Saturday, 14 August 2021

நாக பஞ்சமி

நாக பஞ்சமி; 

நாகம் என்பது உயிர்கொல்லி.ஒரு உயிரை உயிருடன் விழுங்குவது உயிர்கொல்லி .தவளையை கடித்து உண்பதில்லை உயிருடன் விழுங்கிவிடும்.அத்தயக கடும் சாபத்துடன் இருக்கும் நாகத்தை அல்லது அதன் குட்டிகளை கொன்று விட்டால் கடும் நாகதோசம் சந்ததி முழுக்க விடாது துரத்தும்.குழந்தை இறந்து பிறத்தல்,தொடர்ச்சியாக மீள முடியாத கடன் ,தினசரி சித்ரவதை உண்டாக்கும் நோய்,குடும்பம் அமையாது தனிமையில் கலங்குதல் ,குழந்தை மனைவியை பிரிந்து வாழ்தல் சர்ப்ப தோசத்தில் அடங்கும்.

நாக தேவதைகள் தங்கள் சாபம் நீங்க தவமிருந்து ,சாப நிவர்த்தி பெறும் நாள் நாக பஞ்சமி இன்றைய நாள் அந்த நாக சர்ப்பங்கள் அண்டியிருக்கும் இடங்களில் நாமும் சென்று பிரார்த்தனை செய்து கொண்டால் நாக சர்ப்பங்களுடன் சேர்ந்து  ,நமக்கும் நாக தோசம் நிவர்த்தி ஆகும்.

நாக சிலைகளுக்கு பால் அபிசேகம் செய்தல்,மஞ்சள் ,குங்குமம் சிலைகளுக்கு பூசுதல் ,கோயிலுக்கு வருபவர்களுக்கு சர்க்கரை பொங்கல் ,சுண்டல் கொடுத்தல்,நெய்தீபம் ஏற்றி வழிபடுதல் நல்லது

No comments:

Post a Comment