Saturday, 25 November 2023

Benefits of Mushroom and Broccoli


காய்கறிகள், பழங்களைவிட அதிக புரோட்டீன் நிறைந்த உணவு எது தெரியுமா? கோதுமையைவிட, 12 மடங்கு கூடுதலான ஆண்டி-ஆக்சிடெண்டுகள் நிறைந்த உணவு எது தெரியுமா? எலும்புகளை வலுவுடன் வைத்து கொள்ள உதவும் உணவு எது தெரியுமா?

எலும்புகளை பலப்படுத்தக்கூடியதில் பிரதானமானது புரோக்கோலி.. முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது இந்த ப்ரோக்கோலி.. ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன..

Do you know Excellent Benefits of Mushroom and Broccoli is the Best food for Bone Strength 
எலும்புகள்: ஒரு கப் ப்ரோக்கோலியில், ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. அதிலும் ஏகப்பட்ட கால்சியம் சத்து நிறைந்தது.. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகள் வலுப்படும். இதிலிருக்கும் வைட்டமின் கே எலும்பு உறுதிக்கு உதவும்.

செம்பருத்தி டீ சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் | Sembaruthi Health Benefits in Tamil | Hibiscus Tea
புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் C சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால், சருமத்துக்குப் பாதுகாப்பைத் தருகிறது.. கால்சியம் அதிகமாக உள்ளதால், பல், எலும்புகளுக்கு வலு தருகிறது.. இதுபோலவே, எலும்புகளுக்கு வலுவை தரக்கூடியது காளான்.. நோய் எதிர்ப்பு நிறைந்த இந்த காளான், உடல் எடை குறைப்போருக்கு சிறந்த உணவாக உள்ளது.. மட்டனை போலவே ருசியையும் தரக்கூடியது.

புரோட்டீன்கள்: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் பிரதானமாக உணவில் சேர்த்து கொள்வது காளான்களைதான்.. புரோட்டீன்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் இருப்பதுதான் காளானுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுக்க காரணமாகின்றன. காளானில் நிறைய புரோட்டீன்கள் உள்ளதாம்..

குறைந்த அளவு கலோரிகள், குறைந்த அளவு கொழுப்புகளை கொண்டவை என்பதால், கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.. லேசான உடற்பயிற்சியுடன், காளானையும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே, உடல் எடையில் மாற்றம் தெரியும் என்கிறார்கள். காளான்களில் சர்க்கரை இல்லை என்பதால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் உதவுகிறது.

பாதுகாப்பு: உடலுறுப்புகளுக்கு பாதுகாப்பையும், பலத்தையும் தரக்கூடிய பல உணவுகள் இருந்தாலும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பதில் காளான்களுக்கு பெரும்பங்கு உண்டு..

பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பதே இந்த காளான்கள்தான். முக்கியமாக, இதயத்திற்கு நன்மை தரக்கூடியது இந்த காளான்கள்.. எலும்புகள் வலுப்படுவதுடன், புதிய எலும்புகளை உருவாக்கவும் காளான் உதவுகிறது..


Do you know Excellent Benefits of Mushroom and Broccoli is the Best food for Bone Strength 
அடிக்கடி சமையலில் காளானை சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் நெருங்காது. எலும்பு தொடர்பான நோய்கள் எலும்புப்புரை, எலும்பு வலி, எலும்பு சிதைவு போன்றவற்றைத் தடுக்க உதவக்கூடியது என்கின்றன ஆய்வுகள்.

காளான் பிரியாணி: ஆனால், சாப்பிடத்தகுந்த காளான்கள் என்றாலும்கூட, நன்றாக சமைத்த பிறகே சாப்பிட வேண்டும். அந்தவகையில், மட்டன் சுவையுடன், இந்த காளானில் சுவையான பிரியாணி செய்யலாம்.. குக்கரை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி, பட்டை லவங்கம், பிரியாணி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

இதனுடன், புதினா கொத்தமல்லி, தயிர் சேர்த்து கிளறி, அத்துடன், காளானையும் சேர்க்க வேண்டம்.. இப்போது, 20 நிமிடங்களுக்கு முன்பு கழுவி ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை அதில் போட்டு, அளவான தண்ணீர் , உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கிவிட வேண்டும்.


No comments:

Post a Comment