Saturday, 28 September 2024

வளைகாப்பு புரட்டாசியில் செய்யலாமா?


வளைகாப்பு புரட்டாசியில் செய்யலாமா? புதிய தொழில்இம்மாதம் துவங்கலாமா? இப்படி ஒரு விசேஷ காரணமா? சூப்பர்
புரட்டாசி மாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், பெருமாள் கோயில்களில் விசேஷங்களும் நடந்து வருகின்றன.. பக்தர்கள் விரதமிருந்து பூஜைகளை செய்து வருகிறார்கள். இந்த புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா? திருமணம் செய்யலாமா?

தமிழ் மாதங்களிலேயே புரட்டாசி மாதம் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.. காரணம், இது மழை துவங்கும் மாதமாகும்.. தமிழ் மாதங்களில் 6வது மாதமாக புரட்டாசி வருகிறது. கன்னி ராசிக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.


புரட்டாசி விசேஷம்: முக்கியமாக, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையானது பெருமாளுக்கு விசேஷமானது. புரட்டாசி மாதத்துக்குரிய அதிபதி புதன்.. புதன் மகாவிஷ்ணுவின் சொரூபமாக பார்க்கப்படுகிறது. புதன் சைவத்திற்குரிய கிரகம் என்பதால், இந்த புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.


இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும் என்பது ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனால்தான், இந்த புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியவை என்ன? செய்யக் கூடாதவை என்ன? என்றெல்லாம் ஆன்மீகத்தில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

குழந்தைகள்: அதன்படி, புரட்டாசி மாதத்தில் கல்வி கற்க தொடங்கலாம். அதுவும் குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் வரும் விஜயதசமி அன்று கல்வி கற்க ஆரம்பித்தால் நல்ல கல்வி அறிவு கிடைக்கும்.. இந்நாளில் குழந்தைகளுக்கு புதிய விஷயங்கள் ஏதாவது கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.. அதேபோல, குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க காது குத்துவது போன்ற விசேஷ சடங்குகளை செய்யலாம்.. ஆனால் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டும் தான், இதனை செய்ய வேண்டும்.

புதிதாக கடை திறப்பது, வியாபாரம் செய்வது, தொழில் தொடங்குவது என எந்த காரியமாக இருந்தாலும் தாராளமாக செய்யலாம். இதனால் தொழில் விருத்தியடையும்.

வீடு கட்டலாமா: அதுமட்டுமல்ல, இந்த புரட்டாசி மாதத்தில் தான் வாஸ்து பகவான் தூங்கிக்கொண்டிருப்பார். இந்த மாதத்தில் வீடு வாங்கவே கூடாது.. வீட்டில் குடியேறவும் கூடாது. வாடகை வீடு சொந்த வீடு எந்த வீடாக இருந்தாலும், வீடு பால் காய்ச்சக் கூடாது என்று சொல்லுகிறார்கள். வீடு கட்டுவதற்கு சிறந்த மாதங்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி போன்றவைதான்.. இந்த மாதங்களில் வீடு கட்டினால், வீடு கட்டும்போது எந்தவிதமான தடையும் ஏற்படாது..


திருமணம், சாந்தி முகூர்த்தமும் புரட்டாசியில் நடத்தக்கூடாது.. சித்திரை, வைகாசி, ஆவணி, தை, பங்குனி போன்ற மாதங்களில்தான் திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிக்குள் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து, குழந்தை பாக்கியம் உண்டாகும்.. ஆனால் புரட்டாசி மாதம் வளைகாப்பு செய்யலாம்.. 7 அல்லது 9 வது மாதங்களில் ஒற்றைப்படை மாதத்தில் வளைகாப்பு நடத்தலாம்.. இந்த மாதத்தில் வளைகாப்பு செய்தால் எந்தவித பாதிப்பும் இல்லை..

.. ஐம்பூதங்களின் சங்கமம்"
காரணம், இந்த நிகழ்ச்சி ஒரு நாள் மட்டும் நடக்க கூடிய நிகழ்ச்சியாக உள்ளதால் வளைகாப்பு நடத்தலாம் என கூறப்படுகிறது. அதேபோல, சுபநிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என்ற வழக்கம் உள்ள நிலையில் ஒரு நிலம், மனை வாங்கி பத்திரப் பதிவு செய்ய ஏற்ற மாதமாக உள்ளது. அதேபோல் வாஸ்து பூஜை செய்ய புரட்டாசி மாதம் ஏற்றது கிடையாது. புரட்டாசி மாதத்தில் புதனையும், இவரின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும். இதனால் சனி, ராகு, கேதுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும். புதனின் நட்புக்கிரகம் சனியை வழிபடுவதால் சனி தோஷம் நீங்கும்.


No comments:

Post a Comment