Friday, 27 September 2024

mango leaves diabetes high blood pressure...


சர்க்கரை வியாதிக்கு மாங்கொழுந்து போதுமே.. புற்றுநோயை கூட தடுக்கும் மாவிலை நீர்.. பெஸ்ட் மா இலை டீ
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம்தான் சாப்பிடக்கூடாது. ஆனால், மாவிலைகள், மாங்கொழுந்துகளை தவிர்க்கவே கூடாது. ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட இந்த மாவிலைகளின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் எப்படி சாப்பிடலாம்?

மாம்பழ இலைகள் ஆயுர்வேத சிகிச்சையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. முக்கியமாக இந்த இலையிலுள்ள இதிலுள்ள டானின்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து என்றே சொல்லலாம். சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், பச்சை மாவிலைகளை தினமும் காலையில் மென்று சாப்பிடலாம்.


mango leaves diabetes high blood pressure

அல்லது இந்த இலைகளை உலர்த்தி பவுடர் செய்தும் சாப்பிடலாம். அல்லது வெறும் இலைகளை கழுவி, தண்ணீரில் கொதிக்க வைத்து, குடிக்கலாம்.. இந்த தண்ணீர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது .

KKR Mentorஆக Appoint செய்யப்பட்ட Bravo | Oneindia
மாங்கொழுந்து: அதேபோல, மாங்கொழுந்துகளையும் பயன்படுத்தலாம். இந்த கொழுந்துகளை சமையலிலும் சேர்த்து கொள்ளலாம். கொழுந்துகளை கழுவி, துவரம் பருப்புடன் சேர்த்து வேகவைத்து சாபிட்டால், சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.. எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள், மருத்துவர்களின் அனுமதியை பெற்று, மாவிலை, மாங்கொழுந்து போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மா இலைகளை வெதுவெதுப்பான நீரில் இரவில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில், தண்ணீரை மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், குடலிலுள்ள நச்சுகள் வெளியேறிவிடும்.. எளிதில் ஜீரணமாகும்.. சருமத்துக்கும் ஆரோக்கியம் தரும்.. இதில் சிறிது தேன் சேர்த்தும் குடிக்கலாம்.


சுவாச கோளாறு: ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளதால், சுவாச கோளாறுகளுக்கும் மருந்தாகிறது.. ரத்த அழுத்தம் பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. ரத்த ஓட்டமும் சீராகும்.. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கச்செய்யும்.. மாவிலைகளை போலவே மாங்கொழுந்துகளையும் நீரில் காய்ச்சி குடிக்கும்போது, வாய்ப்புண், வயிற்றுப்புண், வீக்கங்கள், கட்டிகள் குணமாகும்.

அதுமட்டுமல்ல, மாவிலைகளை வேகவைத்து குடிப்பது ஆஸ்துமா தொல்லைக்கும் தீர்வு தரும்.. இருமல், தொண்டை வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கொலாஜின்: மா இலைகளில் புற்று நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை கஷாயம் போல வைத்து குடித்து வரும்போது, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு மூல காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பை எளிதாக தடுக்கலாம்.. அதேபோல, மா இலைகள் தலைமுடி பிரச்சனைகளையும் சரிசெய்கிற.. காரணம், இந்த இலைகளில் ஃபிளாவனாய்டுகள் உள்ளதால் தலைமுடி நரைப்பதை தடுத்து நிறுத்துகிறது. வைட்டமின் A, வைட்டமின் C உள்ளதால் , கொலாஜன் உற்பத்திக்கும் துணைபுரிகிறது.


No comments:

Post a Comment