Friday, 27 September 2024

பூஜை அறையில் இந்த "நீரை" வைத்தாலே செல்வம் கொட்டுமே..


இந்த தவறை மறந்தும் செய்யாதீங்க.. பூஜை அறையில் இந்த "நீரை" வைத்தாலே செல்வம் கொட்டுமே.. பூஜையறை பூஜையறையில் நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே, நம்முடைய வீடுகளில் செல்வம் தங்கி , குடும்பம் செழிப்புடன் திகழும் என்கிறார்கள். இதுகுறித்து, ஆன்மீகத்தில் ஏராளமான குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒருசிலவற்றை பற்றி மட்டும் பார்ப்போம்.


காலையில் எழுந்தவுடன் முதலில் வீட்டின் பின்புறம் உள்ள கதவை திறப்பது உள்ளது.. ஒருவேளை ஒருவாசல் மட்டுமே இருந்தால், முதலில் குளிக்கும் இடத்தில் சென்று, குளித்துவிட்டு வர வேண்டும்.


pooja room spirituality

பிறகு நெற்றியில் குங்குமம், திருநீர் இதில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொண்டு தான் முன்வாசல் கதவை திறக்க வேண்டும்... அப்போதுதான் லட்சுமி கடாட்சம் வீட்டிலேயே தங்கியிருக்கும்.

"
கோலம்: வாசலை தெளித்து கோலம் போட்டுவிட்டு வந்த பிறகு கை கால் மட்டும் கழுவ வேண்டும். பிறகுதான் பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றலாம். ஆனால், குளித்தபிறகே வாசல் தெளிக்க வேண்டும். வாசற்படியில் விளக்கேற்றும் பழக்கம் உள்ளவர்கள், வீட்டு வாசலில் விளக்கேற்றிவிட்டு அதன் பிறகே, வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்..

ஆனால், அதற்கு முன்பு, சாமி படங்களுக்கும், விளக்குக்கும் போடப்பட்டிருக்கும் பழைய பூக்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.. ஊதுபத்தி, சாம்பிராணியின் தூசுகளையும் துடைத்தெடுக்க வேண்டும்.

 
சாமி படங்கள்: தெற்கு நோக்கி சாமி படங்களை வைக்கக்கூடாது. கிழக்கு பக்கம் முடியாவிட்டால் தெற்கு பக்கத்தை தவிர பிற திசைகளை பார்த்து படங்களை வைத்து வணங்கலாம்.. வீட்டில் கோலம் போட்டுவிட்டுதான், விளக்கேற்றிவிட்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும்...


கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, லட்சுமி தேவியும் நம்முடனேயே வீட்டுக்கு வருகின்றாள் என்று நம்பப்படுகிறது. அதனால், எங்கேயும் உட்காரக்கூடாது. ஆனால், அதற்கு முன்பு, சாமி படங்களுக்கும், விளக்குக்கும் போடப்பட்டிருக்கும் பழைய பூக்களை அப்புறப்படுத்திவிட வேண்டும்.. ஊதுபத்தி, சாம்பிராணியின் தூசுகளையும் துடைத்தெடுக்க வேண்டும்.
நைவேத்தியம்: தினமும் கடவுளுக்கு நைவேத்தியம் வைக்க முடியாது. எனவே, பால், உலர் பழங்கள், பழங்கள், கல்கண்டு போன்றவற்றை வைத்து வழிபடலாம். நைவேத்தியம் வைத்த பொருட்களை கடவுள் வழிபாடு முடிந்ததுமே செலவழிக்க வேண்டும்.., அதிலேயே மறுநாள் வரை வைத்திருந்துவிட்டு அகற்றக்கூடாது... காலையில் வீட்டிலுள்ள குளித்து விட்டு கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் வரை, விளக்கு எரிய வேண்டும்.


நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது. சில்வர் பாத்திரத்தில் நேரடியாக வைத்து நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்தே, செய்ய வேண்டும்.


துளசி நீர்: சிறிது துளசி இலைகள் தண்ணீரில் வைக்கப்பட்டு பூஜையறையில் எப்போதுமே வைக்க வேண்டும்.. இதனால், அந்த இடமே தூய்மையாகிறது.. தெய்வங்களையும் மகிழ்விக்கிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த துளசி நீரைக் குடிப்பது உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறது.


1 comment:

  1. அய்யா வெ. சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அய்யா துளசி நீர் வைப்பது வழக்கம். ஆனால் அதில் சிறிது சூடனை பொடித்துப் போடணும் என்கிறார்களே அது சரியா அய்யா. அவ்வாறு சூடனையும் துளசியோடு சேர்த்து நீரில் போடலாமா ? என்பதை அடியேனுக்கு தெளிவு படுத்துங்கள் அய்யா.

    ReplyDelete