமாவாசை திதி மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும் அன்றைய தினம் நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்றும், அந்த பசியைப் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களின் பசி அடங்கி, நமக்கு ஆசிகளை வழங்குவார்கள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. 
அமாவாசை தோறும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், முன்னோர்கள் நின்று கொண்டு எள் தண்ணீர் பெறுவதற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது. மாமிசம் சாப்பிடக்கூடாது வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது. அன்றைய தினம் யாரையும் கோபமாக பேசக்கூடாது. 
 சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா? இறைவன் மகாவிஷ்ணு ராமபிரானாக மனித அவதாரம் எடுத்த போது தனது தந்தைக்கு பித்ரு கடன் நிறைவேற்றியுள்ளார். பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ராமபிரானிடம் கூறியதன் அடிப்படையில் ராமர், தசரதருக்கும், ஜடாயுவுக்கும் எள் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. 
 முன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா? அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க... மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை. அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு அவர்களின் ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரதம் இருக்கும் இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் முன்னோர்களின் ஆசி நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும். எனவே நம்முடைய வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. அப்படி கொடுக்க முடியாதவர்கள் சூரியன் மறைவதற்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை கூற வேண்டும்.  தர்ப்பணம் எப்படி கொடுப்பது தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது, கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. நீரில் இருப்பவர்கள் நீரிலும், கரையில் இருப்பவர்கள் கரையிலும் தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காகத்திற்கு சாதம் அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்டப் பின்னரே அனைவரும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், யமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது யமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால், யமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால், முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கை.  துயர் போக்கும் துளசி பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.  கோலம் போடாதீங்க முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த அமாவாசை தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடுவதைத் தவிர்க்கவேண்டும். முன்னோரை வழிபட்ட பிறகே தெய்வ வழிபாடுகள் தொடர வேண்டும் என்பதால், அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதில்லை. கோலங்கள் தெய்வ வழிபாட்டுக்கு உரியவை என்பதுடன், மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருப்பவை. எனவே முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடும் நாம் திதி, அமாவாசை தினங்களில் கோலம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்

ரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா?

சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். ரத சப்தமி நாளில் விரதமிருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய உதயமாகும் நேரத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பானதாகும். புண்ணி தீர்த்தத்தில் நீராட முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். நீராடும் போது 7 எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்களின் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது. இந்நாளில் செய்யும் தான தர்மங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நம் கண்ணால் காண முடிகிற ஒரே கடவுள் சூரிய பகவான். இந்தியாவில் பண்டைய காலத்திலிருந்தே, சூரிய வழிபாடு இருந்து வருகிறது. சூரியனை வழிபடும் சமயத்திற்கு சவுமாரம் எனப் பொருள்படும். இந்து மதத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் நான்கு வேதங்களில் முதல் வேதமான ரிக் வேதத்திலேயே சூரிய வழிபாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் சூரிய பகவான் தன்னுடைய இரண்டு மனைவிகளுடன், இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வலம் வருவதாக குறிப்புகள் உள்ளன. MOST READ: பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ! சூரிய வழிபாடு என்பது, இந்தியாவில் மட்டுமில்லாமல் அண்டை நாடான சீனா, எகிப்து மற்றும் மெசபடோமியா எனப்படும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளிலும் இருந்து வந்தது. காலப்போக்கில் பிற நாட்டு அரசர்களின் படையெடுப்புகளால் மறைந்து விட்டது. ஆனால், சூரிய வழிபாடு இன்றைக்கும் இந்தியாவில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் வசந்த காலம் ஆரம்பம் ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில், சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் வட திசை நோக்கி பயணிக்கும் உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாத சப்தமி தினத்தன்று ரத சப்தமி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ள படி, வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் ரத சப்தமி நாள் விளங்குகிறது. ரத சப்தமி என்பது சூரிய பகவான், தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வட கிழக்கு திசை நோக்கி செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. பிச்சை கேட்ட பிராமணர் சப்ர ரிஷிகளில் ஒருவரான காஷ்யபர்-அதிதி தம்பதிகளின் மகன் தான் சூரிய பகவான். அதிதி கர்ப்பவதியாக இருந்த போது, ஒரு நாள் காஷ்யபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த போது, யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறக்க, அங்கே ஒரு பிராமணர், ‘தாயே பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கொடுங்கள்' என்று பிச்சை கேட்க, அதற்கு அதிதி, சற்று இருங்கள் கொண்டு வருகிறேன், என்று சொல்லிவிட்டு நடக்க முடியாமல் மெதுவாக நடந்து வந்து காஷ்யபருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின்பு, ஆகாரத்தை எடுத்து வந்து அந்த பிராமணருக்கு கொடுத்தாள். சாபமிட்ட பிராமணர் தாமதமாக வந்து பிச்சை போட்ட அதிதியைப் பார்த்து பிராமணர், என்னை காக்க வைத்து, தாமதமாக வந்து உணவை அளித்து, ‘என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். அதனால், உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்' என கோபப்பட்டு சாபமிட்டார். பிராமணரின் சாபத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, நடந்த விஷயத்தை காஷ்யபரிடம் சொல்ல, அதற்கு அவர், கவலைப்படாதே, அமிர்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத பிரகாசத்துடன் ஒரு மகன் நமக்கு கிடைப்பான், என்று ஆசீர்வதித்தார். ஏழு குதிரைகள் பூட்டிய தேர் காஷ்யபர் ஆசி வழங்கியது போலவே, பிரகாசமான ஒளியுடன் சூரிய பகவான் மகனாக பிறந்தார். வானவில்லைப் போல ஏழு வண்ணங்கள் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருகிறார். இந்த ஏழு குதிரைகளும் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை உள்ள ஏழு நாட்களைக் குறிக்கிறது. சூரிய பகவான் வலம் வரும் அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் மட்டுமே உண்டு. 
 காலத்தை உருவாக்கும் சூரியன் சூரிய பகவானின் தேரை ஓட்டுபவரின் பெயர் அருணன் என்பவர், மஹாவிஷ்ணுவின் பெரிய திருவடி என பயபக்தியோடு அழைக்கப்படும் கருட பகவானின் சகோதரர் ஆவார். சூரிய பகவான் வலம் வரும் தேரின் சக்கரம் உத்திராயணம், தட்சிணாயனம் என இரண்டு பாகங்களைக் கொண்டது. சூரிய பகவான் தன்னுடைய தேரில் ஏறி வலம் வந்து காலை, நண்பகல், மாலை, அர்த்த ராத்திரி என நான்கு பட்டணங்களை சுற்றி வந்து காலங்களை உருவாக்குகிறார். ரத சப்தமி விரதம் சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதமாகும். இவ்விரதமானது சூரிய பகவான் தன்னுடைய தட்சினாயன பயணத்தை முடித்துக்கொண்டு, மீண்டும் வட கிழக்கு திசையான உத்திராயண திசையை நோக்கி செலுத்தும் தொடக்க மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. தை மாத அமாவாசை முடிந்து 7ஆம் நாள் ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது. 7 எருக்கம் இலைகள் ரத சப்தமி நாளில் விரதமிருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து சூரிய உதயமாகும் நேரத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பானதாகும். புண்ணி தீர்த்தத்தில் நீராட முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். நீராடும் போது 7 எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்களின் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது. பச்சரிசி, கருப்பு எள் ஏழு எருக்கம் இலைகளை, கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டையில் 2, தலையில் 1 என பிரித்து வைத்து நீராட வேண்டும். தலையில் வைக்கும் இலையில் ஆண்கள் அட்சதையை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையை வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு நீராடினால் நீண்ட ஆரோக்கியத்தையும், நிலைத்த செல்வத்தையும் வழங்கும். தந்தையை இழந்த ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலைகளுடன் பச்சரிசி மற்றும் கருப்பு எள் என இரண்டையும் தலையில் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். சூரிய நாராயண காயத்ரி கணவனை இழந்த பெண்கள் ரத சப்தமி விரதத்தை கடைபிடித்தால், இனி வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ரத சப்தமி விரதத்தை சூரிய உதய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். அன்றை தினத்தில் சுத்தமான இடத்தை செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரியரதம் வரைய வேண்டும். அதில் சூரிய சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சனை செய்த சூரிய நாராயணரை சூரிய காயத்ரி மற்றும் துதிகளை சொல்லி வழிபட வேண்டும். செல்வந்தர் ஆகலாம் மேலும், சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்யவேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசுமாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் சூரிய ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெள்ளம் ஆகியவற்றை படைக்கலாம். அவ்வாறு செய்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல், ரத சப்தமி தினத்தன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நாளில் செய்யும் தான தர்மங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வாஸ்துசாஸ்திரத்தின் படி நீங்கள் பர்ஸில் வைக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு தீரா வறுமையை ஏற்படுத்தும்

மனிதர்கள் அனைவரின் வாழ்கையிலும் பணம் சம்பாதிப்பது என்பது முக்கியமான ஒரு குறிக்கோளாக கருதப்படுகிறது. பணம் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து விட முடியாது, ஆனால் பணம் பல மகிழ்ச்சியாக தருணங்களை உருவாக்கக்கூடியது. பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும் கடினமான காரியம் அதனை சேமிப்பது. உங்களிடம் இருக்கும் பணம் கணக்கே இல்லாமல் செலவானால் அதற்கு காரணம் உங்களின் பொறுப்பற்றத்தன்மை மட்டுமல்ல உங்களிடம் இருக்கும் வாஸ்து தோஷமும்தான். வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் பர்ஸில் நீங்கள் வைக்கும் சில பொருட்கள் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து உங்கள் செல்வத்தை இழக்க வைக்கும். இந்த பதிவில் உங்கள் பர்ஸில் நீங்கள் வைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பழைய பில்கள் உங்கள் பர்ஸில் எப்பொழுதும் தேவையில்லாத பொருட்களை வைத்துக்கொள்ளக்கூடாது. குறிப்பாக பழைய பில்கள், க்ரெடிட் கார்டு பில்கள், நீங்கள் பணத்தை செலவழித்தது தொடர்பான எந்த பில்களும் இருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும், இவற்றை அவ்வப்போது சுத்தப்படுத்துவது பணப்புழக்கத்தை அதிகரிக்கும். 
புகைப்படங்கள் இறப்பது போன்ற புகைப்படங்கள், ஆபாசப்படங்கள், பயமுறுத்தும் புகைப்படங்கள் போன்ற உங்களை தவறான பாதையில் வழிநடத்தும் படங்களை உங்கள் பர்ஸில் வைப்பதை தவிர்க்கவும். அதுபோன்ற புகைப்படங்கள் உங்களை திசைதிருப்புவதோடு எதிர்மறை ஆற்றலையும் ஈர்க்கும். கிழிந்த பர்ஸ் ஒருபோதும் கிழிந்த பர்ஸை உபயோகிக்காதீர்கள். ஏனெனில் இது உங்களுக்கு பெருமளவில் பணஇழப்பை ஏற்படுத்தும். அதேபோல ஒருவர் உபயோகித்த பர்ஸை நீங்கள் மீண்டும் உபயோகிப்பது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் புதிய பர்ஸை உபயோகிக்க முயலுங்கள், அதேபோல பர்ஸில் எப்பொழுதும் சிறிது பணமாவது வைத்திருக்க வேண்டும். ஒருபோதும் பர்ஸை காலியாக வைத்திருக்காதீர்கள். 
 பிப்ரவரி மாதத்தில் பிறந்தவங்ககிட்ட என்னென்ன மோசமான குணங்கள் இருக்கும் தெரியுமா? எழுதப்பட்ட நோட்டுகள் பெயர் எழுதப்பட்ட நோட்டுகள், பழைய பெயர் பொறிக்கப்பட்ட கார்டுகள், மோசமான நினைவுகளை கொண்ட பொருட்கள் போன்றவற்றை உங்கள் பர்ஸில் வைப்பதை தவிர்க்கவும். பர்ஸை ஒழுங்காக திட்டமிட்டு வைப்பது நேர்மறை ஆற்றலை உங்களை நோக்கி ஈர்க்கும். மடிக்கப்படாத நோட்டுகள் நோட்டுகளை எப்போதும் ஒழுங்காக மடித்து வைப்பது என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் முடிந்தவரை அவ்வாறு செய்வது உங்களின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். கசங்கிய நோட்டுகள் எதிர்மறை ஆற்றலின் வெளிப்பாடுதான். தின்பண்டங்கள் பர்ஸுக்குள் சாக்லேட் போன்ற தின்பண்டங்களை வைப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் நமது அலட்சியமும், சோம்பேறித்தனமும்தான். நம்முடைய நேர்மறை ஆற்றலை அதிகரிப்பது என்பது நமது கைகளில்தான் உள்ளது. இதனைத் தவிர்ப்பது சீரான நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மருந்துகள் பர்ஸில் மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வைத்திருப்பது உங்களின் ஆரோக்கிய குறைபாட்டை வெளிப்படுத்தும். இதனை பர்ஸில் வைத்திருப்பது மோசமான வாஸ்து சாஸ்திரத்தை ஏற்படுத்தும். ஒருவேளை இது அவசியமானதாக இருந்தால் வேறு இடங்களில் வைக்கவும். 
 சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள் அதிர்ஷ்டத்தின் உருவமாம்..மிஸ் பண்ணிடாதீங்க  கூர்மையான ஆயுதங்கள் கூர்மையான ஆயுதங்கள் எப்போதும் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன் உங்களின் முடிவெடுக்கும் திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சிறிய கத்தி, நகவெட்டி போன்றவற்றை ஒருபோதும் பர்ஸில் வைக்காதீர்கள்.

பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப தண்ணீர் மந்திரம் போடுங்க...

குடிக்கும் தண்ணீரையும் நாம் முறையாக பயன்படுத்தினால், அதற்கேற்ற பலா பலன்கள் தானாகவே நம்மைத் தேடி வரும் என்பது நம்பிக்கையாகும். கிராமங்களில் யாருக்காவது மந்திரிப்பதாக இருந்தாலோ, அல்லது குழந்தைகள் சரிவர சாப்பிடாமல் இருந்தாலோ, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு மந்திரித்து தலையை மூன்று முறை சுற்றி காற்றில் துப்புவிட்டு முகத்தில் தண்ணீரால் வேகமாக அறைவார்கள். அப்படி செய்யும்போது, துஷ்ட சக்திகள் ஏதாவது இருந்தாலும் தண்ணீரைக் கண்டு ஓடிவிடும். இதை பாட்டி வைத்தியம் என்றும் சொல்வதுண்டு. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிமையான பாட்டி வைத்திய முறையாகும். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த உலகமே நீரினால் சூழப்பட்டது தான். பூமிப்பந்தானது 70 சதவிகிதம் நீராலும், மீதி 30 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பாலும் உண்டானது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இருந்தாலும் நாம் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கும் நன்னீரின் அளவு வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. அதுவும் தற்போது வெகு வேகமாக குறைந்துகொண்டே செல்கிறது. 
  ஜப்பானில் ஒரு ஆராய்ச்சியாளர் தண்ணீரைப் பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் ஒரு கண்ணாடிக் குடுவையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி மூடி வைத்து, அதிக சத்தத்துடன் கூடிய இசையை சிறிது நேரம் ஓட விட்டு, பின்னர் அந்த தண்ணீரை ஆராய்ச்சி செய்து பார்த்தார். அப்போது அந்த தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பானது ஒழுங்கற்ற தன்மையில் இருந்தது. இது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பு அதே போல், மீண்டும் வேறு ஒரு கண்ணாடிக் குடுவையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி மூடி வைத்து, இனிமையான ஒரு மெல்லிசையை சிறிது நேரம் ஓடவிட்டு, பின்பு அந்த தண்ணீரை ஆராய்ச்சி செய்து பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பானது ஒரே சீராக அமையப்பெற்றிருந்தது. இதில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், தண்ணீரின் மூலக்கூறுகளுக்கு தம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பண்பை உடையது என்று. தண்ணீரைப் பழிக்காதே அதனால் தான், நம் முன்னோர்கள் தண்ணீரை பயன்படுத்தும் முறையையும், தண்ணீரைக் குடிக்கும் முறையையும் அந்தக் காலத்திலிருந்தே முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதனால் தான் நம் முன்னோர்கள் தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே என்று தண்ணீரை முறையாக பயன்படுத்தச் சொல்லியிருக்கின்றனர். தண்ணீரை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்து அதற்கேற்ற பலா பலன்கள் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம். தண்ணீர் சிக்கனம் பொதுவாக தண்ணீரில் குளிக்கும் தண்ணீரில் எச்சில் துப்பவோ அசிங்கப்படுத்தவோ கூடாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. அதே போல் குடிக்கும் தண்ணீரையும் நாம் முறையாக பயன்படுத்தினால், அதற்கேற்ற பலா பலன்கள் தானாகவே நம்மைத் தேடி வரும் என்பது நம்பிக்கையாகும். நம்முடைய அன்றாட வாழ்க்கைச் சக்கரம் தங்கு தடையில்லாமல் ஒடவேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை பணம் தான். அதனால் தான் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்து என்று சொல்லியிருக்கிறார்கள். எதிர்பாராத பணவரவு வேண்டுமா நமக்கு தேவையான பணம் தங்கு தடையில்லாமல் நம்மை தேடி வரவேண்டுமானால், குடிக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்தினால், வராது என்று நினைத்து கை கழுவிய பணமும் தானாகவே நம் வீட்டுக்கதவை தட்டும். அதே போல் எதிர்பாராத பணவரவிற்கும் ஒரு எளிமையான வழிமுறையை முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அதை முறையாக செய்து வந்தால், வராத பணமும் எதிர்பாராத பணமும் நம் கையை வந்தடையும். 
 மந்திரத்தை ஈர்க்கும் சக்தி தண்ணீருக்கு மந்திரத்தை வெகு எளிதாக ஈர்க்கும் சக்தி உண்டு. இந்துக்கள் தண்ணீரை கங்கையாக பாவித்து வணங்கி வருவது அனைவருக்கும் தெரியும். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களிலும், யாகம் உள்ளிட்ட அனைத்து தெய்வ காரியங்களுக்கும் தீர்த்தமாக பயன்படுத்துகிறார்கள். கோவில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யும் போது கடைசியில் நீரை நைவேத்தியம் செய்கிறார்கள். தண்ணீருக்கு சுற்றிலும் நடப்பதை கிரகித்துக்கொள்ளும் தன்மை உண்டு என்று நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றோம். துஷ்ட சக்திகள் அண்டாது இன்றைக்கும் கிராமங்களில் யாருக்காவது மந்திரிப்பதாக இருந்தாலோ, அல்லது குழந்தைகள் சரிவர சாப்பிடாமல் இருந்தாலோ, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு மந்திரித்து தலையை மூன்று முறை சுற்றி காற்றில் துப்புவிட்டு முகத்தில் தண்ணீரால் வேகமாக அறைவார்கள். அப்படி செய்யும்போது, துஷ்ட சக்திகள் ஏதாவது இருந்தாலும் தண்ணீரைக் கண்டு ஓடிவிடும். இதை பாட்டி வைத்தியம் என்றும் சொல்வதுண்டு. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிமையான பாட்டி வைத்திய முறையாகும். ஒரு டம்ளர் தண்ணீர் இவ்வளவு பெருமை வாய்ந்த தண்ணீரை நாம் முறையாக குடித்தால், நமக்கு கிடைக்கும் பலன் அளப்பரியதாகும். பெரும்பாலானவர்கள், காலையில் எழுந்தவுடனே பெட் காஃபி குடித்துவிட்டு தான் முகத்தையே கழுவுவார்கள். ஆனால், கிராமத்தில் காலையில் எழுந்த உடனே முதலில் பல் துலக்கிவிட்டு, உடனடியாக ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீரையே குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தண்ணீர் மந்திரம் அப்படி வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கும் போது, வெறுமனே தண்ணீர் குடிக்காமல், முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை கையில் வைத்துக்கொண்டு, நாம் வடக்கு திசையைப் பார்த்து நின்று கொள்ளவேண்டும்.
 அப்போது கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள்
 'ஏராளம்...தனம் தானியம் தாராளம்' 
என்ற மந்திரம் போல் 11 முறை உச்சரிக்க வேண்டும். பின்பு வாய் திறந்து தண்ணீரில் 3 முறை காற்றை ஊதிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டே டம்ளரில் உள்ள தண்ணீர் முழுவதையும் குடிக்க வேண்டும். வராத பணம் கைக்கு வரும் நாம் இவ்வாறு தினமும் குடித்து வந்தால், நாம் யாருக்காவது கொடுத்த கடன் வராமல் நிலுவையில் இருந்தாலும், வரவே வராது என்று கைகழுவிவிட்ட பணமும் கூட நம் வீட்டுக் கதவைத் தட்டும். யாரிடமாவது கடன் தொகையை வசூலிக்க செல்வதாக இருந்தால் கூட, அன்றைக்கு காலையில், அந்த மந்திரத்தை சொல்லிவிட்டு தண்ணீரில் காற்றை 3 முறை ஊதி பின்பு அந்த தண்ணீரை குடித்தால், நிச்சயம் அந்தப் பணம் நம் கைக்கு வந்து சேரும் என்பது ஐதீகம். எனவே நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரித்து தண்ணீரை பருகினால் நிச்சயம் அதற்கேற்ற பலன் உண்டு.

650 பெண்களை கொன்று அவர்களின் இரத்தத்தில் குளித்த மனித அரக்கி...

 எலிசபெத் பாத்தரி

எலிசபெத் பாத்தரி 1560 இல் பிறந்து 1614 இல் இறந்துபோன கவுண்டெஸ் எலிசபெத் பெத்தோரி டி எக்ஸெட் ஹங்கேரி இராச்சியத்தில் புகழ்பெற்ற பெத்தோரி குடும்பத்தின் பிரபுக்களின் கவுண்டஸ் ஆவார். இவர் எத்தனை பேரை கொலை செய்தார் என்பது இன்றும் விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 650 பெண்களை கொலை செய்ததாக கூறப்படுகிறது.வரலாற்றின் மிகப்பெரிய பெண் தொடர் கொலையாளி என்ற பெருமை இவர்களையே சேரும். கடுமையாக அடித்தல், எரித்தல், உடல் பாகங்கள் சிதைப்பது, முகத்தை நசுக்கிக் கொல்வது போன்றவற்றால் விவசாயப் பெண்களைக் கொன்றார். மேலும் கன்னிப் பெண்களின் இரத்தத்தில் குளிக்கும் வழக்கமும் இவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. தனது சருமம் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கொலைகளை அவர் செய்தார். இவர் வீட்டுக் காவலில் இருந்தார், இவருடைய அந்தஸ்தின் காரணமாக இறுதிவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

இந்த அபூர்வ ரேகைகளில் ஏதவாது ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அசாதாரண வாழ்க்கையை வாழ்வார்களாம்...!

அனைவருக்கும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் கூடவே இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும். ஆனால் அவ்வாறு வெகுசிலருக்கு மட்டுமே வாழ்க்கை அமைகிறது. கிடைக்க வேண்டிய நேரத்தில் அனைத்தும் சரியாக கிடைப்பது என்பதே இங்கு பெரும்பாலானோரின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அதுவே இங்கு பலருக்கும் அமைவதில்லை. மணிக்கட்டு ரேகையில் இருந்து விதி ரேகை

பிறக்கும்போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்கள் என்று சிலரைக் கூறுவார்கள். அவர்களுக்கு அவர்கள் நினைத்ததை விட எப்போதும் அதிகமாகவே அதுவும் சிரமம் இல்லாமலே கிடைத்துவிடும். நமது வாழ்க்கையில் எவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதை நமது கையில் ரேகையை வைத்தே கண்டறிந்து விடலாம். சரியான ரேகை சரியான இடத்தில் இருப்பது அவர்களை அதிர்ஷ்டத்தின் அதிபதி ஆக்கும். அதிர்ஷ்ட ரேகைகளிலேயே சில ரேகைகள் மிகவும் அபூர்வமான ரேகைகளாக கருதப்படுகிறது. இந்த வகை ரேகைகள் இருப்பவர்கள் அசாதாரணமானவர்களாக இருப்பார்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மணிக்கட்டு ரேகையில் இருந்து விதி ரேகை உங்கள் விதி ரேகை மணிக்கட்டிலிருந்து தொடங்கி எந்த தடங்களும் இல்லாமல் சனி மேடு வரை சென்றால் அது மிகவும் அதிர்ஷ்ட ரேகையாகும். இந்த ரேகைகள் இருப்பவர்கள் தொடர்ந்து வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றுகொண்டே இருப்பார்கள், இவர்கள் வாழ்க்கையில் பணக்கவலை என்பது முற்றிலும் இருக்காது. அதேசமயம் ராகு மேடு ஏற்றமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் மிக உயரிய நிலையை குறுகிய காலக்கட்டத்தில் அடைந்து விடுவார்கள். ராகு ஒரு வலிமை வாய்ந்த கிரகமாகும், திடீர் ஏற்றம், செல்வம், மனஉறுதி, எதிரிகளை நண்பராக்குதல் என பல நன்மைகள் இதனால் வந்து சேரும். சனி மேட்டில் இருந்து குரு மேட்டிற்கு ரேகை சனி மேட்டில் இருந்து அல்லது ஆள்காட்டி விரலில் இருந்து ரேகை தொடங்கி குரு மேட்டை நோக்கி வளைவான ரேகை சென்றால் அவர்களுக்கு பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் மனைவி வழியாகவும் அவர்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் கிடைக்கும். இவர்கள் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது, லாட்டரியில் பணம் விழுவது அல்லது சூதாட்டத்தில் பணம் ஜெயிப்பது என இவர்களுக்கு திடீரென அதிர்ஷ்டம் வரும். இரண்டு விதி ரேகை இரண்டு விதி ரேகைகள் இணையாக இருப்பது அல்லது ஒரே நீளத்தில் மற்றும் ஒரே வண்ணத்தில் இரண்டு விதி ரேகைகள் இருக்கும்போது அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருந்து வருமானத்தை பெறுவார்கள். இவர்கள் செய்யும் அனைத்து தொழிலும் இவர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்கும். இது அதிர்ஷ்டம், வளம் மற்றும் வெற்றியின் அடையாளம் ஆகும். 
சனி மேட்டில் இருந்து குரு மேட்டிற்கு ரேகை   ஆண்களை வாடகைக்கு அழைத்துச்செல்லும் வினோத வேலை...இந்த வேலையவாது இன்ஜினியருங்களுக்கு கொடுங்கப்பா...! மோதிர விரலில் செங்குத்துக் கோடு மோதிர விரலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் செங்குத்துக் கோடு இருப்பவர்களுக்கு சக்திவாய்ந்தவர்களிடம் இருந்தும், பிரபலமானவர்களிடம் இருந்தும் உதவிகள் குறைவில்லாமல் கிடைக்கும். இவர்களின் தொடர்ச்சியான உதவியின் மூலம் இந்த ரேகை இருப்பவர்கள் விரைவில் செல்வந்தராக வாய்ப்புள்ளது. 
தலைமை ரேகை மற்றும் சூரிய ரேகை முக்கோணம் தலைமை ரேகையில் இருந்து ஒரு கோடு சென்று சூரிய ரேகையுடன் இணைந்து ஒரு முக்கோணத்தை உருவாக்கினால் அவர்கள் அதிபுத்திசாலிகளாகவும், மிகசிறந்த தொலைநோக்கு பார்வை உடையவர்களாக இருப்பார்கள். தங்களின் புத்திசாலித்தனத்தின் மூலம் இவர்கள் பெரும்புகழையும், செல்வத்தையும் அடைவார்கள். 
இரண்டு விதி ரேகை
 பெண்ணை கடத்துவது, வன்கொடுமை செய்வது எதுவுமே இங்கு தப்பில்லை...பெண்களுக்கு எதிரான மோசமான சட்டங்கள்... தடையில்லாத சூரிய ரேகை மற்றும் விதி ரேகை ஒருவரின் கையில் சூரிய ரேகையும், விதி ரேகையும் கையின் அடிமட்டத்தில் இருந்து தொடங்கி எந்தவித தடையும் இல்லாமல் மேல்நோக்கி செல்வது கைரேகையில் இருக்கும் மிகசிறந்த அதிர்ஷ்டமான ரேகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர்கள் பிரபலமாகவும், செல்வந்தராகவும் இருக்கவே பிறந்தவர்கள். வாய்ப்புகள் இவர்கள் வாசலை தேடி வரும். சூரிய ரேகை ஒருவரின் கையின் அடிமட்டத்தில் இருந்து தொடங்கி மோல்நோக்கி எந்த தடையும் இல்லாமல் செல்வது அவர்களின் வாழ்க்கையில் எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றங்கள் அமையும் என்பதன் அர்த்தமாகும்.
மோதிர விரலில் செங்குத்துக் கோடு

தலைமை ரேகை மற்றும் சூரிய ரேகை முக்கோணம்
தடையில்லாத சூரிய ரேகை மற்றும் விதி ரேகை