Wednesday, 18 November 2020

முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும்

முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்க கிரக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில்.

சூரியன் , செவ்வாய் , குரு இந்த கிரகங்கள் ஆண் கிரகங் களாகும் . 

சந்திரன் , சுக்கிரன் , ராகு இந்த கிரகங்கள் பெண் கிரகங்களாகும் . 

புதன் , சனி , கேது இந்த கிரகங்கள் அலி கிரகங்களாகும் .

மேஷம் , மிதுனம் , சிம்மம் , துலாம் , தனுசு கும்பம் ஆகிய ஒற்றை ராசிகள் ஆண் ராசிகளாகும் . 

ரிஷபம் கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனம் ஆகிய இவ்வாறு இரட்டை ராசிகளும் பெண் ராசிகளாகும் . 

ஐந்தாமிடத்ததிபதி ஆண் கிரகமாக அமைய வேண்டுமானால் மேஷம் , கடகம் , சிம்மம் , விருச்சிகம் , தனுசு இவை லக்கினமாக அமைய வேண்டும் . அப்போது தான் சூரியன் , செவ்வாய் , குரு ஐந்தா மிடத்ததிபதியாக அமைவர் .

இத்தகைய ஐந்தாமிடத்ததிபதி ராசி சக்கரத்திலும் , நவாம் சக்கரத்திலும் ஆண் ராசியில்  ஜனன காலத்தில் இருந்தால் தான் ஜாதருக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறக்கும் என்பது ஜோதிட விதி.

No comments:

Post a Comment