Monday, 31 August 2020

துத்தி_இலை_மருத்துவ_தகவல்கள்

#துத்தி_இலை_மருத்துவ_தகவல்கள் 
~``~``~`` 🌷🧩🌷 ``~``~``~
துத்தி பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும். ❀ஷ•ரு❀ 

துத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்; காமம் பெருக்கும்; இருமலைக்குறைக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் கடுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.

துத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது.

துத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.

மூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும்.

துத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும்.

https://www.facebook.com/groups/1084958198353088/?ref=share

துத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.

வெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது.

20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இரத்த வாந்தி கட்டுப்படும்.
துத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும்.

துத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும்.

துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.🌷 


மகிழ்வித்து மகிழுங்கள் மிக்க மகிழ்ச்சி🍁🍃

முருங்கை

🌿 எந்த மாதிரி வைரஸையும் சமாளிக்கும்.  எதிர்ப்பு சக்தியில் முதலிடம் இந்த முருங்கை

🌿நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால் எந்த வைரஸும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது.

🌿நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள என்னவெல்லாம் சாப்பிடலாம் என பெரிய லிஸ்ட் போட்டு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

🌿பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முருங்கைகீரை அல்லது இரண்டு முருங்கைக்காய் போதும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உபயோகித்தால், நாம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு உயர்த்திக் கொள்ளலாம்.

🌿முருங்கையில் வைட்டமின் C ஆனது ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதை விட 7 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் A ஆனது கேரட்-ல் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் வைட்டமின் B2 ஆனது வாழைப்பழத்தில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿வைட்டமின் B3 ஆனது வேர்க்கடலையில் உள்ளதை விட 50 மடங்கு அதிகமாக
உள்ளது.

🌿முருங்கையில் கால்சியம் சத்து பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் புரோடீன்(புரத) சத்து பாலில் உள்ளதை விட 2 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் மெக்னேஷியம் சத்து முட்டையில் உள்ளதை விட 36 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் இரும்பு சத்து மற்ற கீரைகளில் உள்ளதை விட 25 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿முருங்கையில் பொட்டாசியம் சத்து வாழைப்பழத்தில் உள்ளதை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது.

🌿இவ்வளவு சத்துக்களையும் விட்டமின்களையும் உள்ளடக்கிய முருங்கைக்காயையும் கீரையையும் நாம் கண்டுகொள்வதே இல்லை.

🌿முருங்கை உண்ட கிழவன் கூட வெறும் கையோடு தான் நடப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கையை உண்டு என்றும் இளமையுடன் வாழ்வோம்.🌿

Sunday, 30 August 2020

சிவராஜ யோகம் என்றால் என்ன?

குரு பகவான் சூரிய பகவானுடன் இணைந்தோ அல்லது சமசப்தமாக அமர்ந்திருப்பதாலோ உண்டாவது சிவ ராஜயோகம். குரு பகவான் சம்பந்தம் பெற்ற இந்த யோகங்களில் ஏதாவது ஒன்று, ஜாதகத்தில் அமைந்திருந்தாலும் அரசாங்கம் மூலமாக திடீர் அதிர்ஷ்டம், ஆன்மீகம் - ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி, நல்ல வீடு-வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

குரு பகவான் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் அல்லது நீச்சபங்க ராஜயோகம் பெற்று, அதற்கேற்ற தசா புக்திகள் நடக்கும் காலங்களில், எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.பொதுவாக ஒரு ராசியில் சேர்ந்திருக்கும் கிரகங்களில் குரு பகவான் பலம் பெற்றிருந்தால் தெய்வீகமான அணிகலன்கள் அணிந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும். தெய்வீக வித்தைகளில், குறிப்பாக ஜோதிடத்தில் தேர்ச்சி அடையலாம்.

பொன், பொருள் சேர்க்கையோடு புகழோடு வாழும் சூழ்நிலை உருவாகும். நல்ல விஷயங்களை உலக மக்களுக்குப் போதிக்கும் ஆற்றலும், அதன் மூலம் புகழ் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்

ADVERTISEMENT

Saturday, 29 August 2020

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற கருப்பு உளுந்து லட்டு :-

பெண் குழந்தைகள் இடுப்பு வலிமை பெற கருப்பு உளுந்து லட்டு :-

தேவையான பொருட்கள்:
இயற்கை கருப்பு உளுந்து - 1 கப்
பொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்
நாட்டு சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பசு நெய் தேவையான அளவு.
சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.

செய்முறை:-

1.முதலில் கருப்பு இயற்கை உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

2.வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.

3.சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

4.ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.

5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.

6.சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

7.முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:-

1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

2.நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக் கொண்டு வர வேண்டும்.

3.நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்.
இயற்கை உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், 

எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
தடுமாறி விழும் போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.

உடல் சூடு தணிய
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

இயற்கை உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
தாது விருத்தியாக
இயற்கை உளுந்தை காய வைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும்.

 நரம்புகளும் புத்துணர்வு பெறும்.
எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு
தடுமாறி விழும் போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு நாட்டு கோழி முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக் கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலு பெற
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக் கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் இயற்கை உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு

சிறு குழந்தைகளுக்கு இயற்கை உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை.

 இவர்களுக்கு இயற்கை உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். 

இடுப்பு வலி குணமாகும்.
உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு உள்ளது.இயற்கை உளுந்தை தினமும் பயன் படுத்தி நலம் உடன் வாழ்வோம்.

நன்றி ... வாழ்க வளமுடன் ... %

Friday, 28 August 2020

வாஸ்து குறித்த அடிப்படை கேள்விகள் : எந்த மாதிரி வீடு, மனை வாங்கினால் யோகமும், லாபமும் ஏற்படும்

வாஸ்து முறைப்படி எப்படிப்பட்ட அமைப்புள்ள வீடு அல்லது மனை வாங்கலாம்?வாஸ்து அடிப்படை கேள்விகள் : எந்த மாதிரி வீடு, மனை வாங்கினால் யோகமும், லாபமும் ஏற்படும்?நாம் பல ஆண்டுகள் பாடுபட்டுச் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு வீடோ அல்லது மனையோ வாங்கலாம் என ஆசைப்படுவதுண்டு. அல்லது புதிதாக வீடு கட்டலாம் என்று நினைத்தால் எந்த வடிவமைப்பில் கட்டுவது என்பதை யோசிக்கும் போது சரியான வாஸ்து முறைப்படி கட்டுவதும் அவசியம்.அதே போல் மனை வாங்கும் போது நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும். வாஸ்து குறைபாடு எப்படி பாதிக்கும் .         பொதுவாக மனை வாங்கும் போது செவ்வக வடிவிலான இடத்தை வாங்கலாம்.  கோணலான இடத்தை வாங்கலாமா?
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என மொத்தம் 4 திசைகள் உள்ளது உங்களுக்கு தெரியும்.


நான்கு மூலை
ஜல மூலை - வடகிழக்கு
அக்னி மூலை - தென்கிழக்கு மூலை

வாயு மூலை - வட மேற்கு மூலை
கன்னி மூலை (குபேர மூலை) - தென் மேற்கு மூலை
இந்த நான்கு மூலைகளில் ஜல மூலை இழுத்திருந்தால் தாராளமாக வாங்கலாம்.
கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை இழுத்து கோணலாக இருந்தால் அந்த இடத்தை வாங்கமால் தவிர்க்கலாம்.


உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில், எந்த திசை நோக்கி வைத்தால் செல்வம் பெருகும்?

அரை அடி,ஒரு அடி இழுத்து இருந்தால் வாங்கலாம். அதற்கு மேல் இருந்தால் வாங்க வேண்டாம்.


ஏன் வாங்கக் கூடாது என்றால் நாம் வீடு கட்டும் போது செவ்வகமாக தான் கட்டுவோம். அப்போது அந்த கோணலான இடம் வீணாக வாய்ப்புள்ளது.

ரோடு குத்தல் என்றால் என்ன?
நாம் பொதுவாக திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்காக பிரிக்கிறோம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு திசையையும் இரண்டாக பிரித்து திசைகளை எட்டாக பிரிக்கிறோம்.

வடக்கு ஈசானியம், வடக்கு வாயவியம்
தெற்கு ஆக்கினேயம், தெற்கு நைருதி
கிழக்கு ஈசானியம். கிழக்கு ஆக்கினேயம்
மேற்கு நைருதி, மேற்கு வாயவியம்

என எட்டாக பிரிக்கப்படுகிறது. இதில் ஒரு பாதி நல்லது. ஒரு பாதி நல்லது அல்ல.

வாஸ்து குறித்த அடிப்படை கேள்விகள் : எந்த மாதிரி வீடு, மனை வாங்கினால் யோகமும், லாபமும் ஏற்படும்?

உதா: கிழக்கை ஒட்டிய வடக்கு நல்லது. மேற்கை ஒட்டிய வடக்கு கெட்டது.

ஒரு வீட்டின் முக்கிய விஷயமான கதவு அல்லது வெளிப்பக்க கேட் வைக்கும் போது எந்த பகுதி நல்லது என்பதைப் பார்த்து வைக்க வேண்டும். அதாவது உச்சம், நீச்சம் பொருத்து தான் இப்படி அமையும்.

நீங்கள் வாங்கும் மனை அல்லது கட்டும் வீட்டில் சுற்றுச் சுவர் கட்ட வேண்டுமா?
சுற்றுச் சுவார் கட்டுவது காசு வாங்காத வேலைக்காரனாக செயல்படும். இந்த காம்பவுண்ட் வால் மற்றவர்களின் வீட்டு வாஸ்து அமைப்பு நம்மை பாதிக்கக் கூடும்.


சிலர் பத்திரம் என் பெயரி தானே உள்ளது எப்படி அடுத்த வீட்டின் அமைப்பு நம்மை தாக்கும் என கேட்பார்கள். இங்கு பத்திரம் பேசாது, நாம் கட்டும் கட்டிட் அமைப்பு தான் பேசும்.
நாம் கட்டக் கூடிய சுற்றுச் சுவர் பாதுகாப்புக்கு மட்டுமில்லாமல். மற்றவர்களின் வீட்டு அமைப்பு நம்மை பாதிக்காமல் இருப்பதற்காகவும் தான்.

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் வைப்பது நல்லது?

குத்தல் பாதிப்பு ஏற்படுத்துமா?
குத்தல் என்பது பாதிப்பை மட்டும் ஏற்படுத்தும் என்பது இல்லை. அது பாதிப்பற்ற குத்தல், நன்மை தரக்கூடிய குத்தல் எனவும் உள்ளது.


நாம் சரியான வகையில் குத்தல் பார்த்தும் வீடு,, மனை வாங்குவது நல்லது. அதனால் நாம் திரும்ப விற்க நினைக்கும் போதும் அது நல்ல விலை கிடைக்கும்.

தண்ணீர் தொட்டி, போர் வீட்டில் எங்கு அமையா வேண்டும்?
சில வீடுகளில் தண்ணீர் தொட்டி தப்பான இடத்தில் அமைந்திருந்தால் அதனால் வீட்டில் உள்ளவோரின் தொழில் பாதிப்பு, பெண்களின் உடல் நிலை பாதிப்பு, விபத்து, முன்னேற்ற மில்லா நிலை என பல விஷயங்கள் பாதிக்கக் கூடிய நிலை உண்டு.  இப்படி ஒரு வீட்டின் தீமையை நீக்கி நன்மையைப் பெறக்கூடிய அமைப்பை முன்கூட்டியே தீர்மானிப்பதே வீடு கட்டும் போது கட்டிட பிளான் போடப்பட வேண்டும்.

குடல்இறக்கம் எனும் ஹெர்னியாவை தடுக்கும் நம் பாரம்பரிய பழக்கம்முறைகள்

குடல்இறக்கம் எனும் ஹெர்னியாவை தடுக்கும் நம் பாரம்பரிய பழக்கம்முறைகள்
🌿🙏☀️🌼🌻🌸🌿

ஆண்பிள்ளைக்கு அரைஞாண் கயிறு.பெண்களுக்கு கண்டாங்கி சேலை கட்ட சொன்னதன் காரணம் தெரியுங்களா??

அறிவியல் கூறும் உண்மை
அரைஞாண் என்பது பெரும் பாலான நம்தமிழ் சமுதாய ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். அரைஞாண் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். 

இப்படி அணிவதே கண்ணி யமாகக் கருதப்படுகிறது. நமது சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவ தில்லை.பெண்குழந்தை களுக்கான அரைஞாண் தமிழ் நிலப்பகுதிகள் போக பாக்கிஸ்தானில் சில பகுதி களிலும் இதை அணிந்து இருப்பதை பார்க்கலாம்.

பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டி அணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் மற்றும் அதில் ஆரோக்யம் ஒளிந்து உள்ளதோ அதுபோல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் மருத்துவமும் ஒளிந்துள்ளது.

பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. 

இதனை ஆங்கிலத்தில் ஹெர்ணியா என்று அழைப்பர். ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் இந்த நோயை வராமல் தடுக்க முடியும் உடல் எடை அதிகரிப்பதனால் ஆண்களுக்கு இந்த குடல் இறக்க நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

நம் முன்னோர்கள் காலத்திலும் இந்த நோய் இருந்திருக்க கூடும். அதனாலேயே அரைஞாண் கயிறு கட்டும் படி அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர் ஆரம்ப காலத்தில் கருப்பு நிறத்திலேயே அரைஞாண் கயிறு கட்டப்பட்டது. ஆனால் கால மாற்றம் மற்றும் அவரவர் வசதிக்கு ஏற்ப இப்போது வெள்ளி மற்றும் தங்கத்தாலும் அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.

ஞாண் என்றால் கயிறு என்று பொருள் உடம்பின் சரிபாதியை குறிக்கும் பகுதி இடுப்பு. அரை உடலை குறிக்கும் இடுப்பு பகுதியில் கட்டுவதால் இதற்கு அரைஞாண் கயிறு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.நமது நவீன அறிவியலுக்கு எட்டியவரை அரைஞாண் கயிறு குடல் இறக்க நோயை தடுப்ப தற்காக காட்டப்படுகிறது என்றாலும் கூட அதையும் தாண்டி வேறு சில காரணங்களும் அதில் நிச்சயம் ஒளிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

வெகுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள். அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம்.

இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண் களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள் மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண்களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொள்ள அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்ன வெனில், பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்து இருப்பதை உணர்ந்தனர்.
       
பின் அன்றில் இருந்து இன்று வரையும் எந்த ஒரு கனமான பொருட்களை எடுத்து வேலை செய்யும் போது துண்டையோ, கயிற்றையோ இடுப்பில் கட்டும் பழக்கம் நம்மோர்க்கு உண்டு. அந்த பழக்கம் பழக பழக வழக்கமாய் அரைஞாண் கயிறாக நின்று விட்டது…

உணவு குழலில் புண் இருக்கு.உணவு உண்ண ரொம்ப சிரமமாக இருக்கு சரியான மருந்து சொல்லுங்க.

கருப்பு திராட்சை எடுத்து க்கொள்ளவும். விதையை நன்கு சப்பிவிட்டு துப்பவும்.. அந்த துவர்ப்பு புண்ணை விரைவில் ஆற்றும்.        அதிமதுரம் இரு வேளை தேன் கலந்து அருந்தினால் புண் ஆறிவிடும்.                       தேங்காய் பால் சிறந்தது.                           தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோற்றுக் கற்றாழை ஜெல் சாப்பிடவும்
டீ.காபி.இனிப்பு வகைகள் தவிர்க்க வேண்டும்

பேன் (குறிப்பாக ஈறு) தொல்லைக்கு ஏதாவது சாத்தியமான மருத்துவம்?

துளசி 2 கைப்பிடி அளவு எடுத்து மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைத்து விட்டு சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் பேன் நீங்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை தேய்க்கவும் 5 தடவை விட்டு விட்டு தேய்க்கவும் பேன் பூஜ்யம் ஆகிவிடும்

உங்கள் உடலுக்கு வலுவூட்டும் சத்துப் பெட்டகங்களாம் பாதாமும், பிஸ்தாவும், முந்திரியும், உலர் திராட்சையும்.

உங்கள் உடலுக்கு வலுவூட்டும் சத்துப் பெட்டகங்களாம் பாதாமும், பிஸ்தாவும், முந்திரியும், உலர் திராட்சையும்.

பாதாம்
 
 நாற்பதுகளில் நடைபோடுபவர்கள் தின்பண்டமாக எண்ணெய், காரம், இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதைவிட தினசரி சில பாதாம் பருப்புகளை மென்று சுவைத்து ரசித்து உண்ணலாம். 
 
 நல்ல கொழுப்பை அதிகரித்து, கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் பாதாமுக்கு உண்டு. தொடர்ந்து பாதாம் பருப்பு சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றன ஆய்வு முடிவுகள். 
 
 கோதுமை சார்ந்த குளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்கள், சிற்றுண்டி தயாரிக்க பாதாம் மாவை மாற்றாகப் பயன்படுத்தலாம். 
 
 கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பாதாம் பால் பானங்களில், செயற்கை சேர்மானங்கள் அதிகம் இருக் கும் என்பதால் கவனம் தேவை.

முந்திரி
 
 உப்பு சேர்க்காத, எண்ணெயில் பொரிக்காத முந்திரியை அளவோடு சாப்பிட்டால் அது இதயத்துக்கான தோழனாகும். 
 
 முந்திரியில் உள்ள நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பொருள்கள், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு நோய் தடுக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழ்கின்றன. 
 
 பல் ஈறுகளுக்கு பலம் கொடுப்பதுடன் எலும்புகளுக்கும் வலு கொடுக்கும். எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க நினைப்பவர்களுக்குத் தரமான, நலமான நொறுக்குத்தீனி முந்திரி. 
 
 அதே வேளையில் அதிக உப்பு, காரம் சேர்த்து செயற்கைச்சுவை யூட்டிகளில் மூழ்கடித்து பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் முந்திரிப் பருப்புகளைத் தவிர்த்துவிடுங்கள். அதன் சுவையில் மயங்கி ஒரே வேளையில் ஏராளமாகச் சாப்பிட்டுவிடக் கூடாது.

உலர்திராட்சை
 
 மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, இரும்புச்சத்துகளுடன் நிறைய நார்ச்சத்தையும் கொண்டிருக்கிறது உலர்திராட்சை. 
 
 இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்போதெல்லாம், உலர்திராட்சையை நாடலாம். வறட்டு இருமல், நா உலர்ந்து போதல், அதிக தாகம் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உலர்திராட்சையைத் தண்ணீரில் ஊற வைத்துப் பருகலாம். 
 
 எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் சில உலர்திராட்சைகளோடு பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். உடலுக்கு வலிமை கிடைக்க உலர்திராட்சை உதவும்.

பிஸ்தா
 
 சோர்வாக இருப்பவர்களுக்கு உடனடி ஆற்றல் வழங்க பிஸ்தா உதவும். இதிலுள்ள ஆர்ஜினைன் எனும் அமினோ அமிலம், ரத்தக் குழாயைச் சிறப்பாகச் செயல்படவைக்க உதவும். 
 
 மாதவிடாய்க் கோளாறுகளை நீக்குவதிலும் பிஸ்தா முக்கியப் பங்கு வகிக்கிறது. கூந்தல் அடர்த்தியாகவும், மிருதுவான சருமத்துக்கும், ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும், நினைவுத்திறனை அதிகரிக்கவும், எலும்புகளுக்கு வலுவூட்டவும், நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டவும் பிஸ்தா நல்லது. 
 
 வீரியம் அதிகரிக்கும் மருந்துகளில் பிஸ்தாவின் சேர்மானம் இருப்பது குறிப்பிடத்தக்கது. நினைவுத் திறன், ஒருங்கிணைப்பு போன்ற மூளையின் செயல்பாடு களுக்கு பிஸ்தா துணை நிற்கும். 
 
 பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்னைகளைத் தள்ளிப்போட உதவும்.

உடல் தோல் துர்நாற்றத்தை போக்கும் அகஸ்தியர் வைத்தியம்!!

உடல் தோல் துர்நாற்றத்தை போக்கும் அகஸ்தியர் வைத்தியம்!!

வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்!!!

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.

தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்
பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

Thursday, 27 August 2020

ஆஸ்துமா குணமாக:-

ஆஸ்துமா குணமாக:-

இரைப்பு நோயில் காணப்படும் மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற குறைகளுக்கு ஆவி பிடித்தல் மிகச்சிறந்த முறையாகும். இதனை அதிகாலையில் செய்யவேண்டும்.

தேவையான பொருட்கள் :
எருக்கு இலை - 10 எண்ணிக்கை
ஊமத்தம் இலை - 3 எண்ணிக்கை
ஓமம் - 25 கிராம்
செய்முறை :
இவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மூடிவைத்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் பாத்திரத்தை இறக்கி, அதில் ஐந்து மி.லி. அளவில் நீலகிரி தைலம் சேர்த்து, உடம்பை முழுவதும் போர்வையால் மூடி ஆவி பிடிக்கவும். பத்து நிமிடங்கள் விடாது பிடிக்க உடம்பில் வியர்த்துக் கொட்டும்.

வியர்வையை நன்கு துடைத்துவிட்டு, கீழ்க்கண்ட கசாயத்தை உடனடியாகச் சாப்பிட வேண்டும்.

சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு, சதகுப்பை, சித்தரத்தை, மல்லி (தனியா), ஜாதிக்காய், அக்ரகாரம் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்த ஒன்றாக்கி அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு பொடியை எடுத்து, பனைவெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கசாயமாக 42 நாட்கள் சாப்பிட, கடம் இளகி வெளிப்படும். ஆஸ்துமா குணப்படும்

Wednesday, 26 August 2020

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் இரண்டாவது படலம் ஆகும்.

இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது.

பெரிய இடங்களில் பணிபுரிபவர்கள் ஆணவத்துடன் நடந்து கொண்டால் என்ன நேரிடும் என்பதையும், வெள்ளை யானை உண்டாக்கிய இந்திரேச்சுவரை வழிபட கிடைக்கும் பலன்களையும் பற்றி இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இப்படலக்கதை இதற்கு முந்தைய படலமான இந்திரன் சாபம் தீர்த்த படலத்துடன் தொடர்பு உடையது.

வெள்ளை யானைக்கு சாபம் ஏற்பட்ட விதத்தையும், அச்சாபத்தை இறைவன் நீக்கிய விதத்தையும் இனி பார்ப்போம்.

இந்திரன் தேவலோகத்திற்கு வருதல்

விருத்தாசூரனை அழித்து அதனால் உண்டான பிரம்மகத்தி தோசத்தை சொக்கநாதரின் அருளினால் தேவேந்திரன் நீங்கப் பெற்றான்.

சோமசுந்தரரின் ஆணையை ஏற்று தேவேந்திரன் இந்திரலோகத்துக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினான்.

இந்திரனை  தேவர்கள், அவனின் வாகனமான வெள்ளை யானை ஐராவதம் உட்பட அனைவரும் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

தேவர்கள் அனைவரும் இந்திரனுக்கு வாழ்த்துக்களையும், பொன்னாலாகிய பரிசுகளையும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

துர்வாச முனிவர் இந்திரனுக்கு பரிசு வழங்கல்

காசி மாநகரில் துர்வாசர் என்னும் மாமுனிவர் தன் பெயரால் லிங்கத்திருமேனியை நிறுவி அதனை தினந்தோறும் வழிபட்டு வந்தார்.

ஒருநாள் துர்வாசர் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவனார் தன் திருமுடியில் இருந்து பொன்னிறமான மணம் வீசும் தாமரை மலரினை துர்வாசகருக்கு கொடுத்தருளினார்.

துர்வாசரும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். பின்னர் அம்மலரை எடுத்துக் கொண்டு இந்திரனுக்கு அம்மலரினை பரிசாக தரும் நோக்கில் தேலோகத்திற்கு விரைந்தார்.

அப்போது இந்திரன் வெள்ளை யானையான ஐராவதத்தின் மீது ஏறி தேவலோகத்தில் பவனி வந்து கொண்டிருந்தான். தேவ மகளிர் மகிழ்ச்சியுடன் பாட்டிசைத்து ஆடிக் கொண்டு அவன் முன்னால் சென்று கொண்டிருந்தனர்.

வெள்ளை யானையான ஐராவதம் தேவர்களின் தலைவனான இந்திரனை சுமந்து கொண்டு செல்வதை பெருமையாக‌ எண்ணி ஆணவத்துடன் ஊர்வலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது.

துர்வாசர் தேலோகத்தை அடைந்தார். தேவலோகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டதும் துர்வாசர் மிகுந்த மகிழ்ச்சி கொண்டார். இறைவனான சிவபெருமான் தனக்கு கொடுத்த மணம்மிக்க தாமரை மலரினை தன்னுடைய பரிசாக இந்திரனுக்கு துர்வாசர் கொடுத்தார்.

 

துர்வாச முனிவரின் சாபம்

தேவர்களின் வாழ்த்துமழையில் நனைந்திருந்த இந்திரன் தன்னிலை மறந்திருந்தான். அதனால் துர்வாசர் அளித்த பரிசினை அலட்சியமாக வெள்ளை யானையின் மீது வைத்தான்.

ஆணவம் நிறைந்திருந்த வெள்ளை யானை இந்திரன் வைத்த தாமரை மலரினை தனது துதிக்கையால் எடுத்து காலில் போட்டு மிதித்து நசுக்கியது. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட துர்வாச முனிவருக்கு கோபம் ஏற்பட்டது.

பின் அவர் இந்திரனை நோக்கி “ இறைவனான சிவபெருமான் கருணைமிகுந்து மணம் மிகுந்த தாமரை மலரினை எனக்கு கொடுத்தார்.”

சொக்கநாதரின் அருளினால் உனக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்கப்பெற்று புதுப்பொலிவுடன் சொர்க்கலோகத்துக்கு நீ திரும்பிய செய்தியை நான் அறிந்தேன்.

அதனால் இறைவனின் அருட்பிரசாதமான தாமரை மலரினை உனக்கு பரிசாக கொடுப்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் நீ தன்னிலை மறந்து அம்மலரின் பெருமைகளை அறியாது உன் யானையிடம் தந்தாய்.

“ஆதலால் உன் தலை எதிர் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனின் சக்கரப்படையால் சிதறடிக்கப்படும்.” என்று கூறினார்.

மேலும் அவர் வெள்ளை யானையை நோக்கி “இந்திரன் உன் மீது வைத்த இறைவனின் கருணையால் கிடைத்த தாமரை மலரினை அதன் பெருமை அறியாது உன் கால்களால் நசுக்கினாய்.

ஆதலால் உன் நான்கு கொம்புகளுடன் வெள்ளை நிறமும் நீங்கி, பலமும் போய் கருமை கொண்ட காட்டு யானையாக மாறுவாய்” என்று இருவருக்கும் சாபம் கொடுத்தார்.

 

சாபத்தை போக்க இந்திரன் வேண்டுதல்

துர்வாசரின் சாபத்தை கேட்டதும் இந்திரன் தன்னிலைக்கு வந்தான். தன்னுடைய ஆணவச் செயலால் மறுபடியும் சாபம் பெற நேர்ந்ததை எண்ணி வருந்தினான்.

துர்வாசரிடம் “ஐம்புலன்களையும் வென்ற முனிவரே தாங்கள் பரிசாக அளித்த தாமரை மலரின் பெருமைகளை அறியாது அதனை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். எங்களுடைய தவறான செயலினை மன்னியுங்கள். எனக்கும், எனது வெள்ளை யானைக்கும் கொடுத்த சாபத்தினை மாற்றி அருளுங்கள்” என்று இந்திரன் வேண்டினான்.

இந்திரன் மற்றும் வெள்ளை யானையின் இச்செயலால் துர்வாசர் மனம் மாறினார். அவர் அவர்களிடம் “இறைவனின் அருளினை மதியாது நடந்த உங்களது செயல் குற்றமானது. அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு.

ஆதலால் சாபத்தினை உங்களுக்கு மாற்றித் தருகிறேன். அதாவது உனக்கு தலையளவு கொடுத்த தண்டனை முடியளவாக மாறட்டும். ஆணவச்செருக்கினை உடைய வெள்ளை யானை அறிவிழந்து காட்டு யானையாகி நூறாண்டு கழிந்தபின் இறைவனின் கருணையால் மீண்டும் வெள்ளை யானையாக மாறும்” என்று கூறி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

முனிவரின் சாபத்தால் வெள்ளை யானை அறிவிழந்து கருமை நிறம் கொண்ட காட்டு யானையாக மாறி தேவலோகத்தைவிட்டு பூலோகத்திற்குச் சென்றது.

 

காட்டு யானை பழைய வடிவம் பெறுதல்

காட்டு யானையாக மாறிய ஐராவதம் பூலோகத்தில் உள்ள காடுகளில் சுற்றித் திரிந்தது. இறுதியில் கடம்ப வனத்தில் புகுந்தது. கடம்ப வனத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தினையும், சொக்கநாதரையும் கண்டது.

அப்போது அது சாபம் பெற்று நூறுஆண்டுகள் கழிந்திருந்தது. தான் யார் என்பதினை அறிந்து பொற்றாமரைக் குளத்தில் இறங்கி நீராடியது. உடனே காட்டு யானை வடிவம் நீங்கி மீண்டும் வெள்ளை யானையாக மாறியது. பின் பொற்றாமரை தீர்த்தத்து நீரினைக் கொண்டு சொக்கநாதரை அபிசேகம் செய்து பொற்றாமரையால் சொக்கநாதரை வழிபட்டது.

சொக்கநாதரின் திருவருள்

வெள்ளை யானையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த சொக்கநாதராகிய சோமசுந்தரர் வெள்ளை யானைக்கு காட்சி தந்தார். அவர் வெள்ளை யானையிடம் “நீ இங்க வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

அதனைக் கேட்ட வெள்ளை யானை ஆவணத்தால் தான் சாபம் பெற்றதையும் தற்போது சொக்கநாதரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றதையும் கூறி ஆணவம் இல்லாமல் பணிந்து வணங்கியது.

பின் அது இறைவனாரிடம் “தங்களுக்கு கூரையாக அமைந்திருக்கும் இவ்விமானத்தினை தாங்கும் எட்டு யானைகளோடு நானும் ஒன்பதாவது யானையாகி இவ்விமானத்தை தாங்கி தங்களைப் பிரியாது இருக்க வேண்டும்.” என்று வேண்டியது.

அதற்கு சொக்கநாதரும் “இந்திரன் என்னிடம் மிகுந்த அன்பு பூண்டவன். ஆதலால் அவனை நீ சுமப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும்” என்று கூறி பல வரங்களை அருளினார்.

பின்னர் வெள்ளை யானை சோமசுந்தரருக்கு மேல்திசையில் ஐராவத தீர்த்தத்தையும், ஐராவதேச்சுரர் லிங்கத்திருமேனியையும், ஐராவத விநாயகப்பெருமானையும் உருவாக்கி வழிபட்டு வந்தது.

இந்திரன் தனது வெள்ளை யானையின் சாபம் நீங்கப் பெற்றதை அறிந்து அதனை அழைத்துவர தேவர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த யானை “வருவேன்” என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டது.

பின் சொக்கநாதருக்கு கீழ்திசையில் ஐராவதநல்லூர் என்ற ஊரினை உருவாக்கியும், அவ்வூரில் இந்திரேச்சுரர் என்ற லிங்கத்தை உண்டாக்கியும் வழிபட்டு வந்தது.

இந்திரன் மீண்டும் தேவர்களை அனுப்பி ஐராவதத்தை அழைத்து வரச் சொன்னான். வெள்ளை யானையும் இந்திரனின் வேண்டுகோளை ஏற்று தேவலோகம் சென்றது.

வெள்ளை யானை உண்டாக்கிய ஐராவதேச்சுரரை வழிபட தீவினைகள் நீங்கப் பெறுவர். மேலும் இந்திரேச்சுவரரை வழிபட இம்மையில் எல்லா வளங்களும் பெற்று மறுமையில் இந்திரப் பதவி பெற்று இறுதியில் வீடுபேற்றினைப் பெறுவர்.

 

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் சொல்லும் கருத்து

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் தன்னிலை மறந்து ஆணவச் செயல்களில் ஈடுபடக் கூடாது.

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 10 வாஸ்து செடிகள்

வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய 10 வாஸ்து செடிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

1 - வாடாமல்லி :பொதுவாகவே வாடாமல்லி பூக்கள் வாடவே வாடாது.இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நேர்மறை எண்ணங்கள் வரும் என்று வாஸ்து ரீதியாக சொல்லப்படுகிறது.

2 - கோழிக்கொண்டை பூச்செடி :இந்த பூக்களும் வாடாத தன்மை கொண்டது.ஆகவே இதை மாலை தொடுக்க பயன்படுத்துவார்கள்.

3 - பொன் அரளி :மஞ்சள் நிற பூக்கள் கொண்டது.இந்த செடி வீட்டில் இருந்தால் செல்வம் பெருகும்.

4 - சங்கு பூ செடி :இதில் 2 வண்ணங்கள் உள்ளது.வெள்ளை மற்றும் நீலம்.வீட்டிற்கு அழகு சேர்க்கும்.விநாயகர்,சிவனுக்கு உகந்தது இந்த சங்கு பூ.                   துளசி செடி :ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய செடி.மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் செடி.

6 - Lucky Bamboo Plant :இந்த மூங்கில் செடியை வீட்டில் வளர்த்தால் நமக்கு சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.மேலும் வீட்டில் செல்வம் பெருகும்.

7 - கற்றாழை :கற்றாழை அதிக மருத்துவகுணம் கொண்டது.வீட்டில் வாஸ்து ரீதியான பிரச்சனைகளை போக்கும்.

8 - தொட்டாற்சிணுங்கி :இதில் முட்கள் உள்ளதால் சிலர் இதை வீட்டில் வளர்க்கக்கூடாது என்று கூறுவார்கள்.ஆனால் இந்த செடி வீட்டில் இருந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

9 - செம்பருத்தி செடி :தலைமுடிக்கு உகந்தது.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த செடியை வீட்டில் வளர்க்க வேண்டும்.

10 - மணி பிளாண்ட் :வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்

வெறும் தேங்காயை அப்படியே சாப்பிடலாமா? சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன?

பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தப்படும் தேங்காயில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். நீங்கள் தேங்காயை எப்படி எடுத்துக் கொண்டாலும் கூந்தல் வளர்ச்சி முதல்ல எடை இழப்பு பலன்களை அள்ளித் தருகிறது.

    

இந்த தேங்காயை எப்படியெல்லாம் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் தேங்காயின் நன்மை தெரிந்து தான் அதை கோயில்களில் பிரசாதமாக கொடுத்து உள்ளனர். இந்த தேங்காயை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் இதன் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இது தான் இதனுடைய மிகப்பெரிய சிறப்பு.
​தேங்காய்

சமையலில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் ஆக பயன்படுத்தி வரலாம். நம் கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த ஒன்று. பல ஆண்டுகளாக, தேங்காய் எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமமானது பளபளக்கும் சரும கோடுகள் மறைந்து விடும் என ஆயுர்வேதம் கூறுகிறது. இதில் செம்பு, செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றில் மிகவும் நிறைந்துள்ளது. மேலும், அதில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் உண்மையில் நல்ல கொழுப்பு ஆகும், இது உடல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

தேங்காயில் இருக்கும் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் தியாமின் ஆகியவை வழக்கமாக உட்கொள்ளும்போது காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதோ உங்களுக்கான தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்
நாம் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடும் போது தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இதுவே நார்ச்சத்து அதிகமாக உள்ள தேங்காயை எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு மலச்சிக்கல் தீரும். 61% அளவிற்கு தேங்காயில் நார்ச்சத்துகள் உள்ளன. இது உங்க குடல் ஆரோக்கியத்திற்கும் குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

சினிமாவுக்காக தன் தோற்றத்தையே மாற்றிக்கொண்ட பிரபலங்களின் ஃபிட்னஸ் ரகசியங்கள் இதோ...


​சருமம் மற்றும் கூந்தல் தன்மை மேம்பட

வறண்ட சருமமும், முரட்டுத்தனமான கூந்தலும் உங்க அழகை கெடுக்கும். தேங்காயில் உள்ள கொழும்பு உள்ளடக்கம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உலர்ந்த சருமத்தை போக்குகிறது. நீரேற்றம் செய்து

சருமத்தை மிருதுவாக்குகிறது.

மேலும், இதில் மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலம் உள்ளன. இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏற்படும் முகப்பரு, தலைமுடி பொடுகு போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் சரி செய்யலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் வயதான சருமத்தை தடுக்கிறது.


​எடையை இழக்க உதவும் தேங்காய்

தேங்காயில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீண்ட நேரம் பசிக்காது. வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கிறது. கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிக்கவும், பசியை அடக்கவும் உதவுகின்றன. அதனால்தான், PLOS ONE இல் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஆய்வில், குறைந்த கொழுப்புள்ள உணவுக்கு என்று வரும்போது தேங்காய் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று கூறுகிறது.

மேலும் தேங்காய் சில்லுகளை வாயில் போட்டு மெல்லுவது உங்க முகத் தசைகளுக்கு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உங்க தாடை பகுதியை அழகாக்கும்.

சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? சாப்பிட்டா உடலில் என்ன நடக்கும்?


​பச்சை தேங்காய் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும்

இந்த கோவிட் 19 தொற்றில் நம் நோயெதிர்ப்பு சக்தியை கவனிக்க வேண்டியது மிகவு‌ம் அவ‌சிய‌ம். எனவே நம் நோயெதிர்ப்பு சக்தியை கூட்ட நீங்க வெறும் தேங்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, வைரல் எதிர்ப்பு என அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் உங்களை காக்க தேங்காய் உதவுகிறது. மேலும், தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லது.

திடீரென்று உடல் எடை அதிகரிப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன? சாப்பாடு தவிர...


​வயதான பிறகு வரும் அல்சைமரை தடுக்க

நியூட்ரியண்ட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் பிரத்தியேகமாகக் காணப்படுகின்றன. அல்சைமர் மற்றும் பிற அறிவாற்றல் கோளாறுகளைத் தடுக்க உதவும் கெட்டோஜெனிக் பண்புகளை இது கொண்டுள்ளன. அடிப்படையில் தேங்காய் கொழுப்புகள் நம் மனநலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சிகிச்சை பண்புகளைக் கொண்டுள்ளன.

எனவே இனிமேல் தவறாமல் தேங்காயை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையிலேயே நிறைய நன்மை தரும் பண்புகளைக் கொண்டது தேங்காய்.

திருநீற்றுப் பச்சிலையின் மருத்துவ பயன்கள்!

பூக்களுக்கு மணம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஓன்றுதான். ஆனால், சில செடிகளில் இலைகளும் மணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. இந்தச் செடிகள் மலைப்பிரதேசங்களில் அதிகம் வளர்வதுண்டு. தமிழ் நாட்டில் சில கோயில்களில் வளர்த்து வருகின்றனர். இதன் பயன்களைப் பற்றி பார்ப்போம்!

* நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம்,தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.
* இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
* காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.
* முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.
* கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போதுஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும்.
அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.
* பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால்சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும்.
* திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
* 5 கிராம் விதையை 100 மில்லி தண்ணியில் 3 மணி நேரம் ஊற வைத்து குடித்துவந்தால்வயிற்றுக் கடுப்பு, ரத்தக்கழிச்சல்,நீர் எரிச்சல், வெட்டை போன்றவை சரியாகும்

திருநீற்றுப் பச்சிலை

திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும்.
திருநீற்றுப் பச்சிலை செடியின் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்துப் பூசினால் பலன் கிடைக்கும்.


 
சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை  இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம். 
 
கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும். 
 
திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை,  வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.
 
 
சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை  இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம். 
 
கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய கடுமையான வலிகள் குறையும். பச்சிலை விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும். 
 
திருநீற்றுப்பச்சிலை விதையை சப்ஜா விதை என்பார்கள். இதில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை,  வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.

அஸ்வகந்தா

மாத்திரை வேண்டாம் டாக்டர்கள் வேண்டாம் இயற்கை முறையே படுக்கையறையில் 
 சிறப்பாக செயல்பட 

படுக்கையறையில் சிறப்பாக செயல்பட இயற்கை நமக்கு பல மூலிகைகளை அளித்துள்ளது. ஆனால் நாம்தான் மருத்துவரையும், மாத்திரைகளையும் தேடி ஓடுகிறோம்.   
 
ஆண்களின் ஆண்மையை குதிரை வேகத்தில் செயல்பட வைக்க இயற்கை நமக்கு அளித்திருக்கும் வரப்பிரசாதம்தான் அஸ்வகந்தா மூலிகை. இதற்கு அமுக்கிரா கிழங்கு என்ற பெயரும் உண்டு.   
இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகை உண்டு.  அதில் சீமை அமுக்கிரா கிழங்கே ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது.  அதனால் அதற்கு மூலிகை வயாகரா என்ற பெயரே உண்டு. 
 
மேலும், அதற்கு இந்திய ஜின்செங் என்ற பெயரும் உண்டு. அந்த சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்துவை பெருக்கும்.  
ஆண்மையை பெருக்குவது மட்டுமில்லாமல், அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மூளையின் அழற்சி, வயோதிகம் போன்றவற்றை கட்டுப்படுத்தும். நமது உடலில் உள்ள Free radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இது உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை அஸ்வகந்தா சரிசெய்யும். 
    
அஸ்வகந்தாவின் முழுச் செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுர்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.   
அஸ்வகந்தாவின் நன்மைகள்  
உங்கள்  உடல் வலிமையை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  
உங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி திறனை அதிகரிக்கும்.
 
உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.  
உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்.  
உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்.  
உங்களது இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)  
சித்த மருத்துவ கடைகளில் அஸ்வகந்தா லேகியம் எளிதாக கிடைக்கும். பவுடராகவும் கிடைக்கும். பயன்படுத்துங்கள். குதிரை சக்தி பெற்று, படுக்கையறையில் புகுந்து விளையாடுங்கள்

அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. நீங்கள் மிக சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் இந்த மூலிகை பயனுள்ளதாக இருக்கும்.

பல ஆராய்ச்சிகளில் அஸ்வகந்தா நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுவதாக தெரிவித்துள்ளன. இது நியாபக சக்தியை அதிகரிப்பதாகவும், படிக்கும் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், மன இறுக்கத்தை போக்கவும் இது உதவுகிறது.

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு திறனை கொண்டுள்ளது. இதில் கேன்சரை எதிர்த்து செயல்படும் ஆற்றல் நிறைந்திருக்கிறது. நுரையீரல், மார்பகம், தோல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களை எதிர்த்து செயல்படும் திறன் இதற்கு உள்ளது.

அஸ்வகந்தா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புத் திறனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

அஸ்வகந்தா மூலிகையில் அமுக்கிரா கிழங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இதில் சீமை அமுக்கிரா மற்றும் நாட்டு அமுக்கிரா என இரு வகைகள் உண்டு. இதில் சீமை அமுக்கிரா ஆண்மையை அதிகரிக்க உதவுகிறது. இது மூலிகை வயாகரா எனவும் அழைக்கப்படுகிறது.

அஸ்வகந்தா மூளையின் வேகத்தை அதிகரிக்கும். மூளை அழற்சி போன்றவற்றை போக்கும். உடல் மற்றும் மனதில் ஏற்படும் சில பிரச்சனைகளை அஸ்வகந்தா சரி செய்யும். இனப்பெருக்க உறுப்புகளில் இரத்த ஓட்டத்தை பெருக்கி நீங்கள் உடலுறவில் வேகமாக செயல்பட உதவும்.

அஸ்வகந்தா கசப்பு தன்மை உடையது தான் என்றாலும், இது கை, கால் நடுக்கம், வாத நோய்கள், நரம்பு தளர்ச்சி, வயிற்றுப்புண், நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு, குடல் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை சரி செய்யும் திறன் கொண்டது.

சப்பாத்திகள்ளிபழம்

சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.

இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.பின் கவனமாக பழத்தை பிரித்து உள்ளே உள்ள தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்.

இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். இந்த பழம் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். நீர்கட்டி தானாக அழியும். எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் கள்ளிப்பழம்

சக்கரவர்த்தி கீரை

சக்கரவர்த்தி கீரை.:

மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை பற்றி பார்ப்போம். கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது.

சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.

ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது.

சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் வலி மறையும்.


சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும், ரத்த சோகையை சரிசெய்ய கூடியது.
சக்கரவர்த்தி கீரை.:

மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட சக்கரவர்த்தி கீரையை பற்றி பார்ப்போம். கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது.

சக்கரவர்த்தி கீரையில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. நார்சத்து மிகுந்த இக்கீரை சரிவிகித உணவாகிறது.

ரத்த சோகை சரியாவதுடன், மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி கீரைக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவல்ல இந்த கீரை, எலும்பை பலமடைய செய்கிறது.

சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி ரத்த சோகை, மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி, ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம், ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசலாம். இவ்வாறு செய்தால் வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கள் ஆறும்.சக்கரவர்த்தி கீரையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டுவலி உள்ள இடத்தில் சக்கரவர்த்தி கீரையை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தால் வலி மறையும்.


சிறுநீரக கற்கள், தொற்றுக்களை போக்க கூடியதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று புண்ணை குணமாக்க கூடியதும், ரத்த சோகையை சரிசெய்ய கூடியது.

உடல் எடையை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

அலட்சியம் வேண்டாம் நண்பர்களே!!!

உடல் எடையை கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

நம் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பேண வேண்டியது மிக அவசியமாகின்றது. ஏனெனில் நமது உடலின் கட்டமைப்பு அவ்வாறு தான் அமைக்கப்பட்டுள்ளது.

நமது உடலை தலையில் இருந்து கால்வரை சற்று கூர்ந்து கவனித்தால் அதன் கட்டமைப்பு நமக்கு வியப்பை தரும். அதாவது முழு உடலும் சமச்சீரான எடையை தாங்க கூடிய ஒரு ஒழுங்கு முறையில் அமைந்துள்ளது.

ஒரு தலை, அதில் இரு பக்கமும் காதுகள் அமைந்திருக்க ஒரே ஒரு மூக்கு, ஒரே ஒரு வாய் என்பதால் அவை முகத்தின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

வாயின் உள்ளே பற்கள் இரு பக்கமும் மேலும் கீழுமாக சமச்சீராக அமைந்திருக்க நாக்கு மத்திய பகுதியில் உள்ளது.

உடலின் உள்ளே சுவாசப்பையில் இடது சுவாசப்பை வலது சுவாசப்பையை விட சற்று சிறிதாக இருக்கும். காரணம் இடது சுவாசப்பை பகுதி இதயத்துக்கு அதிகமாக இடம் கொடுத்துள்ளது.

அதே போல் கல்லீரலின் எடை வலது பக்கம் அதிகமாக இருக்க அதனை ஈடு செய்ய இரைப்பை, கணையம் மற்றும் மண்ணீரல் இடது பக்கம் அமைந்துள்ளது.

இரு சிறுநீரகங்களும் இடுப்பின் இரண்டு பக்கமும் அமைந்திருக்க சிறுநீரகப்பை சரி மத்தியில் அமைந்துள்ளது.

உடல் தசைகளும் கூட எலும்புகளுக்கு சுமை ஏற்படாதவகையிலும், உள் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு இடையூறு இல்லாதவகையிலும் அமைந்துள்ளன.

ஆனால் நமது எடை கூடும் பொழுது கொழுப்புக்களின் எடையால் உடல் சமச்சீர் அற்று போவதோடு உடலில் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

உடல் எடையால் மிகவும் பாதிக்கப்படுவது எலும்பு தொகுதியே ஆகும். குறிப்பாக உடல் எடையை தாங்க முடியாது கழுத்து மற்றும் முதுகெலும்பில் எலும்பு தேய்மானம், தண்டுவட நோய்கள் போன்ற பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

அதுமட்டுமன்றி இரத்த குழாய்களை சுற்றி கொழுப்பு இறுகுவதால் அங்கு நெகிழ்ச்சி தன்மை இல்லாது போய் இதயத்திற்கு சுமை அதிகரிக்கும். இதன் பொழுது இதயம் அதீத அழுத்தத்தை கொடுத்து நாடுகளுக்கு இரத்தத்தை செலுத்தும் இதுவே உயர் இரத்த அழுத்தம் ஏற்படவும், இதயம் பலவீனமாகவும், காரணமாகின்றது. இக்கொழுப்பு படிவதால் குருதிக்குழாய்களில் அடைப்பும் ஏற்படும்.

உடல் எடை கூடுவதால் சிறுநீரகத்துக்கு சுமை அதிகமாகும். ஏனெனில் உடல் எடைக்கேற்ப கழிவுகளும் உடலில் அதிகமாகி அதை வெளியேற்ற முடியாத நிலை சிறுநீரகத்துக்கு ஏற்பட்டு சிறுநீரகம் செயல்திறன் பாதிப்புறும். இதனால் உடலில் கழிவுகள் தேங்கி உடல் வீக்கம், மூட்டுவலிகள் போன்றன ஏற்படும்.

அதீத கொழுப்பு படிதல் காரணமாக கணையம் செயலிழப்பதால் நீரிழிவு நோய் தோன்றும்.

கொழுப்பு, சுவாசப்பையின் காற்று வழிகளில் படிவதால் சுவாசப் பிரச்சினைகள் தோன்றும்.

கல்லீரலில் கொழுப்பு படிதல் காரணமாக கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் கழிவு அகற்றும் செயல்திறன் மற்றும் இதர செயல்கள் பாதிப்புறும். கல்லீரல் தான் உடலில் சேரும் விஷங்களை வடிகட்டும் செயலை செய்கிறது. அத்தோடு இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கு தேவையான புரோட்டினை வழங்குவதுவும் கல்லீரலே.

ஆகவே தான் உடல் எடையை உயரத்திற்கு ஏற்ப பேணுவது நம் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிக அவசியம் ஆகின்றது.

#மனித_மூளையின்_அற்புதங்கள்....!!!!

நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமானது மூளை. நமது மூளையின் முழுமையான ஆற்றலை ஆய்வு செய்தால், நாம் நமது மூளையை முழுமையாக பயன்படுத்துகிறோமா என்ற சந்தேகம்தான் வரும். உடல் உறுப்புகளில் இதயத்திற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த மூளை, நமது நினைவுகளை சேமிக்கிறது. ஆளுமைக்கும், அறிவாற்றலுக்கும் மையமாக திகழ்கிறது.

இன்னமும் நமது மூளையைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாத நிலையில், தெரிந்த அளவில் சில விஷயங்களை இங்கே பார்ப்போம்.

1. நமது மூளை 60 சதவீதம் கொழுப்பால் ஆனது. வேறு எந்த உறுப்பும் இந்த அளவுக்கு கொழுப்பால் ஆனது இல்லை.

2. நமது மூளை வலியை உணராது. ஏனெனில் வலியை உணரும் வலி வாங்கிகள் மூளையில் இல்லை. எனவேதான் நமது மூளை மண்டையோட்டுக்குள் நகரும்போதும், உந்தும்போதும் நமக்கு அந்த வலி தெரிவதில்லை.

3. மண்டையோட்டை கழற்றிவிட்டு மூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது நாம் விழிப்பில்தான் இருப்போம், வலி வாங்கிகள் இல்லாததால் நமக்கு வலி தெரியாது. மருத்துவர்கள் ஏன் நம்மை விழிப்பில் வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்றால், அப்போதுதான் மூளையின் அறிவாற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

4. நமது மூளை 25 வாட்ஸ் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அதாவது மின்சார பல்பை எரிய வைக்கும் அளவுக்கு இந்த மின்சாரம் இருக்கும். சரியாக புரிந்துகொள்ளாதவர்களை ட்யூப் லைட் என்றும், புத்திகூர்மை உள்ளவர்களை குண்டு பல்பு என்றும் சொல்வது இதற்காகத்தானோ…

5. பொருட்களை நாம் சரியாக காண்பதற்கு மூளைதான் உதவுகிறது. பொதுவாக நமது கண்கள் பொருட்களை தலைகீழாகத்தான் பதிவு செய்யும். அந்த தலைகீழ் காட்சியை நேராக்கி இயல்பாக்குவது மூளைதான்.

6. மூளையின் அளவு பெரிதாக இருந்தால் அறிவாற்றலும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் இருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை. மூளையின் அளவுக்கும் புத்திக்கூர்மைக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

7. நமது மூளையில் உள்ள மெல்லிய நரம்பு இழைகள் 1 லட்சத்து 61 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் நீண்டு பிண்ணிப் பிணைந்திருக்கின்றன. இந்த நரம்புகள்தான் நமது உடலின் அத்தனை பாகங்களுக்கும் தகவல்களை அனுப்புகின்றன.

8. டீன் ஏஜ் பருவத்திலோ, இருபது வயதுகளிலோ நமது உடலின் சில உறுப்புகள் வளர்ச்சியை நிறுத்திவிடுகின்றன. ஆனால், மூளை அப்படியல்ல. நாம் நமது 40 வயதுகளில் இருக்கும் சமயத்திலும், நமது மூளை தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. புதியவற்றைக் கற்கும்போதும் அவற்றை நமது மூளை ஏற்று பதிவு செய்கிறது.

9. நமது உடல் தளர்ந்து சோர்வாக உணரும்போது அதற்கு காரணம் மூளைதான் காரண். மூளை அப்படிச் சோர்வாக உணரும்போதுதான் நமது உடலும் சோர்வாக உணர்கிறது.

10. நாம் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்கு 70 ஆயிரம் விஷயங்களை நாம் சிந்திக்கிறோம் என்கிறார்கள்.

11. நீங்கள் எப்போதேனும் அதிவேகமாக சிந்திப்பதாக உணர்ந்திருக்கிறீர்களா? ஒரே சமயத்தில் இரண்டு விஷயங்களை சிந்தித்திருக்கிறீர்களா? நமது மூளை மணிக்கு 418 கிலோமீட்டர் வேகத்தில் தகவல்களை பரிமாறுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

12. நமது மூளையின் அளவு வளர்வதே இல்லை. பிறக்கும்போது எந்த அளவில் இருந்ததோ அதே அளவில்தான் கடைசிவரை இருக்கும். பிறந்த குழந்தையின் தலை அதன் உடலைக் காட்டிலும் பெரிதாக இருப்பதை கவனித்தால் இது புரியும்.

13. மூளை எப்போதும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நாம் விழித்திருக்கும்போதைக் காட்டிலும் தூங்கும்போது அதிவேகமாக சிந்திக்கும்.

14. நமது மூளை, நமது எடையில் 2 சதவீதத்தை எடுத்துக் கொண்டு, நமது ஆற்றலில் 25 சதவீதத்தை உபயோகித்துக் கொள்கிறது.

15. நமது மூளை தனித்தன்மை வாய்ந்தது. அது நம்மிடம் தந்திர விளையாட்டுகளை விளையாடுகிறது. உதாரணத்திறக்கு இந்த படத்தில் ஏ மற்றும் பி சதுரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. ஆனால், அவை இரண்டும் ஒரே நிறம்தான்.

16. நாம் உயிர்வாழ நமது மூளையின் ஒரு பகுதி போதுமானது. மூளை அற்புதமானது. மூளையின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், சேதமடையாத பக்கத்து மூளை, சேதமடைந்த பக்கத்தின் செயல்பாடுகளை தனக்குள் இணைத்துக் கொள்ளும்.

17. மூளை தனது செயல்பாடுகளுக்காக வினாடிக்கு 1 லட்சம் ரசாயன விளைவுகளை சந்திக்கிறது. பொருள்களை சிந்திப்பது, பொருள்களை நினைவுபடுத்துவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது என்று மூளை பல வேலைகளை ஒரேசமயத்தில் செய்கிறது.

18. நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ… 2 வயதில் தவழும்போது மூளையின் அணுக்கள் வளர்ச்சியை நிறுத்துகின்றன. அதன்பிறகு அணுக்கள் வளர்வதே இல்லை. அதன்பிறகு ஒன்று அணுக்களின் எண்ணிக்கை குறையும் அல்லது நிலையாக இருக்கும்.

19. கர்ப்ப காலத்தில் பெண்களின் மூளையின் அளவு சற்று சரியும். இது உண்மை. குழந்தையை பிரசவித்த ஆறு மாதங்கள் கழித்தே அந்த பெண்ணின் மூளை பழைய அளவுக்கு மாறும்.


20. ஒருவருடைய வாழ்நாளில் அவருடைய மூளை ஆயிரம் லட்சம் கோடி தகவல்களை சேமித்து வைக்கிறது. இந்த தகவல்களின் எடை ஒரு டன் இருக்கும்...!!!
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மலைவேம்புவின் பயன்கள்.:

வேம்பில் அதிக வகைகள் உண்டு. மலைவேம்புக்கு தனி மகத்துவம் உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் முதல் மூன்று நாட்களில் கொடுக்கவேண்டும். மலைவேம்பை நன்கு அரைத்து மூன்று வேளை தர வேண்டும்.

இதை சாப்பிடுபவர்கள் எண்ணெய் பண்டங்கள் மற்றும் புளியை தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள நீர் கட்டிகள், நீர் கொப்பளங்கள் ஏற்பட காரணம், உடலில் தேங்கியுள்ள கழிவுகளாலும், உஷ்ணத்தினாலும் ஏற்படுகிறது. மலைவேம்பை சாப்பிடுவதால் கர்ப்பப்பையில் உள்ள கிருமிகளை நீக்கி கர்ப்பம் தரிக்க உதவுகிறது.

டெங்கு காய்ச்சலுக்கும் இதனை கஷாயம் செய்து கொடுக்கலாம். சிறுநீரில் ஏற்படும் தொற்றுக்கள் மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது.

வேம்பு இலை, குடல் புழுக்களைக் கொல்லும்; குடல் வாயுவை அகற்றும்; வீக்கம், கட்டிகளைக் கரைக்கும்; தாய்ப்பால் சுரப்பைக் குறைக்கும்.

வேப்பம் பூ, குடல் புழுக்களைக் கொல்லும். வேம்பு விதை, நஞ்சு நீக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும். வேம்பு பட்டை, முறைக் காய்ச்சலைக் குணமாக்கும்; உடல் பலத்தை அதிகரிக்கும்.

வேம்பு எண்ணெய், பித்த நீரை அதிகரிக்கும்; இசிவு நோயைக் குணமாக்கும்; காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். கொழுந்தான வேப்ப இலைகளைப் பறித்து, அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்ற ஒரு சிறு துண்டு வேம்பு பட்டையிலிருந்து தயாரித்த கஷாயத்தை ஆறு தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும்.


தோல் நோய்கள் குணமாக வேம்பு எண்ணெய்யை நோயுள்ள பகுதியில் பூச வேண்டும். இரசத்தில் வேப்பம் ஈர்க்கு மற்றும் வேப்பம் பூக்களைத் தேவையான அளவு சேர்த்துக் கொள்ள பித்த நோய்கள் குணமாகும்.

ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்!

♦ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்! ♦

பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். அதிகமாக சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். அதிலும் தற்போது விற்கப்படும் பிராயிளர் கோழிகளில் இருக்கும் மிகுதியான கொழுப்பு மக்களை கொல்லும் கொழுப்பாக இருக்கிறது.

இதற்கு நல்ல மாற்று சைவ புரத உணவுகள் இருக்கின்றன. எனவே, சிக்கன் பிடிக்காதவர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்க சிக்கனை குறைத்துக் கொண்டு வேறு புரத சத்து உணவு உண்ண வேண்டியவர்களுக்கான புரத உணவுகள்…

♦தயிர், சீஸ்!

தயிர் மற்றும் சீஸ் உணவுகளில் புரதம் இருப்பினும், இவற்றில் கொழுப்பு சத்தும் இருப்பதால் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகரிக்கும். இதனால் செரிமானம் பாதிக்கும். எனவே, நீங்கள் தினமும் மதிய உணவில் கொஞ்சம் சேர்த்துக் கொள்வது உடல் சூடு மாற்றம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

♦சோயா பீன்ஸ்!

சோயா பீன்ஸ் எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை உணவில் சோயாவை சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். கோதுமை உணவு விரும்பாதவர்கள் நூறு கிராம் சோயா டயட்டில் சேர்த்து வந்தால் போதுமானது.

♦பருப்பு உணவுகள்!

எல்லா பருப்பு உணவுகளிலும் புரதம் அதிகமாக கிடைக்கும். சிக்கன் பிடிக்காது என கூறும் நபர்கள் உங்கள் டயட்டில் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான புரத சத்தை அளிக்கும்.

♦.பட்டாணி!

அதிகளவில் புரதம் கொண்டுள்ள உணவில் முதன்மை உணவு பட்டாணி. வைட்டமின் சத்துக்களும் மிகுதியாக காணப்படும் பட்டாணி உடல் ஆரோக்கியத்தை, வலிமையை அதிகரிக்கும் உணவாக திகழ்கிறது.

♦கீரை!

அகத்தி, முருங்கை, வல்லாரை, பசலை என பெரும்பாலான கீரைகளில் புரதம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கவும் உதவும்.
அறுபதை எட்டும் நீரிழிவு நோயாளிகள் கீரையை அதிகம் உண்ண வேண்டாம், ஏனெனில் கீரையை செரிமானம் செய்ய சிறுநீரகம் சிரமப்படலாம்.

♦முளைக்கட்டிய உணவுகள்!

தானியங்களை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், முளைகட்ட வைத்து சாப்பிடுவது சிறப்பு. இதனால் புரதம் அதிகளவில் கிடைக்கும். முளைக்கட்டிய தானியங்களை பச்சையாகவே உண்ணலாம். அல்லது நீரில் உப்பு சேர்த்து வேகைவைத்தும் சாப்பிடலாம். ருசி பெரிதாக இருக்காது எனிலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மேன்மையான உணவு இது.

♦சோளம்!

சுவை மிகுந்த புரத சத்து உணவுகளில் சோளமும் ஒன்று. சோளத்தை வேக வைத்தும் உண்ணலாம், பச்சையாகவும் உண்ணலாம். இதிலிருக்கும் கூடுதல் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவும்.

♦நிலக்கடலை!

முட்டையை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு அதிக புரதம் கொண்ட உணவு நிலக்கடலை. எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள உணவு. விலையில் குறைவு என்பதால் நட்ஸ்’ல் ஏளனமாக காணப்படும் நிலகடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராது, இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

♦காளான்!

வறுத்து காளான் உண்பதை காட்டிலும், வேகவைத்து சாப்பிடுவது சிறப்பு. இதில் புரதம் மட்டுமின்றி, நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துக்களும் இருக்கிறது. காளான் உடலில் அதிக கொழுப்பு சேர்வதை தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

♦கேழ்வரகு!

பாலுக்கு நிகரான புரதம் கொண்டுள்ளது கேழ்வரகு. பால் குடித்தால் அலர்ஜி, பால் குடிக்க கூடாத மருத்துவ நிலையில் உள்ளவர்கள் கேழ்வரகை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சித்தமருத்துவர் பா.சர்மிளா சரவணன்.

உடல் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் மருந்து!

உடல் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் மருந்து!
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.
இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது,
இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
=======================
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
=======================
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது.
சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

Tuesday, 25 August 2020

வசம்புக்கு இவ்வளவு சக்தி இருக்கா?

பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாமல் இருப்பது தான்.

’பரிகாரம் செய்வதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.!’ என்று சொல்லுபவர்கள், இந்த வசம்பில் ஒரு சிறுதுண்டை வாங்கி உங்கள் பர்ஸில் வைத்துக்கொண்டால் கூட, உங்கள் பர்ஸில் இருக்கும் பணத்திற்கு பிரச்சினை வராது.

பர்ஸில் இருக்கும் பணம், செலவு ஆனாலும் திரும்பவும் வருமானம் சீக்கிரமே வரும்.

சரி. நீங்கள் பர்ஸ்ஸில் வைப்பதற்கு வசம்பை வாங்கினாலும், பரிகாரம் செய்வதற்கு வசம்பை வாங்கினாலும் சரி. முதலில் பேரம் பேசாதீர்கள். 

பேரம் பேசாமல் கேட்கும் விலையை கொடுத்துவிட்டு, வசம்பை வாங்கிவைத்துக் கொள்ளுங்கள். இதை உங்களுடைய பூஜை அறையில்தான் வைக்க வேண்டும். கட்டாயம் தீட்டு படக்கூடாது.

காலையில் நீங்கள் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு மண் அகல் விளக்கில், சிறிது பசு நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். 

ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடரில், இந்த வசம்பை காட்டினாலே, லேசாக அந்த வசம்பு கருப்பு நிறமாக மாறும். 

அதன் பின்பு அந்த விளக்கில் இருக்கும் நெய்யை சிறிதளவு, உங்கள் கை மோதிர விரலில் தொட்டு, வசம்பின் இருக்கும் கரு நிறத்தை தொட்டால், கருப்பு விரலில் ஒட்டிக் கொள்ளும்.

லேசாக ஒட்டியிருக்கும் அந்த கருப்பு மையை உங்களது உச்சந்தலையில் லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். நெற்றியிலும் லேசாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்படி இந்த பரிகாரத்தை செய்துவிட்டு, நீங்கள் எந்த ஒரு செயலுக்கு சென்றாலும், அதில் பல மடங்கு அதிகமான வெற்றி கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தொழில் தொடங்குவதாக இருந்தாலும் சரி. கடனை வசூலிக்க சென்றாலும் சரி. எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி சுலபமாக ஒரு தீர்வு கிடைக்கும். 

ஒரு நல்ல காரியத்திற்கு கிளம்பும் போது கூட, இப்படி இந்த மையை இட்டுக்கொண்டு கிளம்பும் பட்சத்தில், அந்த காரியம் சுபமாக முடிந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.

பல பெரிய பெரிய பணக்காரர்கள், தொழில் வசியம், தன வசியம், முக வசியம், ஜன வசியம் செய்வது இந்த வசம்பை வைத்துத்தான். 

வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய சாஸ்திரம் தெரிந்தவர்களை வைத்து, செய்யக்கூடிய பலர் வசிய வித்தைகள் மூலம் கிடைக்கப்படும் அதே சக்தி, இந்த வசம்பு மையை நெற்றியில் இட்டுக் கொண்டால் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தினம்தோறும் இப்படி தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நீங்கள் எல்லோராலும் விரும்பத்தக்க மனிதராக மாறி விடுவீர்கள். யாருக்காவது உதவி என்று தேவைப்பட்டால் கூட, உங்களை வந்து அழைப்பார்கள். 

நீங்கள் உடன் சென்றால், அந்த காரியம் வெற்றி அடைகிறது என்ற நம்பிக்கையும் உண்டாகும் அளவிற்கு உங்களது வசீகரம் மாறும்.

இப்படி எல்லாம் சொன்னால் கண்டிப்பா நம்பமாட்டீர்கள்.
48 நாட்கள் செய்து பாருங்கள்! 

அடுத்தவர்கள் உங்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். நீங்கள் அடுத்தவர்களிடம் பழகும் முறையும் மாறிவிடும். தொட்டதெல்லாம் வெற்றி அடைந்து, பணவரவு அதிகரித்துக் கொண்டே வந்தால் யாருக்குத்தான் அழகு கூடாது?


இந்த வசம்பை இப்படி நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. குழந்தைகளுக்குக் கூட சிறுவயதில், மைக்கு பதிலாக, இந்த வசந்த குழைத்து நெற்றியில் வைப்பார்கள்.

பழங்கள் உணவுக்கு முன்பா? பின்பா?



பழங்கள் உணவுக்கு முன்பா? பின்பா?

உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவதையோ, ஜூஸ் குடிப்பதையோ வழக்கமாக வைத்திருக்கிறேன். ஆனால், 'உணவுக்கு முன் பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது’ என்று சிலர் சொல்லும்போது, எனக்குக் குழப்பமாக இருக்கிறது. பழங்களை எப்போது, எப்படிச் சாப்பிடுவது நல்லது?''

செல்வராணி, நியூட்ரிஷியன், மதுரை.

''பழங்களே சிறந்த உணவுதான். எளிதில் ஜீரணமாகி உடலுக்குத் தேவையான சக்தியையும் மூளைக்குத் தேவையான குளுக்கோஸையும் அளிப்பதில் பழங்களுக்கு இணையே இல்லை. ஆகையால், பழங்களை உணவுக்கு முன் அல்லது பின் என்று சாப்பிடுவதைக் காட்டிலும் தனித்து- அதையே உணவாகக் கருதிச் சாப்பிடுவதே சிறந்த முறை.

அப்போதுதான் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் அப்படியே நம் உடலுக்குக் கிடைக்கும். ஒரு சின்ன உதாரணம்... பழங்களில் உள்ள நார்ச் சத்து. பழங்களை அரைத்து, வடிகட்டி சாறை மட்டும் குடிக்கும்போது, பெரும்பான்மை நார்ச் சத்தை அது இழந்திருக்கும். நார்ச் சத்து இருந்தால், மலச் சிக்கலை அது களைந்துவிடும். மலச் சிக்கல் அகன்றால், செரிமானக் கோளாறு ஏற்படாது. இப்படி ஒவ்வொரு சத்தின் பயன்களையும் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். தவிர, பழங்களைச் சாறாக்கி, பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும், பழச்சாறின் இயல்பையே குலைத்துவிடும். செரிமானக் கோளாறையும் உருவாக்கக்கூடும்.

அதேபோல, உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிட்டால், அது ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவு செரிமானம் ஆவதற்காகக் காத்திருக்காமல், (ஓவர்டேக் செய்து) முன்கூட்டியே ஜீரணமாகிவிடும். அதன் தொடர்ச்சியாக சத்துக்களும் கிரகிக்கப்பட்டுவிடும். இதனால், சிலருக்கு ஏப்பம் போன்ற தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பழங்களைத் தனித்துச் சாப்பிடுவதையே வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். சாப்பிட்ட பிறகுதான் பழம் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால், சாப்பாட்டுக்கு முன்போ, பின்போ இரண்டு மணி நேர இடைவெளியில் பழங்களைச் சாப்பிடலாம்.''

வீட்டின் சுற்றுப்புறம் பார்க்கிறோமா

வீடு உள் அளவு வாஸ்து பார்க்கிறோம் சனி மூலை தாழ்வா இருக்கான்னு பார்க்கிறோம் குபேர மூலை உயர்ந்து இருக்கான்னு பார்க்கிறோம்.வீட்டில் ஒவ்வொரு அறையும் மனையடி அளவு பார்க்கிறோம் ஆனால் வீட்டின் சுற்றுப்புறம் பார்க்கிறோமா என்றால் இல்லை.பூங்கா போல நிறைய மரங்கள் சுற்றிலும் பங்களா வீடுகள் சுத்தமான அழகான இயற்கை காட்சிகளுடன் இருக்கும் இடத்தில் வீடு அமைவது பாக்யம்.அது சுக்கிரன் அம்சம்.நல்லது
பள்ளிக்கூடம் கோயில் வங்கி பக்கத்தில் வீடு அமைந்தால் அது குரு அம்சம் நல்லது

கொல்லர் பட்டறை மெக்கானிக் கடை லேத் பட்டறை பக்கத்தில் அமைஞ்சால் அது செவ்வாய் கேது அம்சம் மருத்துவ செலவு 
கூலி தொழிலாளிகள் கசாப்பு கடை மீன் கடை தோல் கடை செருப்பு கடை முள் மரங்கள் பக்கத்தில் வீடு அமைந்தால் சனி அம்சம்.தடைகள் முடக்கம் 

ஆஸ்பிடல் ,மாவு அரைக்கும் மெசின் ,அரசு அலுவலகம் பக்கத்தில் வீடு சூரியன் அம்சம் சுமார்

நீர் நிலைகள் விவசாய நிலம் அருகில் வீடு சந்திரன் அம்சம் நல்லது

தங்கம் பெருக செய்யும் ரகசியம்

தங்கம் பெருக செய்யும் ரகசியம் 
சித்திரை மாதத்தில் முதல் பத்து தேதிகளுக்குள் லக்னத்தில் குரு இருக்கும் நேரத்தில் தங்கத்தில் மோதிரம்  வாங்கி ஆள் காட்டி விரலில் அணிய ஒன்று பதினொராயிரமாக பெருகும் .

பொதுவாகவே தங்கம் வாங்க தங்கமான நேரம் வியாழகிழமை நல்லது ஆபரணமாக வாங்க வெள்ளிக்கிழமை நல்லது .

சதுர்த்தி ,சஷ்டி ,அஷ்டமி ,நவமி திதிகள் ஆகாது 
மதியம் 12 மணிக்குள் வாங்கி விட வேண்டும் 

வளர்பிறையாக இருப்பது அவசியம்.லக்னத்தில் குரு இருக்கும் நேரத்தில் தங்கம் வாங்கினாலே நல்லதுதான் பெருகும்.

சுக்கிரன் உச்சமாக இருக்கும்போது ஆட்சியாக இருக்கும்போது கேந்திரம் திரிகோணத்தில் இருக்கும்போது வாங்கினால் அதிர்ஷ்டம்.

ராசி அம்சம் இரண்டிலும் குரு ஒரே ராசியில் இருக்கும்போது தங்கம் வாங்கும்போது ஒன்று கோடி மடங்காகும் 

திருவாதிரை ,திருவோணம்,பூசம்,மிருகசிரீடம் ,அனுசம்,சதயம் அவிட்டம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் செல்வசேமிப்பிற்கு உகந்த நட்சத்திரங்கள் ஆகும் .

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய 3 மூலிகை சாறு/ஜூஸ்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய 3 மூலிகை சாறு/ஜூஸ்

1. அருகம்புல் சாறு

தேவையானவை: 
அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு  டீஸ்பூன்.
 
செய்முறை: 
அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு  சேர்த்து கலந்து பருகலாம்.
 
2. பாகற்காய் சாறு

தேவையானவை: 
பாகற்காய் - ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்.
 
செய்முறை: 
பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம்.
 
3. நெல்லிச்சாறு

தேவையானவை: 

நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு - சிறிதளவு.
 
செய்முறை: 

நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.

நன்மைகள்:

1.உடல் கழிவுகள் நீங்கும்
2.சர்க்கரை அளவை குறைக்கும்
3.ரத்த அழுத்தம் வராது
4.உடல் சுறு சுருப்பாக இருக்கும்
5.உடல் உஷ்ணம் குறையும்
6.உடல் எடை மற்றும் கொழுப்புகள் குறையும்
7.கண் எரிச்சல் சரியாகும்
8.வயிற்று புண் / வயிறு எரிச்சல் குணமாகும்

அற்புத_மருத்துவ_குணங்களை_கொண்டதா_முருங்கை_இலை

#அற்புத_மருத்துவ_குணங்களை_கொண்டதா_முருங்கை_இலை...!!

வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி  பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
 
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
 
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச்  சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
 
முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், இரத்த சுத்தியும், எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
 
முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருங்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன், இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிருத்தி செய்யும். 
 
முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சள்காமாலை, குடலில் ஏற்படும் திருகுவலி, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

பகவத் கீதையின் அத்தியாயத்தின் சுருக்கத்திற்கு ஒரு வாக்கியம் *

பகவத் கீதையின் அத்தியாயத்தின் சுருக்கத்திற்கு ஒரு வாக்கியம் *



 🕉


              * பகவத் கீதா *
                _ * ஒரு வாக்கியத்தில் * _
                   _ * ஒரு அத்தியாயத்திற்கு ... * _


*அத்தியாயம் 1*

_ தவறான சிந்தனைதான் வாழ்க்கையில் ஒரே பிரச்சனை_

*பாடம் 2*

_ நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் சரியான அறிவுதான் சரியான அறிவு_

* அத்தியாயம் 3 *

_ தன்னலமற்ற தன்மை முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான ஒரே வழி_

* அத்தியாயம் 4 *

_ ஒவ்வொரு செயலும் ஜெபத்தின் செயலாக இருக்கலாம்

* அத்தியாயம் 5 *

_ தனித்துவத்தின் ஈகோவைக் கைவிட்டு, முடிவிலியின் ஆனந்தத்தில் மகிழ்ச்சியுங்கள்_

* அத்தியாயம் 6 *

_ தினசரி உயர் உணர்வுடன் இணைக்கவும்_

* அத்தியாயம் 7 *

_ நீங்கள் கற்றுக்கொண்டதை வாழ்க_

* அத்தியாயம் 8 *

_ உங்களை நீங்களே விட்டுவிடாதீர்கள்_

* அத்தியாயம் 9 *

 _ உங்கள் ஆசீர்வாதங்களை மதிப்பிடுங்கள்_

* அத்தியாயம் 10 *

_ எல்லா இடங்களிலும் தெய்வீகத்தைக் காண்க_

* அத்தியாயம் 11 *

_ உண்மையைப் பார்க்க போதுமான சரணடைதல் உள்ளது

* அத்தியாயம் 12 *

_ உங்கள் மனதை உயர்வில் உள்வாங்கவும்

* அத்தியாயம் 13 *

_ மாயாவிலிருந்து பிரித்து தெய்வீகத்துடன் இணைக்கவும்

* அத்தியாயம் 14 *

_ உங்கள் பார்வைக்கு பொருந்தக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை வாழ்க

* அத்தியாயம் 15 *

_ தெய்வீகத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்_

* அத்தியாயம் 16 *

_ நல்லதாக இருப்பது ஒரு வெகுமதி.

* அத்தியாயம் 17 *

_ இனிமையானவற்றின் மீது உரிமையைத் தேர்ந்தெடுப்பது சக்தியின் அடையாளம்

* அத்தியாயம் 18 *

_ போகலாம், கடவுளுடன் ஒன்றிணைவோம்.

Monday, 24 August 2020

கீசகன்

ஒருநாள் பாஞ்சாலி மலர்மாலை தொடுப்பதற்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட அந்நாட்டின் அரசியார் சுதோசனாவின் அண்ணனான கீசகன் அவளைக் கவர முயல்கிறான். எனினும், பாஞ்சாலி அவனிடம் இருந்து விலகிச் சென்று விடுகிறாள். கீசகன் தன் தங்கையான அரசியாரிடம் தனக்கு பாஞ்சாலி வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.

வேறு வழியறியாத விராடநாட்டு அரசியார் பாஞ்சாலியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். பாஞ்சாலி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய பாஞ்சாலி, அந்நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் பீமனை ரகசியமாகச் சந்தித்து விவரத்தைக் கூறி கீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.

வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, பாஞ்சாலி கீசகனிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னைச் சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, பாஞ்சாலி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீசகனுடன் போரிட்டுக் கொன்று பாஞ்சாலியை மீட்கிறான்