Saturday, 17 October 2020

பூஜையும் சோதிடமும்…!

பூஜையும் சோதிடமும்…!

ஜாதகத்தில் பூஜைக்கு காரக வீடு 5/9, காரக கிரகம் குரு ஆகும், பூஜை என்றாலே முழு ஜாதகமும் ஒத்துழைத்தால் தான் செய்ய இயலும், ஏனெனில் நவக்கிரகங்களும் நம் உடல் உறுப்புகள் ஆகும், 12 ராசி வீடுகளும் நம் உறுப்புகளை குறிக்கும், ஆனால் பூஜை செய்வதற்கும், அதற்குரிய ப்ரப்தத்துக்கும் 5/9 இன் துணை மிக அவசியம், அதற்காக 5/9 கெட்டவர்கள் பூஜை செய்யமாட்டார்கள் என்று கூற இயலாது, 5/9 அசுபர் தொடர்பு அல்லது மறைவு இப்படி கெட்டுவிட்டால் பூஜையே கதி என்றிருப்பார்கள், ஏனெனில் இவர்களுக்கு தான் தெய்வ துணை மிக அவசியம், மேலும் இவ்வாறு பூர்வபுண்ணியம்/பாகியஸ்தானம் இரண்டும் கெட்டாலோ அல்லது ஒன்று கெட்டாலோ மனம்/உடல் சஞ்சலத்திலும்/வேதனையிலும் இருக்கும், பூஜை செய்ய ஆத்ம பலம் அல்லது மனோ பலம் மிக அவசியமாகும், இவை இரண்டும் கெட்டால் அவர்களால் பூஜை செய்ய இயலாது, இரண்டில் ஒன்று நல்ல நிலையில் நின்றாலும் போதும் அதற்கு உரிய விதத்தில் பூஜை செய்தால் நிச்சயம் அதனால் பலனுண்டு, அதே நேரத்தில் பூஜை செய்வது என்பது அவரவர் ஜாதக கிரக நிலையை வைத்தே செய்ய வேண்டும், இதற்கு தகுந்த சோதிட வழிகாட்டுதல் அவசியம்...

பொதுவாகவே பூஜை செய்ய ஒருவர் அதிக தீய கர்மா செய்திருக்க வேண்டும், நான் இவ்வாறு கூறுவதை சிலர் ஏளனம் செய்யலாம் ஆனால் உண்மை இதுவே, பெரிய மஹான் ஜாதகங்களை ஆராயுங்கள் அவர்களுக்கு அசுப கிரகங்கள், அசுப ஸ்தானம் வலுப்பெற்று இருக்கும், அதே நேரத்தில் அதிகம் புண்ணிய கர்மா சேர்த்தவர் பூஜை/வழிபாடு இவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருக்க மாட்டார்கள், ஆனாலும் அவர்களது வாழ்க்கை உயர்வாக இருக்கும், ஏனெனில் அது அவர்களின் புண்ணிய பலன், பரிகரங்களில் கோயிலில் வழிபடுவது உங்கள் 9ம் வீட்டை தூண்டும் செயல், இதற்கும் ஜாதக அமைப்பு வேண்டும், வீட்டில் பூஜை முறையில் வழிபட கர்மா இடம் தரவேண்டும் என்றாலும் இது உங்கள் முழு ஜாதகத்தையும் தூண்டும் செயலாகும், இவ்வாறு வீட்டில் சுயமாக பூஜிப்பது என்பது அவரவர் ஜாதகத்தின் படி செய்தால் அவர்கள் வாழ்வில் பல நேர்மறை மாற்றங்களை தரவல்லது, அதுவே ஜாதகம் பார்க்காமல் செய்தால் எதிர்மறை ஆற்றலே செயல்படும் இதன் வெளிபாடே சிலர் பூஜை செய்ய தடங்கல், பூஜை முடிந்தவுடன் மனவருத்தம் கொடுக்கும் நிகழ்வு, அல்லது எதிர்பாராத அசுப செய்தி, இன்னும் கூற போனால் உங்கள் ஜாதகத்துக்கு பொருந்தாத பூஜை செய்ய முற்பட்டால் அந்த பூஜைக்கு தேவையான பொருள்கள் கூட கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு குறையுடன் பூஜை செய்ய வேண்டிய நிலை ஏற்படும், அதே போல் ஜாதகருக்கு சரியான பூஜை அவருக்கு வாழ்வில் உள்ள துன்பங்களை விலக்கிவிடும், நேர்மறை நிகழ்வுகள் அதிகம் நிகழ ஆரம்பிக்கும், இவ்வாறு பூஜை செய்வதால் நேர்மறை ஆற்றல் தூண்டபடும் இதனால் ஜாதகருக்கு தன் முன்னால் நடைபெறும் எதிர்மறை விஷயங்கள் விளங்கும், இதனால் ஜாதகருக்கு வாழ்வில் எதிர்மறை குறைந்து நேர்மறை அதிகரிக்கும், என்னதான் கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்தாலும் அந்த பரிகார பலன் சில மாதங்கள் தான் சிலருக்கு பலன் தரும், பின்பு பழைய நிலை ஏற்படும், இது என் அனுபவத்தில் நான் பல ஜாதகர்களிடம் கண்டது அதன் காரணம், கோயிலுக்கு செல்லும் போது 9 தூண்டப்படும் அந்த தூண்டலில் ஆற்றல் இருக்கும்வரை நேர்மறை ஆற்றல் ஜாதகருக்கு கிடைக்கும், இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் சாமி கும்பிட அறிவுறுத்தினார்கள், இதன் காரணமாகவே பூஜை முறைகளும் தோன்றின, 

No comments:

Post a Comment